திட்டக்குடி
வேலு சின்ன வயதிலேயே தறுதலையாய் ரஜினி, கமல் குருப் போட்டுசினிமா பார்த்து கெட்டொழிந்து, படிப்பை விட்டவன். கொளுத்து வேலைக்கு போக ஆரம்பிக்கிறான். கையில் காசு பார்க்க ஆரம்பித்தவுடன், குடி, கூத்தி என்று பார்க்கிற சித்தாள்கள், ஐயிட்டங்களையெல்லாம் ஊரோரமாகவும், அவர்ரவ்ர் வீட்டில் போயும், கட்டிட இடிபாடுகிடையேவும் நொட்டிக் கொண்டு அலைகிறான். தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவான மேஸ்திரியின் பெண் வயதுக்கு வந்ததும், அவளை காதலிப்பதாய் சொல்லி, மிகவும் முயற்சி செய்து, ஒரு நாள் மேட்டர் முடித்துவிட்டு, கையில் காசை திணிக்கிறான். அனுபவித்துவிட்டு காசு கொடுத்தவனை கல்யானம் செய்ய மாட்டேன் என்கிறாள் அவள். ஒரு கட்டத்தில் திடீரென திருந்தி வாழ ஆரமித்து அவளை கல்யாணம் செய்ய இருக்க, திடீரென குடும்ப பிரச்சனையில் கல்யாணத்துகு போக முடியாமல், அவளை வேறு ஓருவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒருவனுக்கு தகுந்த நீதி எழவு சொல்லியிருக்கிறார்கள்.
படம் பூராவும், சாராய வாசனையும், விந்து வாசனையும் மூச்சடைக்கிறது. படம் நெடுக கதாநாயகனும், அவனது நண்பனும், யாராவது ஒரு அயிட்டத்தையோ, அல்லது சித்தாளையோ, அல்லது கதாநாயகியை மேட்டர் செய்ய முயற்சியோ செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகியின் அப்பா அவர் வயதிற்கு ஒரு மிடில் ஏஜ், சித்தாளுடன் தொடுப்பு வைத்திருக்கிறார். ஊரில் இருக்கும் அயிட்டம் சுஜிபாலாவுக்கு ஊர் சிறு வயது பெண்கள் எல்லாம் சேர்ந்து எவ்வளவுநாள் தான் இப்படியே இருக்கிறதுன்னு யோசிச்சு ஒருத்தனை கல்யாணம் செய்து வைக்க கிளம்புகிறார்கள். கதாநாயகி முதல் காட்சியில் எட்டி உதைக்கப்பட்ட ஒருவனுக்கு மனைவியாக்கப் படுகிறாள், அவன் குடிக்காக அவளை விபச்சாரியாக்கி விடுகிறான். கதாநாயகனின் அண்ணி, சோளக்காட்டில், கதாநாயகியின் முறைப் பையனுடன், மேட்டர் செய்து கொண்டிருக்கிறாள், அதை பார்த்துவிட்டதால் பொம்பளை பொறுக்கி கதாநாயகன் மேல் பழி போட, உச்சபட்ச கொடுமையாய், பெற்ற தாயே தன் முந்தானையை மூடிக் கொண்டு
சோறு போடுகிறாள்.
ராவாக படம் எடுக்கிறோம் என்றோ, இல்லை லைவாக படம் எடுக்கிறோம் என்றோ, மிகவும் பீல் செய்து எடுக்குறோம் என்று எடுத்து முடியல…… ஒரு காமுக, பொறுப்பில்லாத ஒருவனால், ஒரு அப்பாவி பெண் வாழ்விழக்கிறாள், தன்னை கெடுத்து காசு கொடுத்தவனை என்னால் திருமணம் செய்ய முடியாது என்று சொல்லும் பெண்ணை பற்றிய கதை என்றால் அதுவும் இல்லை. அப்படி வீராப்பாய் பேசிய பெண் சம்மந்தமேயில்லாமல் ஒரு ஊரறிந்த குடிகாரனை கல்யாணம் செய்து, விபச்சாரியாவது படு சினிமாத்தனம். ஏனென்றால் வீட்டை விட்டு ஓடிப் போய் தனியாய் வேலை செய்து சம்பாதிக்கும் அளவுக்கு மனதிடம் உள்ள ஒரு பெண், இதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டாள். கதாநாயகன் எவளோ ஒரு விலைமகள் இனிமே காசு எடுத்துட்டு இங்கே வராதே என்று சொன்னதாலேயே, மனம் திருந்துவது, கதாநாயகிக்கு கல்யாணம் ஆனதும், குடிகாரனாய் அலைவதும், தன் க்ண்முன்னே அவளை ஒரு க்ளாஸ் சாராயத்துக்காக விலை பேசுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், தேவையில்லாமல் அண்ணிக்கு கள்ளத்தொடர்பு மேட்டர், அம்மா சந்தேகப்படுவது என்று திரைக்கதை அபத்த உச்சங்கள் ஏராளம்,, ஏராளம். அதிலும் கதாநாயகனின் அப்பா கேரக்டருக்கும், மேஸ்திரிக்கு ஏதோ பல வருட பகை ஓடுகிறது என்று பில்டப் செய்துவிட்டு என்னவென்று பார்த்தால் சீட்டாடும் போது தோற்கிறவர்கள் பணமில்லை என்றால் எல்லா உடைகளையும், அவிழ்த்துவைத்து விட்டு போக வேண்டும் என்று சொன்னதை அவர் செயல் படுத்தியதால் தானாமாம் கிரகக் கொடுமைடா சாமி.. இருக்குற கொடுமையிலேயே பெரிய கொடுமை, பெற்ற தாயின் கண்களூக்கு மகன் காமுகனாய் தெரியவதற்காக, முழு மாராப்பு விளக்கி, தனியாய் ஒரு அம்மாவின் முலைகளூக்கு க்ளோஸ் கட் செய்த கொடுமையை என்னவென்று சொல்வது.
ஒரு தாய் தன் மகனை காமுகனாய் சந்தேகப்பட்டால், அதை ஒரே ஷாட்டில் எழுந்து சாப்பாடு போடும் போதே, இழுத்து போர்த்திக் சொருகிக் கொண்டு வந்து நின்றாளே போதாதா.. ம்ஹும் இப்படி புலம்பிக் கொண்டேயிருக்க, கோபப்பட நிறைய இருக்கிறது.
பாராட்டக்கூடிய விஷயங்கள் என்றால், இயல்பான கிராமத்து பெண்ணை கண் முன்னே வளையவிட்டதும், அவரது வெட்கமும், விரகமும், கூடிய காதல் காட்சிகள். இன்னொருவர் ஒளிப்பதிவாளர் கருப்பையா.. அந்த கிராமத்துக் குளம், பகல், இரவு நேரக் காட்சிகள், சோளக்காட்டுக்குள் வரும் பாடல் காட்சிகள். என்று படத்தை சினிமாவாக பார்க்க வைத்த அவருக்கு பாராட்டுக்கள்.
திட்டக்குடி - எரிச்சல்
கேபிள் சங்கர்
Comments
படம் சூப்பர் போல
காசு(வரதட்சனை ) வாங்கிட்டு அனுபவிப்பது தானே தமிழ் கலாச்சாரம் ....கலாச்சாரத்தை மதிக்கலைனா கோவம் வரும் தானே?
Idhu ennoda native.
Nannaga roomba expect panni irundha padam, ippadi ezudhi irukkenga.
Music patthi onnum sollavea illa.
3 songs were good.
VADA POCHHEAA...
தமிழ் சினிமாவுக்கு விடிவே கிடையாதா??
//
ஏய்யா இப்படி பட்டவர்தனமா எழுதுற??
கொஞ்சம் நாசூக்கா திட்டக்கூடாதா??
நெஞ்ச தொட்டு சொல்லுங்க
எந்த படத்தையாவது இப்படி டீடெய்லா விவரித்திருக்கீங்களா?
உ.த. மாதிரி ரசிச்சி எழுதியிக்கீங்களே????
http://tharaasu.blogspot.com/2009/04/blog-post_16.html
ஆனா நீங்க போட்டிருக்கிற ஸ்டில் குளுமை
:)
படம் சூப்பர் போல
அண்ணே..சென்சார்ல எந்த சீனும் கட் பண்ணலையே...நாளைக்கு போகணும் அண்ணே..
ஆனா நீங்க போட்டிருக்கிற ஸ்டில் குளுமை
------------------------------------
அண்ணா கண்டிப்பா உங்க வமர்ச்னம்
படம் பார்க்க வைக்கும் .ஸ்டில் படம் பற்றிய வெளக்கம் எல்லாம் கலக்கிடிங்க???
என்ன கொடுமை அண்ணா edu ???????????
படம் சூப்பர் போல
அண்ணே..சென்சார்ல எந்த சீனும் கட் பண்ணலையே...நாளைக்கு போகணும் அண்ணே..
ஆனா நீங்க போட்டிருக்கிற ஸ்டில் குளுமை
------------------------------------
அண்ணா கண்டிப்பா உங்க வமர்ச்னம்
படம் பார்க்க வைக்கும் .ஸ்டில் படம் பற்றிய வெளக்கம் எல்லாம் கலக்கிடிங்க???
என்ன கொடுமை அண்ணா edu ???????????
அடிதடி , சாராயம் , விபச்சாரம் இல்லாம கதையே இவங்களுக்கு கிடைக்காதா ...??? கடவுள் தான் காப்பாத்தணும் ...
நானே சைக்கிளில் பலமுறை சென்று உள்ளேன் அங்கு. ஊர் பேர் கேட்டதும் பார்க்க ஒரு ஆசை இருந்தது.
திட்டக்குடி ஊர் பற்றி ஏதும் கட்டி இருக்கிறார்களா.
இவனுங்க இனிமேவாவது ஒரு மாறுதலுக்கு நல்ல படம் கொடுக்கட்டும்.
repeattuuuuu
படத்துல நிறைய '''காடு மேடு'''ன்னு இயற்கை காட்சி ///
ஹி..ஹி... ஆமா ல்ல........
நல்லா "காட்டி" இருப்பார்கள் போல :)
பேசாம மலையாளதில தலைப்பு வச்சிருந்தா இந்த திட்டுதிட்டி இருக்க மாட்டீங்க பாஸ்..
ஆமாம், இது கடுமையான பட விமர்சனமா அல்லது பட விளம்பரமா?
ஒரு வேளை, பிட் படங்கள் இணைக்கும் தியேட்டர்களில் பார்க்க வேண்டிய படமோ?
-ஜகன்னாதன்
-ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com
இந்த திட்டக்குடி விருதாசலம் அருகே
உள்ளது..படம் எடுத்தவர், நடித்தவர் என பலரும் அப்பகுதியை சார்ந்தவர்கள் என ஒரு புத்தகத்தில் படித்தாய் நினைவு
திட்டக்குடி
களவாணி
போன்ற படங்களையும் விடாமல் பார்த்து விமர்சனம் செய்யும் நீர்தான் மெய்யாலுமே
தில்லுதுர
திட்டக்குடி
களவாணி
போன்ற படங்களையும் விடாமல் பார்த்து விமர்சனம் செய்யும் நீர்தான் மெய்யாலுமே
தில்லுதுர