சுறா – திரை விமர்சனம்
விஜயின் ஐம்பதாவது படம். சன் பிக்சர்ஸ், என தமிழ் நாடே கோலாகலமாய் எதிர்பார்த்திருத்த படம். சுமார் 600 செண்டர்களில் வெளியிடப்பட்டிருக்கும் படம்.
படம் பூராவும் விஜய்யின் புகழ் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் சுறா,புறா, நல்லவன், சத்ரியன், சாணக்யன் என்றெல்லாம் துதி பாடுகிறார்கள். முதல் பாதி முழுவதும் இதே வேலை தான் பாடுகிற ஆட்கள் தான் வேறு. நடுவே லூசுத்தனமான காதல், பாட்டு என்று குறிப்பிட்ட இடைவேளையில் வந்து ஆடிவிட்டு போகிறார்கள். நடு நடுவே வடிவேலுவுடன், விஜய் சேர்ந்து கிச்சு, கிச்சு மூட்டி சிரிக்க வைக்க பார்க்கிறார்கள். வழக்கமான ஒரு வில்லன், அரசியல்வாதி, ஊரையே போட்டு உலையில் வைப்பவன், நம்ம விஜயிடம் மட்டும் வசனம் பேசியே மாய்கிறார். அவ்வப்போது, அவன் சாதாரண ஆள் இல்லைடா என்பது போன்ற சொம்படிக்கும் வசனங்களை பேசிவிட்டு, விஜய்க்கு வெற்றி வாய்ப்பை கொடுத்துவிட்டு செத்துப் போகிறார். ஸோ..
விஜய் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறார். சில பல ஷாட்டுகளில் அழகாக இருக்கிறார். நான் நடந்தால், தஞ்சாவூரு பாட்டிற்கு ஜிம்னாஸ்டிக் கலந்த ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் மனுஷன். இது ஒன்று போதும் விஜய் ரசிகர்களுக்கு மனதை தேற்றிக் கொண்டாட.. அதிலும் நிஜமாகவே தஞ்சாவூரு பாட்டில் சுமார் ஒரு நிமிடத்துக்கு தொடர்ந்து ஒரே ஷாட்டில் அவர் போடும் ஆட்டம் தூள்.
தமன்னா வழக்கமான பெரிய ஹீரோக்கள் படங்களில் வருவதை போல லூசுப் பெண்ணாக வந்து மூன்று பாட்டுக்கு ஆடிவிட்டு போகிறார். வடிவேலு- எஸ்.பிராஜ்குமார் காம்பினேஷனில் ஒரு காலத்தில் நிறைய காமெடிகள் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தது. இப்போது சுத்தமாக ட்ரையின் ஆகிவிட்டது போலருக்கு. முடியல.
வில்லன் மகதீரா பட வில்லன். பாவம் அவரு என்ன செய்வாரு..? விஜய் படத்தில வில்லனுக்கு என்ன பெருசா வேலை இருந்திட முடியும்?. சத்ரியன், சாணக்யன் என்று பேசிய வசனத்துக்கெல்லாம் இவரும் அவ்வப்போது அதற்கான பொழிப்புறையை கொடுத்துவிட்டு சாகிறார்.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை.மணிசர்மாவின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான தெலுங்கு ட்யூனாக இருந்தாலும் தாளம் போட வைக்கிறது. டான்மாக்ஸின் எடிட்டிங் பாடல்களில் ஆண்டனியின் நினைவை ஊட்டுகிறது.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். எஸ்.பி.ராஜ்குமார். எப்பாடு பட்டாவது கொஞ்சமாவது முனைந்து புத்திசாலித்தனமான, சுவாரஸ்யமான காட்சிகளை வைத்துவிடக்கூடாது அதெல்லாம் விஜய் படம் பாக்கிறவங்களுக்கு இது போதும் என்று முடிவு செய்து கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டு திரைக்கதை பண்ணியிருக்கிறார். இவர்களின் குறிக்கோள், விஜயின் அரசியல் பிரவேசங்களுக்கு சொம்படிக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து காட்சிகளை வைத்திருக்கிறார். அதிலும் முதல் பாதி ஸ்…பா.. முடியலை.. ரெண்டாவது பாதியில முடியல.. விஜய்யை வைத்து காமெடி செய்ய, சண்டை போட, ஆட்டம் ஆட, என்று பல விஷயஙக்ளுக்கு முயற்சி செய்திருக்கிறார் கொஞ்சம் கூட புதிதாய் ஏதும் செய்துவிடக்கூடாது என்ற முனைப்போடு. வாழ்த்துக்கள்.
சுறா- நெத்திலி.
Comments
நெத்திலிக் குழம்பு, நெத்திலி வறுவல், அப்டீன்னு சப்புக் கொட்டி சாப்பிடுவீங்களே...? அந்த நெத்திலிக்குப் போய் இப்படி ஒரு துரோகம் பண்ணலாமா?
sura புட்டு சாப்பிட போயிட்டு அத்தோட சைஸுக்கு. நெத்திலி எல்லாம் எம்மாத்திரம்..:)
* பொதுவா சுறா'வைத் தேடிச் சென்றால், அதனிடம் கடி வாங்காமல் திரும்ப முடியாது
* 'சுறா'வைப் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தால் அதற்க்கு இன்சூரன்ஸ் கிடைக்காது.
* ஒரு வேட்டைக்காரன் , வில்லெடுத்து சுறாவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது. ஏனெனில் ,முட்டாள் 'சுறா' தானாகவே வீழும்.
* இருதய நோயாளிகள், குழந்தைகள், மற்றும் அறிவுள்ள எவரும் 'சுறா'வை பார்க்க வேண்டும் எனில் டிவியிலேயே பார்த்துகொல்வார்கள். முட்டாள்த் தனமாக நேரில் காண செல்ல மாட்டார்கள்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட கருத்துகள் கடல் உயிரினம் 'சுறா' பற்றியது. இதனை 'விஜயின்' சூப்பர் ஹிட் படம் 'சுறா'விற்கு பொருத்திப் பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.
என்ன குறை கண்ட்டீர் ? ஸ்கிரிப்ட் இல்லையா, பட்ஜெட்டில் படம் எடுக்கவில்லையா? ஏன் ஏன் உங்களுக்கு என் தானைத் தலைவன் எதிர்காலப் பிரதமர் மருத்தவர் விசய் மீது கோபம்.
கானாடு காத்தானில் வசூல் சூப்பர், காட்டு மன்னார் கோவிலில் வசூல் சூப்பர்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும் விசய் மறைவதில்லை. அவங்க அப்பா அவரை உருப்பட விடுவதில்லை
இப்படிக்கு
நொந்துபோன
விஜய் ரசிகன்
அடுத்த படம் பாருங்க இந்தப் படத்தை விட மோசமா எடுத்து இதை நல்ல படமாக்கல எம் பேரு விசய் இல்ல (எக்கோ 3 தரம்)
-- ippadikku tharkolaiyai aatharippor sankam
nalla velai naan pilaithu konden...
intha koothula 3 idiots vara nadikka poraraam
70% ஒளிபதிவு M.S.பிரபு.
30% ஏகாம்பரம்
3:43 AM
நல்ல விமர்சனம். விஜய் படத்தில் இதற்கு மேல் எதிர் பார்க்க முடியுங்களா?
//
தல அதனாலதான் நாங்க விஜய் படத்தையே எதிர் பாக்கறதில்ல.
க்ர்ர்ரா
அதுல பாருங்க.. ''இளவரசு'' என்றொருவர் உள்ளார். அவரை கோடம்பாக்கத்தின் 'சிறந்த சொம்படிக்கும் நடிகர்'ஆக சொன்னால் அது சற்றும் மிகை ஆகாது. அடட.. என்னமா சொம்புகிறார்!!
.....ha,ha,ha,ha,ha.....
கேபிளாரே, காமெடி நன்றாக வந்திருப்பதாக சொன்ன உம்மைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்
8:13 AM
ஏன் எம் ஜி ஆர் மற்றும் ரஜினி படத்துக்கு எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காமல் விஜய் படத்திற்கு மட்டும் எதிர் பார்பதேன்? விஜய் எப்போதோ அவர்களின் வரிசையில் சேர்ந்தாச்சு! மேலும் நீங்கள் குறிப்பிடதைபோல் நான் நடந்தால் மற்றும் தஞ்சாவூரு பாட்டின் நடனம் ஒன்றே போதும் கொடுத்த காசுக்கு. கண்டிப்பாக கடந்த சில படங்களைவிட (வேட்டைக்காரன், வில்லு, குருவி) இந்த படம் எவ்வளோவோ மேல். விஜய் மீண்டும் வந்துள்ளார்."
ஆமாங்க ..மீண்டும் வந்துள்ளார் ..ஆனால் நன்றாக வரவில்லையே ..பழைய மாதிரியே மொக்கைய தானே வந்திருக்கார்
ஆனா ஒண்ணு, படம் மொக்கையாத்தானிருக்கும், சும்மாப் போயிக் கலாய்க்கலாமுன்னு போறதுக்கு ’சுறா’ படம் சர்க்கரைப்பொங்கல் சாப்பிடறது மாதிரி! நேத்துப் போயி செம கலாய்ப்பு கலாய்ச்சிட்டு வந்தோமில்லா? :-))
கேபிள்...இது எனக்கா!!!
(டிஸ்கி: இது சங்கிலி முருகன் சார் கமெண்ட் இல்ல.)
வேட்டைக்காரன் ரொம்ப நல்ல படமாச்சே, சுறாவைக் கம்பேர் பண்ணும் போது!
கேபிள் சார், உங்க விமர்சனத்துக்காக ரொம்ப காக்க வச்சிட்டிங்களே இந்த தடவை!
நீங்க தமிழ்நாடா இல்ல துபாய் விவேகானந்தர் தெருவுல இருக்கீங்களா ? ரஜினி எம்ஜிஆர் இருந்த காலகட்டம் என்ன. இப்போ இருப்பது என்ன ? அவர்கள் ஒன்றும் இதுபோல் அனாவசியமாக மொக்கை போடவில்லை. பஞ்ச் டயலாக்கும் பேசவில்லை. அவங்க படத்தை பார்த்தால் நேரம் போகும். இவர் படத்தை பார்த்தால் நேரத்தை கழுத்தை பிடித்து தள்ளினாலும் போகாது.
இதெல்லாம்.. ரொம்ப ஓவரு! :)
நேத்து தான் பாத்தேன்... மரண மொக்கை...
அவரு தனி கட்சிதான்.. ரஜினி மாதிரி.. ஹீ..ஹி
அருமையான உபயோகமான தகவல்கள்..நன்றி..
கடைசி வரிகள் அட்டகாசம்.. சிப்பு சிப்பாவருது..:)
@ஸ்டார்ஜான்
நன்றி
@பிரசன்ன ராஜன்
எப்படியோ.. சுறாவ விட சின்னது..
நன்றி
@இராகவன் நைஜிரியா
இப்படி கேட்டு கேட்டே ஏத்தி விட்றாகய்யா..:-0
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
விதி யாரை விட்டது
@ஜானகிராமன்
யாருக்கு?
@டம்பி மேவி
எனக்கென்னவோ.. நீ எல்லா படத்தையும் பார்க்குறேன்னு நினைக்கிறேன்
சந்தோசம்
@புலவன் புலிகேசி
அட ஒரு ஒப்பீட்டு முறையில சொல்றேன். இதனால் நெத்திலி பேரு கெட்டு போயிருச்சோ.. சாரி..
@காவேரி கணேஷ்
அவரே எழுதி கொடுத்த பிறகு வேற என்ன செய்ய முடியும் . எல்லா புகழும் ஏகாம்பரத்துக்கே தான் போவும்..
@
நன்றி
2கோவிந்தராஜன்
அவங்கல்லாம் இப்ப நடிக்கிறதில்லையே.. நடிச்சிருந்தா.. விட்டு கிழிச்சிருக்க மாட்டாங்க.. நம்ம ஆளுங்க
இளவரசு என்ன செய்வாரு பாவம்
@சதீஷ்
ஓகே
@சித்ரா
நன்றி
@சைவகொத்துபரோட்டா
நன்றி
அண்ணாச்சி உனனையத்தான் சொன்னாரா..?
நான் எனக்கு காமெடிநல்லா வந்திருக்கிறதா சொன்ன ஆளை தேடிகிட்டிருக்கேன். எஸ்பி.ராஜ்குமார், வடிவேலு ஏற்கனவே ஒர்கவுட் ஆன டீமாச்சேன்னுஒரு நம்பிக்கை வேற்..
அப்ப வேட்டைகாரனை திரும்ப பாருங்க
@தமிழ்மகன்
நன்றி
2தமிழ் வெங்கட்
அது சரி
@சேட்டைக்காரன்
நிறைய பேரு இப்படிஒரு காமெடிபடம் பார்க்க ஆசைப்பட்டு போயிட்றீங்க.. அது தெரியாம.. படம் நல்லாருக்குன்னு ஓப்பனிங்கை வச்சி நினைச்சிட்டு.. திரும்பவும் இதே போல படம் எடுகிறாங்க..
நன்றி உங்கள்முதல் வருகைக்கும்பின்னூட்டத்திற்கும்
@மணிஜி
ஆமா..
@சிவப்பிரியன்
வீட்டிற்கு டிவிடி எடுத்துவந்துபோட்டு காட்டுவேன்..
டவுன்லோட் கூட பண்ணிராதீங்க..
@அன்பு செழியன்
பொழைப்பு இருக்கேன்ணே
@கிருஷ்ணன் வைத்தியநாதன்
மிக்க நன்றி உங்கள்முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
@ஷ்ர்புதீன்
நம்புறாங்களா.?
அட.. வந்திட்டியா..?
@உண்மைத்தமிழன்
பேருல உண்மைய வச்சிட்டு பொய்யா எழுதக்கூடாது.. அப்ப்டி எழுதினாத்தான் மைனஸ் போடுவாங்கண்ணே.. :)
@கனகு
சந்தோசம் நீயும் பாத்திட்டியா..?
@மால்குடி
எதுக்கு தில்லு வேணும். சும்மாவா நடிக்கிறாங்க..
@பனித்துளி சஙக்ர்
நமக்குத்தான் வடை போச்சு..
ஏன் நாம் பாவமில்லையா..?
மரண மொக்கை இதுதான் சரியான வார்த்தை ஒத்த வரியில சொலலனும்னா!
VIJAY PADAM -na MASALA PADAM than
Ungalaku therinjirukum
Collectionla First in south tamilnadu after padayappa and great collection in Chennai and Chegalpattu District.
So Summer special - SURA than
(குறுந்தகவல் ஒன்று:
டிக்கெட் எடுக்குறதுக்கு முன்னாடி, ஒரு வாட்டிக்கு நூறு வாட்டி நல்லா யோசிச்சுக்கோங்க......
ஒருதடவ டிக்கெட் எடுத்தீட்டீங்கன்னா, அப்புறம் உங்களால யோசிக்கவே முடியாது..)
அதுசரி டாக்டர் விஜய் ஆச்சே...
இந்த அநியாயத்த தட்டிக் கேக்க யாருமே இல்லயா.....???????
யாரு பெத்த புள்ளையோ...
Ajith padam yethana flap achu yaravathu kavala patankala...Nama thalapathi konjam down ana udane ippadi pesuringala...
We have a good future wait....
Katharavaikum kavalkaran varatum
papom
By BAGAVATHI GOPI MADURAI KINGS