சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் தயாரிப்பிலிருந்த படம். இப்படத்தின் ப்ரோமோஷனை உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கேங்ஸ்டர், லைப் இன் மெட்ரோ படங்களின் இயக்குனர் அனுராக் பாசுவின் அடுத்த படம்.
லாஸ் வேகாஸில் வறுமையின் ஊடே நடனம கற்றுத்தரும் ஜெய் என்கிற ஹிரித்திக், சமயங்களில் இமிக்ரேஷனுக்காக போலி திருமணம் செய்து கொள்பவன். ஹிரித்திக்கை கங்கனா ராவத் காதலிக்க, அவளின் பணத்தை பார்த்த ஹிரித்திக் அவளை காதலிப்பதாக நடிக்கிறான். அவளின் தந்தை கபீர் பேடி ஒரு பெரிய காஸினொவின் ஓனராகவும் மிகப் பெரிய லோக்கல் தாதாவாகவும் இருக்க, அவளின் அண்ணன் திருமணம் செய்யப் போகும் ஸ்பானிஷ் பெண் பார்பரா மோனியை பார்க்கிறான். அவளின் மேல் ஹிரித்துக்குக்கு காதல் பிறக்கிறது. அவளும் கங்கனா ராவத்தின் அண்ணனை பணத்துக்காகத்தான் காதலிக்கிறாள். ஹிரித்திக்கும், பார்பராவும் ஏற்கனவே அவளின் இமிக்ரேஷனுக்காக போலித் திருமணம் செய்தவர்கள் கூட, ஒரு கட்டத்தில் பணமா, அலலது இவர்களுக்குள் இருக்கும் காதலா என்று முடிவெடுக்க வேண்டியை சூழ்நிலையில் காதல் தான் என்று முடிவெடுத்து ஓடிப் போகிறார்கள். க்ளைமாக்ஸ் என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.
ஹிரித்திக் போன்ற ஒரு ஹீரோவுக்கு இப்படி ஒரு கேரக்டரைஷேஷன் இண்ட்ரஸ்டிங். மிக அழகாக நடனமாடுகிறார். அற்புதமான உடல், மற்றும் உடல் மொழி, அனைத்தும் அருமை.
ஸ்பானிஷ் காதலியாக வரும் பார்பரா மோரியை பார்த்ததும் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறார். அதிலும் அவர் கடகடவென பேசும் ஸ்பானிஷ் மொழியாகட்டும், இவர் என்ன பேசுகிறார் என்பதை புரியாமல் முகத்தில் காட்டும் எக்ஸ்ப்ரெஷன் ஆகட்டும் ச்சோ..க்யூட்.
அனுராக் பாசுவின் ஆஸ்தான கதாநாயகி கங்கனா ராவத் இதில் இருக்கிறார். பெரிய கேரக்டர் இல்லையென்றாலும் ஹிரித்திக்கை செட்யூஸ் செய்ய முயற்சிக்கும் காட்சியில் மனதில் நிற்கிறார்.
நான் லீனியர் பாணி திரைக்கதை ஆரம்பத்தில் ஆர்வத்தை அதிகப்படுத்தினாலும், கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்லோவாகி, அதன் போக்கில் மேலும் மெதுவாகி போய்விடுகிறது. திரும்ப, திருமப், காதல், மோதல், சேஸிங் என்பதெல்லாம் மிகவும் சொங்கிப் போய்விடுகிறது. ஹிரித்திக், பார்பரா காதல் காட்சிகளில் டெப்த் குறைவாக இருப்பதாலும், மிக இயல்பாய் யோசிக்கக்கூடிய காட்சிகளாலும், ஒரு கட்டத்திற்கு பிறகு சுருதி குறைந்து விடுகிறது.
பாராட்டபடவேண்டிய ஒருவர் யாரென்றால் அது ஒளிப்பதிவாளர் தான். அழகான டோன், சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே அருமை. மிகவும் குறிப்பாய் சொல்லும் படியான காட்சி க்ளைமாக்ஸ் காட்சி. அதே போல் எடிட்டரும் பாராட்டபட வேண்டியவர் தான்.
ராக்கேஷ் ரோஷனின் இசை ஓகே.. பெரிதாய் இம்பாக்ட் கொடுக்காவிட்டாலும். தொந்தரவாக இல்லை. அத்தோடு காதல் கதையில் க்ளைமாக்ஸ் இப்படத்திற்கு ஒத்து வரவில்லை. ரொம்பவும் ஆண்டிக்காக இருக்கிறது.
Kites- டீல் அந்துகிச்சு..
கேபிள் சங்கர்Post a Comment
25 comments:
Present sir
ஆமாம் தல! நானும் பாத்தேன். ஒன்னும் ப்ரயோஜனமில்லை
எதிர்பார்ப்பில் இருந்த படம். இன்னிக்குப் போய் டி.வி.டி வாங்கிட வேண்டியதுதான். நன்றி கேபிள்ஜி.
ஹிந்திய படமுங்களா எசமான்...
கதை இன்னுமே காதலை தாண்டலீங்களா அங்கயும்...
:))
ஜூன் ஏழு-தான் பாக்கப் போறோம்.. :))
படத்தில் விஷயம் ஒன்றும் பெரிதாய் இல்லைதான்....
எனினும் மார்க்கெட்டிங் மந்திரத்தாலும்.. சர்வதேச திரைப்படவிழாக்களில் முதலில் திரையிட்டு ஹ்ரித்திக்கின் கெமிஸ்ட்ரி கடல்தாண்டி பெற்றிருக்கும் வரவேற்பாலும் நன்றாகவே படம் கல்லா கட்டிவிடும்...
ஸ்க்ரிப்டில் மாயாஜாலங்கள் செய்வதுதான் ரியல் சினிமா.... எனினும் மேக்கிங்கில் ஏமாற்ற முனையும் முயற்சிகளே இப்போதெல்லாம் வெற்றிப் படங்களாக மேக் அப் செய்யப் படுகின்றன.... அங்கே கைட்ஸ் போன்ற படங்களுக்கு ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் தரும் ட்ரீட்மெண்டை இங்கு அயன் போன்ற படங்களுக்கு சன் குழுமம் தருகின்றன....
கைட்ஸ் கரை சேர்ந்துவிடும் என்றே நம்புகிறேன்....
"Kites- டீல் அந்துகிச்சு." என்கிற வெர்டிக்டுக்கும் உள்ளே விமர்சனத்தில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் விஷயங்களுக்கும் கொஞ்சம் இடைவெளி இருப்பதாக உணர்ந்தேன் கேபிள்ஜி...
ஹி ஹி ஹி .. டிஸ்கி சூப்பர் .
அட.. ஹீரோ பேரு என் பேரு.. :)
புகைப்படங்கள் அவசியமில்லாவிட்டால் ஒண்ணு, ரெண்டு போட்டா போறாது.??
என்னை போன்ற இளைஞர்களுக்கு வேணும்னா கொண்டாட்டமா இருக்கலாம் போல - அதுவும் மேட்டரோடு தியேட்டரில் போய் உட்கார்ந்து பார்த்தால்... ஹி ஹி ஹி
ஏக துஜே கேலி யே பட ரீமேக்குன்னு சொல்லலாம்.
நல்ல படம், நல்லாத் தான் போச்சு...ஹிந்தி படங்களில் பெரும்பாலும் மிகப்பெரிய கூட்டம் இருக்கும், இதுல அது இல்ல..
படத்தில ஹ்ரிதிக் பேரு "ஜே" தான?
சார் , அப்போ இது ஹிந்தி படமா ??????
not worthy.
went on Saturday 4PM show @ INOX. severe headache :-((
Barbara looks pretty sometimes & looks very old in few angles. utter waste
Not so good movie..
இன்னும் படம் பார்க்கவில்லை.பதிவு நன்றாக உள்ளது.விகடன் வரவேர்ப்பறையில்உங்கள் ப்ளாக் விமர்சனம் வந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தல... உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 26 மணி நேரம் கிடைக்குதுன்னு நெனைக்கிறேன்...
Cable, music director is Rajesh Roshan and not Rakesh Roshan...modify pannidunga...
padathai DVD la parthukkalamnnu irukken.
piragu intha cinemavinal india cinemavukku 37 new market kidaithu irupathaga kelvipatten thala...
viktan la vanthatharkku valthukkal... piragu antru neenga enakku phone seiyavillaiye yen???
தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?
தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html
rightu!!!
mini attack.
mony safty.
any how better than next film. cabile"g
@eRumbu
நன்றி
@சிவகாசி மாப்பிள்ளை
ரைட்டு..
@செ.சரவணக்குமார்
அப்படியும் விடாது கருப்பா?
@கும்கி
எங்கேயும் காதலை தாண்டி படம் பண்றதுஇல்லைணே
@விதூஷ்
என்ன அது ஜூன் ஏழு
@பிரபு.எம்
அப்படியா..தலைவரே
@ரோமியோ
நன்றி
@ஜெய்
எப்படியெல்லாம் சந்தோஷபட்டுக்கிறாய்ங்கப்பா..:)
@எம் அப்துல் காதர்
நம்மை போன்ற் இளைஞர்களுக்குன்னு சொல்லுங்க
@பருப்பு தெ கிரேட்
ஆமா
@மங்குனி அமைச்சர்
பின்ன..
@எ.சிம்பிள் மேன்
நானும் அதைத்தான் சொல்லியிருக்கேன்
@குணா
யா..
@மலர்விழி
நன்றி..
@சுகுமார் சுவாமிநாதன்
ஏன்?
@ராஜா
ஓ சாரி சரி பண்ணிடறேன்
@டம்பி மேவி
எப்படியவது பாரு.. ஆமா.
சாரி. ஹி.ஹி..மறந்திட்டேன்..
@சினிமா கேலரி
நிச்சயம் பார்க்கிறேன்
@அன்புடன் அ.மு. ஞானேந்திரன்
நன்றி
Post a Comment