Thottal Thodarum

Jun 2, 2010

காதலாகி – திரை விமர்சனம்

இன்று பிறந்த நாள் காணும் இசைஞானியை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்..கேபிள் சங்கர்

 kadhalagi-wallpaper (9)
டிவியில் ட்ரைலர் பார்த்ததும் பிடித்தது. இண்ட்ரஸ்டிங்காக கட் செய்திருந்தார்கள். நிச்சயம் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து தியேட்டருக்கு போகலாம் என்று தேடினால் எல்லா தியேட்டர்களிலும், ஒரு ஷோ, இரண்டு ஷோ என்று தான் போட்டிருந்தார்கள்.
kadhalagi-wallpaper (8) இளமை துள்ளும் ஆண், பெண் அடங்கிய குழு ஒன்று ரயிலில் டெல்லிக்கு பயணமாக, கூட வரும் சக பயணியாக பிரகாஷ்ராஜ் சங்கமமாகிறார். கொஞ்சம், கொஞ்சமாய் இவர்களுடய கிண்டல் கேலிகலையும் தாண்டி, மெல்ல ஒரு காதல் ஜோடியை பற்றி பேச ஆரம்பிகிறார்கள். அந்த காதல் ஜோடிக்கு என்னவாயிற்று என்பது க்ளைமாக்ஸ்.
kadhalagi-wallpaper (1) படத்தின் ஆரம்பம் அவ்வளவு இயல்பு, ஆண் பெண் நட்பு, அவர்களுக்குள் ஓடும் பேச்சுக்கள், என்று மிக, மிக இயல்பாக ஆரம்பித்த படம், கதாநாயகன் நாயகியை பற்றி சொல்ல ஆரம்பித்ததும், இன்னும் கொஞ்சம் ஆர்வம் கூடத்தான் செய்கிறது. அதிலும் கதாநாயகன் பற்றிய சில காட்சிகள் அப்படியே ஆஃப் வேயில் விட்டுவிடுகிறார்கள். கேட்டால் இதெல்லாம் கேட்பாங்களா என்று தமிழ் சினிமா ஹீரோவை பற்றி ஸ்பூப் பண்ணுவது, முதல் தடவை இண்ட்ரஸ்டிங்காக இருந்தாலும், போகப் போக எரிச்சலடைகிறது.
kadhalagi-wallpaper (2) படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் வில்லன் கேரக்டர், மற்றும் அவனது ஜாதி வெறி. ஜாதிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் வில்லன். அதனால் மச்சினியின் காதலை எதிர்க்கிறான் என்பதெல்லாம் காந்தி பழசு.

படத்தில் நடிகனாக ஆசைப்படும் பையனும், அந்த ஹிந்திக்கார பெண்ணும், நச்சென மனதில் நிற்கிறார்கள். கதாநாயகிக்கு நன்றாக கன்னம் குழிகிறது. கதாநாயக பையன் முகத்தில் எந்த வித எக்ஸ்பிரஷனும் இல்லாமல் நன்றாக நடித்திருக்கிறார்.
 kadhalagi-wallpaper (5) ஒளிப்பதிவு வையிட் ஆங்கிள் ரவிசங்கரன் ஓகே. ஆனால் பாடல்கள் ஒன்றிரண்டு கேட்கும் படியாக இருக்கிறது. இசை ஏ.ஆர்.ரெஹைனா.. பின்னணி இசை தமன்.எஸ். ஓகே. 
kadhalagi-wallpaper (6) வசனம்  சி.பி. நாராயணன். ரயில் காட்சிகளில் வசனங்கள் அவ்வளவு இயல்பு. ஒரு சாதாரண கதையை வித்யாசமான திரைக்கதை, களைமாக்ஸை நம்பி இற்ங்கியிருக்கிறார் இயக்குனர் தயாரிப்பாளர் விஷ்வா. முக்கியமாக திரைக்கதையில் கோட்டை விட்டதினால் படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கெல்லாம் தடால், தடால் என்று விழுகிறது. தனி தீவில் கதாநாயகன், நாயகி இருக்கும், காட்சிகள், ஹீரோ மேஜிக் செய்யும் காட்சிகள், க்ளைமாக்ஸில் இவரின் மாஜிக் விஷயத்தை வைத்து டிவியில் ப்ரோக்ராம் நடத்த வாய்ப்பு பெற்று தீயவர்களின் முகத்திரையை கிழிக்க அரை குறை முயற்சியை தவிர.? அது கூட முதல் நிகழ்ச்சி பெரிய ஹிட் என்று அவர்கள் வசஙங்கள் மூலமாகவே சொல்வது, மீண்டும் தங்களுக்கு ஷோ நடத்த சான்ஸ் கிடைப்பது என்று ஏகத்துக்கும் லிங்கில்லாத குழப்பங்கள். ஆனால் அதிலும் வெறும் வெற்று வெளியாய் இதற்காகத்தான் அந்த கேரக்டரைஷேஷன் என்பது போல இருக்கிறது. மேஜிக்கை வைத்தோ, பின்னால் ஏதோ பெரிதாய் செய்ய போகிறார் என்று எதிர்பார்க்க வைத்தது வேண்டுமானால் அவரது வெற்றியாக இருக்கலாம். ஆனால்  எதையும் செய்யக் காணோம்.
kadhalagi-wallpaper (7) ப்ரீ க்ளைமாக்ஸ், மற்றும் க்ளைமாக்ஸ் டுவிஸ்ட் நன்றாக இருந்தாலும் நம்ப முடியவில்லை.. ஒரு எலும்பு கூட்டிற்கு பஞ்சடைத்து மார்ப்பிங் போல இறந்தவளின் உடல் பாகங்களை அப்படியே துணி வைத்து தைத்த சட்டை போல மாட்டி, அதை எரிப்பது என்பது சொல்வதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் அதை எக்ஸிக்யூட் செய்யும் போது படு காமெடியாய் இருக்கிறது. அதே போல ப்ரகாஷ் ராஜ் கேரக்டர் பற்றிய விஷயமும் ஆறின கஞ்சிதான். 
காதலாகி- ஏமாற்றம்
கேபிள் சங்கர்
Post a Comment

34 comments:

பாலா said...

மொத... பிக்சர்...!! :) :) :)

பாலா said...

கொஞ்சமாச்சும் உங்களுக்கு சமூகப் பொறுப்பு கீதுன்னு அந்த போஸ்டர்லயே நிறூபிச்சிட்டீங்களே.

குனிந்து குறுகிக்கிடக்கும்.. இந்த சமூகத்தை, இந்தப் பதிவின் மூலம் நிமிர்த்தியதைத் தானே அந்த போஸ்டர் சொல்லுது?

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
உங்களுக்காவது என் பொறுப்பு புரியுதே..பாலா..

Santhosh said...

//உங்களுக்காவது என் பொறுப்பு புரியுதே..பாலா..//
கேபிள் இது தான் உலகத்துக்கே தெரியுமே :)

அப்ப படம் தேறாது.. நீங்க வடிவேலு மாதிரி தல எவ்வுளவு மொக்கை படம் பாத்தாலும் அப்படியே Strongஆ இருக்கிங்க..எங்களுக்கெல்லாம் ஒரு மொக்கை படம் பாத்தாலே அழுகாச்சி அழுகாச்சியா வந்துடுது..

Unknown said...

அண்ணே யாரு மைனஸ் ஓட்டு போடுறது...
படம் பிடிக்கலையா ?
உங்களைப் பிடிக்கலையா?

shortfilmindia.com said...

கடமையை செய்..பலனை எதிர்பாராதேன்னு பகவத் கீதையில சொல்லியிருக்கு அண்ணெ..

Unknown said...

நீங்க திருந்தவே மாட்டீங்களா?

பாலா said...

செந்தில் என்ன இப்டி சொல்லிட்டீங்க?

இதுதான் இப்போதைக்கு பதிவுலகத்துக்க்க்க்க்க்கேகேகே தேவையான பதிவு.

Unknown said...

பாலா அண்ணே அவர முதல்ல திருந்த சொல்லுங்க..

மணிஜி said...

இவ்விடம் மன்னிப்பு மொத்த விலையில் கிடைக்கும்

Unknown said...

//வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்..கேபிள் சங்கர்//

No Politics மணிஜி....?

பாலா said...

///பாலா அண்ணே அவர முதல்ல திருந்த சொல்லுங்க.//

கிழிஞ்சது..!! இதுக்கு... ஒரு 100 பேரை மன்னிப்பு கேட்க வச்சிடலாம்.

இது ரொம்ப கஷ்டம்.

butterfly Surya said...

இவ்விடம் மன்னிப்பு மொத்த விலையில் கிடைக்கும்////

தண்டோரா.. நீ காமெடி பீஸா..??

Unknown said...

சூர்யா... அப்ப டம்மி பீசு கேபிளா?

Athisha said...

ஏன் இத்தனை போட்டோ!

விமர்சனத்தை தேட வேண்டியிருக்கு தலைவா! ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாமே!

Vediyappan M said...

ஒரு பத்திரிக்கயாளனைப் போல சரியான நெரத்துக்குள் எல்லா படங்களையும் விமர்சனப்படத்தும் பொருப்பு பாராட்டத்தக்கது. காதலாகி படம் எனக்குள்ளும் ஒரு எதிஎபார்ப்பை உண்டாக்கியிருந்தது. இப்போ யோசிக்கவைத்துள்ளது..

Unknown said...

//கதாநாயகிக்கு நன்றாக கன்னம் குழிகிறது.//

நெசமாவே கன்னத்தை மட்டும் தான் பார்த்திங்களா ஜி?

NARI said...

பெண்களின் பாவாடை தூக்கி ரவி. இப்போது நர்சிம்மை என்ன செய்யலாம் என்கிறாய். அல்லது உன்னால் தான் என்ன செய்ய முடியும். சும்ம இப்படி பதிவில் போய் டவுசரை இறக்கி சொறிந்துகொள்ள மட்டுமே உன்னால் முடியும். வேறெதற்கும் பயன்படாத இந்த அநாவசிய செயல் எதற்கு.

ஆனால் ஒன்று நீ தான் கார்பரேட் பாவாடை தூக்கி. பெண்களின் நலனுக்காக எப்படி எல்லாம் பாடு படுகிறாய்.

ஜெய் said...

// குனிந்து குறுகிக்கிடக்கும்.. இந்த சமூகத்தை, இந்தப் பதிவின் மூலம் நிமிர்த்தியதைத் தானே அந்த போஸ்டர் சொல்லுது? //
அடா அடா.. என்ன தத்துவம்.. என்ன கண்டுபிடிப்பு..

கேபிள்ஜி, எங்க எல்லாரையும் மொக்கை படங்கள்ல இருந்து காப்பாத்த, நீங்களே படங்களை பார்த்துட்டு, ”தேவையானதை” மட்டும் இங்க போடறீங்களே.. பெரிய மனசுங்க உங்களுக்கு..

எல் கே said...

//இவ்விடம் மன்னிப்பு மொத்த விலையில் கிடைக்கும்/

enna MRP

Venkat M said...

மொத... பிக்சர்...!! :) :) :)

பெரிய மனசுங்க

நெசமாவே கன்னத்தை மட்டும் தான் பார்த்திங்களா ஜி?

I like those lines... Dont relate 1st and 2nd line..

Romeoboy said...

ஹி ஹி ஹி .. பதிவில் உள்ள படங்கள் எல்லாம் சூப்பர் ..

க ரா said...

அண்ணா நெசமாலுமே ஒங்களுக்கு பொருமை ஜாஸ்தின்னா. இந்த படத்தல்லாம் பாக்கறீங்க. ஆனா ஒரு நல்ல நடிகனோட ரீ-எண்ட்ரீ படத்த மட்டும் இன்னும் பாக்க போகம இருக்கீங்க. (-:

ஜெட்லி... said...

படங்கள் அருமை....
இன்னும் ரெண்டு படம் போட்டிருக்கலாம்...

Sanjai Gandhi said...

ungalukku vayasaaydichi thalaivarey :))

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

காதலாகி, நொந்து நூலாகி

மரா said...

மைனஸ் ஓட்டு எப்புடி போடுறது?!

geethappriyan said...

தல விமர்சனம் போட்டோக்கு அடியில் இருக்கு போல,பார்க்கவும்.:)

vinthaimanithan said...

யப்பா... என்ன ஒரு பிரமாண்டம்...ஸ்க்ரோல் பண்ணவே முடியலங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super photo. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super photo. hehe

Prathap Kumar S. said...

//கொஞ்சமாச்சும் உங்களுக்கு சமூகப் பொறுப்பு கீதுன்னு அந்த போஸ்டர்லயே நிறூபிச்சிட்டீங்களே.//

அதானே...
கேபிள்ஜீ... உங்க சமூக அக்கறையை நினைச்சா கண்ணுல ரத்தம் வர்து...
தமிழ்நாட்டுக்கு நீங்க ஒருத்தர் போதும்ணே...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

மனித மனத்தின் உள்ளே உறங்கும் வக்கிரங்களின் வடிகால்தான் கவர்சிப்படங்களா?..(ஆனால் அவர்கள்
நமக்கு தெரிந்தவர்களாக இருக்ககூடாது)

Shasi said...

This movie is based on Illusionist storyline.