சாப்பாட்டுக்கடை
அசைவ உணவு வகைகளுக்கு நிறைய உணவகங்கள் இருக்கிறது. ஆனால் சைவ உணவகங்களுக்கு நிஜமாகவே டிமாண்ட் தான். அதிலும் வெறும், தோசை, இட்லி என்று தேடினால் நிறைய கிடைக்கும். ஆனால் பொதுவாக நல்ல மெனு, நல்ல சாப்பாடு, சைட் டிஷ், நியாயமான விலை என்று தேடினால் கிடைப்பது அரிது. அதுவும் சைவ உணவகங்களில்.

அந்த வகையில் எல்லா வகையிலும் சிறநத உணவகம் சென்னை, சாலிக்கிராம, அருணாச்சலம் ரோடில் மோகன் ஸ்டூடியோ எதிரிலுல்ள, கருணாஸ் சைவ உணவகம். மாலையில் சுடச்சுட, இட்லி, தோசை, அடை, ரவா தோசை, கொத்து பரோட்டா, என்று கலந்து கட்டி அட்டகாசப் படுத்தும் மெனு. சம்பார், சட்னி, கார சட்னி, இத்துடன் காரக்குழம்பு ஒன்று இவர்கள் ஸ்பெஷாலிட்டி. அதே போல மதிய சாப்பாடு. பொரியல், கூட்டு, அப்பளம், வத்தக்குழம்பு என்று நியாயமான விலையில் சுவையான சாப்பாடு, நிச்சயம் அடுத்த நாள் காலையிலோ, இரவிலோ வயிற்றை கெடுக்காத சாப்பாடு. இட்லி காரக்குழம்பு காம்பினேஷன் அடிச்சிக்க முடியாது.
விஜய் டிவியின் நீயா நானாவில் கலந்து கொள்ள போய்விட்டு, நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டு, நான், அப்துல்லா, தண்டோரா மணீஜி, நர்சிம், சூர்யா ஆகியோர் கிளம்பினோம். அவர்களுக்கு நான் தான் இந்த உணவகத்தை ரெகமெண்ட் செய்தேன். ஏதோ ஒரு நம்பிக்கையில் உள் நுழைந்தவர்களுக்கு பரம் திருப்தி. நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பார்கலாமே..
கேபிள் சங்கர்
Comments
ஆமா நீயா நானா நிகழ்ச்சி எப்போ வருது?
பல தரப்பினருடன் பழகினாலும், உங்கள் நல்ல தன்மையை கெடுத்து கொள்ளலாமல் இருக்கிறீர்களே... இது ஓர் அபூர்வ குணம் .. பொறாமை படுகிறேன்..
அவர்களுடன் இன்னும் தொடர்பில் இருப்பதை வெளிப்படையாக சொல்லும் துணிச்சலும் பாராட்ட தக்கது..
கடந்த சில நாட்களாக உங்கள் பின்னூட்டங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஒருவரைப்பற்றி முழுதாகத் தெரியாமல்,தாங்களாக எடுத்துக் கொள்ளும் முன்முடிவுகளையும், யூகங்களையும் வைத்துக்கொண்டு தொடர்ந்து அவர் மேல் செய்யும் அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறேன்!
@ராஜு .. ஒருவரை புண்படுத்த கூடாது என்ற உங்கள் நியாய உணர்வுக்கு தலை வணங்குகிறேன். அவரை திட்டுவது என் நோக்கம் அல்ல.. ஒரு காலத்தில் அவர் எழுத்தை ரசித்தவன் தான் நான். மதித்தவன் தான் நான்.. பிரிண்ட் எடுத்து வைத்து , படித்து மகிழ்ந்தவன் நான்.
இப்போதும் அவர் மேல் எனக்கு கோபம் இல்லை... அவர் எப்படி இருப்பது என்பது அவர் உரிமை.. அவர் , அவரை போன்றவர்களுடன் கூடி குலவுவதை தவறு சொல்ல முடியாது...
ஆனால், கேபிள் சங்கர் அவர்களை ரசிப்பவன் என்ற முறையில், அது சரியான நட்பு என தோன்றவில்லை.. கூடா நட்பு , கேடாய் முடியும் என அன்புடன் சொல்கிறேன் ,, அவ்வளவுதான்.. இது கேபிள் சங்கர் மேல் நான் வைத்து இருக்கும் அபிமானத்தால் தான்... இன்னொருவரை அவதூறு செய்வது என் நோக்கம் அல்ல...
இந்த வலைபக்கத்தில் உள்ள விஷயத்தை பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்
உங்க மூஞ்சை பாக்கவா உங்க ப்ளாக்கு வாரோம் :)