Pages

Jun 16, 2010

சாப்பாட்டுக்கடை

அசைவ உணவு வகைகளுக்கு நிறைய உணவகங்கள் இருக்கிறது. ஆனால் சைவ உணவகங்களுக்கு நிஜமாகவே டிமாண்ட் தான். அதிலும் வெறும், தோசை, இட்லி என்று தேடினால் நிறைய கிடைக்கும். ஆனால் பொதுவாக நல்ல மெனு, நல்ல சாப்பாடு, சைட் டிஷ், நியாயமான விலை என்று தேடினால் கிடைப்பது அரிது. அதுவும் சைவ உணவகங்களில்.
Photo0065
அந்த வகையில் எல்லா வகையிலும் சிறநத உணவகம் சென்னை, சாலிக்கிராம,  அருணாச்சலம் ரோடில் மோகன் ஸ்டூடியோ எதிரிலுல்ள, கருணாஸ் சைவ உணவகம். மாலையில் சுடச்சுட, இட்லி, தோசை, அடை, ரவா தோசை, கொத்து பரோட்டா, என்று கலந்து கட்டி அட்டகாசப் படுத்தும் மெனு. சம்பார், சட்னி, கார சட்னி, இத்துடன் காரக்குழம்பு ஒன்று இவர்கள் ஸ்பெஷாலிட்டி. அதே போல மதிய சாப்பாடு. பொரியல், கூட்டு, அப்பளம், வத்தக்குழம்பு என்று நியாயமான விலையில் சுவையான சாப்பாடு, நிச்சயம் அடுத்த நாள் காலையிலோ, இரவிலோ வயிற்றை கெடுக்காத சாப்பாடு. இட்லி காரக்குழம்பு காம்பினேஷன் அடிச்சிக்க முடியாது.
Photo0063 விஜய் டிவியின் நீயா நானாவில் கலந்து கொள்ள போய்விட்டு, நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டு, நான், அப்துல்லா, தண்டோரா மணீஜி, நர்சிம், சூர்யா ஆகியோர் கிளம்பினோம். அவர்களுக்கு நான் தான் இந்த உணவகத்தை ரெகமெண்ட் செய்தேன். ஏதோ ஒரு நம்பிக்கையில் உள் நுழைந்தவர்களுக்கு பரம் திருப்தி. நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பார்கலாமே..
கேபிள் சங்கர்

21 comments:

  1. உறுதியா.

    ReplyDelete
  2. ஐ. மீ த பர்ஸ்ட்.

    ReplyDelete
  3. ரைட்டு. உஙக பேரை சொன்னா டிஷ்கவுண்ட் கொடுப்பங்களா?

    ReplyDelete
  4. Voted - No Comments!

    ReplyDelete
  5. ம்ம் ஒரு மாற்றம் அவசியம்தானே கேபிள்ஜி

    ReplyDelete
  6. ஆஹா...சூப்பராக இருக்கும் போல..முதல் தடவையாக இட்லிக்கு காரகுழம்பு கொடுக்கும் ஹோட்டல் கேள்விபடுகிறேன்...அருமையான காம்பினேஷன்...பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  7. பார்க்கலாமே...!

    ReplyDelete
  8. ஒரு இயக்குனர் எல்லா விஷயத்துலயும் அக்கறை எடுத்துகிட்டாதான் அந்த படைப்பு மிக அழகாக வரும். அதேபோல்தான் நீங்களும். ஒரு கலையை அதிகமாக நேசிப்பவனுக்கு பர்ஃபெக்ட் ரொம்ப ரொம்ப அவசியம். அதுதான் அவனுக்கான அடையாளம். நீங்க பதிவு எழுதுறல எடுத்துக்குற அக்கறையை கொஞ்சம் அந்த பதிவுக்கான புகைப்படங்கள் இணைக்கிறதுலையும் காட்டினா இன்னும் சிறப்பா இருக்கும். புகைப்படங்கள் குறித்த உங்கள் கவனமின்மை உங்கள் ரசனையின் மீது கேள்விக்குறியை ஏற்படுத்திப்போகிறது. தவறிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. தல கடையோட போட்டோ, முகவரி, முடிஞ்சா போன் நம்பர், உணவக நேரம் போன்றவற்றையும் இனிமே கொடுக்க முயற்சி பண்ணுங்க! :)

    ReplyDelete
  10. முதல் போட்டோவில் இருக்கும் கண்ணாடி போட்ட "தம்பி"யை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு:))

    ஆமா நீயா நானா நிகழ்ச்சி எப்போ வருது?

    ReplyDelete
  11. "நான், ""நர்சிம்"", ஆகியோர் கிளம்பினோம். அவர்களுக்கு நான் தான் இந்த உணவகத்தை ரெகமெண்ட் செய்தேன்"

    பல தரப்பினருடன் பழகினாலும், உங்கள் நல்ல தன்மையை கெடுத்து கொள்ளலாமல் இருக்கிறீர்களே... இது ஓர் அபூர்வ குணம் .. பொறாமை படுகிறேன்..
    அவர்களுடன் இன்னும் தொடர்பில் இருப்பதை வெளிப்படையாக சொல்லும் துணிச்சலும் பாராட்ட தக்கது..

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. @பார்வையாளன்
    கடந்த சில நாட்களாக உங்கள் பின்னூட்டங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    ஒருவரைப்பற்றி முழுதாகத் தெரியாமல்,தாங்களாக எடுத்துக் கொள்ளும் முன்முடிவுகளையும், யூகங்களையும் வைத்துக்கொண்டு தொடர்ந்து அவர் மேல் செய்யும் அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  14. Ok. ஒரு நாள் கூட்டிப்போகவும்.

    ReplyDelete
  15. "அவர் மேல் செய்யும் அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறேன்!"

    @ராஜு .. ஒருவரை புண்படுத்த கூடாது என்ற உங்கள் நியாய உணர்வுக்கு தலை வணங்குகிறேன். அவரை திட்டுவது என் நோக்கம் அல்ல.. ஒரு காலத்தில் அவர் எழுத்தை ரசித்தவன் தான் நான். மதித்தவன் தான் நான்.. பிரிண்ட் எடுத்து வைத்து , படித்து மகிழ்ந்தவன் நான்.

    இப்போதும் அவர் மேல் எனக்கு கோபம் இல்லை... அவர் எப்படி இருப்பது என்பது அவர் உரிமை.. அவர் , அவரை போன்றவர்களுடன் கூடி குலவுவதை தவறு சொல்ல முடியாது...

    ஆனால், கேபிள் சங்கர் அவர்களை ரசிப்பவன் என்ற முறையில், அது சரியான நட்பு என தோன்றவில்லை.. கூடா நட்பு , கேடாய் முடியும் என அன்புடன் சொல்கிறேன் ,, அவ்வளவுதான்.. இது கேபிள் சங்கர் மேல் நான் வைத்து இருக்கும் அபிமானத்தால் தான்... இன்னொருவரை அவதூறு செய்வது என் நோக்கம் அல்ல...

    ReplyDelete
  16. https://time2rich.com/svsbalaji
    இந்த வலைபக்கத்தில் உள்ள விஷயத்தை பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்

    ReplyDelete
  17. தல கடையோட போட்டோ, முகவரி, முடிஞ்சா போன் நம்பர், உணவக நேரம் போன்றவற்றையும் இனிமே கொடுக்க முயற்சி பண்ணுங்க! :)

    உங்க மூஞ்சை பாக்கவா உங்க ப்ளாக்கு வாரோம் :)

    ReplyDelete
  18. பாத்திருவோம். நீங்கள் என்னுடைய பதிவுக்கு வரும் வரை விட மாட்டேன்!

    ReplyDelete
  19. கடந்த வாரம் சைனா போய் வந்தேன்.இருப்பது ஆஸ்திரேலியாவில்.இந்த பதிவைப்படித்து ஈமெயிலில் ஓட்டல் முகவரியை பதுகாத்து வைத்துள்ளேந். மெட்றாஸ் போனவுடனே ஆகஸ்ட் மாசம் இந்த மெஸ்ஸைபார்த்து ஒரேய் ஓட்டம் தான். அய்யோ நல்ல சைவ சாப்பாட்டுக்காக மனசு பறக்குதே.

    ReplyDelete
  20. மீண்டும் எப்போ போகலாம் கேபிள்..?

    ReplyDelete