ஆவரேஜ் கமர்சியல் ஹிட்டான மாயாண்டி குடும்பத்தார் இயக்குனர் ராசு மதுரவன், நாடோடிகள் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இணைந்து வழங்கியிருக்கும் படம்.
சமீபத்திய ரேனிகுண்டா, மாத்தியோசி, போன்ற படங்களை வேறு ஞாபகப்படுத்தும் நடிகர்கள். மாத்தியோசியின் நாயகனே இதிலும் நாயகர்களில் ஒருவர். மீண்டும் ஒரு மதுரை ரவுடிகள் படமா? என்ற அலுப்புடன் தான் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் மெல்ல, மெல்ல ஒரு சாதாரண ரவுடிக் கும்பலை பற்றி மட்டுமில்லாமல் கொஞ்சம், கொஞ்சமாய் கதை சொல்ல அரம்பித்தவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
சிறு வயதிலிருந்து வீட்டின் கடைக்குட்டியான அழகரை சிகரெட்டு, பீடி வாங்க அனுப்பியே, கொஞ்சம் கொஞ்சமாய் தறுதலையாய் மாறி அலையும் அழகர், பிறந்தவுடன் குப்பைத்தொட்டியில் போடப்படும் ஏ டு இஸட், எவனோடோ ஓடிப்போய்விட்ட தாயினால் அநாதையாக்கப்பட்ட இழுப்பு, பெற்ற தாயே புருஷனும் புள்ளையும் வேண்டாம் என்று வேறு ஒருவருடன் ஓடிப்போய் குடும்பம் நடத்தியதால் யாருமில்லாதவனாய் அலையும் ஜெகன், இவர்களுடன் ஜில்பா தலையுடன் அலையும் ரிட்டயர்டு ரவுடி மயில் சாமி, எப்போது இவர்களுடன் அலையும் இவர்களுக்கு பைனான்ஸ் செய்யும் சுமார் பணக்கார பையன். இவர்கள் எல்லோருடனும் படம் நெடுக அலையும் அலப்பறை செய்து கொண்டு அலையும் சிங்கம்புலி, தன் தாய், தம்பி, தங்கைகளை காப்பாற்ற பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு கூலிக்காக கொலை செய்யும் கூலிப்படை தலைவன் பாண்டியாக விக்ராந்த், பொம்பளை சோக்காளி அண்ணன் ரவிமரியா, பணம் ஒன்றே குறியாய் அலையும் கந்து வட்டி நந்தா பெரியசாமி, இன்னொரு கந்துவட்டி ராஜ்கபூர், ஏ டு இஸட்டை காதலிக்கும் பெண், அழகரை காதலிக்கும் பெண், இந்த கும்பலை காட்டிக் கொடுத்து பழிவாங்க துடிக்கும் அருள், எந்த வித தவறும் செய்யாமல், தன் அண்ணன்களாலேயே கொலை செய்யப்படும் அந்த தங்கை கதாப்பாத்திரம், என்று ஒவ்வொரு கேரக்டராக அன் போல்ட் செய்து சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் முதல் பாதியின் கலகலப்புக்கு முக்கிய காரணம் சிங்கம் புலி.. மனுஷன் இயல்பாகவே நகைச்சுவை உணர்வுள்ளவர். அதிலும் ஒரு ஆண்ட்டி தொடர்ந்து இவரை எங்கு பார்த்தாலும் அடி பின்னிக் கொண்டிருக்க, அது என்ன என்று தெரிய வரும் போதும், ஆப்பக்காரியிடம் பேசும் டபுள் மீனீங் வசனங்கள் கொஞ்சம் நெளிய வைத்தாலும் இண்ட்ரஸ்டிங்னான கேரக்டர்.
அழகராய் நடிக்கும் ஹரிஷுக்கு நல்ல கேரக்டர். உணர்ந்து செய்திருக்கிறார். சில காட்சிகளில் எப்பவுமே ஏதோ சண்டைக்கு போவது போலவே லுங்கியை தூக்கி கட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளேயே அலைவது, மதுரைக்காரய்ங்க எப்பவுமே தொண்டை நரம்பு புடைக்க கத்திதான் பேசுவாய்ங்கங்கிறா மாரி புடைக்க, புடைக்க பேசுறதை தவிர நல்ல நடிப்பு.
எப்பபார் போதையில் கஞ்சா இழுத்துக் கொண்டு திரியும் இழுப்புக்கு கும்பலில் ஒரு வேடமாயிருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளின் போது மனதில் நிற்கிறார். அதே போல் தான் ஜெகனின் கேரக்டரும். க்ளைமாக்ஸில் அவரின் தாய் வீட்டிற்கு போய் நிற்க அவரையே நீ யாரு என்று கேட்பதும், தெரிந்ததவுடன் தய்வு செஞ்சு நான் நல்லா வாழ்ந்திட்டிருக்கேன் அதை கெடுக்காதேன்னு கெஞ்சி அனுப்பியதை நினைத்து வெம்பும் காட்சியிலும், கை வெட்டப்படும் காட்சியிலும் நெஞ்சில் நிற்கிறார்.
ஏ டு இஸட்டாக வரும் குங்குமபூவும் கொஞ்சு புறாவும் கதாநாயகன் ராமகிருஷ்ணனுக்கும் சொல்லிக் கொள்கிறார் போல ஒரு கேரக்டர் தான். இவருக்கும் ஒரு மிடில் க்ளாஸ் பெண்ணுக்குமான காதல் கதைக்கு தேவையாக இருந்தாலும் சிம்பதியை கொடுத்த அளவுக்கு மனதில் நிற்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அழகர் காதலிக்கும் அத்தைப் பெண் முதலிரவன்று அவள் தன்னை காதலிக்கவில்லை, கும்பலில் அவர்களுடன் சுற்றும் பணக்கார பையனைத்தான் காதலித்தேன் என்று சொல்ல அவளின் சந்தோஷத்திற்காக அவன் கட்டிய தாலியை அறுத்து நண்பனுக்கு திருமணம் செய்து கொடுப்பது நட்பின் உயர்வை காட்டும் விஷயமாய் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாசூக்காக சொல்லியிருக்கலாமோ என்று படுகிறது.
கதாநாயகிகளாய் வரும் பெண்கள் இருவருக்கும் பெரிதாய் ஏதும் சொலல் முடியவில்லை. படத்தில் சிம்பதி கிடைப்பதற்காக பயன்பட்டிருக்கிறார்களே தவிர பெரிதாய் ஏதுமில்லை. இதற்கு அந்த ஆப்பக்கடை அக்கா பரவாயில்லை “பெரியதாய்” இப்ரஸ் செய்கிறார்..:)
கூலிப்படை தலைவனாய் வரும் விக்ராந்துக்கு நல்ல கேரக்டர் ஆனாலும் பல இடங்களில் முகத்தில் எந்த ஒரு ரியாக்ஷனே இல்லாமல் முழிப்பது பாவமாய் இருக்கிறது. அழகரை கொல்லும் காட்சியில் அழகர் தன் அம்மா இறந்ததுக்காக கொஞ்ச நேரம் அழுதுக்கிறேன் என்று கேட்க, டைம் கொடுத்து அழுது முடியும் வரை காத்திருந்து “நீ செத்துப் போன அம்மாவுக்காக அழுதிட்டே. ஆனா என் விட்டில இருக்கிற அம்மா அழக்கூடாதுங்கிறதுக்காக செய்யறேன் என்று சொல்லி கத்தியை சொருகுமிடத்தில் வலிக்கிறது.
ரவிமரியா, நந்தாபெரியசாமி, ராஜ்கபூர், ஜெகன், சிங்கம்புலி என்று நிறைய இயக்குனர்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். ரவிமரியா மட்டும் எப்போது அடுப்பின் மேல் உட்கார்ந்திருக்கிற மாதிரி கத்திக் கொண்டேயிருப்பது கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது.
பால பரணியின் ஒளிப்பதிவு கச்சிதம். அதிலும் முக்கியமாய் அழகர் திருட்டு கும்பல் ஒன்று தன் அண்ணிடமிருந்து திருடிய பணத்தை மீட்பதற்காக நடக்கும் சேஸிங் காட்சியிலும், நடு நடுவே குறுக்கே விழும் லோக்கல் பெண்கள், அந்த பன்னி மேயும் சாக்கடை கால்வாயில் கும்பலாய் இவர்களை துரத்தி வ்ரும் சிறுவர்கள், இவர்கள் ஒளிந்து கொள்ளும் செம்மண் மலை காட்சியிலும், செங்கல் சூளையில் அழகியுடன் ஆடும் ஆட்ட காட்சியிலும் அடி தூள் பரத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும்.சபேஷ் முரளீயின் இசையில் இரண்டு பாடல்கள் இதம். ஒரு பாடல் சரி குத்து.
கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்கியிருப்பவர் ராசு.மதுரவன். தன் தங்கை எவனோ ஒரு ரவுடிப் பையனை காதலிக்கிறாள் என்று தவறாக நினைத்துக் கொண்டு அவளை இம்சைபடுத்தும் ரவுடி அண்ணன்ங்கள். இந்த லோக்கல் ரவுடி கும்பல் அகஸ்மாத்தாய் அவர்கள் வீட்டிற்கே திருடப்போக, காதலைனைத்தான் வர வழைத்திருக்கிறாள் என்று தவறாக எண்ணி தன் தங்கையை கழுத்தில் சுருக்கு போட்டு கொல்வது கொடுரம். அதன் விளைவாக இவர்கள் நான்கு பேரையும் கொல்ல அலைவதுமான இந்த சின்ன லைனில், இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள் மூலம் பார்த்து பழகிய சீன்களாய் இருந்தாலும் எரிச்சலடையாமல் கொடுத்திருப்பது இதம்.
இயக்குனருக்கு மாயாண்டி குடும்பத்தார் படத்தின் ஹேங் ஓவர் போகவில்லை போலிருக்கிறது. அந்த படத்தில் வந்த மாதிரியே தங்கை தன் தம்பியிடம் சாப்பிடுவதற்காக பஸ்ஸ்டாண்டில் வந்து கெஞ்சி அழுவது, அழகரின் அம்மாவின் சவ ஊர்வலம், விக்ராந்தின் செயலுக்கான நீதி போதனை, அண்ணனின் பணம் காணாமல் போனதும் ரவுடி தம்பி சரியாக கண்டுபிடித்து பணத்தை திருப்பி கொடுப்பதும், ஊரில் கும்பல் கும்பலாய் எவ்வளவு பேர் அரிவாளோடு போனாலும் மதுரையில் யாரும் எதுவும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது போல அட்மாஸ்பியரில் இருப்பவர்கள் மிகச் சாதாரணமாய் இருப்பதும், ரவுடியாய் இருப்பது என்னவோ பெரிய டாக்டர் பட்டம் போல பேசி நியாய படுத்தும் வசனங்களும், பின்னர் தேவையில்லாமல் தகப்பனால் தான் தான் இப்படி ஆகிவிட்டேன் என்று புலம்புவதும், தொய்வுதான். திரைக்கதையாசிரியரும், எடிட்டரும் இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம்.
தன் நண்பனை கொன்றவர்களை பழிவாங்குவது என்றதும் சுப்ரமணியபுரம் ஞாபகம் வராமல் இல்லை. அதே போல நடிப்பவர்கள் எல்லோரும் ஒரே விதமாய் கத்தி, கத்தி பேசுவதும், பத்து சீனுக்கு ஒரு சீன் நெஞ்சை நக்கும் காட்சிகள் வருவதும், திடீர் திடீரென படத்தின் கேரக்டர்கள் முரணாய் ஒரு விஷயத்தை செய்ய, அடுத்த காட்சியில் அதற்கான விளக்க காட்சி காட்டுவதும், ஒரே முறையில் ராமகிருஷ்ணனின் காதலி கர்பமாவதும், முதல் காட்சியில் கை வெட்டப்படும் ஜெகன் அடுத்த காட்சியிலேயே ஒத்தை கையுடன் சாதாரணமாக நடமாடுவதும், ரவிமரியாவை மூன்று நண்பர்கள் சேர்ந்து கொல்லும் காட்சியில், ரவிமரியாவுக்கு பெண் பித்து ஜாஸ்தி என்று எப்படி இவர்களுக்கு தெரிந்தது?. அதே போல் மற்ற இருவரும் ரவிமரியாவை இழுத்து கொண்டு வரும் நேரத்தில் ஒத்தை கையில் ஆறு அடி பள்ளத்தை அதுவும் அளவாக, ஜெகன் தோண்டுவது எப்படி? என்பது போன்ற பல கேள்விகள் மனதில் எழுந்து கொண்டேயிருக்கத்தான் செய்கிறது. முதல் பாதி முழுவதும் ஆட்டம், பாட்டம், நகைச்சுவை என்று போன படம், இரண்டாவது பாதி முழுவதும் கொலை, துரோகம், காட்டிக் கொடுப்பது என்று தொடர்ந்து இழப்புகளாய் இருந்தாலும் அதிகம் ரத்தம் காண்பிக்காமல், விறுவிறுப்பாக கதை சொன்ன காரணத்தினால் இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும்.
கோரிப்பாளையம் - பார்க்கலாம்
கேபிள் சங்கர்
Post a Comment
35 comments:
அண்ணா மொத்லல ஒரு கேள்வி. எப்படி பொருமையா தினம் ஒரு படம பாக்க முடியுது ஒங்களால? மதுரைன்னாலே கொலைக்காரைங்க வாழ்ற ஊருன்னே படம் எடுக்காங்கைலே எப்படின்னா இது. என்னைய மாதிரி பச்ச மன்னுங்க வந்த பூமின்னே அது. எரிச்சலா வருதுன்னே.
ச்சே!இ.கோ.மு.சி வேண்டாம் இந்த படத்துக்கு போகலாமென்று நண்பனொருவன் சொன்னான்..அவன் சொன்னதை கேட்டுருக்கணும்..ம்ம்..விதி
இவிங்க இத்தன அருவாள தூக்கிட்டு திரியறத பார்த்தா நம்ம நாட்டுல கிடைக்கிற மொத்த இரும்பும் அருவா செய்யறதுக்குதான் யூஸ் ஆகுது போல இருக்கு.
நீங்க பாவம் சங்கர்.... :( :( :( :(
ஒவ்வொரு தடவை மதுரை பேஸ்டு படம் வடும்பொழுது வயிறு கலக்குது.
paththudalaam.
இன்னும் சிங்கப்பூருக்கு வரல, வந்தவுடன் பாத்துடலாம்,
ஞாயிற்று கிழமையும் கடை திறந்திருக்கு...??
இப்படி மதுரையை வன்முறை களமாகவே படம் பிடிக்கும் கும்பலுக்கு என் கண்டணங்கள்...
அடப்பாவிகளா....
கோரிப்பாளையம் மதுரையின் நன்றாக வளர்ந்துவிட்ட ஒரு முக்கியமான ஏரியா....
அங்கேதான் அமெரிக்கன் காலேஜே இருக்கு....என்ன கொடும இது மதுரைய ஒரு கற்கால கிராமமாகவே காட்டுர்றானுங்களே..... அமைதியான பாசக்காரப் பய ஊருங்க எங்க ஊரு.... எப்போதான் இந்த மதுரை சீசன் கோலிவுட்ல ஓயுமோ தெரியலையே....
மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், மேலமாசிவீதின்னு எல்லாம் அடுத்து படங்கள் வரும்போலயே இந்த டைட்டில எல்லாம் ரிசர்வ் பண்ணி ஊர் பேரக் காப்பாத்தணும் :)
விமர்சனம் நல்லா இருக்கு பிரதர்... ஒரே ஒரு டவுட் கேபிள்ணா.... ஓர் இயக்குனராவதற்கு வருகின்ற எல்லா படத்தையும் பார்க்க வேண்டுமா..... ட்ரெண்ட்டை அப்டேட் செய்துகொள்வதைத் தவிர வேறு ஏதாவது பிரத்யேகக் காரணம் இருக்கிறதா?
மதுரையில் இன்னும் எத்தன ஊர் பாக்கி இருக்குது?
//ஊரில் கும்பல் கும்பலாய் எவ்வளவு பேர் அரிவாளோடு போனாலும் மதுரையில் யாரும் எதுவும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது போல அட்மாஸ்பியரில் இருப்பவர்கள் மிகச் சாதாரணமாய் இருப்பதும்,//
ஏதாச்சும் செய்யணும் பாஸ்! :)
ஏதாச்சும் செய்யணும் பாஸ்!
:)
saithapettai sakkaalaththi-
title for the next movie!
133 வார்த்தைகள், 1131 எழுத்துக்கள் (இடைவெளியுடன் சேர்த்து), ஒரே ஒரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்பபபபப நீளமான வரி அல்லது பத்தி முற்றுப்புள்ளியே இல்லாமல். எப்புடிண்ணே? உங்கள் எல்லா பதிவுகளிலும், இது மாதிரி ஒரு வரி நிச்சயம் இருக்கிறது. ஒரு நான்கு தடவை படித்தால் தான் எனக்குப் புரிகிறது.
திரைப்படங்களில் கூட நீளமான காட்சி இரண்டு நிமிடத்திற்க்கு மேல் வந்தால் (இறுதிக் காட்சி தவிர) எனக்கு வெறுத்து போகும்.
மற்ற படி, தென் மாவட்டங்களை பற்றி வரும் 10001வது படம். கடுமையான கண்டனங்கள்..
பாத்துடுவோம்.
now a days madurai becomes, Modern Crime City. white dhothti (Veatti) crimes. if locked your house for 5 months, that will be sold. for every auto Rs.30000/- commission going to DMK party.
சிறுக்கி வாடி என் சிட்டு, அடி என்னடி ராக்கம்மா, சின்ன பட்ஜெட் படங்களுக்கெல்லாம் வேலை செய்ய சோம்பேறித் தனப் பட்டு இப்படி பழைய பாட்டுகளையே உருவி அடிக்கிற இசையமைப்பாளர்களைப் பத்தி எதாவது சொல்லுங்களேன் தலை.
பாத்துடலாம் பாஸ்.
as ramasamy kannan asked, how come u r able to watch this type of movie
இங்க பெங்களூருல ஓடல.. ஒரு ரெண்டு மாசத்துல, இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல்முறையா பார்த்துடலாம்..
இவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறம் படத்த பாக்கலாம் போலயே !
:)
சிறப்பான விமர்சனம் நன்றி நண்பரே . படம் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிடுகிறேன் !
சமீப காலத்தில் அருவாளைக்காட்டாமல் எடுக்கப்பட்ட கொஞ்சம் நல்ல திரைப்படம் "நாகரீக கோமாளிகள்" படந்தான்.
மற்ற எல்லா படத்துலயும் ஏதோ மதுரைக்காரங்கனா எப்பபாத்தாலும் அருவாளை தூக்கிகிட்டு எவனாவது வெட்டுறதுக்கு காத்துக்கிட்டு இருக்கிறது மாதிரியே காட்றாங்க.
hi shankar sir this story and dialogues written by s.arulraasan...
GOOD REVIEW
@இராமசாமி கண்ண்ன்
:)
@வெற்றி
:)
@ஹாலிவுட் பாலா..
விதி..:)
@பப்பு
எனக்கும்தான்
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
ம்
@கே.ஆர்.பி.செந்தில்
ம்
@சுகுமார் சுவாமிநாதன்
கடமைன்னுஒண்ணு இருக்கில்ல..
@கவேரி கணேஷ்
நானும்..
@பிரபு
அப்படியெல்லாம் இல்லை பிரபு.. இது என் தனிப்பட்ட ஆர்வம்..
@ரமேஷ்
சொல்லுங்க பாப்போம்
@ஷங்கர்
செஞ்சிட்டா போச்சு..
@ஷர்புதின்
நன்றி ஷங்கர்
@டிடிபியான்
நலலருக்கேன்
@பிள்ளையாண்டான்
அடுத்த பதிவிலிருந்து குறைக்க பார்க்கிறேன் தலைவரே
@ஸ்ரீ
ஓகே
2ஜவஹர்லால்
நிஜமா..
@விஜயகோபால்சாமி
என்னத்தை சொல்றது...
@ஆதிமூலகிருஷ்ணன்
ம்
@ராம்ஜியாஹு
சேம் பதில்ல்
@ஜெய்
ம்
@நேசமித்ரன்
பாத்துருங்க..
@பனித்துளி சங்கர்
நன்றி
@சும்மாதான்
இந்த படத்தை மட்டும் குறை சொல்லலாமா.?:)
@ப்ரியமுடன் வசந்த்
இல்லை தலைவா..நான் பேசிவிட்டேன் அருளிடமே..:)
@மனோ
நன்றி
ayyayoo........
அய்யயோ எங்கண்ணன் என்னை எமாதிட்டாரா ?
பொய் சொல்லிட்டாரா? சொரிமுத்து அருள் ராசன் என் உறவினர் சங்கர் சார்....
சார் படம் பார்த்துடேன். மிக மோசமான படம், மறுபடியும் ஒரு “சுப்ரமணியபுரம்”. தனது திரைக்கதை அமைப்பின் மூலமாக ஒரு மனிதனை ஓட,ஓட வெட்டி கொல்லப்படும் காட்சியை கைதட்டி ரசிக்கவைக்கும் இயக்குனரது எண்ணம் கண்டிப்பாக வன்முறையை ஆதரிக்காத படம் இது என்று சொல்லத்தகுதியற்றது.
என்று தான் மதுரை அருவாள் கலாசாரத்தில் இருந்து தப்பு மோ
Post a Comment