Thottal Thodarum

Jun 29, 2010

கொத்து பரோட்டா-29/06/10

வர வர..  நான் எதை எழுதினாலும்  காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுறானுவுக.. இது போல அவ்வப்போது சில சமங்களில் பல பேருக்கு நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது என்றாலும். சமீப காலமாய் என்னுடய திரைவிமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் கூட மாற்றாமல்  காப்பி பேஸ்ட் எடுத்து பதிவிடும் பதிவர்கள் அதிகமாகிவிட்டார்கள். நான் எழுதறதையெல்லாம் எடுத்து போடுவதை பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வளளளவூ நல்லாவா எழுதறேன்?.  எப்படியும் நீங்கள் எழுதியது இல்லை என்று நீங்கள் அடுத்து எழுதும் முதல் வரியிலேயே தெரிந்து விடும். ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் காப்பி பேஸ்ட் எடுக்கும் போது சரி செய்து போட்டால் தன்யனாவேன்..
#######################################################
போன வாரம் காரில் பெங்களூர் சென்றோம், ஒரு அழுத்து அழுத்திவிட்டு நிமிர்ந்தால் ஒரு டோல் வந்துவிடுகிறது. 35,40 என்று பணம் வாங்குகிறார்கள். இங்கிருந்து கர்நாடகா எல்லைக்குள் சுமார் நான்கைந்து இடங்களில் கப்பம் கட்டிவிட்டுத்தான் போக முடியும். கணக்கு பார்த்தால் பெட்ரோல் போட்டு தனியாக காரில் போவதற்கு பதிலாய் ப்ளைட்டில் போவது சீப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. வெண்ணெய் போன்ற ரோடுகளில் ஆங்காங்கே சிறு சிறு இடறல்களை தவிர.. ஸ்மூத்.
#######################################################
இந்த வார சந்தோஷம்
cinema viyabaram ad திருப்பூர்
 பதிவர் முரளிகுமார் பத்மநாபன், செம்மொழி மாநாட்டில் என்னுடய புத்தகமான “சினிமா வியாபாரம்” புத்தகத்தை வாங்கியதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். வந்த இரண்டு நாட்களில் 38 புத்தகங்கள் விற்றிருப்பதாக சொன்னதாக சொன்னார். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. அதை விட பெரிய சந்தோஷம் அவர் சொன்ன ஒரு விஷயம். அங்கே டிஸ்ப்ளேயில் சுற்றி சுஜாதாவின் புத்தகங்களுக்கு நடுவே “சினிமா வியாபாரம்” டிஸ்ப்ளேயில் வைக்கப்பட்டிருந்தது என்று அவர் சொன்னதுதான்.. என் “தல”யின் புத்தகங்களுக்கு நடுவே.. அஹா.. நன்றி முரளிகுமார் பத்மநாபன். சமீபத்தில் உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்.
#######################################################
இன்னொரு சந்தோஷம்.
நாளை காலை ஜெயாடிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் என்னுடய பேட்டி வருகிறது. காலை சுமார் 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
#############################################################
 சென்ற முறை பெங்களூர் சென்று வந்ததிற்கும் இம்முறைக்கு பெரிய வித்யாசம் இல்லை. மிகக் குறுகிய கால பயணமே.. பெரும்பாலான நேரங்களில் காரிலேயே கழிந்துவிட்டது. பெங்களூர் ஒவ்வொரு முறையும் மேலும், தன்னை புதுப்பித்துக் கொள்ள விழைந்து கொண்டிருக்கும் நகரமாய் மாற த்ரூவே எலிவேட்டர்களும், பிரிட்ஜுகளும், மேலும் பல ஒன்வேக்களூமாய் தன் சுயத்தை இழந்து வெயில் எரிகிறது. மாறாதது பெங்களூரின் பெண்கள் மட்டுமே.. புதுசு புதுசாய் புஷ்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ப்ரிஜ் கனியாய் , உயரமாய், குள்ளமாய், தட்டையாய், அபரிமிதமாய், நேர் பார்வையாய், சிவக்காத கன்னங்களுமாய், அலட்சியமாய், உடல் வழுக்கிய டைட்சும், மனம் சுளுக்கும் கண்களுமாய், ம்ஹும்… பெ”ண்”களூர்.
#######################################################
இந்த வார குறும்படம்
காமெடி செய்வது அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. அதிலும் ரசிக்கக்கூடிய வகையில்… நளன் இயக்கியுள்ள இக்குறும்படம் செம இண்ட்ரஸ்டிங்..
#######################################################
இந்த வார விளம்பரம்

அந்த சிறுவனின் முகபாவங்களை பாருங்கள்… அவர்கள் சொல்ல வந்த செய்தி.. மிக இலகுவாய் உங்களை அடையும்..
#####################################################
இந்த வார தத்துவம்
வாழ்க்கையில் மிக சோகமானது என்னவென்றால் உங்களுடய குறிக்கோளை அடையாமலிருப்பதல்ல.. குறிக்கோளே.. இல்லாமலிருப்பதுதான்.
#######################################################
இந்த வார அட்வைஸ்
குரல் உயர்த்தி பேசுவதை விட, உன்னுடய வாதத்தின் தரத்தை மேம்படுத்து, அது உன்னை எதிர்த்து பேசுபவர்களுக்கு அதைரியத்தை வரவழைக்கும்.
#######################################################
ஏஜோக்
ஒரு ஊரில் வயதான பாதிரியார் இருந்தார். ஊரில் உள்ள முக்கால் வாசி பேர் பாவமன்னிப்பாக தாங்கள் செய்த அடல்டரி விஷயமாகவே சொல்ல, வெறுத்துபோன பாதிரியார் இனியொருவர் இதுபற்றி பாவமன்னிப்பு கேட்டால் தான் விலகி விடுவதாய் சொல்லவே, மக்கள் ஒரு கோட் வேர்ட் ஏற்பாடு செய்து கொண்டனர். ”தடுக்கி விழுந்துவிட்டதாக” சொல்வார்கள். அந்த பாதிரியார் இறந்த பிறகு புதிதாய் பதவியேற்றவர் மரியாதை நிமித்தமாய் மேயரை போய் சந்தித்தார். இந்த தடுக்கி விழுந்த மேட்டரை ஏதோ ப்ளாட்பார்ம் சரியில்லாம தடுக்கிவிழுவதாய் நினைத்து சொல்ல, அவர் சிரித்தார். பாதிரியார் மேயரிடம் “நீங்கள் இதை ஜோக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் மனைவியே போன வாரம் மூன்று முறை தடுக்கி விழுந்திருக்கிறார்” என்றார்.
#######################################################

Post a Comment

40 comments:

Anonymous said...

அண்ணா,,

கொத்து பரோட்டா எப்பவும் போல நல்லா இருக்கு....

கேரளாக்காரன் said...

A joke sema bore

Unknown said...

அண்ணே குறும்படம் செம காமெடி.. நம்ம படம் எடுக்கும்போது நளன கணிப்பா பயன்படுத்தணும். தொடர்ந்து குறும்பட லிங்க் வந்ததால் அங்கேயே இருந்துட்டேன்.. படம் சொதப்புவத் பற்றிய இன்னொரு குறும்படமும் அருமையே.. விளம்பரமும்..

தராசு said...

சினிமா வியாபாரம் - கலக்கல் வியாபாரம்.

பெ"ண்"களூரில் தமிழ் பதிவர்கள் கும்மாளம்னு சமீபத்துல நம்ம உளவுத்துறையிலிருந்து செய்தி வந்துச்சே, அது நீங்கதானா??? சரி சரி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே குறும்படம் செம காமெடி..

க.பாலாசி said...

இந்தவாரமும் விளம்பரப்படம் செமத்தியா இருக்குங்க தலைவரே... சினிமா வியாபாரம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

Sukumar said...

உங்கள் புத்தகத்தை மற்றவைகள் கூட பார்க்கும் போது கலக்கலாக இருக்கிறது தல... வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

முரளிகுமார் பத்மநாபன் திருப்பூர் பதிவரெல்லவா நினைத்து கொண்டிருந்தேன்!

ஜோக்கை அப்படியே மொழி பெயர்க்க வேண்டும் என்று அவசியமில்லை!, நமது மக்கள் புரிதலுகேற்ப மாற்றி கொள்ளுதல் சிறந்த மொழி பெயர்ப்புக்கு அழகு! டோண்டுவிடம் கேட்டு பாருங்கள் கதை கதையாக சொல்லுவார்!

Cable சங்கர் said...

vaal..நான் இதையே மொழி பெயர்ப்பு என்று நினைத்துதான் எழுதியிருக்கிறேன்...ஹி..ஹி..

Alb said...

cable sir... unga thathuvam neenga ninavuruthuradhaa naan buzz panniirukaen.. good always ;) "saapaatukadai" bookaa vandhaa naan dhaan mudhal copy vaanguvaen.. ipo laam sir blog paaruda nalla kadai solli irupaaru alavuku pirasitham aayiteenga..

Thamira said...

kURumpadam vIttil pOi paarkkavENdum. maRRapadi pathivu OK.

Vincent said...

"நடந்தது என்னானா" குறும்படம் செம அருமை. வாழ்த்துக்களும் நன்றிகளும் நளனுக்கும் குழுவினருக்கும் உங்களுக்கும்.

CrazyBugger said...

Neenga Vijay TV "Nalaya iyakunar" programla kalanthu kondu vetri paera vaalthukkal..

pichaikaaran said...

"அங்கே டிஸ்ப்ளேயில் சுற்றி சுஜாதாவின் புத்தகங்களுக்கு நடுவே “சினிமா வியாபாரம்” டிஸ்ப்ளேயில் வைக்கப்பட்டிருந்தது "

so sweet ...

Santhappanசாந்தப்பன் said...

பெ"ண்"களூர் போன வீடியோ சன் நியூஸ்ல ரிலீஸ் பண்ணுவாங்களா? இல்லை அதையும் உங்க கொத்துல நீங்களே அறிமுகப் படுத்துவீங்களா?

//ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் காப்பி பேஸ்ட் எடுக்கும் போது சரி செய்து போட்டால் தன்யனாவேன்.. ///

அவ்வ்வ்.. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!

சிநேகிதன் அக்பர் said...

கொத்து புரோட்டா நல்ல சுவை அண்ணா.

venkat said...

எல்லா இடத்துலயும் இந்த கொடுமை நடக்குது.... சென்னை-ல இருந்து நீங்க கன்னியாகுமரி-க்கு ஒரு தடவ கார்-ல போய் பாருங்க....நெறைய இடத்துல நாம கப்பம் கட்ட வேணும்...அதை விடுங்க நம்ம ECR -ல உள்ள மாயாஜால் க்கு போங்க அதுக்கு நீங்க டோல் கேட் -ல கப்பம் கட்டனும் ...

முரளிகண்ணன் said...

மீண்டும் ஒரு காதல் கதைக்கு வெயிட்டிங்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

பொன் மாலை பொழுது said...

அட என்ன சார் நீங்க?
வெள்ள நிற Font ல மாத்தி வெளியிடலாமே !
யாரும் காப்பி / பேஸ்ட் பண்ண முடியாதுல்ல?
:) :) :) :௦)

பொன் மாலை பொழுது said...

அட என்ன சார் நீங்க?
வெள்ள நிற Font ல மாத்தி வெளியிடலாமே !
யாரும் காப்பி / பேஸ்ட் பண்ண முடியாதுல்ல?
:) :) :) :௦)

VISA said...

A joke (-100) mark.

Anonymous said...

\\போன வாரம் பெங்களூர் காரில் பெங்களூர் சென்றோம்// அண்ணே பெங்களூருக்குத்தானே காரில் சென்றீர்கள். தவறாமல் நாளை உங்களின் நேர்கானலை பார்த்துவிடுகிறேன். நன்றி

செ.சரவணக்குமார் said...

கலக்கல் தலைவரே.

அன்பேசிவம் said...

மிஸ்டர்.வால், உங்க நினைப்புதான் சரி, நான் திருப்பூர்காரந்தான், கேபிள் தப்பா போட்டுட்டார். இல்ல தல,

தலைக்கு பக்கத்துல தல’ நம்ம பன்ச்ச உட்டுடிங்களே?

:-))

Aba said...

// ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் காப்பி பேஸ்ட் எடுக்கும் போது சரி செய்து போட்டால் தன்யனாவேன்.//

இது நெத்தியடி... (இந்தக் கருமத்துக்குத்தான் நான் யார்கிட்டேயும் காப்பியடிக்கரதில்ல)

அமர பாரதி said...

//// ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் காப்பி பேஸ்ட் எடுக்கும் போது சரி செய்து போட்டால் தன்யனாவேன்.//

இது நெத்தியடி... (இந்தக் கருமத்துக்குத்தான் நான் யார்கிட்டேயும் காப்பியடிக்கரதில்ல)//

இந்த கருமத்துக்குத்தான் நான் எழுதறதே இல்ல. பின்னூட்டர் மட்டுமே (!!!!!!)

Paleo God said...

// பெரும்பாலான நேரங்களில் காரிலேயே கழிந்துவிட்டது//

ஐயா காப்பி பேஸ்ட் பண்றவங்களே, கேபிள் பொடி வெச்சிருக்கார் பார்த்து எழுதுங்க! :))

Paleo God said...

// பெரும்பாலான நேரங்களில் காரிலேயே கழிந்துவிட்டது//

ஐயா காப்பி பேஸ்ட் பண்றவங்களே, கேபிள் பொடி வெச்சிருக்கார் பார்த்து எழுதுங்க! :))

nellai அண்ணாச்சி said...

குறும்பான குறும்படம்

ஷர்புதீன் said...

:)

( vera yennaththa solla...??)

எம் அப்துல் காதர் said...

நாளை உங்கள் நேர் கானலா... பார்த்துடுவோம் தல!. ஹை.. ஜாலி!

Unknown said...

super comedy boss

மதுரை சரவணன் said...

அருமையான பகிர்வு... அனுபவம் கற்றுத்தரும் பாடம் எத்தனை எத்தனை ...அது உங்கள் விசயத்தில் உண்மை. வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

// பெரும்பாலான நேரங்களில் காரிலேயே கழிந்துவிட்டது//

அப்துல்லா அண்ணே அந்த கார் திரும்ப உபயோகிக்க முடியுமா???

என்ன பண்ணி வெச்சிருக்கார் பாருங்க இந்த கேபிள்

:)))

அத்திரி said...

ம்ம்ம்..நடக்கட்டும்

ஸாதிகா said...

சற்று முன் ஜெயா டிவி காலை மலரில் தங்களின் பேட்டி கண்டேன்.வலைஉலகைப்பற்றி நல்ல தகவல்களுடன் அருமையாக இருந்தது.புதியதாக வலைப்பூ ஆரம்பிக்க புதியவர்களுக்கு ஆர்வத்தினையும் தூண்டி விடும் உங்களது பேட்டி.வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

எழுத்தாளரே.. தலைவரின் புத்தகங்களுக்கு நடுவே உங்க புத்தகத்தை வெச்சிருந்த மேட்டரை முரளி சொன்னப்ப நானும் ச்சே பாக்யவான்யான்னு நெனைச்சேன்!!

R.Gopi said...

கேபிள் சங்கர் காப்பி அடிக்கற மேட்டர்ல பொடி வச்சிருந்தார்னா, அதையொட்டி, பலாபட்டறை சங்கர் எழுதி இருப்பது அதை விட அசத்தல் ரகம்...

சங்கர் + சங்கர் கூட்டணி பலே ....

3tamilan said...

Hi
Short film is good.Your Jaya TV interview is useful for all.