வழக்கமாய் எம்.ஜி.ஆருக்கு பிறகு வெகு சில நடிகர்களுக்கே 25,50,100வது படமெல்லாம் ஹிட்டாகியிருக்கிறது. சூர்யாவிக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது போல. வழக்கமாய் யாராவது வேண்டாம் என்று ரிஜெக்ட் ஆன ப்ராஜெக்டை இவர் எடுத்து நடித்தால் அது ஹிட்டாகிவிடும். இது விஜயால் நிராகரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்.
உள்ளூரிலேயே போஸ்டிங் வாங்கிக் கொண்டு சப் இன்ஸ்பெக்டராய் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் சூர்யா, இவருக்கு சமமந்தமேயில்லாத சென்னையில் தாதாகிரி செய்து கொண்டிருக்கு பிரகாஷ்ராஜ், இவர்கள் இருவருக்கும் ஒரு மோதல் ஏற்படுகிறது. அதில் கடைசியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதை தான் என்றாலும் சும்மா சரவெடி போல படபடவென வெடிக்கிறது சிங்கம்.
உலக லெவலில் ஒரு மசாலா படம் வெல்வதற்கு மிக முக்கியமான விஷயம் வில்லன் கதாபாத்திரம் தாம். அது காத்திரமாக இருந்தால் நிச்சயம் ஒரு ஹீரோயிச படம் வெற்றி பெற்றுவிடும் அது எவ்வளவு மசாலாவாக இருந்தாலும். உதாரணத்துக்கு, ஆர்னால்டின் பிரேட்ர், டெர்மினேடர் போன்ற படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.ஏன் நம்ம விஜயின் திருப்பாச்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் வில்லன்கள் காத்திரமாக இருந்ததால் தான் படமும் விறுவிறுவென போனது. அதே போல் இப்படத்தின் முதுகெலும்பு பிரகாஷ் ராஜ். மனுஷனோட பிரசன்ஸ் அட்டகாசம்.
சூர்யா படம் முழுவதும் ஹரியின் எல்லா படங்களில் வரும் வழக்கம் போல நிறைய பேசுகிறார். கோபப்படுகிறார், ஆக்ரோஷமாய் சண்டையிடுகிறார், காதலிக்கிறார், துடிக்க, துடிக்க, மிடுக்காய் நடக்கிறார். ஒரு பக்கா மசாலா படத்துக்கு தன்னை தயார் செய்து கொண்டு கண்முன்னே நிற்கிறார்.

படத்துக்கு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் ம்ஹும்.. அனுஷ்கா.. அம்மணியின் அந்த உயரமும், வாளிப்பான உடலும், இடுப்பும், ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஒரு டூயட்டில் பார்க்கிறவர்கள் ராத்திரி தூங்கினார் போலத்தான்.
வர வர விவேக் இன்னொரு வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிவருகிறார். ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். தேவிஸ்ரீபிரசாத்தின் பாடல்கள் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. இயக்குனருக்கு பெரிய பலம் ஒளிப்பதிவாளர் பிரியனும் எடிட்டர் விடிவிஜயனும் தான். அவ்வளவு வேகமான பரபரக்கும் கேமராவும், எடிட்டிங்கும். முக்கியமாய் சண்டைகாட்சிகளும், பாடல் காட்சிகளிலும் சொல்லலாம்.

கதை திரைக்கதைவசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஹரி.. நிச்சயமாய் இவரது எல்லா படங்களிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. படம் பார்த்து விட்டு வெளியே வந்தால் தான் ஆங்காங்கே இருக்கிற இண்டு இடுக்கு எல்லாம் புரியும். தியேட்டரில் அப்படியே உட்கார வைத்துவிடும் திறமை அவருக்கிறது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். சூர்யா, பிரகாஷ் ராஜ் இருவருக்கும் இடையே நடக்கும் டக் ஆப் வாரில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. முக்கியமாய் முன் பாதியில் வரும் காதல் காட்சிகள், அனுஷ்கா இவரை பார்ப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏதையாவ்து சாக்கு சொல்லி வருவதும், அதற்கு இவர் அவரிடம் கேள்வி கேட்டே பிரச்சனையை சால்வ் செய்வதும், க்யூட் அண்ட் இன்ட்ரஸ்டிங்.. முக்கியமாய் அவரை அடித்தற்காக அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்கும் இடம். அதே போல சென்னைக்கு மாற்றலாகி வந்து பிரகாஷ் ராஜின் இம்சைக்கு நொந்து போய் வேலையை விட்டு போகிறேன் என்று சொல்லுமிடம், என்று ஆங்காங்கே சரியான விகிதத்தில் சரியான மசாலா கலவையை கலந்திருக்கிறார் ஹரி. முக்கியமாய் படம் நெடுக வில்லன் அவன் ஒரு சாணக்யண்டா.. வெண்ணைய்டா.. தீரண்டா சூரண்டா என்று தனியாக ஹீரோவை பத்தி புலம்பவில்லை.
படத்தில் மைன்ஸே இல்லையா என்றால் அது நிறைய இருக்கிறது. முக்கியமாய் லொட, லொட வசனங்கள், ஒரு சில டெம்ப்ளேட் காட்சிகள்,கும்பல் கும்பலாய் குடுபங்கள், ஏசியிடம் பேசி நடுத்தெருவுக்கு தள்ளும் இன்ஸ்பெக்டர், அப்புறம் ஹரி ஸ்பெஷாலிட்டியான வேட்டி சட்டை அடியாட்கள், சுமோ பறப்பது, அடிச்சா நூறு அடி தூரம் போய் விழுவது போன்று பல விஷயங்கள் இருந்தாலும் விறுவிறு திரைக்கதைக்காக மன்னிக்கலாம்.
நிச்சயம் இப்படம் சூர்யாவை ஒரு மாஸ் ஹிரோ லெவலுக்கு உயர்த்த போவது நிச்சயம். அதை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது. இன்னொரு விஜய்,விஷால் போல உருவாகிவிடுவார் போலிருக்கிறது எனப் பயமாய் இருக்கிறது.
டிஸ்கி: சூர்யா இம்மாதிரி படங்களில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரியான படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் இடையே குறைந்த பட்சம் நான்கு படங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் இன்னொரு அஜித், விஜயாக பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். ஜாக்கிரதை... நல்ல வேளை விஜய் இப்படத்தை ஒத்து கொள்ளவில்லை.. அப்படியிருந்தால் அவரை போலீஸ் வேஷத்தில் பார்த்து தொலைத்திருக்க வேண்டியிருக்கும்.

சிங்கம்- கரம் மசாலா..
கேபிள் சங்கர்
Post a Comment
61 comments:
:( :(
ஓவர் மசாலா உடம்புக்கு ஆகாது..
Your review sounds to me as biased.When I read the story line and read other bloggers review, I can make out that this will be a boring film. but you have written that this will is great work.
அருமை.
அப்போ பாக்கலாம்னு சொல்றீங்க?
இதோ கிளம்பியாச்சுல்ல..
மொத்ததுல விஜய்கு தச்ச சட்டையா இது. இதுலயே முடிவு பன்னிராலாம்ல இந்த படத்துக்கு போக வேண்டாம்னு :-)
OK. Pathura vendiyaddhu dhan..
நீங்க எப்ப படம்பாத்துட்டு வந்து விமர்சனம் போடுவீங்கன்னு உக்காந்திருந்து பின்னூட்டம் போடுறோம்...என்னிக்காவது ஒருநாள் நான் படம் இயக்கினா இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்குங்க!! சிங்கம் வாழ்க!.. நான் உங்களைச்சொன்னேன்.!
ஹரி படம்தான் மினிமம் கேரண்ட்டியாச்சே!
:)
அட நல்லாருக்குன்னா சொல்றீங்க
எல்லாரும் ....
ரைட்டு ! ஒரு டிவிடி பார்சல்
ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்த எப்பவுமே பாராட்டி எழுதனுமா என்ன ? தப்பா எடுத்துகாதீங்கன்னா என்னவோ இந்த படத்த நீங்க பன்னிருக்கற விமர்சனம் சிங்கத்த சன் டீவி விமர்சனம் பன்னின எபெக்ட் இருக்குன்னா. ஐயாம் சாரி.
பட்த்தோட டிரைலர பாத்துட்டே நொந்துட்டேன்னா நான். அடிவயித்துலேந்து கத்துறதும் , ஒரே அடில்ல எல்லாத்தயும் சாய்க்கிறதும் ரொம்ப நல்ல விசயம்னா எப்படின்னா ? இந்த படம் 15 - 18 வயசு பசங்களுக்கு வேணா ரொம்ப நல்ல படம்மா இருக்கலாம்னா. மிச்ச படி டிரைலர பாக்கவே முடியலன்னா. நான் இப்படில்லாம் சொல்றதால தப்பா நெனச்சுகாதீங்க.
" சிங்கம்- கரம் மசாலா.."
வயிறுக்கு ஆகாது
என்னை பொறுத்த மட்டில் சூர்யா, சரியான ட்ராக்கில் தான் சென்று கொண்டிருக்கிறார். குறைந்த பட்சம், விஜய் அவரின் மசாலா படங்களை பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்...
//நல்ல வேளை விஜய் இப்படத்தை ஒத்து கொள்ளவில்லை.. அப்படியிருந்தால் அவரை போலீஸ் வேஷத்தில் பார்த்து தொலைத்திருக்க வேண்டியிருக்கும்
- Repeaatttu
மற்றவர்ல்களின் விமர்சனத்தில் இருந்து மாறுபட்டு இருக்கிறது
Too many mistakes in this film. But still you will enjoy your moments. When you come out after watching the film, you will be happy though it is a typical masala film. Surya is simply Super.
சூர்யா நிச்சயமாய் இன்னொரு விஜய் இல்லை.
கடைசி வரி சூப்பர்.
//நல்ல வேளை விஜய் இப்படத்தை ஒத்து கொள்ளவில்லை.. அப்படியிருந்தால் அவரை போலீஸ் வேஷத்தில் பார்த்து தொலைத்திருக்க வேண்டியிருக்கும்.//
இத நான் வன்மையா கண்டிக்கிறேன். போக்கிரில விஜய் போலீஸ் டிரஸ் ல வரும்போது நீங்க சிரிக்கலை?

//அப்படியிருந்தால் அவரை போலீஸ் வேஷத்தில் பார்த்து தொலைத்திருக்க வேண்டியிருக்கும்.//
இங்கேயுமா விஜயை இழுக்க வேண்டும்..
i used to come to see the review on the release dates..... interesting...
அப்படியா சொல்றீங்க.. அப்போ சரி...
//முக்கியமாய் லொட, லொட வசனங்கள், ஒரு சில டெம்ப்ளேட் காட்சிகள்,கும்பல் கும்பலாய் குடுபங்கள், ஏசியிடம் பேசி நடுத்தெருவுக்கு தள்ளும் இன்ஸ்பெக்டர், அப்புறம் ஹரி ஸ்பெஷாலிட்டியான வேட்டி சட்டை அடியாட்கள், சுமோ பறப்பது, அடிச்சா நூறு அடி தூரம் போய் விழுவது//
இதெல்லாம் இல்லாம ஒரு மசாலா படம் பண்ணனும் பாஸ்!
படம் பார்க்கத் தூண்டும் நல்ல விமர்சனம்,
நானும் முயல்கிறேன் இதுபோல் விமர்சனம் எழுத....
//அனுஷ்கா.. அம்மணியின் அந்த உயரமும், வாளிப்பான உடலும், இடுப்பும், ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஒரு டூயட்டில் பார்க்கிறவர்கள் ராத்திரி தூங்கினார் போலத்தான்.//
அனுஷ்கா ன்னா அம்புட்டு பிரியமா கேபிளு?
சினிமாவை ரசிக்க வைக்கும் நேர்மறையான விமர்சனம்
ரசித்தேன். நாளை செல்கிறேன்.
ரொம்ப நல்லா ரசிச்சு பார்த்திருக்கீங்க போல
நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க. நன்றி
படம் பார்க்க இப்பவே டிக்கெட் எடுத்தாச்சு
பிரகாஷ் ராஜை ஏகத்துக்கும் பாராட்டித் தள்ளியிருக்கிறீர்களே
ஒரே பாணியில் நடிப்பதை படவில்லையா? பார்க்கும் எனக்கே அலுத்து விட்டது நடிக்கும் அவருக்கு அலுக்காதது ஆச்சரியம்
விமர்சனம் அருமை தலைவரே. கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும், சூர்யாவுக்காக.
இந்த படத்தை ஓசியில் தான் பார்ப்பேன்னு நினைக்கிறேன்
correct review ... even i was tensed by seeing the trailer ,,, even the first half ,,,, but Asap hero and villain meets the movie starts racing ,,,
But surya must stop giving movies like this ,,, If not people will consider him as next Vijay ,,,,
Some how .. 25th movie became Hit number for surya
Rockfort RaaGo
www.rockfortraago.blogspot.com
நீங்க அசலே சூப்பர்ன்னு சொன்னவருதானே சகா :)))
சரிதான் சூர்யாவுக்கும் மசாலா மோகமா?? அதென்னவோ ஹரி படம்னாவே பயமா இருக்கு..
www.narumugai.com
நேத்து தான் சுறா டிவிடில பாத்தேன். எனக்கு என்னமோ வலைஉலகத்தினர் படத்தை மிகைப்படுத்தி எழுதிட்டாங்களோண்ணு தோணுது. அதே படம் சூர்யா நடிச்சிருந்தா வேற மாதிரியான விமர்சனம் வந்திருக்கும் போல... ( என்னைய தயவு செஞ்சு திட்டாதீங்க மக்களே... சொல்லனும்னு தோனிச்சு சொல்லிட்டேன். நான் படத்த ரொம்ப ஜாலியா எடுத்துகிட்டேன் :-) )
sathish கிதரே ?
sathish கிதரே ?
வில்லன் அவன் ஒரு சாணக்யண்டா.. வெண்ணைய்டா.. தீரண்டா சூரண்டா என்று தனியாக ஹீரோவை பத்தி புலம்பவில்லை....
புரியுது புரியுது ....!
\\நீங்க அசலே சூப்பர்ன்னு சொன்னவருதானே சகா :)))\\
அமாம் சகா நானும் படித்து முடித்த உடன் அதைத்தான் நினைத்து பார்த்தேன்:))
படத்தில் வர்ற வசனங்கள் போல் கருத்துரைகளில் வருகிற கீழுள்ள வசனங்களும் நம்மை ரசிக்க வைக்கின்றன கேபிள்ஜி!
----------------------------------
// சிங்கம் வாழ்க!.. நான் உங்களைச்சொன்னேன்.!
//ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்த எப்பவுமே பாராட்டி எழுதனுமா என்ன?//
//அனுஷ்கா.. அம்மணியின் அந்த உயரமும், வாளிப்பான உடலும், இடுப்பும், ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஒரு டூயட்டில் பார்க்கிறவர்கள் ராத்திரி தூங்கினார் போலத்தான்.//
//அனுஷ்கா ன்னா அம்புட்டு பிரியமா கேபிளு?//
-----------------------------------
//அப்படியிருந்தால் அவரை போலீஸ் வேஷத்தில் பார்த்து தொலைத்திருக்க வேண்டியிருக்கும்//
ஹஹஹ.. சூப்பர் பஞ்ச்... தமிழ்நாடு தப்பிச்சுது..
//சூர்யா இம்மாதிரி படங்களில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரியான படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் இடையே குறைந்த பட்சம் நான்கு படங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் இன்னொரு அஜித், விஜயாக பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். ஜாக்கிரதை...//
நான் வேணும்ன டவுன்லோடு லிங்க் தரவா
Konjam mokka movie-nga idhu... :)
அனுஷ்கா.. அம்மணியின் அந்த உயரமும், வாளிப்பான உடலும், இடுப்பும், ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஒரு டூயட்டில் பார்க்கிறவர்கள் ராத்திரி தூங்கினார் போலத்தான்./
எப்போ தான் உங்களுக்கு அனுஷ்கா மேல் உள்ள பைத்தியம் தெளியும்?
//நீங்க அசலே சூப்பர்ன்னு சொன்னவருதானே சகா :))
வந்துட்டாரு சுராவ சூப்பர் ஹிட்டுன்னு காமெடி பண்ணுனவரு ... பிடிச்சிருந்தா நல்லா இருக்குன்னுதான் சொல்லுவாங்க ... படத்துல இருக்கிற நல்ல விஷயங்கள் அவருக்கு பிடிச்சிருந்து எழுதிருப்பாறு கேபிள் அண்ணாச்சி நல்ல இருக்குன்னு சொல்லுற அசல் சிங்கம்மே மொக்கைன்னு சொன்னா ...
மொக்கைன்னு சொன்ன சுறா எப்படி இருக்கும் .. அதவே நீங்க சூபெரப்புன்னு எழுதும்போது சிங்கத்த பத்தி எ[ப்படிவேனா புகழ்ந்து எழுதலாம்...
தல படத்த பத்தி இங்க என்ன பேச்சு... சிங்கம் மொக்கதான் ஆனால் வேட்டை , சுராவுக்கு ஆயிரம் மடங்கு பெட்டர் அப்படினுதான் எல்லாரும் பேசிகிறாங்க..
எங்கே தலைவா, "குற்றப்பதிவு' விமர்சனம்....படம் நல்லா இருக்கும் போல....
Bossu, kaadhalagi film review eppo? mouth talk sounds good
@butterfly surya
சில சமயம் மசாலாவும் நலலருக்கும்
@ராம்ஜி யாஹு
எப்படியும் நீங்க டவுன்லோடுதான் பார்த்துட்டுதான் சொல்லுங்க்ளேன் ராம்ஜி..:)
2கிங் விஸ்வா
நிச்சயம்
@இளா
ரைட்டு
@இராமசாமி கண்ணன்
அப்படியில்லை கண்ணன்
@கிருஷ்குமார்
ம்
2சுரேகா
நிச்ச்யமா..
தலைவா, இவனுக போடுற விளம்பரத்துக்கே, தமிழ் சினிமாவை யாரும் திருட்டு DVD கிட்ட இருந்து காப்பாத்த முடியாது போல...
தென்காசியில படம் வெளிவந்த இரண்டாம் நாள் இரவுக் காட்சியில் குடும்பத்தோடு பார்த்தோம். சரியான கலவையின் மசாலா. நான் குடியிருக்கும் பகுதியில் விவேக் நடித்த பகுதி படமாக்கப்பட்டது. சர்தாஜி லாரியோட போவாறே அந்த சீன்.பார்க்கலாம்...ரசிக்கலாம்..
அதெப்பெடி ஒரு மொக்கை படத்தை, விறுவிறுப்பா இருக்குன்னு சொல்லறீங்க? ஹீம்.. ஒரு வரி விளம்பரத்தை கோடிக் கணக்கா செலவு பண்ணி எடுத்திருக்காங்க.. இதில் ரசிக்க என்ன இருக்கு?
@இளா
ம்
@இராமசாமிகண்ணன்
அப்படியில்லை.. தலைவரே
@கிருஷ்குமார்
ம்
@சுரேகா
பின்ன
@இராமசாமி கண்ணன்
ஆனாலுல்ம் என்ன ரொம்பத்தான்பாராட்டுறீங்க
@டம்பிமேவி
அப்ப தயிர் சாதம் சாப்பிடு
@பிரசன்ன ராஜான்
ஆம்மாம்
@மதுரைமல்லி
ஹி..ய்ஹி
@எல்.கே
அப்படியா..?:(
@யாசின்
நன்றி.. சரி நீங்க அந்த யாசினா.?
@கலாநேசன்
ம்நன்றி
@ரமேஷ்ரொம்ப நல்லவன்
அந்த படம் ஒரு வாரம் குறைஞ்சு ஓடினதே அதனால்தான்
@கே.ஆர்.பி.செந்தில்
ஏன் இழுக்க கூடாது.. வீட்டிற்குவந்து தொடர்ந்து அஞ்சு விஜய் படம் போடுவீங்களோ..
@கோவிந்த்
நன்றி
@ஷங்கர்
அதெப்படி
@வெரும்பய
நன்றி
@சிவகாசிமாப்பிள்ளை
நன்றி
@சாய்
நன்றி
@தர்ஷன்
அவர் மட்டும் இல்லையென்றால் வில்லன் சைட் படு வீக்
@செ.சரவணக்குமார்
நிச்சயம் பாருங்கள்
@சிவகாசிமாப்பிள்ளை
நன்றி
@சாய்
நன்றி
@தர்ஷன்
அவர் மட்டும் இல்லையென்றால் வில்லன் சைட் படு வீக்
@செ.சரவணக்குமார்
நிச்சயம் பாருங்கள்
@அத்திரி
நீ எப்ப தியேட்டர்ல் காசு கொடுத்து பாத்தே.. நண்பா..
@யோகுஜி
நன்றி
@கார்க்கி
தப்பு கார்க்கி நீங்க படத்தை பாருங்க. விமர்சனத்தை சொல்லுங்கள்
@மதன் செந்தில்
வேறு வழி
@தினேஷ்
அப்படியா.. நீங்க ரொம்ப நல்லவ்ரு சார்.
@பளாய் கிங்
அவரு பிஸி..
//ஆமாம் அப்பா நீ கூரியது சரி தான் ஆனால் -pointsயை நான் மட்டும் அல்ல சூரியா ரசிகர்கள் அனைவ்ரும் இதை ஒத்துக்கொள்ளா மாட்டார்கல்\\
விஜய் பத்தி தப்பா பேசக்கூடாது
Post a Comment