தமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் முதல் முறையாய் பாயிண்ட் ஆப் வீயூவில் எடுக்கப்பட்ட படம். பாயிண்ட் ஆப் வியூ என்றால்? பெரிதாய் வேறொன்றும் இல்லை… கதையின் நாயகன் கண் தான் கேமரா என்று வைத்துக் கொள்வோம் அவன் மூலம்பார்க்கும் பார்வையின் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கிறது அது தான் பாயிண்ட் ஆஃப் வியூ என்பதாகும்.
நகுலன் பொன்னுசாமி இறந்துவிடுகிறான். மிஸ்ட்ரி டிவி என்கிற டிவியில் நகுலனின் இறப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஆரம்பிக்கிறது. யார் இந்த நகுலன் பொன்னுசாமி?
நகுலன் பொன்னுசாமி ஒரு வெற்றிகரமான பாராநார்மல் ஆசாமி. ஆவி, பேய், பூதம் போன்ற அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்பவன். அதற்காகவே லண்டனுக்கு சென்று படித்தவன். இதுவரை 18 கேஸ்களை வெற்றிகரமாக முடித்த அவனுக்கு 19வது கேஸாய், ஆனந்த் என்கிற ஒரு தொழிலதிபர் தான் வாங்கி வைத்திருக்கும் மூணாறு பங்களாவில் ஏதோ அமானுஷ்யங்கள் இருப்பதாய் சொல்லி, அதை கண்டுபிடித்து தரச் சொல்லி பணிக்கிறார்.
பகலில் பார்த்தாலே நடு முதுகில் சில்லிட வைக்கும் பாழடைந்த பங்களா. அங்கிருக்கும் அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு நாள் இரவு தங்க முடிவெடுத்து, அங்கிருக்கும் அறைகளை எல்லாம் தன் சி.சி.டிவி நெட்வொர்க்குள் அமைத்து தன் எலக்ட்ரானிக் சங்கதிகளுடன் களம் இறங்குகிறான். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் கடைசி இரண்டு நிமிடங்களில் நடக்கும் விஷயங்களில் நகுலன் பொன்னுசாமியின் வாழ்க்கையையே திருப்பி போட்டு விடுகிறது
ப்ளேர் விச் ப்ராஜெக்ட், பாராநார்மல் ஆக்டிவிட்டி, போன்ற படஙக்ளை தலையில் வைத்து கொண்டாடிய நாம், நிச்சயம் இந்த தமிழ்படத்தையும் கொண்டாட வேண்டும். அவ்வளவு டெடிகேஷனோடு உழைத்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.
படம் ஆரம்பத்திலிருந்தே நம்மை கூடவே பயணிக்க வைக்கும் உத்தி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. நகுலன் சிகரெட் பிடித்தால் நாமும் பிடிக்கிறோம், அவன் சோம்பல் முறித்தால் நாமும் சோம்பல் முறிக்கிறோம். அவன் பதட்டம் அடைந்தால் நாமும் அடைக்கிறோம். ஒரு டாகு பிலிம் போன்ற முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் உத்தி பாராட்டத்தக்கது. நடு நடுவே படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் முயற்சிக்கு வெற்றியையே கொடுக்கிறது.
படத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் சதீஷ்.. பாயிண்ட் ஆப் வீயுவில் மூணாறின் விஷுவலாகட்டும், அந்த ஹேங்கிங் பிரிட்ஜ் காட்சியாகட்டும், பேய் வீட்டை ஒரு சாதாரண மனநிலையோடு பார்க்கும் பார்வைக்கும், அதே வீட்டை பதட்டத்தோடு பார்க்கும் பார்வைக்கும் தன் கேமரா மூலமா உணர்வுகளை வெளிப்படுத்தி நடு முதுகில் ஐஸ் உறைய வைக்கும் அவருக்கு ஒரு சபாஷ்..
வெங்கட் பிரபு ஷங்கரின் பிண்ணனி இசை, ஹரிஷங்கரின் எடிட்டிங் என்று டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட்கள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு உழைத்திருக்கிறது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஹரிஷ், ஹரி ஷங்கர், கிருஷ்ண சேகர். எனக்கு தெரிந்து இரட்டையர்கள் இயக்கி பார்த்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாய் மூன்று இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள்.
டிஜிட்டலில் படமெடுக்கிறோம் என்று வழக்கமான மதுரை, அரிவாள், பாட்டு, காமெடி என்று போகாமல் டிஜிட்டல் சினிமாவுக்கான சரியான கதை களத்தை கையிலெடுத்துக் கொண்டு, ஜெயித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பாயிண்ட் ஆப் வீயூ என்று முடிவெடுத்தவுடன் அதற்கேற்றார் போன்ற ஷாட் டிவிஷன்கள், கேரக்டர் பேசும் வசனங்கள், நடவடிக்கைகள் எல்லாமே மிக இயல்பு. அதே போல அந்த கேரக்டருக்கு வரும் பதட்டம், பயம் எல்லாமே அவ்வளவு இயல்பாய் ஒட்டிக் கொள்கிறது நமக்கு. மூணாறு போகும் வழியில் லிப்ட் கேட்கும் வில்லிவாக்கம் ரவியின் பேச்சினிடையே உலவும் காமெடியும், பின் அதே கேரக்டரை வைத்து உறையும் இடமும் சூப்பர். “ இந்த மாதிரி இடத்தில நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா சில சமயம் நம்ம நிழலே நம்மை பயமுறுத்தும்” என்று நகுல் பேசும் வசனங்கள் மிக ஷார்ப். க்ளைமாக்ஸை நோக்கி போகும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு… இருக்கிறது.. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாய் படவில்லை. நிச்சயம் இருக்கிறது. அதையெல்லாம் மீறி படம் என்க்ராசிங்காக இருப்பதை மறுக்க முடியாது. இளைஞர்களாய் இணைந்து ஒரு வித்யாசமான பட அனுபவத்தை கொடுத்ததிற்காக வாழ்த்துக்கள்.
ஓர் இரவு – வரவேற்க வேண்டிய முயற்சி. நிச்சயம் பார்கலாம்.
டிஸ்கி: படம் பார்த்துவிட்டு கலைப்புலி தாணு “ ஒரு நாலு நாளைக்கு தனியா வீட்டில இருக்க முடியல” என்றாராம். சவுண்ட் இன்ஜினியர் கண்ணன் இரவில் வேலை செய்ய மாடிக்கு போக துணையில்லாமல் போக வேயில்லையாம். நேற்று படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் ஒருவர் முகம் வெளிறி.. வெளியில் போய் உட்கார்ந்ததை பார்த்தேன்.
கேபிள் சங்கர்
ஓர் இரவு – வரவேற்க வேண்டிய முயற்சி. நிச்சயம் பார்கலாம்.
டிஸ்கி: படம் பார்த்துவிட்டு கலைப்புலி தாணு “ ஒரு நாலு நாளைக்கு தனியா வீட்டில இருக்க முடியல” என்றாராம். சவுண்ட் இன்ஜினியர் கண்ணன் இரவில் வேலை செய்ய மாடிக்கு போக துணையில்லாமல் போக வேயில்லையாம். நேற்று படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் ஒருவர் முகம் வெளிறி.. வெளியில் போய் உட்கார்ந்ததை பார்த்தேன்.
Post a Comment
38 comments:
உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. நன்றி
கேபிள்ஜீ... புதிய முயற்சியின் ரிசல்ட் நன்றாக வந்திருக்கிறது என்று நீங்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்சினிமாவின் மாற்றத்துக்கு இதுபோன்ற விமர்சனங்களே பலம்...
நன்றி...
சாரி தல மும்பை ல ரிலிஸ் இல்ல!! பாக்க முடியாது போல
1408 படத்தின் கதை போல் இருக்கு..
ஓர் இரவு - AMAZING ....
நேற்று இரவு முழுதும் இந்தப் படம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது, இதன் கேமாராப் பார்வை மிகுந்த சிரமம், நம்மை நகுலன் தன் காரின் பக்கத்துக்கு இருக்கையில் அமரவைத்து கூட்டிபோகிறார், அதிலும் நேரேசன் மிக அற்புதம்,.
தமிழில் முதல் முயற்சி, முதல் முற்சியே சூப்பர்... படத்தின் முதல் பாதி நம்மை எகிற வைக்கும், இரண்டாம் பாதி நம்மை பதற வைக்கும், அதிலும் வில்லிவாக்கம் ரவி கேரக்டர், முன்னாள் ஆவி ஆராய்ச்சியாளர்கள் கேரக்டர், காதலி கேரக்டர் சரியான இடங்களில், சரியான தேர்வு..
எந்த மொழியில் வேண்டுமானாலும் இதனை மாற்றம் செய்யலாம்..
இதற்க்கு முன் ப்ளேர் விச் ப்ராஜெக்ட், பாரா நார்மல் ஆக்டிவிட்டி பார்த்திருக்கிறேன், அதற்கு இணையான அல்லது அதைவிட சிறப்பான படம்..
இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் நினைத்தால் சேது போல ஒரு பிரமாண்ட வெற்றியை தரக் கூடிய படமாக மாறும் ...
அனைவரும் அவசியம் பாருங்கள்.. அதற்கடுத்த இரவுகள் நிச்சயம் பயத்துடன் போகும்..
அதுதான் இந்தப் படத்தின் வெற்றி..
இந்த படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது..
சரியான விமர்சனம் கொடுத்த கேபிளுக்கு பாராட்டுக்கள்.
i want to see the film in theatre..
In chennai which theaters are released this movie...
List Please...
பார்க்கலாம்
@selvamani
balaabiram noon and nite show, albert nite show alone
கண்டிப்பா பாக்குறோம் தலை. படகுழுவிர்க்கு வாழ்த்துக்கள்
கேபிள்ஜி புது முயற்ச்சிக்கேற்ற அருமையான விமர்சனம்... இதில் சொல்ல பட்ட மூன்று இயக்குனர்களில் ஹரீஸ் ஒரு பதிவர்... தெரியாதவர்களுக்கு அவருடைய தள முகவரி...இதிலும் நகுலன் பொன்னுசாமி பற்றி எழுதியிருக்கிறார்...
http://hareeshnarayan.blogspot.com
இந்த படத்தோட விளம்பரம் பார்த்தேன். நல்லா இருக்குமானு ஒரு doubt இருந்தது. உங்க விமர்சனம் படிச்சதும் பாக்கணும் போல இருக்கு. நான் என் friends எல்லாம் message பண்ணி பாக்க சொல்லி இருக்கேன். இந்த மாதிரி தரமான படங்கள்-i எங்களுக்கும் தெரியபடுதியதற்கு ரொம்ப thanks. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
// நேற்று படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் ஒருவர் முகம் வெளிறி.. வெளியில் போய் உட்கார்ந்ததை பார்த்தேன். ///
இதை படித்து கொண்டிருந்தப்ப நண்பர் ஒருவர் என் தோளில் கை வைத்த போது
நான் கத்திய சத்தம் எப்பா...... பயமாதான் இருக்குண்ணே!
படம் பார்த்துட்டு திரும்புவேணா?
கேபிள் சார், கண்டிப்பா பாத்திருவோம்!
உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. நன்றி
நம் சகபதிவர்,நண்பர் ஹரிஷின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்
பகிர்விற்க்கு நன்றி சார்
நீங்க சொல்றதுல இருந்து இது நல்ல படம்னு தெரியுது. ஆனா பெரிய பேனர் படம் மட்டும் தான் தலைநகரம் வருது. அதனால் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக யாராவது போட்டா தான் பார்க்க முடியும்
சூப்பர் விமர்சனம்.
"ஒரு நாலு நாளைக்கு தனியா வீட்டில இருக்க முடியல என்றாராம்"
அதுதான் பயமாயிருக்கு.
துணிந்திடுவோம்.
Film industryla link ullavanga reviewlam romba seriousaga eduthka koodathunu ninaipen athu sarithan ena kaattukirathu review.
average film kooda supera aakkappadum !new attempt ok. Athukkaga extra 'vaasipu' hi...hi
John cussac naditha "1408" kathai pola irukku inspire ena eduthkanumam!.
Pov la "nilai kannadi" enra padam erkanave vanthirukku camera omprakash. Athula camera kannadiyaga fixed ,ithula camera move aguthunu difference sollikalam !
Dreemmerன்ட கதை படிச்சாலே நடு முதுகு ஜில்லிடும்ஜி...
படம் நிச்சயம் போட்டு தாக்கும்னு நெனக்கிறேன்..
எங்கூருக்கு படம் எப்ப வரும்னு தெருல வந்தா பார்ப்போம்..
விமர்சனம் அருமை..
கேபிள் நல்ல வேளை படத்தின் திகிலைப்பத்தி சொன்னிங்க
நாளைக்கு இந்த படத்துக்கு போகும் போது நிச்சயமா ஐயனார் கோயிலில் மந்திரித்து கொடுத்த தயத்தை கையில் கட்டிக்கொண்டு போகனும்.
:-)))
நன்றி
படம் வெற்றிபெற ஹரிஷிற்கு வாழ்த்துக்கள். நல்ல விமர்சனத்துக்கு நன்றி உங்களுக்கு.
Friends, pls visit my site also here http://kaniporikanavugal.blogspot.com/
thanks
உங்க விமர்சனம் படத்த பத்தின எதிர்பார்ப்ப கூட்டுது...
ஆனா படம் இன்னும் எங்க ஊரில் ரிலீஸ் ஆகலை...ரிலீஸ் ஆனா கண்டிப்பா பாத்துர வேண்டியதுதான்...
உங்கள் விமர்சனம் !!!
நன்றி
surely i will watch and share my views ...
good introduction... u r teaching me how to watch a movie ..thanks
கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவலை ஊட்டுகிறது உங்கள் பதிவு.
பகிர்வுக்கு நன்றீ கேபிள்ஜி.. வெங்கட் பிரபு வெற்றியடைய வாழ்த்துக்கள்
//average film kooda supera aakkappadum//
படத்தை பார்க்காம இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லவேண்டாமே வவ்வால் சார். நீங்க சென்னையில் இருந்தால் படம் பார்த்துட்டு கருத்து சொல்லுங்க. மேலும், கேபிள் அவர்கள் எல்லா படத்தையும் பாராட்டுவதில்லை. குறைகள் இருந்தால் வெளிப்படையாக சுட்டிக்காட்டுகிறார். நீங்க சொல்றது அவரோட விமர்சன முறையே தவறு என்பது போலிருக்கிறது.
இந்த படத்தோட இயக்குனர்களில் ஒருவரான ஹரீஷும் ஒரு பதிவர்தான். அவர் கதைகளை நீங்க படிச்சதில்லைன்னு நினைக்கிறேன். படிச்சு பாருங்க :)
http://hareeshnarayan.blogspot.com
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3859
//Film industryla link ullavanga reviewlam romba seriousaga eduthka koodathunu ninaipen athu sarithan ena kaattukirathu review. //
நீங்க படம் பார்த்தீங்களா..? பார்க்காமலேயே சொல்லாதீர்கள்..
//average film kooda supera aakkappadum !new attempt ok. Athukkaga extra 'vaasipu' hi...hi//
நன்றி..
//John cussac naditha "1408" kathai pola irukku inspire ena eduthkanumam!.//
ஸோ..வாட்...
//Pov la "nilai kannadi" enra padam erkanave vanthirukku camera omprakash. Athula camera kannadiyaga fixed ,ithula camera move aguthunu difference sollikalam !//
ஆனா படம் வரலையே.. நான் பாக்கலையே... என்ன பண்றது.. வந்திருந்தா அதையும் பாராட்டியிருப்பேன்.. பேட் லக்.. do have a relationship with that "nilai kannadi.." :)
ஓவரா டெக்னிக்கல் வார்த்தைகள்! என்னை மாதிரி சாம்ன்யனுக்கு புரியல...
உங்கள் பதிவை படித்ததும் பார்த்தே ஆகணும்னு தோணுது.
புதிய இயக்குனரின் முயற்சிக்கு ஷொட்டு கொடுத்து பாராட்டிய கேபிளார்க்கு டபுள் ஷொட்டு...
திறமையான புதியவர்களை வரவேற்போம்....
it seems we have to buy:THAYATHTHU: from veeramany samikal(periyal matalayam)
பார்த்துருவோம் தல.
@kusumban
என்னாது.. டெக்னிக்கல் வார்த்தையா.. ? :((
@ஆர்.கோபி
நன்றி
@டிடிபியான்
ம்
@பா.ராஜாராம்
ம் பாருங்க த
Post a Comment