ஆணாதிக்கம்
பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான். பூ படத்தில் வந்த முதல் பாடல் காட்சியை ஒரு சில தியேட்டர்களில் வெட்டி விட்டதாய் கூட சொன்னார்கள்.
ஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமாய் இருக்கும் ஓரு பெண்ணின் காதலை பற்றி சொல்லும் படம்.. மிக அற்புதமாய், கவிதையாய் எடுக்கபட்டிருக்கும் அப்படத்திற்கு பெரிய ஓப்பனிங்கும் இல்லை, வசூலும் இல்லை. அதற்கு காரணம் படம் ஸ்லோவாக இருக்கிறது, கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
அழகி ஓரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை.. திருமணமான ஓரு ஆண் தன் காதலியை நீண்ட காலத்துக்கு பின் பார்த்து உருகும் காதலனை பற்றிய படம் எல்லோராலும் பாராட்டபட்டு மிக பெரிய வெற்றியை அடைந்தது. பெண்கள் கூட்டம், கூட்டமாய் பார்த்த படம்.
அழகி படத்தில் டாக்டராய் இருக்கும் கதாநாயகன் கல்யாணமாகி குழந்தை குட்டியுடன் சந்தோசஷமாய்தான் வாழ்ந்து வருகிறான். தன் பழைய காதலியை பார்த்ததும் உருகுகிறான். இந்த படத்தை பார்த்த எல்லா ஆண்களும் தன் பழைய காதலிகளை நினைத்து மருகி, உருகினர்.
எனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார். ஏன் என்று கேட்டால்.. அழகி தன்னை மிகவும் பாதித்துவிட்டதால் தன் பழைய காதல் நினைவுக்கு வந்துவிட்டதால் அப்படி செய்துவிட்டேன் என்றார். அவரின் புது மனைவி ஏதும் சொல்லாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்ததும், இதை பெரிது படுத்தாமல் ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இதே போல் ஓரு பெண் தன் விருப்ப வெறுப்புகளை வெளிபடுத்தினால்? தண்ணி அடிக்க வேண்டாம், ஒரு நிமிஷம் தன் காதலை நினைத்து அழுதால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா..? முக்கியமாய் பெண்களே ஏற்றுக் கொள்வதில்லை.
ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது..
என்னுடய கதை விவாத்தின் போது என் உதவியாளரிடம் “ஹிரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஓரு ஊடலின் முடிவில், அவர்களுக்குள் செக்ஸ் ஏற்படுவதாய் காட்சியமைத்திருக்கிறேன்.” என்று சொன்னேன்.
அதற்கு அவர் “சார்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோயின் படுத்தா கேரக்ட்ர் கெட்டு போயிரும். சனங்க ஒத்துக்க மாட்டாங்க..” என்றார். அதற்கு முன்னால், கதையில் ஹீரோ ஓரு பெண் பித்தன் என்பதை ஒத்து கொண்ட அவர்.. ஒரு பெண் உதவி இயக்குனர்.
ஆணாதிக்கம்
டிஸ்கி: தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலையிருப்பதால் கொத்து பரோட்டா நாளை வெளிவரும்..
Comments
வாழ்துக்கள் .
இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். நான் ஆம்பளைஅப்படிதான் பிசியா இருப்பேன்னு கேபிள் அண்ணன் சொல்றார். நாராயணா நாராயணா (சங்கர நாராயணன் இல்லை)
I am new to Comment section but i never miss all your சாப்பாட்டுக்கடை,திரை விமர்சனம்,கொத்து பரோட்டா request you to dont stop all this.. keep going we will stand for you alwayssss!!!!1
//அண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..///
rippeetu...
//அண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..///
rippeetu...
agreeeeeeeeeeeeeed
ஆணாதிக்கம் அப்டீன்னா என்னுங்நா..
கொஞ்சம் வெலாவாரியா சொல்லப்புடாதுங்களா...