தமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்?
இந்த வருடத்தின் நிஜ சூப்பர் ஹிட் என்றால் அது தமிழ் படமாகத்தான் இருக்கும். ஏனென்றால் பெரிய நடிகர்கள் இல்லாமல் மிக சிறிய பட்ஜெட்டில் சுமார் நான்கு கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பதினான்கு கோடி வசூலித்திருக்கிறது. அதே போலத்தான் அங்காடித்தெரு சுமார் ஐந்து கோடியில் தயாரிக்கப்பட்ட படம் வெகு நாட்கள் ஐங்கரனின் பைனான்ஸ் பிரச்சனையினால் ஒரு வருடத்துக்கு மேல் வெளியிடப்படாமல் இருந்த படம். இப்படம் பத்திரிக்கையாளர்களிடையே, விமர்சகர்களிடையேவும் பெரிய வரவேற்பை பெற்ற அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் லாபகரமான ஒரு வெற்றிப்படமே..
விண்ணைத்தாண்டி வருவாயா.. இவ்வருடத்தின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்.. சுமார் 30 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான், கெளதம், சிம்பு, த்ரிஷா, மற்றும் வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்தினர் தான். ஒரு நல்ல படத்தை தொய்வடைய விடாமல் தொடர்ந்து மார்கெட்டிங் செய்து ஒரு நல்ல ஹிட்டை பெற்றிருக்கிறார்கள்.
பையா திரைப்படம் இவ்வருடத்தின் இன்னொரு சூப்பர் ஹிட் படம். சுமார் நாற்பது கோடிவரை வசூலிக்கும் என்று சொல்கிறார்கள். கோடை வெளியீட்டு படங்கள் எல்லாமே பெரிதாய் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
படங்கள் பெரிதாய் மக்களை ஈர்க்காததற்கு என்ன காரணம்? பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர், டெக்னீஷியன்கள் இருக்கும் படங்கள் கூட மிகப் பெரிய தோல்வியை தழுவுவது ஏன்?. சின்ன பட்ஜெட் படங்கள் கூட சோபிக்காதது ஏன்? என்று பல கேள்விகள் நம் மனதில் எழத்தான் செய்கிறது.
பெரிய நடிகர்கள் நடித்து வெளியான படங்களுக்கு சரியான வரவேற்பில்லாததற்கு முதல் காரணம் மீண்டும், மீண்டும் அதே கதையை வைத்து கொஞ்சம் கூட மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பதினால் மக்கள் புறம் தள்ளிவிடுகிறார்கள்.
அதையும் மீறி இவ்வகை படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுவதன் காரண்ம் என்ன என்று பார்த்தால், இவர்கள் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங். ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படும் இவர்களது திரைப்படங்கள் முதல் மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையான ரசிகர்களை சென்றடைந்து விடுவதால் முதலீட்டில் இருபது சதவிகிதம் வசூலித்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு படம் மிக சுமாராக இருந்தாலும் அப்படி இப்படி என்று தொடர் தொலைக்காட்சி விளம்பரத்தாலும், தியேட்ட்ர்களை அடுத்த படம் வரும் வரை தக்க வைத்துக் கொள்வதாலும், மற்ற படங்கள் வெளியிட பட முடியாமல் போகிற காரணத்தால் மக்கள் வேறு வழியில்லாமல் இத்திரைப்படங்களை பார்க்க வேண்டியிருக்கிற கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
சிறிய படங்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல மீண்டும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், பருத்திவீரன் என்று ஆ ஊவென்றால் அரிவாளை தூக்கி அலையும் இளைஞர்கள், கஞ்சா அடிப்பவர்கள், என்று ஒரே டெம்ப்ளேட் கதைகளாகவே இருப்பதும் ஒரு காரணம்.
அது மட்டுமில்லாமல் சிறு பட்ஜெட் படங்கள் என்று ஒரு கோடியிலும், இரண்டு கோடியிலும் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான மார்கெட்டிங் என்பது சிறிதளவும் இல்லாமல் இருப்பதால் இப்படி ஒரு படம் வெளியாகியிருக்கிறது என்பது தெரிவதற்கு முன்னால் திரையரங்குகளை விட்டு ஓடிவிடுகிறது.
ஒரு திரைப்படம் தயாரிக்க எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கிறதோ அதே அளவு உழைப்பு, அத்திரைப்படம் வெளியாவதற்கும் இருக்கிறது. படம் தயாரிக்க அங்கே இங்கே பொரட்டி ஒரு கோடி ஏற்பாடு செய்யும் தயாரிப்பாளர். அதனுடய விளம்பரத்துக்காக இருபது சதவிகிதம் கூட இல்லாமல் படத்தை வெளியிடுவது கொடுமையிலும் கொடுமை. இம்மாதிரியான அணுகுமுறையால் சுமாராக் இருக்கும் திரைப்படங்கள் கூட மக்களிடையே சென்றடையாமல் பெட்டிக்குள் முடங்குகிறது..
இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் இம்மாதிரியான படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அது ஒரு பெரிய பிரச்சனையாகவே தமிழ் திரையுலகம் கண்டு கொண்டிருக்கிறது. சன், ரெட் ஜெயண்ட், க்ளவுட் நைன் போன்ற கம்பெனிகள் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை மாற்றி, மாற்றி வாங்கி வெளியிடுவதால் இவர்களுக்குள் ஒரு உடன்பாடாக சரியான இடைவெளியில் படங்களை வெளியிட்டு கொள்கிறார்கள். ஒரு பெரிய திரைப்படத்திற்கு சுமார் இரு நூறு திரையரங்குகள் தேவையிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்க்ள் நான்கு பேரும் இருக்கும் முக்கிய திரையரங்களை தொடர்ந்து மாற்றி மாற்றி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எதாவது ஒரு படத்தை வெளியிடுவதால் மற்ற சின்ன படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கலால் திரையிட அரங்குகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் டுபாக்கூர் பிட்டுபட தியேட்டரக்ளில் எல்லாம் வெளியிடப்பட்டு, மக்களுக்கு அத்திரையரங்குகளை பற்றிய ஒரு ஒவ்வாமையே அத்திரைப்படத்திலிருந்து விலகியிருக்க வைக்கிறது.
இதற்கு அடுத்த முக்கிய காரணம் தியேட்டர்களின் அநியாய விலை. தமிழக அரசு ஒரு உத்தரவை போட்டிருக்கிறது. அது என்னவென்றால் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளின் குறைந்த பட்ச டிக்கெட் விலை ரூ.10ம், அதிகபட்ச விலை ரூ.50 மேல் விற்ககூடாது என்று ஒரு சட்டமே இருக்கிறது. அதே போல முன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்கு குறைந்த பட்ச டிக்கெட் அதே பத்தும், அதிக பட்சம் அறுபது ரூபாயும் என்றும், மல்டிப்ளெக்ஸ் எனப்படும் பன்னடுக்கு திரையரங்குக்கு அதிகபட்ச விலையே ரூ.120 ஆகவும் நிர்ணையித்திருக்கிறது.
சென்னையில் இதை கடை பிடிக்கிறவர்கள் மிக குறைந்தவர்களே. பெரிய படங்கள் வெளியாகும் முக்கியமாய் குடும்ப உறுப்பினர்கள் வெளீயிடும் படங்களுக்கு அதிகபட்ச விலை, குறைந்த பட்ச விலை எல்லாமே குறைந்த்து 80 ரூபாயாக இருக்கிறது. சில சமயம் 100 ரூபாய் கூட விற்கிறார்கள். மல்டிப்ளெக்ஸுகளில் அவர்கள் 120 ரூபாய்க்கு மேல் விற்பதில்லை. அதே போல தெலுங்கு மற்றும் மற்ற மொழிகள் வெளியிடும் தியேட்டர்கள் ப்ளாடாக எல்லா தளத்திற்கும் ஐம்பது ரூபாய் என்று நிர்ணையித்து வசூலிக்கிறார்கள்.
வரி விலக்கு அளிக்கப்பட்டு தமிழ் சினிமாவை வாழவைப்பதாக சொல்கிறவர்கள், இவ்வரிவிலக்கினால் தமிழ் சினிமாவை அழிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வரி விலக்கினால் இவர்களுக்கு கிடைக்கும் பயன் எதுவும் மக்களுக்கு சென்றடைவதே இல்லை. மக்களுக்கு பயனில்லாத வரிவிலக்கு ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு மட்டும் பயனளிக்கு வகையில் இருந்தால் எப்படி உபயோகமாகும்? எப்படி திரையுலகை வாழ வைக்கும்.
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் திரையரங்குக்கு செல்வதானால் மல்டிப்ளெக்ஸ் அரங்கென்றால் நானூற்றி என்பது ரூபாயும், பகல் கொள்ளையாய் மாறி வரும் பார்க்கிங்குக்கான செலவுகள், பைக் என்றால் பதினைந்து ரூபாயும், கார் என்றால் சுமார் நாற்பது ரூபாயும், இல்லாவிட்டால் குறைந்தபட்ச ஆட்டோ செலவான நூறு ரூபாயையும், இடைவேளையின் போது செலவாகும் ஐநூறையும் சேர்த்து, குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் இல்லாம திரைப்படத்திற்கு செல்ல முடியாது. அப்படி ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்தோமென்றால் அப்படியில்லாமல் அரைத்த மாவை அரைத்த திரைப்படங்களும், இலக்கில்லாத, செக்ஸ் மற்றும் வன்முறை படங்களை பார்கக் வேண்டிய கட்டாயம் அவனுக்கு என்ன? அப்படி பார்க்க வேண்டுமென்றால் இணையத்தின் மூலமாகவோ? அல்லது திருட்டு டிவிடி மூலமாகவோ.. அதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு உலக தொலைக்காட்சியில் முதல் முறையாய் திரைக்கு வந்து சில நாட்களே ஆன சூப்பர் ஹிட் திரைப்படம் என்று வெளியாகும் நாளன்று பார்த்துக் கொள்ளலாமே என்று காத்திருக்க ஆரம்பித்து விடுகிறான்.
இதை தவிர இன்னொரு காரணம் தியேட்டர் அதிபர்கள். முன்பு பெரும்பாலான தியேட்டர்களில் வார வாடகை முறையில் திரைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். அப்படி இருக்கும் போது சின்ன படங்கள் குறைந்தது இரண்டு வாரமாவது ஓடும் அல்லது தயாரிப்பாளரின் வசதியை பொறுத்து ஓட்டப்படும் அந்த இரண்டு வாரத்துக்குள் படம் பற்றிய பேச்சு ஒரளவுக்கு மக்கள் மத்தியில் சென்றடைந்தால் நிச்சயம் அடுத்த வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு ஒருசுமாரான வெற்றி படமாய் மாறும். ஆனால் இப்போதைய கால கட்டத்தில் பெரும்பாலும் எல்லா திரையரங்குகளிலும் சதவிகித முறையில் ஒப்பந்தம் செய்யப்படுவதால் தியேட்டருக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு செலவு தொகை இருக்கிறது. அச்செலவு தொகை வசூலாகவில்லையென்றால் அடுத்த ரெண்டு நாட்களில் வேறு படத்தை போட்டு விடுவார்கள்.
குறைந்த அளவில் மார்கெட்டிங் செய்யப்பட்ட திரைப்படங்கள் மக்களிடையே போய் சேர்வதற்குள் படம் தியேட்டரை விட்டு போய் விடுகிறது. தியேட்டர் அதிபர்களும் பெரிய படங்களை போடுவதால் முதல் இரண்டு வாரத்துக்கு நல்ல கூட்டம் வருவதற்கான வாய்ப்பும், சதவிகித அடிப்படையில் வெளீயிடுவதால் நல்ல வருமானம் கிடைக்ககூடிய வாய்ப்பு இருப்பதாலும் பெரிய படங்களையே நாடுகிறார்கள்.
இனி வரும் காலங்களில் தமிழ் சினிமா பொலிவுற தியேட்டர் அதிபர்கள் விலையை குறைத்து, நடிகர்கள் இயக்குனர்கள் நல்ல கதைகளை கொடுத்தும், சிறு பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கான நல்ல மார்கெட்டிங்கையும் செய்தால் நிச்சயம் ஏறுமுகத்தில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Comments
முதல் ரெண்டும் நடக்கறது ரொம்ப கஷ்டம்ங்க... அதுக்கு நேரெதிராதான் நடந்துகிட்டு இருக்குது...
சேரன் சொன்னதும் இது தான்
இது சேரன் படத்துக்கு பொருந்தாது.. ஏனென்றால் சுமார் எட்டு கோடிக்கும் மேல் செலவிடப்பட்டு. நல்ல மார்கெட்டிங் செய்யப்பட்ட படம் தான் பொக்கிஷம்..
விஜய்படங்களை வாங்கி நல்ல விலைக்கு விற்ற சன்ஸ்களை விட்டுவிட்டு படம் வாங்கி திரைக்குக் கொடுத்த வெளியீட்டாளகள் விஜய் மீது பாய்வது ஏன் ?
ஏற்கனவே விஜய்படங்கள் தோல்வியானது சன்ஸ் நிறுவனங்களுக்கு தெரியாத தகவலா ? பிறகு ஏன் அதிக விலைக்கு விற்றார்கள் ?
100% unmai
thiraipadathin vetri / tholvi patriya ungal alasal migavum mulumaiyaha ulladhu, atharkana theervum unmaiyaga irukkiradhu.
Mythili
நூற்றுக்கு நூறு உண்மையும் இதுதான்...அனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியிறதுபோல தெரியலையே??ஃ
நல்ல கட்டுரை கேபிள். வித்யாசமான கதை/படங்களும் வருவதில்லை. தியேட்டர் டிக்கட் விலையும் மிக அதிகம். ஒரு சில வாரங்களில் மிக நல்ல DVD காப்பியாக எல்லா படமும் சர்வ சாதாரணமாய் கிடைக்கிறது. அப்புறம் ஏன் மக்கள் தியேட்டர் போக போறாங்க?
வழி மொழிகிறேன்.
என் நண்பர் ஒருவர் எல்லா படங்களையும் குடும்பத்தோடு அந்த வாரம் பார்த்திருவார். ஒரு படம் பார்க்க rs 1000 செலவாகிறது என்றவர் , சென்ற வாரம் முதல் dvd 30 ரூபாய்க்கு வாங்கி தெள்ள தெளிவான பிரிண்டில் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
இப்படி தான் ஆகும் சென்னையில் இன்னும் கொஞ்ச நாளில்
//
இதுதான் 75% காரணம். மீதி எல்லாம் அப்புறம்தான்.
//
இதுதான் 75% காரணம். மீதி எல்லாம் அப்புறம்தான்.
.... Yes, sir!
த்ரிஷா படமும் சூப்பர்... :-)
நல்ல பதிவு.
இப்பொழுது வரும் படங்கள் எல்லாம் ஹீரோக்களுக்காக எடுக்கபடுகின்றன, கதைக்கு முக்கியத்துவம் குடுப்பதில்லை. அதனால் தான் இந்த வீழ்ச்சி.
மற்றபடி 1000 ரூபாய் இல்லாமல் படம் பார்க்க முடியாது ஒரு குடும்பத்தால் என்பது வுண்மை.
குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும்படியான நல்ல படங்கள் வருவதும் அரிதாகிவிட்டது.
ஸ்ரீராம்
தமிழ் சினிமாவின் இன்றைய நிலைக்கு உண்மையான காரணங்கள் (என் பார்வையில்)
காரணம் ஒன்று : படங்களின் தரம்
காரணம் இரண்டு - படங்களின் தரம்
காரணம் மூன்று - படங்களின் தரம்
காரணம் நான்கு - இந்த நிலைமை இன்றைய நிலைமை இல்லை! எப்போதும் இதே நிலைமையில்தான் இருந்தது என்பது என் கருத்து!
தமிழ் படங்களின் தரம் இபோழுது அகலபாதாளத்திர்க்கு சென்று விட்டதாக யார் சொன்னது?? எப்பொழுதுமே அது பாதாளத்தில்தான் இருந்து வருகிறது!
இயக்குனர் சிகரங்கள் முதல் இமயங்கள் வரை அடிப்பதெல்லாம் காப்பிதானே? என்ன, இவர்களெல்லாம் கொஞ்சம் காப்பி அடித்து, ஆனால் நிறைய யோசித்து
தங்கள் சரக்கையும் சேர்த்தார்கள்! மீதி உள்ள தொண்ணூறு சதவிகிதம் எல்லாம் அப்படியே காப்பி அடித்து கதை தயாரித்து அசட்டுத்தனமாக படம் எடுக்கிறார்கள், எடுத்தார்கள், எடுப்பார்கள்! உலக சினிமா என்ன, பல ஆங்கில படம் பார்ப்பவர்களுக்கு தெரியும், நம்முடைய கதைகள், காட்சிகள், கரு மற்றும் எல்லாமே எங்கிருந்து திருடப்படுகின்றது என்று!
எலும்பு போல இருப்பவர் ஐம்பது பேரை அடிப்பது, கண்டபடி கத்தி பேசி அதற்க்கு "உணர்ச்சியான" நடிப்பு என்று சொல்லுவது, பெண்களை வக்கிரமாக பரிகாசம் செய்யும் கருமத்திற்கு காதல் என்று பெயர் கொடுப்பது, அடிவாங்குவதை காட்டி காமடி என்று சிரிப்பது என்ற பல கலை அம்சங்கள் அறுபது
வருடத்திற்கு மேலாக வந்து கொண்டுதான் இருக்கிறது! என்ன, ஐம்பது பேரை அந்த காலத்தில் ஒரு ஆள் அடிக்கமாட்டார், மிஞ்சி போனால் ஒரு பத்து! எப்படியும் போலிசு கடைசியிலாவது வரும்! ஆனால் அடிப்படை வக்கிரங்கள் தமிழ் சினிமாவில் எப்பொழுதோ புகுந்து விட்டன!
எழுபதுகளில் வந்த முக்கால்வாசி படங்கள், சகிக்க முடியாத குப்பைகளே! எண்பதுகளில் சொல்லவே வேண்டாம்! (அறுபதுகளில் அதை விட காமடி, அதாவது வயது சுமார் நாற்ப்பத்தி ஐந்து இருப்பது போல உருவமுடைய இருவர், அதுவும் நீச்சல் குளத்தினுள் நீச்சல் அடிக்காமல் நடந்துகொண்டே (!) நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை" என்று பாடியதை சிலாகித்த கோலமும் இந்த வகையை சேர்ந்ததுதான்!
ஒரே ஒரு விடயம், இப்பொழுது இருக்கும் வக்கிரம் அந்த கால சினிமாவில் கண்டிப்பாக இல்லை! (எழுபதுகளில் வந்த சில எம்ஜி ஆர்-லதா, மற்றும் சிவாஜி-மஞ்சுளா பாடல்களை தவிர்த்து). அனால் வக்கிரம் இல்லை என்பதற்காக மகா பிளேடுகளை நல்லவை என்று சொல்ல முடியாதே!
நீங்கள் சொல்லும் ஒரு பாய்ண்டை ஏற்று கொள்கிறேன். அதான் திரை அரங்கில் டிக்கெட்டு விலை! அநியாமுங்க! அக்கிரம்! டிகெட்ட உடுங்க, நீங்க சொன்ன மாதிரி உள்ளே போனால், ஒரு கைப்பிடி பாப்கார்னுக்கு ஐம்பது ருபாய் கேட்கிறார்கள்! இங்க, அமெரிக்காவே பரவா இல்லை என்று தின்றுகிறது!
மேலும் நீங்கள் நினைப்பது போல, தமிழ் சினிமாவில் தோல்வி மற்றும் அதனால் வந்த நெருக்கடி ஒரு புதிய விடயமில்லை! நாற்ப்பது வருடங்களாக நடப்பதுதான்! எப்படி சொல்லுகிறேன் என்றால், நாகேஷின் சுய சரிதையில் அவர் எழுதியதை வைத்து! ! அதாவது, தமிழ் சினிமாவின் நிலை மிக மோசமாக இருப்பதாக (படங்கள் பல ஓடவில்லை) , தயாரிப்பு செலவு மிக அதிகமாக இருப்பதாக, அதை குறைக்க வேண்டும் எண்டு கூறி, தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒன்று கூடி சில முடிவுகளை எடுத்தார்கள்! அதில் ஒன்று, நடிகர்களுக்கு சம்பளத்தை தவிர உபரியான எதையும் தரக்கூடாது என்று! இது நடந்தது
அறுபதுகளில்!
ஆக மொத்தம், அடிப்படை பிரச்சனை "Talent"!! அது சுத்தமாக இல்லை! கடையில் திருட்டி சீடீ வாங்கி காப்பி அடிக்கிற கூட்டம்தான் நம்முடைய முக்கால் வாசி இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள்! நிலைமை இப்படி இருக்கையில், வேறு என்ன சப்பை கட்டினாலும் அது சரி இல்லை என்று தான் சொல்ல தோன்றும்!
We are a nation of mediocre's. We do not respect intellectual property! We steal other people's ideas without any guilt and exhibit as our own! We are unfit to aspire for any global recognition in the cinema field as nobody anywhere will give awards nor recognize folks that make a livehood out of copying!
நன்றி
ரொம்ப அறிவார்தமான கட்டுரை எழுதும் போதும் நம் உணர்வுக்கு இதமாக திரிஷா படம் போடுரீங்க பாருங்க
2.copy செய்யமுடியாத DVD ரிலீஸ்
rajan , chennai.
அமெரிக்கா வருகின்றேன். உங்களோடு தொலைபேசியில் உரையாட முடிந்தால் மகிழ்ச்சி.
என்று சொல்லி நீங்கள் கொடுத்துள்ளவை நடக்கக்கூடியதாகத் தெரியவில்லையே!
just chech thiis
http://shihnas.blogspot.com/2010/05/blog-post.html
ரொம்ப நல்லா அனைத்து பாயிண்டுகளையும் அலசியிருக்கீங்க..
நீங்க சொன்னது எல்லாத்தையும் கேட்டுட்டாலும்.....
No Said ...
We are a nation of mediocre. நூத்துல ஒரு வார்த்த சொன்னாலும் ...ல அடிச்சா மாதிரி சொல்லியிருக்கார்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நிசமா சொல்லுங்க , பையா என்ன வெற்றி படமா ?????
ஆயிரத்தில் ஒருவன் பெருசா ஓடாட்டியும் , தமிழ் ல ஒரு புது முயற்சினே சொல்லலாம் ...
NO said...we are a nation of mediocre//ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் அய்யா இது!
அன்பர் NO சொன்னவற்றில் பெரும்பாலும் உண்மை இருந்தாலும் நம்மவர்கள் அனைவரையும் Mediocre என கூறியது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. சிலர் சுடுகிறார்கள் மறுப்பதிற்கில்லை எல்லாரும் அப்படியில்லையே.
கேபிள்சங்கர்....நீங்க ஃபாசிஸ்டா? :) :)
2. Hero Worship
3. நேரமின்மை
4. இளஞர்களின் கவன மாற்றம்
5. டிக்கெட் விலை
6. திருட்டு சிடி
பட்டியல் மிக நீளம்.
சொல்லுவதை ஒப்புக்கொள்கிறேன்! ஆனாலும் சீர்தூக்கிப்பார்க்கும் நேரம் என்று வரும்பொழுது ஒரு ஆக்கத்தின் மிக கீழ்மையான வழிமுறைகளே
கோடிடப்படும்! அதுவும் காப்பி அடிப்பது, கண்டபடி படம் எடுப்பது என்பது நம்ம ஆட்கள் கொஞ்சம் நஞ்சம் செய்வதில்லை! அதுவே வழிமுறை ஆகிவிட்டது! அதன் தாக்கம் ரொம்ப அதிகம்! ஆதலால் தான் அப்படி சொன்னேன்!
சினிமா என்பது நம்ம ஊரில் ஒரு தெரு ஓர சர்கஸ்! இது ஒரு கலை அல்ல. ஒரு ரெண்டு கட்டைகளை நட்டு, கையிற்றை கட்டி ஒண்ணும் தெரியாத
குழந்தைகளை அதில் நடக்க விட்டு பிச்சை எடுக்கும் நாடோடிகளுக்கு என்ன ஆக்க அறிவு இருக்குமோ, அதேதான் நம்ம முக்கால்வாசி ஆட்களுக்கும்! ஏழைகள் சில, பிழைக்க வேறு வழி தெரியாததால், வேறு வேலை செய்ய கற்காததால் இதில் வந்து ஏதோ செய்து காசு பார்க்கிறார்கள்!
அதை செய்ய அவர்களுக்கு தேவை ரெண்டு கட்டை, ஒரு கயிறு மற்றும் ஒன்றும் அறியா குழைந்தைகள்! அவ்வளவே! இதற்க்கு யாராவது "கலை அம்சம்" என்ற முலாம் பூசினால், சிரிப்புதான் வரும்!
இதில் குழந்தைகள் நம்ம நடிகர்கள் (தளபதி, தல என்று பட்ட பெயர் வேற )! இந்த கயிறு ஏறும் ஆட்டத்தை எந்த குழந்தை எப்போ ஏறவேண்டும் என்று சொல்லுபவர்கள் நம்ம கதாசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், கட்டையை, கயிறை வாங்கி கொடுத்து, குழந்தைகள் அழுதல் உதைத்தோ அல்லது மிட்டாய் கொடுத்தோ சமாதனப்படுத்துவது தயாரிப்பாளர்கள்! என்ன, இதைப்பார்க்க வரும் கூட்டம் இந்த balancing act டிற்கு மட்டுமல்லாமல் அந்த குழந்தைகளை காணவும் வருகிறது! எந்த குழைந்தைக்கு நிறைய ஆரவாரமோ, அந்த குழந்தைக்கு நிறைய மிட்டாய் தருவார் தயாரிப்பாளர்! ஆனால் எப்படி இருந்தாலும், எந்த குழந்தை இருந்தாலும், செய்வது ஒன்றுதான், அதாவது கயிறு மேல் நடந்து சர்கஸ் காட்டுவது,அதுக்கு நாலு சில்லறை சேருமா என்று பார்ப்பது!
திறமை இருந்தாலும், இல்லாவிட்டாலும், கடைசியில் எல்லோரும் இந்த கயிருமேல் ஏறி வித்தைகாட்டி காசு பார்க்கும் நிலைமைக்கு வந்து விடுவார்கள்! அதற்க்கு முக்கிய காரணம், நன் முன்பே சொன்னதுபோல, TALENT மற்றும் இந்த சினிமா எடுக்கும் நிகழ்வு என்னவென்பதன் புரிதல்! இந்த சர்கஸ்சிற்கு பெரிய தெறமை வேண்டுமென்று அவசியம் இல்லை, பெரிய ஈடுபாடும் அவசியமில்லை! !
நன்றி
HE IS WASTE anna
SINGAM hit-nu behindwoods-la sonnanga anna
okey take care
Madhumidha
madhumidha1@yahoo.com
எனக்கு ஒரு சந்தேகம், தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலை பின்பற்றுவது கிடையாது; உங்கள் கூற்றுப் படி நடிகர்கள் / இயக்குனர்களுக்கு ஏற்ப ஒபெநிங் டிக்கெட்விலை தியேடர்கரர்களால் விற்கப்படுகிறது.. ஆக இது ஒரு கள்ள சந்தை வியாபாரம்.
விபரம் இப்படியிருக்க, எதன் அடிப்படையில் நீங்கள் ஒரு படத்தை லாபமா ? நட்டமா ? என எப்படி சொல்ல முடியும்? பாக்ஸ் ஆபீஸ் நிலவரம், ஹவுஸ் புல் எல்லாமே அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை தானே கணக்கில் கொள்வர்.. கள்ள சந்தையில் ஏற்றப்பட்ட விலை கணக்கில் வராதுதானே?
உதாரனத்திற்கு வசூலில் அங்காடித்தெரு 10 கோடி / சுறா 10 கோடி (20 ,00 ,000 - 50 ருபாய் டிக்கெட்டுகள் ) என்றால், சுறாவின் உண்மையான வசூல் குறைந்தது 20 கோடி தானே(20 ,00 ,000 - 100 ருபாய் கள்ள சந்தை விலை) ??
வார கடைசியில் வெளிவரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எதன் அடிப்படையானது ? விளக்கவும்..
மேலும், பையா, விண்ணைத்தாண்டி வருவாயா , தமிழ்ப்படம் என எல்லா கலைஞர் டிவி வெளியீடுகள் மட்டும் வெற்றி வரிசையில் இருப்பது கொஞ்சம் உறுத்துது... (எதிரிக்கு எதிரி நண்பனா?); என்னை பொறுத்த வரை பத்திரிக்கையும், ப்ளாக் விமர்சனமும் ஒன்றே.. படம் பார்த்தவன் கூட அதை மறந்து விடுவான் .. ஆனால் விமர்சனம் படிப்பவன் மறக்கமாட்டன்.. மீண்டும் மீண்டும் மார்க்கெட்டிங்யை வலியுறுத்துவதால் ப்ளாக் விமர்சனம், மார்க்கெட்டிங் டூல் ஆகிவிட்டதோ என்ற சந்தேகம்..
கடந்த 10 வருடங்களில் அஜித் நடித்த ஓரிரு படங்களே வசூலில் லாபம் என பத்திரிகைகள் கூறுகின்றன .. ஆனால் அவர் மார்க்கெட் அப்படியேதான் உள்ளது... மார்க்கெட்டிங் மற்றும் மார்க்கெட்டிங் இல்லாமல் இருப்பதன் வித்தியாசம் படத்தின் வெற்றி மற்றும் வசூல் பற்றிய பத்திரிகை செய்திகளிலே அன்றி வேறுங்கும் பெரிய இழப்பு கிடையாது என்பது என் கருத்து . . (நடிகரின் மார்க்கெட் ரசிகர் மன்ற கணக்கிலே உள்ளது என நினைக்கிறேன்), விஜய்க்கு நடப்பதும் உள்குத்தே என்பது என் கருத்து..
எந்த ஒரு தொழிலும் வெற்றி சதவீதம் குறைவு என்றால் அதில் ஈடுபட முனைவோரின் சதவீதம் கண்டிப்பாக குறையும்.. நடிப்பை, இயக்கத்தை தொழிலாக கொண்டவர்கள் வேண்டுமானால் புகழ் முக்கியம், பணம் ரெண்டாம் பட்சம் எனலாம்.. ஆனால் தயாரிப்பை தொழிலாக கொண்டார்கள் சதவீதம் உயருகிரதென்றால்,, அடித்து சொல்கிறேன் இப்போதைய சினிமா கண்டிப்பாக லாபம் ஈட்டும் தொழிலே.. ( ரன் படம் வரும் முன் திருட்டு டிவிடி யால் ஒரு தேக்க நிலை இருந்தது, அது மட்டுமே எனக்கு தெரிந்து சினிமா நட்டத்தில் சென்ற காலம்)
இது என் அபிமானம் (கால்குலேசன்) தவறாகவும் இருக்கலாம் .. ஆனால் எனக்கு தெரிந்து நீங்களே தகுந்த ஆள் .. பிளீஸ் விளக்கவும் ..
இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் செய்றீங்களா?
எல்லாமுமே நடக்கும்
@விஜய்
:(
@கார்திகை பாண்டியன்
இதுதான் சினிமாவின் அழிவுக்கு காரணமாகப் போகிறது.
முக்கியமாய் பிரச்சனை எங்கு வெடிக்கிறது என்றால் படத்தை விஜய்தான் சங்கிலி முருகன் பெயரில் தயாரித்திருக்கிறார். அது மட்டுமிலலாமல் விஜய் படங்கள் தோல்வியென்றாலும் ஓப்பனிங் இருக்கும் ஒரு நடிகருக்கு வியாபாரம் இருக்கத்தான் செய்யும். போன படத்தில் விட்டதை இந்த படத்திலாவது சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை. விட்ட இடத்தில் தான் தேட வேண்டும்.. அதுவும் சினிமாவில்....
@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி
@
முக்கியமாய் பிரச்சனை எங்கு வெடிக்கிறது என்றால் படத்தை விஜய்தான் சங்கிலி முருகன் பெயரில் தயாரித்திருக்கிறார். அது மட்டுமிலலாமல் விஜய் படங்கள் தோல்வியென்றாலும் ஓப்பனிங் இருக்கும் ஒரு நடிகருக்கு வியாபாரம் இருக்கத்தான் செய்யும். போன படத்தில் விட்டதை இந்த படத்திலாவது சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை. விட்ட இடத்தில் தான் தேட வேண்டும்.. அதுவும் சினிமாவில்....
@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி
@
நன்றி
@மோகன்குமார்
ஆமாம்
@ஜனா
பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க நினைத்தால் நிச்சயம் நஷ்டம் அவரக்ளுக்குதான்.
ஊருக்கே தெரிஞ்ச விஷயம்..:)
@அரண்
சிந்திக்கணும்..ம்ஹும்
@காவேரி கணேஷ்
ஆமாம் கணேஷ்
நல்ல பின்னூட்டம்.. நன்றி ராஜு
@கிருஷ்குமார்
ஏன் இந்த கொலைவெறி..?
@எம்.எம்.அப்துல்லா
வலி தெரிகிறது உங்கள் பின்னூட்டத்தில் :)
@
ந்னறி
@விசா
ரைட்டு
@சி.கருணாகரசு
நன்றி
@வணங்காமுடி
நன்றி.. ஹி..ஹி..
அப்படியே வந்தாலும் குழந்தைகள் படத்துக்கு எத்தனை பெற்றோர்கள் தியேட்டருக்கு குடும்பத்தோடு அழைத்து போகிறார்கள்.
@
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.. உங்களது கருத்தை ஒரு சின்ன மாற்று கருத்து இருக்கிறது இருக்குது என்னிடம்.. நிச்சயமாய் நாம் மீடியோக்கர் ஆட்கள் இலலை..
நன்றி
@ராஜன்
நீங்கள் சொன்ன ரெண்டாவது முயற்சி இதுவரை தோல்வியிலேயே இருக்கிறது..:(
@தருமி
நம்பிக்கைதானே வாழ்க்கை
நன்றி
@ஸ்ரீராம்
நன்றி
@ரோஸ்விக்
அது தனிக் கதை
@ஷங்கர்..
கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க..
நிச்சயமாய்.. நமக்கு பிடிக்கிறதோ..இல்லையோ.. நிஜம் நிஜம் தானே..
முயற்சி யெல்லாம் ஓகேதான் ஆனால் வேலைக்காகவில்லை என்பதுதான் நிதர்சனம்.
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி
@ரவி
:(
@லோகன்
நன்றி
நன்றி எட்வின்
@ஷ்ர்புதின்
நன்றி
@மயில் ராவணன்
ஃபாசிஸ்டா.. அப்படின்னா..?
2
குறையணும்
@மாதேவி
நன்றி
@சூவீட்
அபடியெல்லாம் பொத்தாம் பொதுவாக விஜயை சொல்ல முடியாது. அவரும் பல ஹிட் படங்களையும், நல்ல படஙக்ளையும்கொடுத்துதான் இந்நிலைக்கு வந்துள்ளார்
@
ராஜேஷ் நீங்கள் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் நாளை வெளியாக இருக்கும் “என்னுடய “சினிமா வியாபாரம்” புத்தகத்தில் அத்துனை கேள்விகளுக்குமான பதில் உள்ளது.. படித்துவிட்டு மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் விளக்க, தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். நன்றி
ராஜேஷ் நீங்கள் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் நாளை வெளியாக இருக்கும் “என்னுடய “சினிமா வியாபாரம்” புத்தகத்தில் அத்துனை கேள்விகளுக்குமான பதில் உள்ளது.. படித்துவிட்டு மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் விளக்க, தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். நன்றி
எனக்கு நிறைய வேலை இருக்குப்பா..
@கிருஷ்குமார்
நான் ஆணாதிகக் வாதியாகவே இருந்துட்டுபோறேன். வேணுமின்னா மன்னிப்பு கேட்டுக்கிறேன்..:)
@கூல் பாய் கிருத்திகன்
அதான் சொல்லிட்டீங்களே..:)