சாப்பாட்டுக்கடை
வழக்கமான செட்டிநாடு, காரைக்குடி, மதுரை என்று லோக்கல் சுவைகளையே சாப்பிட்டு வருபவர்களுக்கு வித்யாசமான மலேசிய உணவு வகைகளை சுவைத்து பார்க்க ஆசையாய் இருந்தால் சென்னையில் போக வேண்டிய இடம் ஃபெலிடா நாசிக் கண்டார் தான்.
திநகர் தியாகராயர் ரோடில் பழைய நாகேஷ் தியேட்டருக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது ஃபெலிடா நாசிக் கண்டார். சுவையான மலேசிய உணவு வகைகளுக்கான ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்ட்.Pelita Nasik kaNdar
ஐஸ் கச்சாங்குடன், சரவணக்குமரன், பலா பட்டறை சங்கர், மணிஜி
இவர்களின் பரோட்டாக்கள் அவ்வளவு சுவையாக இருக்கும் என்பது ஏதோ மிகைப்படுத்தி சொல்வதற்கான வார்த்தையில்லை நிஜமாகவே அவ்வளவு சுவை. பரோட்டாவுடன் அவர்கள் கொடுக்கும் தால்சாவும், இல்லாவிட்டால் இன்னொரு தால்சா, மீன்,மற்றும் இன்னொரு கிரேவி காம்பினேஷனை ருசித்தால் தெரியும், மட்டன் பரோட்டா, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு என்று பரோட்டா வகைகளிலேயே அதகள படுத்தியிருப்பார்கள்.
அப்படியே சாப்பாடு என்று போனால் அயம், மீ கோரிங்.. சாப்பாடு எல்லாம் இருக்கிறது.. என்னதது அயம், மீ கோரிங் என்று கேட்பவர்களுக்கு சிக்கன்,மீன் என்று மலாயில் அர்த்தம். ஒரு ப்ளேட் சுமார் நூறு ரூபாய் அருகே வரும், சிக்கன் என்றால் ஒரு ப்ரைட் சிக்கனோ, அல்லது குழம்பு சிக்கனோ, இரண்டு விதமான வெஜ் சைட் டிஷ்ஷுடன், சாதம், இரண்டு வேக வைத்த வெண்டைக்காயுடன், ஒரு அப்பளத்துடன் தருவார்கள். அதே போல் மீன் என்றால் ப்ரைட் மீனோ, அல்லது குழம்பு மீனோ.. அதே போல மட்டன்.. அந்த குழம்பு ம்.. அட்டகாசமான டேஸ்ட்..
ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், மற்றும் ஹக்கா நூடுல்ஸ், மேகி நூடூல்ஸை வைத்து விதவிதமான் நூடூல்ஸ் என்று அது வேறு ஒரு பக்கம். ஒரு அசட்டுத்தனமான மட்டன் ஸ்ட்டார்டர் ஒன்றை ஒரு குச்சியில் சொருகி வாட்டி தருவார்கள் அதன் பேர் மறந்துவிட்டது.. நன்றாக இருக்கும்.
மட்டன் சூப், சிக்கன் சூப் இங்கு மிகப் நன்றாக இருக்கும். மழை நேரங்களில் ரெஸ்டாரண்டுக்கு வெளியே இருக்கும் பந்தல்களின் கீழே அமர்ந்து கொண்டு, மழையின் சாரலில், நெய்யும், மிளகும், சேர்ந்து சுர்ரென வெளிக் குளிருக்கு இதமாய், உள்ளுக்கு சூப் இறங்கும் போது அஹா….
எல்லாவற்றையு முடித்துக் கொண்டு ஒரு ஐஸ் கச்சாங்கை வாங்கி சாப்பிட்டால் தான் அன்றைய டின்னர் இனிதே முடியும். ஐஸ் கச்சாங் என்பது ஒன்றுமில்லை பழைய காலங்களில் ஸ்கூல் வாசலில் தச்சர்கள் உபயோகிக்கும் இழைப்புளியை கொண்டு ஐசை மென் தூளாக்கி அதன் மேல் நான்கு ஐந்து கலர்களை கொடுத்து கெட்டித்து ஐஸ் க்ரிமாக்கி தருவார்களே அதுதான் மலேசிய உணவகத்தில் ஸ்பெஷல்.
கொஞ்சம் ஜெல்லி, வேக வைத்த சோளம், டூட்டி புரூட்டி, அதன் மேல் கும்பாச்சியாக ஐஸ் மலை, அதன் மேல் தாளாரமாக கொட்டப்பட்ட, மில்க் மெயிட், அதன் மேல் கலருக்காகவும் சுவைக்காகவும் ஊற்றப்பட்ட எஸென்ஸுகள், அதன் மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்கீரிம், அதன் மேல் ஒரு செர்ரியுடன் வரும் இந்த ஐஸ் கச்சாங்கை சிறுவர்களுக்கு வாங்கி கொடுத்தால் அடுத்த ஒரு வருஷத்துக்கு ஐஸ் க்ரீமே கேட்கமாட்டார்கள். போதும், போதும் என்றளவுக்கு இருக்கும் அவர்களுக்கு.
Comments
மீ கோரிங் என்றால் பிரைடு நூடுல்ஸ்
நாசி கோரிங் என்றால் பிரைடு ரைஸ்
நாசி கண்டார் என்பது சோறுடன் அனைத்து வகை குழம்புகளையும் ஊற்றி தருவார்கள் அப்படியே கலந்து கட்டி சாப்பிடலாம்,
மலேசியாவில் இதற்கு நிறைய கிளைகள் உண்டு..
நீங்கள் பரோட்டா பற்றி சொன்னது சரிதான், இங்கு கிடைக்கும் பரோட்டா அருமை.. அதற்க்கு தரும் சைட் டிஷ் பெயர் தாளிச்சா ..
மட்டன் கொழுப்பை பருப்புடன் சேர்த்து செய்திருப்பார்கள்
மலாய் வகை உணவுகளும் மலேசிய வகை இந்திய உணவுகளும் அங்கு கிடைக்கும்...
Satay..
அண்ணே ! இன்னுமா கோவம் குறையல
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
இந்த ஐஸ்க்ரீம் பேரு ஐஸ் கச்சாங்கா? என் பதிவுல ட்ரெடிஷ்னல் ஐஸ்க்ரீம்னு எழுதுனேன். நம்ம ஊர் திருவிழாவுல சாப்புடறதுதான.. நல்ல டேஸ்ட்டான ஐஸ்க்ரீம்.
நீங்க சுகர் இருக்குன்னு சொல்லி ஐஸ்க்ரீம தொடவே இல்லையே. நாங்க மூணு பேரும் தான ஒரு கை பார்த்தோம்.
அதுசரி கேபிள்ஜி, சரவணக்குமரன்னு போட்ருக்கீங்க. நம்ம குமரன்குடில் நண்பர் கோவிச்சுக்கப்போறார்.
சீக்கிரமா படம் பண்ணுங்க கேபிள்ஜி.
அதான இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்
2 or 3 guys can easily share.