Pages

Jun 18, 2010

கற்றது களவு - திரை விமர்சனம்

katrathu-kalavu-movie-posters-01 நல்லவனாய் வாழ்ந்து ஏதுவும் சாதிக்காமல், ஏமாற்றப்பட்டு வாழ்வதை விட அவர்களை ஏமாற்றி வாழ்வது மேல் என்று முடிவெடுக்கும் இளைஞனின் கதை. முடிந்த வரை விறுவிறுப்பாக சொல்லியிருக்க வேண்டிய கதை.

ஒரு ருபாய் முதலீட்டில் ஸ்டூடண்ட் பேங்க் ஆரம்பிக்க நினைத்து அந்த ப்ராஜக்டை சந்தான பாரதியிடம் கொடுக்க, அவர் அந்த ப்ராஜக்டை தன் ப்ராஜெக்ட் என்று பில்டப் செய்து சுவாகாவாக்கிவிடுகிறார். இதனால் காண்டாகும் ஹீரோ, புதியதாய் ஒரு காதலியுடன் சேர்ந்து அவனையும், மற்றும் பலரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில் மந்திரி ஒருவரிடம் டகால்டி வேளை செய்துவிட, அவர்கள் துரத்த, இன்னொரு பக்கம் லோக்கல் போலீஸ் ஆபீசரும், டெல்லி ஐ.பி ஆபீசரும் துரத்த, இவர்கள் தங்களை காத்துக் கொள்ள ஓடுகிறார்கள். முடிவு என்னவாயிற்று என்பதை வெள்ளித்திரையில் பார்க்க..

அலிபாபா ஹீரோ கிருஷ்ணா, படம் நெடுக ஓடுகிறார், சில இடங்களில் நடிக்க முயற்சித்திருகிறார். பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. கதாநாயகி விஜயலஷ்மி கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். சம்மந்தமில்லாத காட்சிகளில் க்ளிவேஜ் காட்டுகிறார். படத்தில் இம்ப்ரஸிவான நடிப்பு என்றால் அது சம்பத்தின் நடிப்பும், அந்த ஐபி ஆபீஸ்ரும்தான். நிஜமாகவே இம்ப்ரசிவ்.
katrathu-kalavu-movie posters (2) படத்தின் முக்கியமான ஒருவர் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா.. மனுஷன் முதல் பாதியில் மிரட்டியிருக்கிறார். பாலின் இசையில் இரைச்சல் அதிகம். சம்மந்தமேயில்லாத இடங்களில் எல்லாம் பாடல் வருவது எரிச்சலாய் இருக்கிறது.

மிக விறுவிறுப்பாக போக வேண்டிய கதையில், திரைக்கதையால் நிறைய இடங்களில் ஸ்பீட் ப்ரேக்கர்கள்.முக்கியமாய் அந்த கஞ்சா கருப்பு ட்ராக் படு எரிச்சலாய் இருக்கிறது. விஜயலஷ்மி எதற்காக கிருஷ்னாவின் தவறான காரியங்களுக்கெல்லாம் உடந்தையாகிறாள் என்பதற்கு விளக்கமேயில்லை. முதல் ஐடியாவாவது பரவாயில்லை, அதற்கு அடுத்ததாய் நடத்தும் சம்பவங்கள் எல்லாம் சவசவ..  பாதி படத்திலேயே ஹீரோ தப்பித்துவிட போகிறான் என்று உணர்வதால் பின்னால் வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் போய் விடுகிறது. ஆங்காங்கே போய் விட்டு வரும் திரைக்கதைக்கு பதிலாய் ஸ்டெரெயிட் நேரேஷனில் சொல்லியிருந்தால் கொஞ்சமாவது இண்ட்ரஸ்ட் இருந்திருக்கும்.


கற்றது களவு –இன்னும் ட்ரையினிங் பத்தலை


கேபிள் சங்கர்

8 comments:

  1. எனது ...இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைச்சுருச்சா ????


    தல ...why Late ???

    படத்தை பார்பதற்குள் தியேட்டரை விட்டு தூக்கி டாங்க....

    ReplyDelete
  2. அலுத்து போன கதை...ரொம்ப பொறுமைசாலி நீங்க...

    ReplyDelete
  3. இன்னைக்கு பேப்பர் பாக்கலையா... படம் 25ம் தேதி புதுப்பொலிவுடன் ரீ-ரிலீசாம்...

    ReplyDelete
  4. படம் ஒரு தடவ பாக்கலாம். ராவணன் எப்பூடி

    ReplyDelete
  5. "கற்றது களவு –இன்னும் ட்ரையினிங் பத்தலை "



    உங்க பதிவை ரெகுலரா படிச்சா , அவுங்களுக்கெல்லாம் ரொம்ப பயன்படும்...

    எது எப்படியோ, நான் நிறைய தெரிஞ்சுக்றேன்... நன்றி

    ReplyDelete
  6. Anonymous7:53 PM

    இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுற யாருக்குமே இது ஒரு ஹிந்தி படத்தோட தழுவல் னு தெரியலையா. இந்த படம் பண்டி அவுர் பப்ளி என்கிற படத்தோட அப்பட்டமான தழுவல்.நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை ஆனால் அநேகர் எழுதும் விமர்சனங்களை பார்க்கும் போது அப்படியே காட்சி மாறாமல் அந்த படத்தை தமிழில் எடுத்த மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  7. நம்பியவர்களை நட்டாற்றில் விடுபவரா , கேபிள் சங்கர் ??

    http://pichaikaaran.blogspot.com/2010/06/blog-post_8533.html

    அண்ணே... உங்க பதிவை ரசிப்பவன் என்ற முறையில், என் போன்றோரின் வேதனையை , வார்த்தையாகி பதிவு இட்டு இருக்கிறேன்... ( பின்னூட்டத்தில் இடம் போதாது என்பதால் ) .. உங்கள் விளக்கம்தேவை

    ReplyDelete