சிம்புத்தேவனின் மூன்றாவது படம், தமிழில் ரொம்ப நாளுக்கு பிறகு வந்திருக்கும் முழு நீள கெளபாய் படம். என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கோடை விடுமுறையில் வந்திருக்கும் படம்
பெரிதாக கதைக்கெல்லாம் மெனக்கெடவில்லை. ஒரு வைரத்தை தொலைத்த லாரன்ஸை வைரத்தை கொண்டு வந்தால் தான் அவர் வளர்க்கும் பிள்ளைகளை ஒப்படைப்பேன் என்று கூறிவிட, அவருக்கு உதவுவதாக மெளலி, ரமேஷ்கண்ணா, இளவரசு கும்பல் சொல்ல, அதற்கு பிரதியுபகாரமாய் தங்கள் கெளபாய் கிராமத்தை அவனை போலவே இருந்த சிங்கம் என்கிற லாரன்ஸை போல நடித்து வில்லன்களை பயமுறுத்தினால் அவருக்கு அவர்கள் கோயிலில் உள்ள வைரத்தை தருவதாய் சொல்ல, அதற்காக அங்கே போகும் லாரன்ஸுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தான் படம்.
எல்லா கெளபாய் படங்களை போலவே மரத்தால் ஆன வீடுகள், குதிரைகள், கெள்பாய் டிரஸுகள், கோயில் ஐயருக்கு கூட தலையில் கெளபாய் தொப்பி, பாஸ்மாக் என்று டாஸ்மாக்குக்கு பதிலாய் சரக்கு கடை, காபி டேவின் வாசலில் மசால் வடை போடும் டீக்கடை, கிராமத்துக்கு பெயர் ஜெய்சங்கர்புரம், முதலில் குடிவந்தவர் கர்ணன் என்கிற கேமராமேன், அப்புறம் எம்ஜிஆர், பின்னர் அசோகன், கடைசியாய் வந்தவர் ஜெய்சங்கர் அதனால் தான அவர் பெயரில் கிராமத்து பெயர். அழுக்கு பல் வில்லன், ஒத்தை கண் பெரிய வில்லன், அஸிஸ்டெண்டாய் லெக்பீஸ் லஷ்மிராய் என்று ஏகப்பட்ட விஷயங்கள் குட்டி,குட்டியாய் அட போட வைக்கிற விஷயங்கள் இருந்தாலும் பெரிதாய் சிரிப்புத்தான் வர மாட்டேன் என்கிறது.
ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரும், அவரது மொழிபெயர்ப்பாளரும் வந்த பின்னாடி கொஞ்சம் சூடு பிடிக்கிறது நிஜ காமெடி. இருவரது பாடி லேங்குவேஜும் அட்டகாசம். படத்தில் மிக அவசரமான கட்டத்தில் கூட, சாகும் தருவாயில் உள்ள போதும் ட்ரான்ஸலேஷன் செய்வது அட்டகாசம். இவர் மட்டும் இல்லையென்றால் படம் பப்படம் ஆகியிருக்கும். அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன் அந்த புதையல் தேடும் காட்சிகளில் நிறைய இடங்களில் குபீர் சிரிப்பு.
சந்தியா செவ்விந்தியர்கள் தலைவனின் மகளாய் வருகிறார். ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு போய்விடுகிறார். லஷ்மிராய் படம் நெடுக தொடை தெரிய வலைய வருகிறார். லாரன்ஸை பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. வி.எஸ்.ராகவன், மனோரமா, டெல்லிகணேஷ், சாய்குமார், நாசர், பத்மப்ரியா, ரமேஷ்கண்ணா, வையாபுரி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். அவர்களுக்கு இட்ட வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். அதிலும் வி.எஸ்.ராகவன் சாய்குமாரிடம் கேட்கும் கேள்வி நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.
படத்தில் பாராட்ட பட வேண்டியவர்களில் முக்கியமானவர் ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும். காஸ்ட்யூமரும். மிக அருமையான விஷுவல்கள், முக்கியமாய் பெரிய லேண்ட்ஸ்கேப்பில் குதிரைகள் ஓடும் காட்சிகளாகட்டும், புதையல் தேடி போகு இடத்தில் மலைகளுக்கு நடுவே தண்ணீரில் கடந்து போகும் காட்சி, என்று நெஞ்சில் நிற்கிறார் ஒளிப்பதிவாளர். அதே போல கலை இயக்குனரும், அந்த கெளபாய் வீடுகள், செட் ப்ராப்பர்டிகளும் உழைப்பு தெரிகிறது. காஸ்ட்யூமில் நிறைய உழைத்திருக்கிறார்கள்.ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடல்களும் சரி, பின்னணி இசையிலும் சரி, சொதப்பியிருக்கிறார்.

கதை, திரைக்கதை,வசனம், எழுதி இயக்கியிருப்பவர் சிம்புத்தேவன். வில்லனின் இடத்துக்கு யு.எஸ்.ஏ என்று பின்னணியில் அமைத்து அமெரிக்க ஏகாதிபத்யத்தையும், அணுகுண்டு ஒப்பந்தம், ரேஷன், இலங்கை தமிழர்கள் நிலைக்காக தமிழர்கள் யாரும் ஏதுவும் செய்யாத நிலையை குறித்த கிண்டல், பிரபாகரன் மறைந்தாலும், போராளிகளுக்கான குழுவுக்கு ஒரு தலைவன் முக்கியம் அதனால் தான் இறந்ததை வெளியே சொல்லாதீர்கள் என்று சத்தியம் வாங்கும் காட்சி, ஆங்காங்கே சின்ன சின்னதாய் புன்முறுவல் பூக்க வைக்கும் வசனங்கள். படத்தின் பாதி காட்சியில் ஒருவனை கொல்ல கரண்டி தூக்கிக் கொண்டு துரத்தும் ஆள். க்ளைமாக்ஸ் வரை துரத்திக் கொண்டிருப்பது, நிழலை விட ஸ்பீடாக சுடும் ஒரிஜினல் ஹீரோ, அதே போல ஸ்பீடாக காலில் விழும் டுபாகூர் ஹீரோ. ஆங்காங்கே வரும் அரசியல் நையாண்டிகள் என்று தன் ஒரு சிறந்த கார்டூனிஸ்ட் என்று நிருபித்திருக்கிறார் காப்ஷன் வசனங்கள் மூலம். அந்த புதையல் தேடும் இருபது நிமிடங்கள் பரபரப்பு. ஒரு திரைக்கதையாசிரியராய், இயக்குனராய் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் – மியாவ்…
கேபிள் சங்கர்
Post a Comment
54 comments:
மீ தி மொத கமென்ட்.
Yessu.
மீ தி செகண்ட் வோட்டு ஆல்சோ.
விமர்சனத்தைப் படிச்சுகிட்டே வந்த போது படம் நல்லா இருக்குன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன்... கடைசியில் பூனை அப்படின்னு சொல்லிட்டீங்களே..
மனசுவிட்டு சிரிக்கிற மாதிரி இருக்கும் என நினைக்கின்றேன்.
சுறாவை விட படம் நல்லா இருக்குல்ல!...அதுவே போதும்!......இந்தப் படத்தையும் மு.க.குடும்பம் வாங்கீரும்ணு நினைச்சேன்........இல்ல!
சுறாவை விட படம் நல்லா இருக்குல்ல!...அதுவே போதும்!......இந்தப் படத்தையும் மு.க.குடும்பம் வாங்கீரும்ணு நினைச்சேன்........இல்ல!
நானும்... நானும்
என்ன தல இப்புடி சொல்லி புட்டீங்க. நாங்க இந்த படத்தை த்யேட்டர்ல போய் பாக்கலாம்னுல நெனைச்சுகினு இருந்தோம். ரைட்டு, அப்ப திருட்டு டி.வி.டிக்கு வெய்ட் பண்ண வேண்டியது தான்...
ஒரு கருமத்தையாவது காப்பி அடிக்காம எடுக்க மாட்டாய்ங்களா..???
நீங்க சொல்லியிருக்கும், அந்த கரண்டியை வைச்சி கொல்ல கடைசி வரைக்கும் அலையுற சீன்... இந்தப் படத்தில் இருந்து சுட்டிருக்காங்க.
The Horribly Slow Murderer with the Extremely Inefficient Weapon
சத்தியமா அதுதான் படத்தோட பேர். :) :)
இது யூட்யூப் ட்ரைலெர் லிங்க்..
http://www.youtube.com/watch?v=9VDvgL58h_Y
மெனக்கெடவில்லை.......
பெரிதாய் சிரிப்புத்தான் வர மாட்டேன்...........
பெரிதாய் சொல்ல ஏதுமில்லை........
சொதப்பியிருக்கிறார்...............
பெரிதாய் நினைவில் நிற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.......
அண்ணே வெறும் குத்தம் கோரி சொல்லியே பெயர் வாங்கனும்னு நினைக்கிறீங்க... கொஞ்சம் அழகான வார்த்தைகள் பயன்படுத்த கத்துக்கோங்க.... நேர்மையா விமர்சனம் எழுதுறேன் பேர்வழின்னு சொல்லி சும்மா எல்லாத்தையும் கிழி கிழின்னு கிழிக்கிறது நல்லா இல்ல....
எவ்வளவு உழைச்சி ஒரு படத்த எடுக்குறாங்க... அதுவும் சுறா மாதிரி இல்லாம ஒரு வித்யாசமான படத்த குடுத்துருக்காங்க... உங்க வலைத்தலத்த ஒரு 800 பேரு தொடர்றாங்க. இப்படியெல்லாம் விமர்சனம் எழுதுனீங்கன்னா அதுல பெரும்பாலான பேரு படத்த பாக்கமாட்டாங்க.. அதனால கொஞ்சம் பாத்து விமர்சனம் பண்ணலாமே.. எப்படி வேணும்னாலும் விமர்சனம் பண்றதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு.. இருந்தாலும் கொஞ்சம் மாத்திக்க முயற்சி பண்ணலாமே... இது என் அன்பான வேண்டுகோள்.
// என்ன தல இப்புடி சொல்லி புட்டீங்க. நாங்க இந்த படத்தை த்யேட்டர்ல போய் பாக்கலாம்னுல நெனைச்சுகினு இருந்தோம். ரைட்டு, அப்ப திருட்டு டி.வி.டிக்கு வெய்ட் பண்ண வேண்டியது தான்...
//
கேபிள் அண்ணே,
பாத்தீங்களா உங்க விமர்சனத்தோட விளைவை. இதைத்தான் நீங்க எதிர்பாக்குறீங்களா?
Looks like a good time pass movie.
ok. good,but paakkanum
//The Horribly Slow Murderer with the Extremely Inefficient Weapon
சத்தியமா அதுதான் படத்தோட பேர். :) :)//
Bala's touch :))))
//ஹாலிவுட் பாலா said...//
அப்பு,இன்னும் ப்ளாக் ல இருக்கிங்களா?இல்ல சும்மா கேட்டேன்.
மியாவ்---பல பூனைகள் கத்தும் சத்த்மாக இருக்குமோ படம்...
இந்தப் படத்தைப் பற்றி வரும் விமர்சனங்கள் இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றன. இந்த வாரம் பார்க்கவேண்டும்.
வாய் விட்டு சிரித்து விட்டு வரலாம் .
I think no sentiments.
சொன்னதுபோல உழைப்பு இருக்கிறது.. சுறா போல கேனத்தனமாக இல்லாமல் இருப்பதற்க்கே நான் பாஸ் மார்க் கொடுப்பேன்..!! மற்றபடி இந்த வகை படங்களுக்கு என்று ஒரு அளவு இருக்கிறது - அதற்க்குள் நல்ல திரைக்கதை, நகைச்சுவை, இசை என்று இருக்குமேயானால் - நிச்சயம் தியேட்டரில் பார்க்க தகுந்த வரவேற்க்கதக்க படம்..!!
//அண்ணே வெறும் குத்தம் கோரி சொல்லியே பெயர் வாங்கனும்னு நினைக்கிறீங்க... கொஞ்சம் அழகான வார்த்தைகள் பயன்படுத்த கத்துக்கோங்க.... நேர்மையா விமர்சனம் எழுதுறேன் பேர்வழின்னு சொல்லி சும்மா எல்லாத்தையும் கிழி கிழின்னு கிழிக்கிறது நல்லா இல்ல....//
//ஒரு வைரத்தை தொலைத்த லாரன்ஸை வைரத்தை கொண்டு வந்தால் தான் அவர் வளர்க்கும் பிள்ளைகளை ஒப்படைப்பேன் என்று கூறிவிட, அவருக்கு உதவுவதாக மெளலி, ரமேஷ்கண்ணா, இளவரசு கும்பல் சொல்ல, அதற்கு பிரதியுபகாரமாய் தங்கள் கெளபாய் கிராமத்தை அவனை போலவே இருந்த சிங்கம் என்கிற லாரன்ஸை போல நடித்து வில்லன்களை பயமுறுத்தினால் அவருக்கு அவர்கள் கோயிலில் உள்ள வைரத்தை தருவதாய் சொல்ல, அதற்காக அங்கே போகும் லாரன்ஸுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தான் படம்//
தல, எழுத்துல இந்தக் கதையை சொல்லவே நககு தள்ளுது.. ஸ்க்ரீன்ல எப்படித்தான் சொன்னாஙக்ளோ??? :))
சார் நான் படம் பார்த்துட்டேன். எனக்கு படம் ரொம்ப பிடித்தது.
இதுவரை வெளிவந்த கொளபாய் படங்கள் எல்லாம் சீரியஸ் வகைகளே ஆனால் இந்தபடம் முற்றிலும் வித்யாசம். பட்ஜெட் அதிகம் செலவுபண்ணி ஆயிரத்தில் ஒருவன்போல புரியாமல் படமெடுப்பதைவிட மிகத்தெளிவாய் குழ்ந்தைகளேடு,பெண்களேடு அமர்ந்துபார்கக நிச்சயம் இரும்புகோட்டை முரட்டு சிங்கம் சிறந்தபடமே. ஒருபடம் எல்லோரையும் திருப்திபடுத்தும் என்று சொல்லமுடியாது. சுறா போன்ற படத்தோடு இதை ஒப்பிடவும் கூடாது, ஆனால் எனக்கு சுறாவால் ஏற்பட்ட காயத்திற்கு இ.கோ.மு.சிங்கம் மருந்தளித்தது. சிங்கம் – மியாவ் இதைத்தான் அவர்களே டைட்டிலில் போட்டுவிடுகிறார்களே.
கதையோடு சேர்ந்து அமெரிக்க ஏகாதிபத்யத்தையும், அணுகுண்டு ஒப்பந்தம் ஆகிய சமூக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை யார் பேசுகிறார்கள் யாருக்கு அந்த அக்கறை இருக்கிறதோ இல்லையோ சிம்புதேவனுக்கு இருக்கிறது அதைநாம் பாராட்டவேண்டாமா?
இந்த கருத்தை கேட்பதற்கா நான் காசு கொடுத்து படம் பார்க்கிறேன் என்று கூறலாம் ஆனால் எல்லா தமிழ் படங்களிலும் “நல்லவன் வாழ்வான்,கெட்டவன் அழிவான்” என்ற கருத்தைதானே தொடர்ந்து வருகிரார்கள்.
When You go to this movie, Just Think you are a ten year old boy. Only then you can enjoy the movie.
Music by GV prakash is BIg Minus. But the Back ground Score by Sabesh Murali is OK.
Lawerence as a stylish Marshel and a common man has done his job well. The card playing scene and 'Red Color' scene are good
'Leg'shmi Rai is Ok while Sandhya is wasted. Padma priya is the heroine but dont have much work.
Art Director and the Cameraman are the two pillars.
One liners brings Instant applause in the theater.
On the whole A good family entertainer even better than 23rd Pulikesi 45/100
குட்டீஸ்களுக்கு பிடிக்குமா?
Unnayya thappa select pannitanga ........... Nalla elluthurennu...... Nanum ippa varakkum cable sankar vimarchanam padikira oru 1001. Pakkalam neeyum ippa pittachai eduthu oru padam panrila ........ Aduku First Review ennodathudan..
அப்ப்படினா படம் போர் அடிக்கும் போலருக்கு.படடத்தை பார்க கூடாது போலருக்கு.குட்டி பசங்கலுக்கு பிடிக்காது.
/கதை, திரைக்கதை,வசனம், எழுதி இயக்கியிருப்பவர் சிம்புத்தேவன். வில்லனின் இடத்துக்கு யு.எஸ்.ஏ என்று பின்னணியில் அமைத்து அமெரிக்க ஏகாதிபத்யத்தையும், அணுகுண்டு ஒப்பந்தம், ரேஷன், இலங்கை தமிழர்கள் நிலைக்காக தமிழர்கள் யாரும் ஏதுவும் செய்யாத நிலையை குறித்த கிண்டல், பிரபாகரன் மறைந்தாலும், போராளிகளுக்கான குழுவுக்கு ஒரு தலைவன் முக்கியம் அதனால் தான் இறந்ததை வெளியே சொல்லாதீர்கள் என்று சத்தியம் வாங்கும் காட்சி, ஆங்காங்கே சின்ன சின்னதாய் புன்முறுவல் பூக்க வைக்கும் வசனங்கள். படத்தின் பாதி காட்சியில் ஒருவனை கொல்ல கரண்டி தூக்கிக் கொண்டு துரத்தும் ஆள். க்ளைமாக்ஸ் வரை துரத்திக் கொண்டிருப்பது, நிழலை விட ஸ்பீடாக சுடும் ஒரிஜினல் ஹீரோ, அதே போல ஸ்பீடாக காலில் விழும் டுபாகூர் ஹீரோ. ஆங்காங்கே வரும் அரசியல் நையாண்டிகள் என்//
ரவி.. நீங்கள் சொன்ன அத்துனை விஷயத்தையும் பாராட்டித்தான் இருக்கிறேன். தலைவரே..
அய்யோ பாவம் இனிமேல் இந்த மியாவ் வைத்து எலி கூட பிடிக்கமுடியாதே !
/Unnayya thappa select pannitanga ........... Nalla elluthurennu...... Nanum ippa varakkum cable sankar vimarchanam padikira oru 1001. Pakkalam neeyum ippa pittachai eduthu oru padam panrila ........ Aduku First Review ennodathudan.//
அதற்கான நாள் இன்னும் சில மாதங்களில் வரும் என்று சொல்லிக் கொள்கிறேன் முத்து பாண்டி:)
பிகு: போனில் பேசி புரிந்தமைக்கு நன்றி:)
//"On the whole A good family entertainer even better than 23rd Pulikesi 45/100"//
enna ippadi solliteenga .. ambuttu nallavaa irukku ??
போய் தலைவலி வந்ததுதான் மிச்சம்..கொய்யால வளைச்சு வளைச்சு மொக்க போடுறாங்க..
என்னங்க இப்படி சொல்லீட்டீங்க
இசை சபேஷ் முரளின்னு இன்னொரு பதிவுல இப்பத்தான் படிச்சிட்டு வந்தேன்...
அவர் படம் பாக்கலாம்னு சொல்லி இருந்தார்... கொஞ்சம் சிரிக்க வெச்சாக்கூட போதும்..
நன்றி..
பாடல்கள் அவ்ளோவா ரசிக்கிற மாதிரி இல்லைனாலும் பத்மப்ரியா & லக்ஷ்மிராய் ஹிஹிஹி.. ஆனாலும் புலிகேசி மாதிரி தாரை தப்பட்டை வாசிக்காமல் கொஞ்சம் முன்னேறிய இசை.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு படம்.. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல பொழுது போக்கு படம் பார்த்த திருப்தி.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறாய்ங்கய்யா :)
"தன் ஒரு சிறந்த கார்டூனிஸ்ட் என்று நிருபித்திருக்கிறார்"
" இயக்குனராய் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். "
i like your analytical skill.. superb
"அதிசயம் ஆனால் உண்மை "
"அதிசயம் ஆனால் உண்மை "
"அதிசயம் ஆனால் உண்மை "
கோடையில் ஒரு மழை காலம் என்று தான் சொல்ல வேண்டும் . நிறைகளையும் கூறியிருக்கும் உங்கள் விமர்சனம் ...........:-(
உங்களுடைய விமர்சனம் சரியென்று எனக்குப்படவில்லை. குறை சொல்வது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம். படங்களை கிழி கிழி என்று கிழித்த ஆளாளப்பட்ட ஆனந்தவிகடனே படம் எடுக்கும்போது ஒரு நிறைவானப் படத்தை தரமுடியவில்லை. வால்மீகி போல மொக்கைப்படங்களைத்தான் தரமுடிந்தது. ஆதலால் தாங்களும் ஒரு துணை இயக்குனர் என்ற முறையில் உங்கள் மனவோட்டத்தில் கதைகளாப் பார்க்காமல் கதையோட்டத்திற்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும். எடுத்தப்படங்களையே திரும்பத்திரும்ப எடுக்கும் சிலருக்கு மட்டுமே இதனைப்போன்ற விமர்சனங்கள் பொருந்தும். உங்களுக்கு சிரிப்பு வரவில்லையென்றால் அது ஹார்மோன் கோளாறு. மற்றபடி படம் நன்றாகத்தான் உள்ளது.
அன்புள்ள விந்தைமனிதனுக்கு, உங்கள் கூற்றுப்படி.. நிஜமென்றால தமிழ் நாட்டில் பாதி பேருக்கு மேல் ஹார்மோன் கோளாறு இருப்பதாக தெரியப்படுகிறது..:)
/அதிசயம் ஆனால் உண்மை "
"அதிசயம் ஆனால் உண்மை "
"அதிசயம் ஆனால் உண்மை "
கோடையில் ஒரு மழை காலம் என்று தான் சொல்ல வேண்டும் . நிறைகளையும் கூறியிருக்கும் உங்கள் விமர்சனம் ...........:-(//
நன்றி ஸ்ரீநிதி.. நீங்கள் இப்போதுதான் முதல் முறையாய் என் விமர்சனத்தை முழுதாய் படித்துள்ளீர்கள் போலிருக்கிறது.. இல்லாவிட்டால் இப்படி சொல்ல மாட்டீர்கள்.
@கிங் விஸ்வா
நன்றி
@இராகவன் நைஜிரியா
எனக்கு அப்படி படவில்லை தலைவரே..
@நேசன்
சுறாவை உலகின் எந்த படத்தோடும் கம்பேர் செய்தால் அந்த படம் நன்றாகவே இருக்கும்
@
@ப்ரசன்ன ராஜன்
ஒரு ட்ரை பண்ணுங்களேன்
@ஹாலிவுட் பாலா
அதில் சிறு ஸ்பூன், இதில் பெரிய ஜாங்கிரி கரண்டி..
அதில் சீரியஸ், இதில் காமெடி
@சும்மாதான்
என் மனதில் பட்டதை தான் என்னால் எழுத முடியும் தலைவரே.. ஒரு விஷயம்.. படத்தில் நன்றாக இருக்கும் அத்துனை விஷயஙக்ளையும் ஒரு சேர குறிப்பிட்டு பாராட்டித்தான் இருக்கிறேன். ஆனால் மொத்தமாய் படம் பார்த்துவிட்டு வரும் போதுஇருக்கும் மனநிலையைதான் எழுத முடியும். இது.. என் நிலை.. உழைப்பு என்று வரும் போது எல்லா திரைப்படஙக்ளுக்கும் ஒரே நிலை உழைப்புத்தான்.
@சிதரா
ஹேவ் எ ட்ரை சித்ரா
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
பாருங்க தலைவரே
@டிவி.ராதாகிருஷ்ணன்
ஆமா
@இலுமினாட்டி
நன்றி
@காவேரிகணேஷ்
:)
@செ.சரவணக்குமார்
பார்த்துவிட்டு சொல்லுங்கள்
@அனுஷாராமன்
வாய்விட்டு புன்னகைக்கலாம்..
@முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
திரைக்கதை தான் தலைவரே சறுக்கிவிட்டது..
@முத்து..
அப்புறம்
@கார்க்கி
என்னது கதை சொல்லிட்டேனா..?
@ஜேபரணி
ஒப்பீனியன் டிபர்ஸ்
@யுவா..
எனக்கு தெரிந்து.. ...
@வெற்றி
:(
@கிறுக்கல் கிறுக்கன்
பார்த்துட்டு சொல்லுங்களேன் உங்க கருத்தை
@பிரகாஷ்
இல்லை ஜி.வி.ப்ரகாஷ்குமார்தான்
சிரித்தால்சந்தோஷம்தான்.
@பார்வையாளன்
நன்றி
@
@Vanthiyathevan
//உங்களுக்கு சிரிப்பு வரவில்லையென்றால் அது ஹார்மோன் கோளாறு//
நான் என் ஃப்ரண்ட்ஸ் 20 பேர் படத்துக்கு போனோம்..யாருக்குமே பிடிக்கல..ஏன் தியேட்டர்ல முக்கால்வாசி பேரு கமெண்ட் கொடுத்துட்டுதான் இருந்தாங்க..கேபிள் சொன்ன மாதிரி
//இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் – மியாவ்//
@Vanthiyathevan
உங்களுக்கு பிடித்தது அடுத்தவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை ஏளனம் செய்யும் போக்கை நிறுத்தி விடுதல் நல்லது !
@வெற்றி
// உங்களுக்கு பிடித்தது அடுத்தவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை ஏளனம் செய்யும் போக்கை நிறுத்தி விடுதல் நல்லது!
மனதைப் பாதித்திருந்தால் மன்னிக்கவும். அதே நேரத்தில் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக படத்தின் இயக்குநரை நீங்கள் நக்கல் செய்வதையும் குறைத்துக்கொள்ளவும்.
I like this movie. Really good.
We should watch this in theater
அண்ணாத்தே, நீங்க சாய்குமாரா இருந்திருந்தா வி.எஸ். ராகவன் கேள்விக்கு என்ன பதில் சொல்லிருப்பீங்க?
எனக்கு படம் மிகவும் பிடிதிருக்கிறது.
நன்றி சிம்புதேவன் அண்ணா..!
எனக்கு படம் மிகவும் பிடித்திருகிறது.
உங்கள் கலை பணி தொடர வாழ்த்துகள் சிம்புதேவன் அண்ணா..!
எனக்கு படம் மிகவும் பிடித்திருகிறது.
உங்கள் கலை பணி தொடர வாழ்த்துகள் சிம்புதேவன் அண்ணா..!
Post a Comment