ஆணாதிக்கம் என்பது வீடுகளில், அலுவலகங்களில் எப்படி இருக்கிறதோ தெரியாது. ஆனால் சினிமாவில் அதற்கென தனி விதிகள் இருப்பதாய் தான் தெரிகிறது. பெரும்பான்மை மக்களை அடைய வேண்டியிருப்பதால், பெண் சுதந்திந்திரத்துக்காக போராடும் பெண்களை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு, திக் சிகப்பாய் லிப்ஸ்டிக்கும், பாப் தலையுமாய் லேடீஸ்க்ளப் மீட்டிங் போவதாய் காட்டி அவளை ஒரு வில்லி கேரக்டருக்கு உயர்த்தியிருப்பது மட்டுமே.. அதிகம்.
பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான். பூ படத்தில் வந்த முதல் பாடல் காட்சியை ஒரு சில தியேட்டர்களில் வெட்டி விட்டதாய் கூட சொன்னார்கள்.
ஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமாய் இருக்கும் ஓரு பெண்ணின் காதலை பற்றி சொல்லும் படம்.. மிக அற்புதமாய், கவிதையாய் எடுக்கபட்டிருக்கும் அப்படத்திற்கு பெரிய ஓப்பனிங்கும் இல்லை, வசூலும் இல்லை. அதற்கு காரணம் படம் ஸ்லோவாக இருக்கிறது, கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
அழகி ஓரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை.. திருமணமான ஓரு ஆண் தன் காதலியை நீண்ட காலத்துக்கு பின் பார்த்து உருகும் காதலனை பற்றிய படம் எல்லோராலும் பாராட்டபட்டு மிக பெரிய வெற்றியை அடைந்தது. பெண்கள் கூட்டம், கூட்டமாய் பார்த்த படம்.
அழகி படத்தில் டாக்டராய் இருக்கும் கதாநாயகன் கல்யாணமாகி குழந்தை குட்டியுடன் சந்தோசஷமாய்தான் வாழ்ந்து வருகிறான். தன் பழைய காதலியை பார்த்ததும் உருகுகிறான். இந்த படத்தை பார்த்த எல்லா ஆண்களும் தன் பழைய காதலிகளை நினைத்து மருகி, உருகினர்.
எனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார். ஏன் என்று கேட்டால்.. அழகி தன்னை மிகவும் பாதித்துவிட்டதால் தன் பழைய காதல் நினைவுக்கு வந்துவிட்டதால் அப்படி செய்துவிட்டேன் என்றார். அவரின் புது மனைவி ஏதும் சொல்லாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்ததும், இதை பெரிது படுத்தாமல் ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இதே போல் ஓரு பெண் தன் விருப்ப வெறுப்புகளை வெளிபடுத்தினால்? தண்ணி அடிக்க வேண்டாம், ஒரு நிமிஷம் தன் காதலை நினைத்து அழுதால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா..? முக்கியமாய் பெண்களே ஏற்றுக் கொள்வதில்லை.
ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது..
என்னுடய கதை விவாத்தின் போது என் உதவியாளரிடம் “ஹிரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஓரு ஊடலின் முடிவில், அவர்களுக்குள் செக்ஸ் ஏற்படுவதாய் காட்சியமைத்திருக்கிறேன்.” என்று சொன்னேன்.
அதற்கு அவர் “சார்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோயின் படுத்தா கேரக்ட்ர் கெட்டு போயிரும். சனங்க ஒத்துக்க மாட்டாங்க..” என்றார். அதற்கு முன்னால், கதையில் ஹீரோ ஓரு பெண் பித்தன் என்பதை ஒத்து கொண்ட அவர்.. ஒரு பெண் உதவி இயக்குனர்.
ஆணாதிக்கம்
டிஸ்கி: தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலையிருப்பதால் கொத்து பரோட்டா நாளை வெளிவரும்..
Post a Comment
16 comments:
பிசியாக இருப்பதாக காட்டிக்கொள்ள மீள் பதிவு போடும் கேபிளை வன்மையாக கண்டிக்கிறேன் .
நாங்கலாம் என்ன வேலைவெட்டி இல்லாம இருக்குமா ? உங்க கொத்து பரோட்டா இல்லாம சாப்புன்உ இருக்கு .பதிவு . ஆணாதிக்கம் மேட்டுரு காந்தி காலமா இருக்கு .அப்பால நீங்க ஆணாதிக்கம் இலாமல் ஒரு பெண் உதவி இயக்குனர். அனுமதிதடு கலக்கிடிங்க.
வாழ்துக்கள் .
கொத்து புரொட்டா can wait. go ahead ....
//தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலையிருப்பதால் கொத்து பரோட்டா நாளை வெளிவரும்..//
இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். நான் ஆம்பளைஅப்படிதான் பிசியா இருப்பேன்னு கேபிள் அண்ணன் சொல்றார். நாராயணா நாராயணா (சங்கர நாராயணன் இல்லை)
பூ படம் பற்றிய ஒரு ஆதங்கம் எனக்கு நெடுநாட்களாகவே உள்ளது. மனதைத்தொட்ட குறிப்பிட்ட சில படங்களில் அதுவும் ஒன்றுதான். அதே ஆதங்கம்தான் உங்களுக்கும் உள்ளது.
அண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..
Dear Cable ji....
I am new to Comment section but i never miss all your சாப்பாட்டுக்கடை,திரை விமர்சனம்,கொத்து பரோட்டா request you to dont stop all this.. keep going we will stand for you alwayssss!!!!1
Anbu said...
//அண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..///
rippeetu...
Anbu said...
//அண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..///
rippeetu...
பூ பட விமர்சனத்துலயே இந்த விடயங்களை அலசியிருந்தீங்கன்னு நினைக்கிறேன்...
தெரிஞ்சதையே ஆயிரந்தபா சொல்லுவிங்களாய்யா.!! இப்ப இன்னா அதுக்கு.?
..............முக்கியமாய் பெண்களே ஏற்றுக் கொள்வதில்லை.
agreeeeeeeeeeeeeed
அண்ணா.,
ஆணாதிக்கம் அப்டீன்னா என்னுங்நா..
கொஞ்சம் வெலாவாரியா சொல்லப்புடாதுங்களா...
Autograph படத்தில் கல்யாண பெண் தன் பழைய காதலர்களை invite செய்தால் okஆ? சமூகம் ஏற்குமா? படம் ஓடுமா? என் முன்னால் காதலி இந்நாளில் வேறொருவருடைய மனைவி என்பதை நினைத்தால் ok ஆனால் என் இந்நாள் மனைவி முன்னாளில் ........
//கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.// இதில் ஆனாதிக்கம் என்ன இருக்கிறது. மனிதர்களுக்கே உரிய பொஸஸிவ்னஸ் தான். பெண்களுக்கு கூட தன் கணவன்பழைய காதலியையே நினைத்துக் கொண்டிருந்தால் கோபம் வரும். "எப்போபாத்தாலும் அவளையே நினைச்சிக்கிட்டு இருந்தால் நான் எதுக்கு?" என்று சண்டைக்கு வருவார்கள். ஆனோ பெண்ணோ, தன்னுடைய ஜோடி தன்னை மட்டுமே விரும்பவேண்டும் என நினைப்பது பாதுகாப்புணர்சியே தவிர ஆதிக்கம் ஆகாது.
கல்யாணமான பின்னாலும் காதல் வரலாம்.கல்யாணம் ஆனவர்மீதும் காதல் வரலாம்.என்ன ஒரு 'கள்ள'சேர்த்துவிடுவார்கள்.கற்பு என்பதே ஒரு ஆண்வயச் சிந்தனை தான் .கண்ணகி போன்ற புனை பிம்பங்கள் தமிழ் சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆழமானது.ஆய்வுக்குரியது.ஆனால் இதே கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபடும் கேரளாவில் இத்தனை இறுக்கம் இல்லை.[அங்கும் சமீப காலமாக 'திருந்தி'வருகிறார்கள்]கல்யாணத்தின் பின் காதல் பற்றி 'மோக மல்ஹார்'என்று பிஜுமொன் சம்யுக்தா நடித்த நல்ல படம் ஒன்று இருக்கிறது.பார்த்திருக்கிறீர்களா?
Post a Comment