மீண்டும் ஒரு அக்மார்க் யாஷ் சோப்ரா படம். உறுத்தாமல் நீதி போதிக்கிற ஃபீல் குட படமெடுப்பதையே கடமையாய் கொண்டவர்கள் யாஷ் சோப்ரா குழுவினர்.
இம்முறை நடிகர் பர்மீத் சிங் டைரக்டராக அவதாரமெடுத்திருக்கிறார். இவர் தில்வாலே தில்ஹனியா லேஜாயேங்கேவில் காஜோலுக்கு மாப்பிள்ளையாய் நடித்தவர்.
ஷாஹித் கபூர் மற்றும் இரண்டு நண்பர்கள் காலேஜ் முடித்து வெளிவந்தவர்கள். இவர்களுக்கு ஒரு டூட்டி ஃபிரி ஷாப் வைத்திருக்கும் கடத்தல் காரன் ஒருவன் நண்பனாகிறான். அவனுடய பொருட்களை கடத்துவதற்காக, பேங்காக் சென்று திரும்ப, போகிற போது விமானத்தில் அனுஷ்கா சர்மாவை சந்திக்க, அப்புறம் என்ன காதல் தான். இப்படி சந்தோஷமாய் போய் கொண்டிருக்கும் போது வழக்கம் போல் ஷாஹித்தின் அப்பா அனுபம் கெருக்கு மாரடைப்பு வர, பணமில்லாமல் திண்டாடும் போது முடிவெடுக்கிறார் ஷாஹித். அப்பாவை போல 25 வருஷமாய் பெஞ்சு தேய்க்காமல் சீக்கிரமே பணக்காரனாவது என்று முடிவெடுத்து, புத்திசாலித்தனமாய் ஒரு பெரிய டீலை முடிக்கிறான். நேர்மையாய் சம்பாதிக்காத பணத்தை இங்கே வைக்காதே என்று சொல்லும் கெர், ஷாஹித்தை வெளியேற்றுகிறார்.

நேராக அமெரிக்கா செல்லும் ஷாஹித் குழுவினர் அங்கேயும் சென்று லீகலாய் டகல்பாஜி வேலைகள் செய்ய.. மிகக் குறைந்த நாட்களில் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். சுகமாய் போய் கொண்டிருந்த நேரத்தில் வழக்கம் போல ஷாஹித்க்கு தான் தான் என்ற எண்ணம் வர.. நண்பர்கள் பிரிகிறாரக்ள். காதலி அனுஷ்கா உட்பட.
அமெரிக்க போலீசால் கைது செய்யப்பகிறார் ஷாஹித் . கடைசியாய் அவனுக்கு உதவியாய் இருந்த மாமாவுக்கு தொழிலில் பிரச்சனை வர, அதிலிருந்து எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. மீதி வெள்ளிதிரையில்.

கதை களனை ஏன் 1980களுக்கு செல்போன் இல்லாத காலகட்டத்தை வைத்தார்கள் என்பது யாமரியோம் பராபரமே.. அனுஷ்கா சர்மா குட்டி குட்டி ஜட்டி போட்டுக் கொண்டு கவர்சியாய் அலைகிறார். க்ளைமாக்ஸுக்கு முன் பிரிந்து போய் திரும்புகிறார். ஷாஹித்துக்கு நல்ல கேரக்டர். முடிந்த வரை தூக்கி நிறுத்த முயன்றிருப்பதாகதான் தெரிகிறது.
அனுஷ்காவுக்கு பெரியதாய் நடிக்க வேலையில்லாவிட்டாலும், ஐட்டி சைசுக்கு ட்ராயர் போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய நடக்கிறார், திகட்ட, திகட்ட முத்தமிடுகிறார். மற்ற நண்பர்கள் ஓகே.
இயக்குனருக்கு முதல் படமாய் இருந்தாலும் முடிந்த வரை போர் அடிக்காமல் படத்தை ஓட்டுகிறார். முதல் குறுக்கு வழி பிஸினெஸ்ஸாய் ரிபோக் ஷூவை லீகலாய் பேங்காக்கிலிருந்து இறக்குமதி செய்து, வலது பக்க ஷூவை ஒரு இடத்திலும், இடது பக்க ஷூவை வேறு இடத்திலும் இறக்குமதி செய்து, அதை ஸ்க்ராப்பாக போட்டு கஸ்டம்ஸ் டூட்டி இல்லாமல் அடி மாட்டு விலைக்கு வாங்கி டாக்ஸ் எவேஷன் செய்து சம்பாதிக்கும் ஐடியா அட்டகாசம். ஆனால் மாமாவின் எக்ஸ்போர்ட் ஷர்ட் பிஸினெஸ்ஸை பிக்கப் செய்வதற்காக லிண்டா மூலம் அந்த சர்ட்டை மைக்கேல் ஜாக்சனுக்கு போட்டு அதை வைத்து “Bleeding Madras” என்று அந்த சட்டைக்கு பெயர் வைத்து விற்பதும், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்ததும், புதிய டக்ல்பாஜி வேலையாய் ரியல் எஸ்ட்டேட்டில் இறங்குவதும், ஒருலட்சம் டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கிய அடுத்த மாசத்திலேயே இரண்டு லட்சம் டாலருக்கு விற்பதும், அதற்கு பேங்க் லோன் கொடுப்பதும் சரியான டகல்பாஜிதான். நம்ப முடியாததது. இருப்பதிலேயே உட்சபட்ச காமெடி. ஷாஹித் திருந்தியவுடன் மணிக்கு பத்து டாலர் சம்பாதிக்கும் துணி ஐயன் செய்யும் வேலை, டெலிவரி பாய் வேலை எல்லாம் செய்வது தமிழ் படத்தை ஞாபகப்படுத்தியது. அதற்கு பின்னணியில் ஹைபிட்சில் பாட்டு வேறு.. செம காமெடி..

Badmaash company – Letter Pad Company.
கேபிள் சங்கர்
Post a Comment
9 comments:
படத்தை விட நீங்கள் சொல்ற சின்ன சின்ன விளக்கங்கள் ரொம்ப interesting அக இருக்கிறது கேபிள்ஜி
Me the Hmmmmmmmmmmmm 2nd.
அனுஷ்கா பத்தி இவ்வளவு தூரம் நீங்க சொன்னப்பறம், பாக்காம விடுவோமா?
சொல்லிட்டீங்கல்ல! பாத்துடுவோம்!
பிரபாகர்...
ok rite
நன்றின்னா அந்த மூனாவதா போட்டுருக்கற போட்டோவுக்கு :-)). அதுக்காகவே கண்டிப்பா இந்த படத்த பார்கணும் போல இருக்கு.
நீதி போதிக்கிற படமா.. புதுசா இருக்கு.. என்ன கொடும சார் இது?
\\Badmaash company – Letter Pad Company.//
உங்கள் விமர்சனத்தை படிகிறேனோ இல்லையோ டிஸ்க் கண்டிப்பா படிக்கிறேன் .. ஹி ஹி ஹி
@நாய்குட்டிமனசு
நன்றி
@ரோமியோ
நன்றி
@ஆதிமூலகிருஷ்ணன்
லைட்டா
@கிங்விஸ்வா
ஓகே
@ஜெய்
ஹி..ஹி. நானே அதுக்காகத்டான் பார்த்தேன்
@பிரபாகர்
ஓகே
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
ஓகே..ரைட்
கேபிள் சங்கர்
Post a Comment