சாப்பாட்டுக்கடை
பல நேரங்களில் பசிக்கு நாம் சாப்பிடும் போது ருசி பார்ப்பதில்லை. அப்படி ஒரு அவசரத்தில் பசிக்காக சாப்பிடும் போது அவ்வுணவு ருசியாய் அமைந்துவிட்டால் அத்தருணம் அருமையானதாகிவிடும். மீண்டும் மீண்டும் அவ்வுணவகத்தை தேடிப் போக வைத்துவிடும்.
அப்படி ஒரு பசி வேளையில் போய் இம்பரஸ் ஆன உணவகம் தான் சென்னை செனடாப் ரோடில் உள்ள தாபா எக்ஸ்பிரஸ் என்கிற பஞ்சாபி உணவகம். இவர்கள் மதிய வேளையில் 80 ரூபாய்க்கு அன்லிமிட்டட் வெஜ் பப்பே.. அளிக்கிறார்கள். போனவுடன் நாக்கூறும் சூடான ஜிலேபி. ஜிலேபியை சூடாக சாப்பிட்டிருக்கிறீர்களா? தேவாம்ரிதமாய் இருக்கும். அதன் பிறகு நான், பட்டர் நான், புல்கா, ரோட்டி என்று கலந்து கட்டி ரோட்டி அயிட்டங்கள், அதற்கு இரண்டு சைட்டிஷ்கள், ஒரு ட்ரை, ஒரு க்ரேவி, ஒரு டால், அது மட்டுமில்லாமல் ஒரு சைனீஷ் சைட்டிஷ், ஒரு பிரியாணி ரைஸ்,அல்லது புலாவ், நூடூல்ஸ், வெறும் சாதம், தயிர்சாதம், ஊறுகாய், Salad என்று வரிசை கட்டி நிற்கும் உணவுகள். ஒவ்வொன்றும் ஒரு சுவை. சாப்பிட்டு விட்டு ஒரு லஸ்ஸியும் ஸ்வீட் பீடாவும் போட்டால்.. ம்ம்ம்ம்ம். டிவைன். இவை ரெண்டும் பப்பேயில் வராது. என்பது ரூபாய்க்கு அருமையான லஞ்ச்.. என்ன குடிப்பதற்கு வெறும் பில்டர் வாட்டர் வைக்கிறார்கள். அதற்கு பதிலாய் நல்ல கேன் வாட்டரை கொடுக்கலாம்.
இரவு வேளைகளில் பஞ்சாபில் உள்ள தாபாக்கள் போல கயிற்றுக் கட்டில் ஒரு சிறிய டேபிளில் வெட்ட வெளியில், பக்கத்தில் உள்ள செயற்கை நீரூற்றுக்கு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் ஒரு சந்தோஷத்தை அனுபவித்து பார்த்தால் தெரியும். இதை தவிர ஏஸி ஹாலும் இருக்கிறது. இவர்கள் மதியத்தில் மட்டுமே வெஜ் பப்பே அளிக்கிறார்கள். இவர்கள் நான்வெஜ் பஞ்சாபி அயிட்டங்களும் பிரபலமானவை.. முக்கியமாய் முர்க் மசாலாவும் அட்டகாசமாய் இருக்கும். Have A Try.
கேபிள் சங்கர்
Comments
தப்பி தவறி எதாவது மட்டமான ஹோட்லுக்கு போனால் அப்படியே வெளியே வந்து கையை விட்டு வாந்தி எடுத்துட்டு அதை அப்படியே மறந்திடுங்க. சரவண பவன் - மரண பவண் மாதிரி பதிவை போட்டுறாதீங்க.
அது என்ன சாப்பாட்டு கடையில மட்டும் நல்ல விசியம் மட்டும் எழுதுறீங்க, திரை விமர்சணம் எழுதும் போது மட்டு காட்ஷிலாவா மாறிடுறீங்க
இந்த வாரம் போகலாம் ..//
ரைட்டு! :-)
அனா உங்கள் திருமதி யிடம் வாங்கி கட்டிகொல்வதில்லையா சார்?!
ஒரு வேலை ரெண்டு பேரும் சேர்ந்தே சுற்றுவீர்களோ?!
கயிற்றுக் கட்டில் பகுதியில்தான் சாப்பிட்டோம் என்றாலும் முழங்கால் பிரச்சனை என்று அதே பகுதியில் போட்டிருந்த மேசை நாற்காலி வரிசையில் இடம் பிடித்தோம்.
நான் வெஜ் ஸ்டார்ட்டர் அருமை. மற்ற அயிட்டங்களும் லஸ்ஸியும் சூப்பர். விலையும் அவ்வளவாக இல்லை. அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.
அதுக்குப்பிறகு ஒரு பதிவுலகத்தோழியுடன் அந்த வெஜ் பஃபே போனோம். என்னமோ சுமாராகத்தான் இருந்தது.
அதன்பிறகு நியூஸியில் இருந்து வந்த மகளுடன் ஒரு பகல் உணவுக்கு உள்ளெ ரெஸ்டாரண்டில் தாழ்ந்த உணவு மேசையில் கயிற்று இருக்கையில் அமர்ந்து வெட்டினோம்:-)))) மகளுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
ஆக மொத்தத்தில் அந்த பஃபே லஞ்சு ரொம்ப சுமார்தான்.
100% true statement.
இப்படி கடை கடையா தேடி பிடிச்சு சாப்புடறீங்களே, உடம்பு என்னாத்துக்கு ஆறது?
கமல் ஆபீஸ் அருகில் ஒரு பஞ்சாபி டாபாவில் உணவு அருமையா இருக்கும்.
நாரத கான சபா எதிரில் இருக்கும் காபூலிலும் அருமையான உணவு கிடைக்கும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கேபிள்,
இப்படி கடை கடையா தேடி பிடிச்சு சாப்புடறீங்களே, உடம்பு என்னாத்துக்கு ஆறது?
யாருங்க? enda உலகநாதன துக்கி கடசுங்கள் . என்ன வார்த்தை solivetai . எங்கள் தொந்தி வளர்ப்பவர் சங்க தலிவர் அண்ணன் cabile சங்கர பார்த்து ??????
பெளைத்து போ !!!!!!! அண்ணா நீங்க உங்க பணிய தொடுருங்கள் .
அன்புடன் ,
ஞானம்
வாழ்த்துகள்!!
பல்லாவரத்தில் என் நண்பன் ராஜகோபாலின் புத்தாஹட் என்னும் சாண்ட்விச் கடை இருக்கு,ரோமியோ கூட்டி போவார்,போய் சாப்டு சொல்லுங்க தல,செம கவனிப்பு உண்டு.
=======
Buffet is ok for 80 rs but nowhere near to their restaurant food.
அருமை. நான் நேற்று போய் வந்தேன்