Thottal Thodarum

Jun 15, 2010

”பிட்” உலகம்

drogam-nadanthathu-enna-28 தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் “பிட்” படங்கள் என்று அழைக்கப்படும் “சாப்ட் ஃபோர்ன்” வகையறா படங்களுக்கு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இம்மாதிரியான படங்களுக்கான தியேட்டர்கள் ஊரோரத்திலோ, அல்லது நகரின் முக்கிய தெருவிலோ, இருக்கத்தான் செய்கிறது.

என்பதுகளில் தான் இம்மாதிரியான படங்களுக்கு ஒரு மவுசு வர ஆரம்பித்தது. அதுவும் மலையாள படங்கள் தான் இம்மாதிரியான சாப்ட் ஃபோர்ன் படங்களுக்கான சப்ளையர்களாக இருந்த்து. “அவளோட ராவுகள்” படம் என்னவோ நல்ல படம் தான் ஆனால் பெயரும், படத்தின் கருவும் கொஞ்சம் செக்ஸியாக இருந்தததினால், சென்னையின் முக்கிய தியேட்டரான ஆனந்த் தியேட்டரில் நூறு நாள் ஓடியது என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, சாரவலையம், என்றெல்லாம் மலையாள படங்கள், வீடியோவின் வரவால் டல்லடித்துக் கொண்டிருந்த திரை உலகை காப்பாற்றி கொண்டிருந்தது இம்மாதிரியான படங்கள் தான். பல தியேட்டர்களை மூடி விழாவிலிருந்து காப்பாற்றியதும் இம்மாதிரியான படங்கள் தான.

சாதாரணமாகவே செக்ஸ் கதை களன்களை மட்டுமே  அடிப்படையாய் கொண்டு தயாரிக்கப்படும் இம்மாதிரியான படங்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது கிடையாது. மிக குறைந்த செலவில் ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது ஒரு மலை வீட்டிலோ, லோ லைட்டில் வயதான கணவன், இளம் மனைவி, பக்கத்துவீட்டு இளைஞன், அல்லது விடலை வேலைக்காரப் பையன் என்ற டெம்ப்ளேட் கதைகளை புது புது நடிகைகளை வைத்து தோலுறித்து காட்டி வந்தார்கள். மலையாள திரைப்படங்களின் வரவேற்பை பார்த்த ஹிந்தி பட உலகமும் அதன் ப்ங்குக்கு “ஜவானி, திவானி” போன்ற படங்களை அள்ளி விட, ஒரு கட்டத்தில் இம்மாதிரி படஙக்ளுக்கான தியேட்டர்கள் தான் அதிகமோ என்று தோன்றுமளவுக்கு எங்கெங்கு காணினும் பிட் படமாகவே காட்சியளித்தது.

drogam-nadanthathu-enna-wallpaper95

இம்மாதிரி படங்களில் நேரடியாய் உடலுறவு காட்சிகள் இல்லாவிட்டாலும், சென்சார் செய்து வந்த பிறகு கட் செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் இணைத்து வெற்றி பெற்றார்கள் விநியோகஸ்தர்கள். பின்பு அது போதாமல், ஸ்மால் டைம் நடிகைகளை வைத்து ஃபோர்னோ படங்களையே எடுத்து, அதை தனியாக படத்துக்கு சம்பந்தமேயிலலாத் இடத்தில் இடைவேளைக்கு முன் ஒன்று, பின்பு ஒன்று என்று ஒளிபரப்பி, ”அதை” காட்டி முடிந்ததும், படத்தை முடித்து, கல்லா கட்டி கொண்டிருந்தார்கள். சென்னையில் இதற்காகவே திருவெற்றியூர், போரூர், பரங்கிமலை, ஆலந்தூர், என்று ஏகப்பட்ட இடங்களில் பிரபலமான தியேட்டர்கள் உண்டு. இம்மாதிரியான தியேட்டர்கள் ஒவ்வொரு நகரங்களிலும், நிச்சயம் இருக்கும்.

வீடியோவின் ஆக்டோபஸ் வளர்ச்சியால் இரண்டு  மணி நேர போர்னோ படங்களே மக்களுக்கு முப்பது, நாற்பது ரூபாய்க்கு கிடைக்கவே, இம்மாதிரியான படங்களுக்கு மவுசு குறைய ஆரம்பித்தது.  90களில் குறைய ஆரம்பித்த மவுசு.. நடுவில் ஒன்றுமேயில்லாமல் போய் கூட இருந்தது, கடந்த ரெண்டு வருடங்களாய் மீண்டும், தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

எப்போதெல்லாம் திரையுலகம் டல்லடிக்கிறதோ.. அப்போதெல்லாம் இப்படங்கள் வலைய வரும். அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி ஓரு பக்கம் நல்ல சின்ன திரைப்படங்கள் வருவதற்கான அறிகுறியை காட்டினாலும், பெரிதும் உதவுவது இம்மாதிரியான தயாரிப்பாளர்களுக்குதான்.
 drogam-nadanthathu-enna-wallpaper79

சென்ற வருடம் சத்தமேயில்லாமல் சென்னையில் மட்டுமில்லாமல் தமிழ் நாடெங்கும் போட்ட காசுக்கு மேல் வசூலான படம் வேலு பிரபாகரனின் “காதல் கதை” அதற்கு பிறகு வெறும் போஸ்டரை மட்டுமே வைத்து சரியான ஓப்பனிங் கலக்‌ஷனை பெற்ற படம் “மாதவி”. இவர்கள் எல்லாம் அடுத்த படத்தை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வேலு பிரபாகரன் இப்போது டிஜிட்டல் கேமராவில் மிக குறைந்த பொருட் செலவில் படப்பிடிப்பில் இருக்கிறார். ஏற்கனவே காதல் கதையில் பெற்ற வெற்றி. இவரின் அடுத்த படத்துக்கு டிமாண்டை ஏற்படுத்தி விட்டது.

இப்போது அந்த வரிசையில் “துரோகம்” நடந்த்து என்ன?, மிக அருமையாய், டெம்ப்ட் செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்கள், ப்ளாக் அண்ட் ரெட்டில் கண்ணில் “குத்தும்” போஸ்டர்கள், பேப்பர் விளம்பரங்கள். போன 11ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதே பதினோராம் தேதி ஓர் இரவு என்கிற படமும் ரிலீஸாகியிருக்க, இவர்களுக்கு ரெண்டே தியேட்டரில் காலே அரைககால் ஷோ டைம்மிங்கே கிடைக்க, துரோகத்துக்கு, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் சுமார் 18 பிரிண்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. என் நண்பர் ஒருவரிடம் கேட்டேன் முதல் ரெண்டு ஷோ செம ஓப்பனிங்காம்.  தியேட்டர்காரர்களே இம்மாதிரியான படஙக்ளுக்குதான் முக்யத்துவம் தருகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான தியேட்டர்களில் ஷேர் முறை மட்டுமே இருப்பதால், நல்ல ஓப்பனிங் உள்ள திரைபடங்களை வெளீயிட்டாலே அன்றி அவர்களுக்கு கல்லா கட்டாது. புதிதாய் வரும் சின்ன திரைப்படங்களுக்கு மவுத் டாக் போய் படம் பார்க்க வருவதற்குள் தியேட்டரிலிருந்து படம் போய்விட்டிருக்கும் பரிதாப நிலை வந்திருக்கும். இந்த வியாபார முறை பற்றி நான் ஏற்கனவே “சினிமா வியாபரத்தில் எழுதியிருக்கிறேன்.

சவுத்ரி, குஞ்சுமோன், குட்நைட் மோகன், ஆஸ்கார் ரவிசந்திரன் போன்றவர்கள் ஒரு காலத்தில், இம்மாதிரி படஙக்ளை தயாரித்தோ, விநியோகம் செய்து சம்பாதித்துதான் இந்நிலைக்கு வந்திருக்கிறார்கள். பல நேரங்களில் திரையுலகில் பல பேருடைய வாழ்க்கையை காப்பாற்றி, காலம் தள்ளியதே “பிட்” படங்களினால் தான் என்றே சொல்லலாம்.எப்போதெல்லாம் இம்மாதிரி படங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் திரையுலகம் தள்ளாட்டமிடுகிறது என்பதை சொல்லும் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேபிள் சங்கர்
Post a Comment

43 comments:

Unknown said...

இப்பதான் ஜெட்லி துரோகம் படத்துக்கு போயிட்டு ஒண்ணுமே காட்டலேன்னு சொன்னாரு..

பொதுவாகவே எது நல்ல வியாபாரம் ஆகுதோ .. அவற்றை தவிர்க்க முடியாது ..

இது "சினிமா வியாபாரம்" ..

Guru said...

பிட்டு படங்களை பத்தி சும்மா புட்டு புட்டு வச்சுருகீங்கன்னே ! தியேட்டர்கள் பிட்டு படம் ஓட்டி கல்லா கட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது பரிதாபம்.

pichaikaaran said...

அருமையான பார்வை..
"சவுத்ரி, குஞ்சுமோன், குட்நைட் மோகன், ஆஸ்கார் ரவிசந்திரன் போன்றவர்கள் ஒரு காலத்தில், இம்மாதிரி படஙக்ளை தயாரித்தோ, விநியோகம் செய்து சம்பாதித்துதான் இந்நிலைக்கு வந்திருக்கிறார்கள்"

சுப்பர்.. ஒருவர் பெரிய ஆள் ஆகி விட்டால், பழைய விவகாரங்கள் மறக்கப்படும்..

இங்கு இருக்கும் சில " நர " கல் பதிவர்கள், பெரிய எழுத்தாளர்கள் ஆகி விட்டால், அவர்களின் நரகல் எழுத்துக்கள் மறக்க பட்டாலும் ஆச்சர்ய படுவற்கு இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் பிட்டு மாப்பு! போட்டோக்கள் அதவிட சூப்பர், முதல் போட்டோ எந்த படத்துல இருந்துங்ணா? (அந்தப் படம் பாத்தா மாதிரி ஞாபகமே இல்ல தான் கேட்டேன்?)

குசும்பன் said...

//எப்போதெல்லாம் திரையுலகம் டல்லடிக்கிறதோ.. அப்போதெல்லாம் இப்படங்கள் வலைய வரும். //

எப்பொழுது எல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதே என்ற டயலாக் மாதிரி இருக்கு...ம்ம்ம்ம் என் ஜாய்!

குசும்பன் said...

திராபை படத்துக்கு எல்லாம் லைட்டிங் சூப்பர், ஹீரோவின் அந்த சீன் ஆக்டிங் சூப்பருன்னு வரிக்கு வரி விமர்சனம் எழுதுங்க..இதுமாதிரி படத்துக்கு எல்லாம் பொத்தாம் பொதுவா எழுதினா என்னா அர்த்தம்? சீன் பத்தி சொல்லுங்க சார்!


எங்கள் அண்ணன் உ.த இந்த படத்துக்கு விமர்சனம் எழுதினால் எப்படியிருக்கும்?:))))

ராம்ஜி_யாஹூ said...

நுனிப்புல் மேய்ந்தது போல உள்ளது உங்கள் பதிவு

பிட் பட நடிகர்களான பிரமிளா, உமா மகேஸ்வரி, பிரதிபா, அக்ஷர (நீலா மாலா ப்ரியா), அபிலாஷா, பாபிலோனா, ரேஷ்மா, ஜெயதேவன், ரதீஷ், வெற்றி , பப்லு /ப்ரித்விராஜ் போன்றோர் பற்றி விளக்கம் இல்லாத ஒரு பதிவு என்றே சொல்லுவேன்.

தராசு said...

இது தேவையா?????

மணிஜி said...

உங்களை நம்ம்ம்பி படிக்கறவங்களை வதைக்காதீங்க ப்ளீஸ்..நீங்க தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் .இன்னும் நிறைய காவியங்களை நீங்கள் படைக்க உள்ளீர்கள் என்பதை நேற்று டாஸ்மாக் சப்ளையர் ஒருவரிடம் கையடித்து சத்தியம் செய்தேன் .

பிரபல பதிவர் said...

//கையடித்து சத்தியம் செய்தேன்//


பிட்டு பட ஞாபகமா????

Jey said...

ஹி ஹி.

Unknown said...

//போன 11ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கிறது. //

சொல்லவே இல்ல :-)

Unknown said...

//கையடித்து சத்தியம் செய்தேன்//

டாஸ்மாக்லயேவா???

பாலா said...

இந்த மாதிரி படத்துல நடிக்கறவங்க எல்லாம் எப்பத்தான் ஒழுங்கா கிஸ் அடிக்கவாவது கத்துக்கப் போறாங்களோ?

கஷ்டமடா சாமி!

==

மணியண்ணே.. வெறும் சத்தியம் மட்டும் பண்ணிட்டு வர வேண்டியதுதானே? இப்ப kvr கேள்வி கேட்கறார் பாருங்க.

மணிஜி said...

shake well before use" மருந்து பாட்டிலில் இருக்கும் வாசகம்

Cable சங்கர் said...

அடிச்சு சொன்னது இருக்கட்டும்.. துடைச்சியா..?

NARI said...

இதை படியுங்கள் தெளிவடைவீர்கள்.

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/06/blog-post_14.html

NARI said...

Shake well after use.....

இது டாயிலெட்டில் இருக்கும் வாசகம்

Wanderer said...

அண்ணே,

பிட்டு பட வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனையாக, ஜாபர்கான்பேட்டை இந்திரா தியேட்டரில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்த "திருட்டு புருஷன்" படத்தை பற்றி ஒரு வரி கூட எழுதாமல் விட்டது என் போன்ற உண்மையான ரசிகர்கள் மனதை காயப்படுத்தி விட்டது.

க ரா said...

படம் எப்படியிருக்குன்னு கடைசி வர ஒரு வார்த்தை இல்ல்லியேன்னா (-:

தனி காட்டு ராஜா said...

//.படம் எப்படியிருக்குன்னு கடைசி வர ஒரு வார்த்தை இல்ல்லியேன்னா (-://
போஸ்ட்டரில் உள்ள கிக் படத்துல இல்லை...

Unknown said...

எம்ஜியார்,பார்த்திபன்,பாக்கியராஜ்,
“குடும்ப” பிட் பாட்டுக்கள் எடுத்திருக்கிறார்கள்.

எம்ஜியார் போல்”காதல்” மிகுந்த காட்சிகள் ஹாலிவுட்காரர்களாலும் கொடுக்க முடியாது.

பார்க்க “என்னை விட்டால்”.

http://www.youtube.com/watch?v=nTO5U9tcNWU

thanjai gemini said...

என்னண்ணே ஆல் ஓவர் தமிழநாடு 100
நாள் ஓடி செகண்ட் ரிலீஸ் லயும் 100 நாள் ஓடுன அலெக்சாண்ட்ரா பத்தி ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டீங்க

bogan said...

உண்மை.மலையாள பட உலகமே ஒரு காலத்தில் இந்த படங்களை நம்பித்தான் இருந்தது என்றால் பொய் இல்லை.ஷகீலாவுக்கு மோகன்லாலை விட பெரிய ஓபனிங் கிடைத்த பிறகுதான் விழித்துக் கொண்டு அவருக்கு ரெட கார்ட் போடாவிட்டால் மலையாள திரை உலகம் இன்றைவிட மோசமான நிலையில் இருந்திருக்கும்.சில படங்களில் சில பெரிய நடிகர்களை எல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.இன்னொரு விஷயம் அவளோட ராவுகள் பிட்டு படம் அல்ல.ஒரு பாலியல் கதைக் கரு கொண்ட படம் அவ்வளவே.அதேபோல்தான் ரதி நிர்வேதமும்.நம்முடைய காஞ்ச ரசிக கண்மணிகள் அதையும் பிட்டுப் படமாக ஆக்கி விட்டார்கள்.

குழலி / Kuzhali said...

மன்மதன் என்று ஒரு படம்... மிகமுக்கிய படம் .... அப்புறம் சிராக்கோ, அலெக்சாண்ட்ரா இதெல்லாம் தவறவிடுவது தகுமோ?

Swengnr said...

Voted. But, No Comments.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

oru chinna paiyan manasa kedukka paakkureengale. unka pechchu kaa

geethappriyan said...

தல
போரூர் பானு,
ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி
ஆலந்தூர் மதி
பல்லாவரம் ஜனதா
பல்லாவரம் லட்சுமி
பழைய பல்லாவரம் நூர் டாக்கிஸ்
தாம்பரம் எம் ஆர்
பெருங்களத்தூர் அனுராக்
இவை எல்லாம் சொல்லலையே தல்?
என்னா கொசுவத்தி.
தல ஜெய் டே வான் (ஜெயதேவன்)
வெற்றி,ஒரு வெள்ளை முடி பெருசு(பேர் தெரியல)இவங்கள சொல்லாம விட்டுட்டீங்களே தல்!:)

Romeoboy said...

திருவெற்றியூர் - வெங்கடேஸ்வரா, ராகவேந்திர...
மின்ட் - முருகன் தியேட்டர்

பிட் படம் பற்றிய கட்டுரை சரி ,, இங்க இருக்குற படங்களை கூட அந்த மாதிரி ஏன் போடணும் ??? ஆபீஸ்ல பாடிக்க முடியாம திண்டாடினேன்.. :(

butterfly Surya said...

அப்போ நீங்க இந்த படத்தை பார்க்கவில்லையா..??

Jackiesekar said...

உங்களை நம்ம்ம்பி படிக்கறவங்களை வதைக்காதீங்க ப்ளீஸ்..நீங்க தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் .இன்னும் நிறைய காவியங்களை நீங்கள் படைக்க உள்ளீர்கள் என்பதை நேற்று டாஸ்மாக் சப்ளையர் ஒருவரிடம் கையடித்து சத்தியம் செய்தேன் .--//

வரிக்கு வரி மணிஜியை வழி மொழிகின்றேன்...

கேரளாக்காரன் said...

பிட் படம் பற்றிய கட்டுரை சரி ,, இங்க இருக்குற படங்களை கூட அந்த மாதிரி ஏன் போடணும் ??? ஆபீஸ்ல பாடிக்க முடியாம திண்டாடினேன்.. :(

damildumil said...

உங்க ப்ளாக், ஜாக்கியோட ப்ளாக்கை எல்லாம் ஆபீஸ்ல திறக்கவே முடியறது இல்லை. கேட்டா உன்னை யாரு ஆபிஸ்ல பாக்க சொன்னதுன்னு சொல்லுவீங்க. நாங்கெல்லாம் சொல்லி நீங்க கேட்டுட்டா அப்புறம் உங்க ஈகோ என்னாகும். ம்ம்ம் நடத்துங்க, நான் வெளிநடப்பு செஞ்சுக்குறேன்

shortfilmindia.com said...

@கே.ஆர்.பி.செந்தில்..
ம் ரைட்டுங்கோ..

@குரு
ஹி..ஹி.. ஏதோ நமக்கு தெரிஞ்சது.

@பார்வையாளன்.
வெற்றி மட்டுமே நிரந்தரம் தலைவரே..:)

@பன்னிக்குட்டி ராமசாமி
எலலமே துரோகம் படத்திலிருந்துதான்.

shortfilmindia.com said...

@குசும்பன்
கிட்டத்தட்ட அந்த பீல்லில் எழுதினதுதான்..


@குசும்பன்
எழுத சொல்லி அனுப்பியிருக்கேனே..

@யாஹு..ராம்ஜி
உங்க அளவுக்கு நான் அனுபவம் இல்லீங்கோ.. நான் என்ன பி.எச்.டியா செய்யப் போறேன்.

shortfilmindia.com said...

@தராசு
எதுண்ணே..

@மணிஜி
அஹா.. நான் தமிழின் முக்கியமான எழுத்தாளரா..? நன்றி தலைவரே..

@சிவகாசி மாப்பிள்ளை
:)

@ஜெ
ஹி..ஹி..

shortfilmindia.com said...

@கேவிஆர்
அட அது கூட தெரியலையா..?

@ஹாலிவுட் பாலா
அதானே..

@

shortfilmindia.com said...

@நாரி
படிக்கிறேன்

@இசிஆர்
அது ஜாபர்கான் பேட்டை இந்திராவில் அல்ல.. ஜெயப்பிரதா தியேட்டரில்.. இந்திராவில் ஓடியதென்னவோ உண்மைதான். சரி நீங்க நம்ம ஏரியாவா..?

#இராமசாமி கண்ணன்
படம் பார்க்க வேற செய்யணுமா?

shortfilmindia.com said...

@தனிகாட்டு ராஜா
ரைட்டு

@கே.ரவிஷங்கர்
அவங்க படமெல்லாம் டபுள் எக்ஸ்

@தஞ்ச்சை ஜெமினி
அடடா..எல்லாத்தையும் நாமே எழுதிட்டா என்ன செய்யறது.. மக்கள் பாட்டிசிபேஷன் வேணாமா?

shortfilmindia.com said...

@போகன்
அட பேரே ஒரு மார்க்கமா இருக்கே?

@குழலி
அதுக்குத்தாண்ணே.. நீங்க வருவீங்கன்னு தெரியும்ணே..

@சாப்ட்வேர் இஞினியர்
ஓகே ரைட் நன்றி

@

shortfilmindia.com said...

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
யாரு.. நீயி.. சின்ன பையன்.. ஓகே நம்புறேன்

@கீதப்பிரியன்
என்னா ஒரு லிஸ்ட்டு..

@ரோமியோ
திருவெற்றியூர் வெங்கடேஸ்வராவில் தான் நான் “யானைக் கொம்பன்:” ஒரு பிட்டு படம் பார்த்தேன். பம்மலில் இருந்து பஸ் பாஸில் திவெற்றியூர் வது.

ஒரு வேளை கட்டுரை பெபில்லாம போயிருச்சுன்னா என்ன செய்யுறதுன்னு தான் படம்.. ஹி..ஹி

2

shortfilmindia.com said...

@சூர்யா
அட இந்த படத்துக்கெல்லாம். காலையில பல் தேய்க்கும் போது கதை சொல்லிரலாம்.. நீங்க வேற

@ஜாக்கி சேகர்..
அவரு சொன்னதைநீங்களும் நம்பிட்டீங்களா..?

@வருண்
@டமால் டுமீல்
நான் எப்பய்யா ஆபீஸ்ல ஏன் பாக்குறேன்னு கேக்குறேன். இருக்கிற் முக்காவாசி பேரு ஆபீஸ் வேலையே ப்ளாக் படிக்கிறதுன்னு எனக்கு தெரியாதா..? அதுக்குள்ள இங்கிலீஸ் வார்த்தையில் எல்லாம் திட்டுறாங்களே..:(

நாமக்கல் சிபி said...

:)