நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட, வெறும் சட்டம், சாட்சி மட்டுமில்லாமல் மனசாட்சிக்கும் இடம் கொடுத்து தீர்ப்பு வர வேண்டும் என்று சொல்லும் படம்.
வேலு ஒரு கோர்ட் டவாலி. முதல் காட்சியிலேயே அவன் மினிஸ்டர் கோட்டா சீனிவாராவை கொலை செய்ய முயற்சிக்க, ஆது மிஸ்ஸாகிவிடுகிறது. பின்பு கோர்ட்டில் நிரபராதி என்று தீர்ப்பாகிய குற்றவாளிகளை தேடித், தேடிக் கொள்கிறான். ஏன் கொல்கிறான்? என்பதை முந்தாள் பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் திரைக்கதை.
கரணின் நடிப்பில் நிறைய இடங்களில் கமலின் பாடி லேங்குவேஜ். அடிப்பார்வை பார்க்கிறார், சம்மந்தமில்லாமல் குத்து பாடலுக்கு ஆடுகிறார். கொலை செய்கிறார். கண்ணில் தண்ணீர் தளும்ப வசனம் பேசுகிறார். சின்ன சின்ன ரியாக்ஷனில் இம்ப்ரஸ் செய்ய பார்க்கிறார். ஆனால் என்ன எழவு அவர் கேரக்டர் மேல் ஒரு ஈடுபாடுதான் வந்து தொலைய மாட்டேனென்கிறது.
கதாநாயகி புதுசு.. நடிப்பு என்பது சாஸ்திரத்துக்கு கூட வரவில்லை. நான் சாகறேன் என்பதை கூட மொன்னையாய் ஒரு முகத்தை வைத்து சொல்கிறார். வில்லன்கள் கோட்டா சீனிவாசராவ், சம்பத, எல்லாருமே படு மொக்கை. சீனுக்கு சீன் வசனம் பேசுவதோடு சரி.
கதாநாயகி புதுசு.. நடிப்பு என்பது சாஸ்திரத்துக்கு கூட வரவில்லை. நான் சாகறேன் என்பதை கூட மொன்னையாய் ஒரு முகத்தை வைத்து சொல்கிறார். வில்லன்கள் கோட்டா சீனிவாசராவ், சம்பத, எல்லாருமே படு மொக்கை. சீனுக்கு சீன் வசனம் பேசுவதோடு சரி.
விஜய் ஆண்டனிக்கு ஹிட்மேக்கர் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் ஒரு பாட்டு கூட கேட்கும்படியாய் இல்லை. முக்கியமாய் பின்னணி இசையில் பல இடங்களில் இந்தியன், ஜெண்டில் மேன் பிட்டுகள். வசனம் பேசும் காட்சிகளில் எல்லாம் இரைச்சலாய் பின்னனி இசை டிஸ்டர்ப் செய்கிறது.
படத்திற்கு வசனம் பா.ராகவன். வசனம் என்று பெரிதாய் எழுதுமளவுக்கு காட்சிகளின் பலம் இல்லாததால், பெரிதாய் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் ரைமிங்கான வசனங்கள் எடுபடுகிறது. கோட்டா ஒரு இடத்தில் தன் மகனிடம்..”நீ லாயர்.. லீகலை பாத்துக்கோ.. நான் லீடர் இல்லீகலை பார்த்துக்கறேன்”, மயிரை வைத்து பேசுவது போன்ற வசனங்களை சொல்லலாம். கோர்ட்டு காட்சிகளில் மனசாட்சியை முன்வைத்து தீர்ப்பு வரவேண்டும் என்று பேசும் காட்சிகளில் ஆங்காங்கே ட்ச்சிங்
புதிதாய் கதை சொல்ல முடியாது. ஆனால் அதை புதுவிதமான திரைக்கதையில் ப்ரசண்ட் செய்ய முடியும். இம்மாதிரியான கதையில் அட்லீஸ்ட் கொலை முயற்சியிலாவது கொஞ்சம் புத்திசாலித்தனத்தை உபயோகபடுத்தியிருக்கலாம். வழக்கமான எலலா மாஸ் ஹீரோ படஙக்ளில் வருவது போன்ற டெம்ப்ளேட் திரைக்கதையினால் ஆரம்ப காட்சியிலிருந்தே கொட்டாவி வர ஆரம்பித்து விடுகிறது. காதல் காட்சிகளாகட்டும், கொலை முயற்சி காட்சிகளாகட்டும், கோர்ட் காட்சிகளாகட்டும் பார்த்து பார்த்து சலித்த காட்சிகள். அதிலும் ஹீரோயினுக்கு காதல் வரும் காட்சி சூப்பர் புதுசு இதுவரை தமிழ் சினிமாவிலேயே வராதது..
க்ளைமாக்ஸ் காட்சியில் நாம் ஏற்கனவே பார்த்த காட்சிகளை மீண்டும் வசனங்களால் பேசி கதையில் வரும் ஜட்ஜுக்கு புரிய வேண்டும் என்பதற்காக பேசுவது வசனம் நன்றாக இருந்தாலும் தெரிந்த விஷயத்தையே மீண்டும் கேட்பது சீரியல் தனமாய் தெரிகிறது. இவ்வளவு வசனம் பேசாமலேயே அந்த காட்சியை புரிய வைத்திருக்க முடியும் இயக்குனர். அதே போல போலீஸ் ஆபீஸர் அதித்யா ஜெண்டில் மேன் சரன்ராஜ் கேரக்டரை ஞாபகபடுத்துகிறார். ரெண்டு சீனுக்கு ஒரு முறை கேஸ் முன்னேற்றம் பற்றியும் அவனை எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று கருவிக் கொண்டிருக்கிறார். கதை முடிய வேண்டும் என்பதற்காக புதிதாய் ஒரு ஆபீசரை கொண்டு வந்து அவர் கரணுக்கு நண்பர் என்று கண்டுபிடிப்பதும், ஏ.கே 74 என்று ஒரு இராணுவத்தில் கூட பயன்படுத்தாத துப்பாக்கி என்று பில்டப் செய்துவிட்டு அது லோக்கல் துப்பாக்கி என்று சொல்வது உட்டாலகடி.
ஐந்து கொலைகளை செய்த கரண் தான் செய்த கொலைகளை ஒப்புக் கொள்கிற பட்சத்தில், நீதிபதி மனசாட்சி படி அவருக்கு ஐந்துவருட கடுங்காவல் தண்டனை கொடுத்துவிட்டு ராஜினாமா செய்வதும், மனசாட்சி என்கிற பெயரில் டிவியில் கரன் பேசியதை கேட்டுவிட்டு ஊரில் உள்ள எல்லா குற்றவாளிகளும் குற்றத்தை ஒப்புக் கொள்வதும் படத்தில் காமெடி இல்லாத குறை தீர்க்கும் காட்சிகள்.
ப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் நிகழ்வுகள் எல்லாம் பல தெலுங்கு, விஜய்யின் படங்களை தூக்கி சாப்பிட்டுவிடக்கூடிய காட்சிகள்.
பாராட்டபட வேண்டிய விஷயம் என்னவென்றால், நடுவில் காமெடி, கீமெடி போடுகிறேன் என்று மொக்கை போடாதது. முதல் கொலை முயற்சியில் கரண் தோற்றுவிட்டாலும் வேறொருவன் கோட்டாவை கொலை செய்யும் முயற்சியில் ஏ.சியை கொலை செய்ய சொன்னதே கோட்டா ப்ளான் தான் என்று சொல்லும் இடத்திலும், கோர்ட் ஆர்டலி கேரக்டரை யோசித்த மாதிரி இன்னும் கொஞ்சம் முழுக்க மெனக்கெட்டிருக்கலாம்.
கனகவேல் காக்க – அந்த முருகன் தான் காப்பாத்தணும்.
கேபிள் சங்கர்
Post a Comment
28 comments:
அண்ணே உங்க நல்ல மனசுக்கு என்ன சொல்ல......... தப்பிச்சேன்
ஹும்ம்! கனகவேல்தான் காக்கனும்.
கஷ்டப்பட்டு தியேட்டர் பிடித்து . . .
பல காம்பரமைஸ்களுக்கு பிறகு
வெளிவரும் இது மாதிhயான
சின்ன திரைப்படங்களுக்கு
இது போன்று வலிக்கிற மாதிரியான
விமர்சனங்களை தவிர்க்கலாமே . . .?
இன்று காலையில் ஹலோ FM இல் நான் கேட்ட வசனம் இது:
"வணக்கம் நான் உங்க கரண் பேசுறேன் கனகவேல் காக்க படத்தை வெற்றி படமாக்கிய மக்களுக்கு எனது நன்றிகள்”
அது எப்படி சார் படம் வந்து ஒரே நாள்ல படம் வெற்றி படமாகும்?!
முருகன் அவங்களைக் காப்பாத்துறது இருக்கட்டும். எங்களை நீங்க காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி! :-)
ஆனந்த விகடனில் வந்தமைக்கு வாழ்த்துகள் பாஸ்.
@அத்திரி
நன்றிண்ணே
@ஷங்கர்
அதான்
@உதவி இயக்கம்
இது சின்ன திரைப்படமும் அல்ல,
அது மட்டுமில்லாமல் பெரிய திரைப்படஙக்ளை பார்த்து சூடு போட்டு கொள்ளும் இம்மாதிரி திரைப்படங்களுக்கு போய் பார்க்க போவ்தே இம்மாதிரியான சின்ன படங்களுக்காக அதரவு அளிக்கத்தான் அங்கேயும் போய் அரைத்த மாவையே அரைப்பது.. அதை அனுபவித்துபாருங்க புரியும்.
அதே போல இந்த படம் ஒன்றும் கஷ்டப்பட்டு தியேட்டர் பிடிக்கவில்லை. நல்ல விலைக்கு விற்கப்பட்ட படமே. மொத்தமாயொரு டிஸ்ட்ரிபூயூஷன் கம்பெனி விலைக்கு வாங்கி.. ரிலிஸ் செய்திருக்கிறார்கள்.
அண்ணே கனகவேல் காக்குதோ இல்லையோ நீங்க எங்கள காப்பாத்துறீங்க...
நன்றி
@rishoban
சன் டிவி கூடத்தான் வேட்டைக்காரன், சுறா வெல்லாம் ரிலீஸுக்கு காலையிலேயே வெற்றி நடை போடுகிறதுன்னு போடறாஙக.. சப்பாணி நடை கூட நடகக்லைன்னு நமக்கு தெரியாதா..?
சப்பாணி நடை கூட நடகக்லைன்னு நமக்கு தெரியாதா..?
athaane
பா.ராகவன் வசனம் எழுதியிருக்காருங்கிறதுக்காக வசனம் சூப்பர்னு சொல்லாத உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு..
kanagavelaai kaaththeergal nandri
haa haa
காலையில் கரன் பேச்சை கேட்டவுடன் நினைத்தேன். உங்கள் விமர்சனத்தை கண்டவுடன் உறுதி ஆகி விட்டது நன்றி
ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot
http://nee-kelen.blogspot.com/2010/05/blog-post_22.html
எல்லோரையும் காப்பாத்திட்டீங்களே பாஸ்.
இன்னா தல வர வர எந்த படத்தை பாக்குறதுன்னு ஒரு இது வேணாம்... சரி வுடுங்க, கைட்ஸ் பார்த்தாச்சா... ?
நீங்க ஒரு தியாகி பாஸ்... எப்போ மாஞ்சா வேலு, மகனே என் மருமகனே, கொல கொலயா முந்திரிக்கா இந்தப் படத்தையெல்லாம் சீக்கிரமா பாத்து பதிவ போடுங்க தெய்வமே...
துரோகம் படத்துக்கு படங்களுடன் விமர்சனம் எழுதுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...!!!
(எதிர் பின்னூட்டம் : ரிப்பீட்டே !!! )
//இது போன்று வலிக்கிற மாதிரியான
விமர்சனங்களை தவிர்க்கலாமே//
ji,
நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல...
:)
அந்த முருகன்தான் காப்பாத்தனும்னு ஈசியா சொல்லிட்டீங்க!. விமர்சனத்த படிச்சா அவராலயும் முடியாதின்னு நினைக்கிறேன்...
நம்ம சினிமாவின் ஹீரோ.. பூசாரியாயிருந்தாலும் அவரும் குத்துப்பாட்டுக்கு ஆடித்தானாக வேண்டுமென்ற நிலையாகிவிட்டதே இவங்கலே திருத்துறதுக்கு ரொம்ப கஸ்டம்...
அப்போ.. அப்பீட்டா..??
ரைட்டு விடு.
சங்கர் அவர்களே....குழியில் நீங்களும் விழும் காலம் வரும்....ஜாக்கிரதை
@traveller
எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஆவலோடு..
@ஆதிமூலகிருஷ்ணன்
என்ன ரைட்டு விடு..:)
Post a Comment