சென்னையில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் சாலை சந்திப்பில் உள்ள பார்சன மனரே என்கிற இடத்தில் முன்பு பாலிமர் என்கிற பிரபலமான ஒரு சைவ உணவகம் இருந்தது. சவுத் இந்தியன், நார்த் இந்தியன் என்று இரண்டு வகை உணவுகளை ரொம்ப காலமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் அங்கு “வெஜ் நேஷன்” என்கிற பெயரில் ஒரு ரெஸ்ட்ராரண்ட் ஆரம்பித்திருப்பதாய் போர்டை பார்த்ததும் உள்ளே சென்றால், பழைய பாலிமர் இப்போது “வெஜ் நேஷ்ன்” ஆகியிருந்த்து. உள்ளே நுழைந்த்தும் மாக்டெயில் பார் வைத்திருந்தார்கள். எலலவிதமான் ஜூஸ், மாக்டெயில்களுக்கான பார் போன்ற சீட் அமைப்புடன் விதவிதமான மெனுவுடன். உள்ளே சென்று உட்கார்ந்தவுடன் நல்ல அறுபது பக்க நோட்டு போல மெத்து மெத்தென ஒரு மெனு கார்டை கொடுத்தார்கள். பக்கா வெஜிடேரியன் அயிட்டங்கள் வரிசைகட்டி நின்றது.
குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு குறையாமல் இருந்தது சைட் டிஷ் அயிட்டம் விலையெல்லாம். நான் மீல் பேக்கேஜ் எடுத்துக் கொண்டேன். சவுத் இண்டியன் பேக்கேஜ் 120 ரூபாயும், நார்த் இண்டியன் பேக்கேஜ்130 ரூபாயும். நான் நார்த் இண்டியன்.
சூப், அன்லிமிட்டட் மூன்று விதமான சப்ஜிகள், ஒரு ட்ரை சைட் டிஷ், பச்சடி, மற்றும் ரோட்டி, புல்கா, நான் வகைகள், ஒரு ஸ்வீட், ஒரு சின்ன கிண்ணம் ஏதாவது ஒரு வெஜிடபிள் ரைஸ் என்று நல்ல டேஸ்டியான புட். புல்காக்களும், நான்களும் ரோட்டிகளும் அவ்வளவு சாப்ட் என்றால் அது மிகையில்லை. கூடவே கொடுத்திருந்த மூங்க்தாலும், பன்னிர் மசாலாவும், வெஜிடபிள்குருமாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டது.
நல்ல பசிக்கு அருமையான வெஜிடேரியன் புட். சரவணபவனை விட விலை குறைவுதான். இவர்களுக்கு இன்னொரு ப்ராஞ்ச் திருவான்மியூரில் லாடிஸ் ப்ரிட்ஸ் ரோடில் ஆரம்பித்திருக்கிறார்கள்.
கேபிள் சங்கர்
குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு குறையாமல் இருந்தது சைட் டிஷ் அயிட்டம் விலையெல்லாம். நான் மீல் பேக்கேஜ் எடுத்துக் கொண்டேன். சவுத் இண்டியன் பேக்கேஜ் 120 ரூபாயும், நார்த் இண்டியன் பேக்கேஜ்130 ரூபாயும். நான் நார்த் இண்டியன்.
சூப், அன்லிமிட்டட் மூன்று விதமான சப்ஜிகள், ஒரு ட்ரை சைட் டிஷ், பச்சடி, மற்றும் ரோட்டி, புல்கா, நான் வகைகள், ஒரு ஸ்வீட், ஒரு சின்ன கிண்ணம் ஏதாவது ஒரு வெஜிடபிள் ரைஸ் என்று நல்ல டேஸ்டியான புட். புல்காக்களும், நான்களும் ரோட்டிகளும் அவ்வளவு சாப்ட் என்றால் அது மிகையில்லை. கூடவே கொடுத்திருந்த மூங்க்தாலும், பன்னிர் மசாலாவும், வெஜிடபிள்குருமாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டது.
நல்ல பசிக்கு அருமையான வெஜிடேரியன் புட். சரவணபவனை விட விலை குறைவுதான். இவர்களுக்கு இன்னொரு ப்ராஞ்ச் திருவான்மியூரில் லாடிஸ் ப்ரிட்ஸ் ரோடில் ஆரம்பித்திருக்கிறார்கள்.
Post a Comment
28 comments:
me the first
நன்றி இன்னொரு அறிமுகத்துக்கு.
எல்லாம் பார்த்து வையுங்க ஊருக்கு வரும்போது ட்ரீட்க்கு நல்ல கடையா கூப்ட்டு போனா சரி
:)
சரி அடுத்த பதிவர்கள் சந்திப்புக்கு எந்த கடையில ட்ரீட் தரப் போறீங்க?
பார்சன மனரே ??
Enga irukkunga intha idam? ennai pondravarkalukku konjam vilasam mum kodunga....
தெளிவில்லாதது படம் மட்டும் தானா...??
//ஜெட்லி said...
தெளிவில்லாதது படம் மட்டும் தானா...??////
ஹி,ஹி,ஹி ..... அது ஒன்னும் இல்ல ஹி.ஹி.ஹி
@பூங்குன்றன்
பார்சன் மானர் அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ளது.
--
தல, அடுத்த சாப்பாடு கடைக்கு கேமரா மென் நாந்தான் ஓக்கே? :))
மதுரை சப்தகிரி டிபின் பார்க் BESTனே. ட்ரய் பண்ணவும்
தோசை பார்த்ததும் நாக்கு ஒர்ருகெறது .தங்கள் சொல்லும் விதம் உணவு சாப்பிட்ட உணர்வு தோன் று கிறது
நானே இங்க பெங்களூருல கிடைக்கிற வெல்ல சாம்பாரையும், காய்ஞ்ச தோசையையும் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.. இப்படியெல்லாம் படம் போட்டு வெறுப்பேத்தறீங்களே கேபிள்.. :-)
இன்னொரு அறிமுகத்துக்கு நன்றி..
முகவரி போதாது ,போன் நம்பருடன் இருந்தால் சென்னைக்கு புதிதாய் வருபவருக்கு உபயோகமாக இருக்கும்....
கேபிள்!
வெஜ்நேஷன் என்பது கெவின்கேர் குழுமத்தின் ஒரு பிரிவு. தலைகுளிக்க்கிற ஷாம்புவை ‘சிக்'கென்று சாஷேயில் புதுமையாக கொண்டுவந்த ரங்கநாதன் உணவுத்துறையிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதிலும் வெற்றிக்கொடி நாட்டுவார் என்று நம்பி வாழ்த்துவோம்.
thanks 【♫ஷங்கர்..
முடிந்தால் பெங்களுரு சாப்பாட்டு கடை பற்றி எழுதுங்களேன்.... சென்னை கூட சாப்பாடு நன்றாக இருக்கும்...... ஆனா இங்க நாங்க கடந்த 2 வருசமா நல்ல சாப்பாட்டுக்கு படுற பாடு இருக்கே.................
தொப்பை பத்திரம் கேபிள்.
ஆஹா சாப்பிடுறதுக்கே லீவு போட்டுட்டு வரணும் போல இருக்கே! :-)
பாலிமார் இன்னும் இருக்கிறதா?
சென்னைக்கு (இந்தியாவிற்கு) வந்து வருடம் 5 ஒடிவிட்டது..ம்ம்ம்ம்’
AVM DASA தோசா என்று ஒரு ஒட்டல் இருந்ததே இன்னும் இருக்கிறதா?
ஆழ்வார் பேட்டை சாம்கோ?
கோடம்பாக்கம் ஹாலிவுட்?
வடபழனி சேலம் ஆர் ஆர் ஆர் ?
நல்ல அறிமுகம் நண்பா,... நண்பா நலமா?
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
@பார்சாகுமரன்
நன்றி
@இராமசாமி கண்ணன்
நன்றி
@நேசமித்ரன்
உங்களுக்கில்லாததா.
@ரமேஷ்ரொம்ப நல்லவன்
தந்திட்டா போச்சு
‘
@அகில்பூங்குன்றன்
கொடுத்திருக்கிறேனே தலைவரே..
@ஜெட்லி..
:)
@ஷங்கர்
ஓகே
@நான்கடவுள்
இன்னும் ட்ரை பண்ணலை.. அட்ரஸ் கொடுங்க மெயில்ல.. அடுத்த மாதம் மதுரை விசிட் இருக்கு
@அனுஷாராமன்
ம்.. போய் ஒரு கட்டு கட்டுங்க..
@ஜெய்
அங்கேயும் அடுத்த மாசம் ஒரு ட்ரிப் இருக்கு தலைவரே
@மலர்
நன்றி
@மலர்
ட்ரை பண்ணுகிறேன்
@யுவகிருஷ்ணா..
ஆமா. யுவா.. தெரியும் அதை போட வேண்டும் என்று நினைத்திருந்தேன் மறந்துவிட்டேன். தகவ்ல் பின்னூட்டியதற்கு நன்/றி
@
@அகில் பூன்ங்குன்றன்
நன்றி..
@ஈரோடு சுரேஷ்
ட்ரை பண்ணுறேன்
@ஆதிமூலகிருஷ்ணன்
நான் டயட்டிலிருக்கிறேன்
2ரோஸ்விக்
வாங்க..ன்வாங்க..
2கால்கர்சிவா
பாலிமர் தான் வெஜ் நேஷன்
தாஸா இல்லை
சாம்கோ இருக்கு புதுசா..ரெஸ்டாரண்டாய்
ஹாலிவுட் இருக்க்கிறது.
சேலம் ஆர்.ஆர் க்ளோஸ்
@ஆ.ஞானசேகரன்
நலம் நண்பரே.. நீங்க?
அண்ணே,
நீங்க நார்த் இண்டியனா? சொல்லவேயில்ல?
கேபிள் சங்கர் கலைஞர் டி.வில வர ரோபோ சங்கர் மாதிரி நிறைய சாப்பிடுவார்னு பாத்தா அளவு சாப்பாடு தான ????
அதெல்லாம் சரி.....திருவான்மியூர் வெஜ்னேஷன் பக்கம் போயிட வேணாம்....ஜெமினிதான் பெஸ்ட்....திருவான்மியூர் பிராஞ்ச் ரொம்ப மோசம்.....
Cable Gi,
Any must eat restaurent in Pullaiyar patti-Karaikudi Area ..
Post a Comment