Pages

Jun 21, 2010

கொத்து பரோட்டா –21/06/10

இந்த வார சந்தோஷம்
ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மிழ் கம்ப்யூட்டர் இதழில் என்னை பற்றியும், என் ப்ளாக்கை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். இதற்காக என்னை பேட்டி  எடுத்த பதிவர் விக்கிக்கு நன்றி. அதே போல் நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஷோபாசக்தி, லக்கியுடன், நம்ம ப்ளாக்கை பற்றியும்   ப்ளாக் என்கிற வகையில் எல்லோருடய டெம்ப்ளேடையும் எடுத்து போட்டு இருக்கிறார்கள். நான் இரண்டையும் பார்க்கவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பதிவர் டி.வி.ஆரின் ”கலைஞர் எனும் கலைஞன்” புத்தக வெளியீட்டு விழா சிறப்பாய் நடந்தது. கலைமகள் ஆசிரியர் வெளியிட, அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். இந்த ’இலக்கிய’ சிறப்பு மிக்க விழாவில் ஹைலைட்டான விஷயம் ’அண்ணே’ அப்துல்லா வாழ்த்துரை வழங்கியதும், டிவிஆரின் நகைச்சுவையான ஏற்புரையும் தான். பின்னாளில் பெரிய புத்தகமாகவே போடப்பட வேண்டிய புத்தகம். மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவுக்கு நிறைய பதிவர்கள் வந்திருந்து சிறப்பித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் வாங்கக்கூடிய 20 ரூபாய் விலையில் புத்தகம் இருப்பது சிறப்பு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழகமே ராவண ஜுரத்திலிருந்து மீண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ராவண அலையில் அடித்து போகப்பட்டது ஓர் இரவு போன்ற சிறு படங்கள் தான். எலலா தியேட்டர்காரர்களும், கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல், ஓரளவுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கிற நேரத்தில் படத்தை எடுத்துவிட்டார்கள். அவர்களை பொறுத்தவரை இம்மாதிரியான சின்னப்படங்களை ஓட்டுவதை விட பெரிய படங்களுக்கான ஓப்பனிங் கல்லா கட்டும் என்பதால் முதல் உரிமை பெரிய படங்களுக்குத்தான். காரணம் ஹோல்ட் ஓவர்.. இதை பற்றி தெரிந்து கொள்ள.. சினிமா வியாபாரம் படியுங்கள்.. ஹி..ஹி.. ஒரு விளம்பரம் தான்…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார செய்தி
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் தென்கொரியா க்ரீசை வெற்றி கொண்டது. அந்த வெற்றியை கொரியர்கள் கோலாகலமாய் கொண்டாடியிருக்கிறார்கள். தெருக்களில், வீடுகளில், ஹோட்டல்களில், பார்களில் என்று குடித்தும் ஆடிப் பாடியும் கொண்டாடியிருக்க, அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம். What a News…….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Photo0123 Photo0124
நண்பர் அஜயன் பாலா டிவிஆரின் புத்தக வெளியீட்டு பின் திடீர் என்று போன் செய்தார். ”கேபிள் உன்னுடன் கவிஞர் நா.முத்துக்குமார் பேசணுங்கிறார்” என்று சொல்லிவிட்டு போனை அவரிடம் கொடுத்தார். ஏற்கனவே அப்துல்லா மூலம் அறிமுக செய்விக்கபட்டிருந்தாலும் பெரிதாய் பேசிக் கொண்டதில்லை. “சாப்டீங்களா” என்று கேட்டார். இல்லை என்றதும் “அப்ப க்ரீன் பார்க் வந்திருங்க” என்றார். நான், அப்துல்லா, கார்க்கி, மூவரும் க்ரீன் பார்க்கில் அவரை  சந்தித்தோம். மிக இனிமையான சந்திப்பு. இரவு 12 மணி வரை நீண்டது. கொசுறுச் செய்தி  கவிஞரும், அண்ணன் அப்துல்லாவும் ஒரே ரூம் மேட்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2 வின் முடிவுகள் முன்பே மேட்ச் பிக்ஸிங் போல பிக்ஸ் செய்யப்பட்டது என்று ஒரு அணி புரளியை கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந்தது. வெற்றி பெற்ற அல்கா அஜித்தின் பைனல்ஸ் பர்பாமென்ஸை பார்க்காதவர்கள் பாருங்கள். பார்த்து விட்டு சொல்லுங்கள். இது வின்னிங் பெர்மாமென்ஸா இல்லை பிக்ஸிங்கா என்று..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இநத வார விளம்பரம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்

ளன் இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில், இன்ட்ரஸ்டிங்கான, விஷுவலுடன், ஒரு த்ரில்லர் படத்துக்கான மேக்கிங் ஸ்டைலை, முயன்ற வரை முயற்சித்து அதை காமெடியாக்கியிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏஜோக்
ரு வயதான இத்தாலியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்க வந்தான்.
“பாதர்.. இரண்டாவது உலகப் போரின் ஆரம்பிக்கும் போது ஒரு பெண் ஜெர்மனியர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு என்னிடம் வந்தாள். ஜெர்மனியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவளை என்னுடய வீட்டின் அடித்தளத்தில் ஒளிந்திருக்க சொன்னேன். ஜெர்மனியர்கள் வந்து தேடும் போது அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்றான்
பாதிரி: அருமையான காரியம் செய்தாய் மகனே.. இறைவன் உன்னை ரட்சிப்பார்.
இத்தாலியன்: ஆனால் ஒரு தவறு செய்துவிட்டேன்.
பாதிரி: என்ன?
இத்தாலியன்: அவளீன் அழகில் மயங்கி உன்னை அவர்களிடமிருந்து காப்பாற்றும் நாள் வரை நீ என்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். என்று அவளிடம் உற்வு வைத்துக் கொண்டேன்.
பாதிரி : இது ஒரு வகையில் தவறாக இருந்தாலும். அவள் உயிரை காப்பாற்றியமைக்காக இறைவன் உன்னை மன்னிப்பார் மகனே.. பிறகென்ன.?
இத்தாலியன்: நான் போர் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டியது அவசியமா? என்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

31 comments:

  1. வழக்கம் போல் கலக்கல் பரோட்டா

    ReplyDelete
  2. எங்க ஊரு பரோட்டா சால்னா சாப்பிட்ட மாதிரி அப்படி ஒரு சுவை உங்க கொத்து பரோட்டா

    ReplyDelete
  3. ///////ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்..
    /////////

    வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  4. படத்தில பிடிச்ச விஷயமே இசை தான். சும்மா சொல்ல கூடாது. கலக்கி இருக்கீங்க (உங்க டீம்) .

    ReplyDelete
  5. அருமையான ஜோக்

    ReplyDelete
  6. நல்ல குறும்படம் ..
    போர் முடிஞ்சா என்ன அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குதானே?

    ReplyDelete
  7. ஹலோ...

    இத்தாலியும், ஜெர்மெனியும் ஒரே கட்சி-ங்க.

    ஏ ஜோக்கா இருந்தாலும்... புள்ளிராஜா விவரத்தில் ரொம்ப கவனமா இருக்கனும் சொல்லிப்புட்டேன்.

    இனிமே வாழ்த்தெல்லாம் சொல்லப் போறதில்லை. போரடிக்குது.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் கேபிள் சார்

    1. உங்க படத்துல பாட்டு எழுத அட்வான்ஸ்
    குடுத்துட்டீங்களா ?

    2. ப்ரைம் டைம்ல எப்போ பேட்டி பார்க்கப் போறோம் நாங்க ? :)

    ReplyDelete
  9. நல்ல விஷயங்கள் கலந்த தொகுப்பு...
    எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் அண்ணே! பிறகு தொடர்புகொள்கிறேன். கொஞ்சம் பிசி. :-)

    ReplyDelete
  10. முதல் இரண்டு விஷயத்துக்கு வாழ்த்துக்கள் ஜி .....

    "கலைஞர் எனும் கலைஞன்” இந்த புத்தகத்தை பத்தி எங்கையோ படிச்சிருக்கேன் ஜி .... ஏற்கனவே வாங்குன்ன புத்தகத்தை படிக்கவே நேரம் இல்ல ...பார்போம் ...எதாச்சு மலிவு விலை பதிப்பு வந்த வாங்கலாம் ஹீ ஹீ இதே மலிவு விலை தானே ...வாங்கிரலாம்


    ஓர் இரவு படமெல்லாம் சிட்டியை தாண்டி வரவே இல்லை .... சிடி ல தான் பார்க்கணும் போல . பிறகு நான் இன்னும் உங்க முத புத்தகத்தையே படிச்சு முடிக்கல ..அதற்குள் இரண்டவதா ......

    "அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம்"

    விற்று இருக்குன்னு தான் news வந்துருக்கு பாஸ் ..... வாங்கினதை எல்லாம் அவங்க use பண்ணினகளா ன்னு தெரியாதே பாஸ் ...


    பாஸ் ..... அந்த சந்திப்பை பற்றி இன்னும் சொல்லுங்க

    "ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் ௨" நான் பார்பதில்லை

    அந்த விளம்பரம் செமைய இருக்குமே பாஸ் ..... கொஞ்சம் தமாஷ் அதுல

    "ஒரு த்ரில்லர் படத்துக்கான மேக்கிங் ஸ்டைலை, முயன்ற வரை முயற்சித்து அதை காமெடியாக்கியிருக்கிறார்கள்"

    இப்ப வர எல்ல படமும் இப்படி தானே இருக்கு .... புதுசா பார்க்குற மாதிரி சொல்லுதே

    "இத்தாலியன்: நான் போர் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டியது அவசியமா? என்றான்."

    பாதி : கிடைக்குற வரைக்கும் லாபம் மகனே .... (இந்த ஜோக் ஓட finishing line இதை விட hot யாக இருக்கும் ஜி)

    ReplyDelete
  11. வாழ்த்து(க்)கள் கேபிள். இன்னும் நிறைய சாதிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

    அல்கா அஜித்தின் பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டேன். கோயிலில் இருப்பதை போல, கடவுளின் அருகில் இருப்பதை போல் உணர்ந்தேன்.

    என்ன ஒரு குரல்!

    ReplyDelete
  12. வழக்கம் போல் கொத்துப்பரோட்டா அருமை. சீக்கிரம் நீங்க இயக்கற படத்துல நா.முத்துக்குமார் சார் பாட்டு எழுதனும்னா . அந்த சந்தோச நிகழ்வுக்காக ஆவலா வெயிட் பன்றோம் நாங்களாம்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சார்.

    ஜெயா டிவி, தமிழ் கம்பியூட்டர், இந்தியன் எக்ஸ் பிரெஸ் - கலக்குறீங்க.

    ReplyDelete
  14. ஹாலிய ரிப்பீட்டுக்கிறேன்! :))

    ReplyDelete
  15. வாழ்த்துகள் தலைவரே!

    அல்காவின் “சிங்காரவேலனே” பாடலை Youtube'ல் பார்த்து கேட்டவுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! இந்த வார இறுதியில் கிட்டத்தட்ட ஒரு 15 தடவை பார்த்து கேட்டுவிடேன். தொடர்வேன்....

    ஸ்ரவனின் இந்த பாடலையும் கேட்டுப் பாருங்கள்.

    http://www.tamilrain.com/airtel-super-singer-junior-2-07-06-2010/grand-finale-day-1-part-5-video_76537dadf.html

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  16. கடைசி மூன்றும் செம ரகளை.
    அனைத்திற்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. ஜெயா டி.வி. - வாழ்த்துக்கள்.

    புத்தக வெளியீட்டு விழா - மிஸ் பண்ணீட்டண்ணெ.

    ReplyDelete
  18. முதல் ரெண்டு தகவல்களுக்கு வாழ்த்துக்கள் கேபிள்.

    ReplyDelete
  19. //ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்.. //

    *********

    ”அம்மா”வின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எங்கள் அருமை அண்ணன் கேபிளார் வாழ்க...

    அதுக்குள்ள நீங்க கட்சில சேர்ந்து ”அம்மா” கிட்ட சீட் வாங்கிட்ட ஃபீலிங் வந்துடுச்சி தல...

    ReplyDelete
  20. அந்த விளம்பரம் செம கலக்கல் தலைவரே.... எப்பாடி என்னமா யோசிக்கிறாய்ங்க...

    ReplyDelete
  21. ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி நேரம் தெரிந்து கொண்டு எழுதுங்கள்,, நாங்களும் பார்க்கணும் சார்!!

    இந்த வாரம் எல்லாமே அருமை!

    ReplyDelete
  22. kothu kalakal. Congrats for Jaya TV interview.

    ReplyDelete
  23. athu enna absullavukku anne pattam.avar elloraiyum mariyathaiyaka anne endru kooppiduvathu ungalukku keliyaaka theikirathaa? neengal ellaam INNAABA endru kooppiduvathai thaan miriyathaiyaaka ninaikkum idaththil ullavarkal allava athanaal thaan keli seikireerkalo?

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் கேபிள் சார்...

    ReplyDelete
  25. //அம்மா”வின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எங்கள் அருமை அண்ணன் கேபிளார் வாழ்க...
    //

    repeattttttttttttttttttttu...................

    ReplyDelete
  26. ///【♫ஷங்கர்..said...
    ஹாலிய ரிப்பீட்டுக்கிறேன்! :))//

    உலகமகா சோம்பேறி..

    ReplyDelete
  27. holly bala.. ஷங்கரை அப்படியெல்லாம் பாராட்டாதீங்க..

    ReplyDelete
  28. //போர் முடிஞ்சா என்ன அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குதானே?//

    இது மேட்டர்!!! ஹி ஹி ஹி

    ReplyDelete