தமிழ் சினிமாவிற்கு ஏற்ற கதை. அதுவும் இன்றைய அரசியல் நிலைகளுக்கு ஏற்ற படம். எப்படி பார்த்தாலும் இப்படத்தை பார்க்கும் தமிழர்களுக்கு கலைஞரின் ஞாபகம் வராமல் இருக்காது.
முதலமைச்சர் ஹார்ட் அட்டாக்கில் விழுந்து, கை கால் இழுத்துக் கொள்ள, அடுத்து தனக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த மகன் விரேந்திரனை நம்பாமல் தன் தம்பியிடமும், அவரின் மகனிடமும் பொறுப்பை கொடுக்க, அதனால் விரேந்திரனின் ஆதரவாளனான தலித் தலைவனை தன் பக்கம் வைத்துக் கொண்டு அவரை கொல்கிறான் விரேந்திரன்.
இதை சிறிதும் எதிர்பார்க்காத அவரின் மூத்த மகனும், அமெரிக்க ரிட்டர்னான சமீரும், காய் நகர்த்த ஆரம்பிக்க, ஆட்டம் சூடு பிடிக்கிறது. இவர்களின் எல்லா ஆட்டத்திற்கும், சகுனியாய் மாமன் நானா படேகர், சமீருக்கும், வெள்ளைகார பெண்ணுக்குமான காதலினால், சிறு வயதிலேயிருந்து தன்னை காதலிக்கும் தொழிலதிபர் பெண் காத்ரீனா கைப்பை அவாய்ட் செய்யும் சமீர், தன் அரசியல் வாழ்க்கைக்காக தன் காதலை கூட இழக்க தயாராகி, அவரையே திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க, அதற்கு தொழிலதிபர் தான் பண்ட் செய்யும் கட்சியின் முதலமைச்சருக்கு வேண்டுமானல் என் பெண்ணை தருவேனே தவிர, அடுத்த கட்டத்தில் இருக்கும் அவரது தம்பிக்கு தர மாட்டேன் என்று சொல்ல, அரசியல் பலத்துக்காகவும், பண பலத்திற்காகவும், தம்பியை காதலித்த பெண் என்று தெரிந்தும், சமீரின் அண்ணனும், காத்ரினாவும் கல்யாணம் செய்து கொள்வது, மிகவும் சாதாரண சாப்ட் ஸ்போக்கன் ஆளாய் இருந்த சமீர் தன் தந்தையை கொன்றவனை பழிவாங்கும் வெறியும், தன் அண்ணனை முதலமைச்சர் ஆக்கி காட்டுவது என்று வெறியும் சேர்ந்து அவனுள் இருக்கும் மிருகத்தை வெளிக் கொணர்வது என்று பரபரப்பாக போகிறது.
திறமையான நடிகர்கள், சிறந்த டெக்னீஷியன்கள், மிகச் சிறந்த தயாரிப்பு என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூட்டம். அஜய் தேவ்கன், மனோஜ் பாஜ்பாய், நானா படேகர், நஸ்ரூதீன் ஷா, கத்ரீனா கைப்,அர்ஜுன் ராம்பால், ரன்பீர்கபூர் மற்றும் சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்டுகள் என்று நிறைந்திருக்கும் நடிகர் கூட்டம். தங்களுடய பங்கை மிக ஆருமையாய் செய்திருக்கிறார்கள்.
முக்கியமாய் அர்ஜுன் ராம்பாலுக்கு இப்படம் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். ரன்பீரின் சப்மிஸிவான நடிப்பு எடுபடுகிறது. தலித் தலைவன் அஜய் தேவ்கன் வழக்கம் போல நச்.. அவருக்கான கர்ண கதை ப்ளாஷ் பேக் எல்லாம் பெரிசாய் எடுப்டவில்லை.

இந்தியில் மிகக் குறைவாய் மதிப்படப்பட்டிருக்கும் நடிகருள் மனோஜ் பாஜ்பாயும் ஒருவர். என்ன அருமையான நடிப்பு.. அவரின் கோபமும், கண் பார்வையும், பாடி லேங்குவேஜிலேயே வெற்றியையும், தோல்வியைவும் வெளிப்படுத்தும் விதம் அட்டகாசம் மனோஜ்.
காத்ரீனாவின் கேரக்டரும் கொஞசம் வீக்தான் என்றாலும், பணம், பவர் என்று வரும் போது அவர்களின் முடிவெடுக்கும் திறன், கணவனை பறி கொடுத்த வேகத்தில் அரசியல் கட்டாயத்துக்காக அரசியலில் குதித்து போராடும் பெண் என்று இவரின் பாத்திரம் அழுத்தம் தான். ஆங்காங்கே சில ப்ரோபைல்களில் பழைய இந்திரா காந்தியை நினைவு படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்ன தான் அரசியல் சூதாட்டங்களை சொல்ல நினைத்தாலும், இவர்களின் குடும்ப உறவு லிங்குகளை புரிந்து கொள்வதற்குள் தாவூ தீர்ந்துவிடுகிறது. யார் யார் சித்தப்பன், மாமன் என்று புரிவதற்குள் இடைவேளை வருகிறது. திடீரென தனி கட்சி என்கிறார்கள், பின்பு மாமனுடனேயேகூட்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். இம்மாதிரியான இடங்களில் எலலாம் அவ்வப்போது ஜெர்க் அடிக்கத்தான் செய்கிறது. அதிலும் ரெண்டாம் பாதி செம லெந்த் எடிட் செய்யப்படவேண்டிய காட்சிகள் நிறைய.. அதே போல் தெலுங்கு படமான லீடர் படத்தில் வரும் காட்சிகள் இதில் நிறைய.. அமெரிக்க பையன், சகுனி மாமன்கள், விதவை தாய், வலுக்கட்டாயமாக வ்ரும் காதல், அரசியல் எல்லாம்..
அரசியல் தர்மத்திற்காக நடக்கும் கொலைகளும், உறவுக் கொலைகளும், துரோகங்களூம், குயுக்திகளூம், வாரிசு அரசியலும், வாரிசுகளின் ஆளூமையும், அதற்கான குழு துரோகங்களும் என்று படம் முழுக்க என்னால் தலைவரின் குடும்பத்தை வைத்துதான் புரிந்து கொள்ள முடிந்தது. இண்ட்ரஸ்டிங்..:)
Raajneeti –Powerful.. But Lack of Punch
கேபிள் சங்கர்
Post a Comment
23 comments:
பார்க்கணும் ...
தல...வரவர ரொம்ப தலைவர வம்புக்கு இழுக்குறீங்க...விடுங்க பாஸ்.. ரொம்ப நாளா இந்த பக்கம் வர முடில...கொஞ்சம் வேலை.. போன வாரம் உங்கள சுயேட்சை M.L.A படத்துல போலீஸ் கெட்டப்ல பாத்தேனே?
ரொம்பவே குழப்பமான விமர்சனம். நீங்களே ஒரு முறை படிச்சு பாருங்க...
nice comments...
endrum anbudan,
N.Parthiban
http://parthichezhian.blogspot.com/
ஏற்கனவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கு இந்த படத்தில்... உங்க பதிவு இன்னும் ஜாஸ்தியாக்கிடுச்சு. ரைட்டு பாத்திட வேண்டியதுதான்.
ஏற்கனவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கு இந்த படத்தில்... உங்க பதிவு இன்னும் ஜாஸ்தியாக்கிடுச்சு. ரைட்டு பாத்திட வேண்டியதுதான்.
படம் செம போர்.. மகாபாரதத்தின் அப்பட்டமான காப்பி.. so அடுத்து என்ன வரும்ன்னு ஈசியா ஊகிக்கமுடியுது.
BTW நானா படேக்கர் சகுனியில்ல.. பீஷ்மர் + கிருஷ்ணர் Combo.
Kathrina Sonia mathrinaanga ... ?
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/
இந்த வாரம் தான் போகணும். இங்கே செம ஹிட்.
பார்த்துட்டா போகுது
////இதை சிறிதும் எதிர்பார்க்காத அவரின் மூத்த மகனும், அமெரிக்க ரிட்டர்னான சமீரும், காய் நகர்த்த ஆரம்பிக்க, ஆட்டம் சூடு பிடிக்கிறது. இவர்களின் எல்லா ஆட்டத்திற்கும், சகுனியாய் மாமன் நானா படேகர், சமீருக்கும், வெள்ளைகார பெண்ணுக்குமான காதலினால், சிறு வயதிலேயிருந்து தன்னை காதலிக்கும் தொழிலதிபர் பெண் காத்ரீனா கைப்பை அவாய்ட் செய்யும் சமீர், தன் அரசியல் வாழ்க்கைக்காக தன் காதலை கூட இழக்க தயாராகி, அவரையே திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க, அதற்கு தொழிலதிபர் தான் பண்ட் செய்யும் கட்சியின் முதலமைச்சருக்கு வேண்டுமானல் என் பெண்ணை தருவேனே தவிர, அடுத்த கட்டத்தில் இருக்கும் அவரது தம்பிக்கு தர மாட்டேன் என்று சொல்ல, அரசியல் பலத்துக்காகவும், பண பலத்திற்காகவும், தம்பியை காதலித்த பெண் என்று தெரிந்தும், சமீரின் அண்ணனும், காத்ரினாவும் கல்யாணம் செய்து கொள்வது, மிகவும் சாதாரண சாப்ட் ஸ்போக்கன் ஆளாய் இருந்த சமீர் தன் தந்தையை கொன்றவனை பழிவாங்கும் வெறியும், தன் அண்ணனை முதலமைச்சர் ஆக்கி காட்டுவது என்று வெறியும் சேர்ந்து அவனுள் இருக்கும் மிருகத்தை வெளிக் கொணர்வது என்று பரபரப்பாக போகிறது.
//////////////////////
ஒரு ஃப்ளோவா எழுதறதுன்னு சொல்லுவாங்களே.? அது இதுதானா?
ஒரு ஃபுல்ஸ்டாப் இல்லை. ‘அவர்’.. ‘அவர்’-ங்கறீங்க. எவர்ன்னு ஒன்னுமே புரியலையே குரு????
//ஒரு ஃபுல்ஸ்டாப் இல்லை. ‘அவர்’.. ‘அவர்’-ங்கறீங்க. எவர்ன்னு ஒன்னுமே புரியலையே குரு????//
அதான் அதேதான்!! படமும் அப்படித்தான்!! :)
படத்த பார்த்து நல்லா குழம்பி இருக்கீங்கன்னு தெரியுது :))
முடிஞ்சால் EYE FOR AN EYE என்ற ஹாலிவூட் படத்திலிருந்து காபி அடிக்கப் பட்ட துஷ்மன் (1998) என்ற ஹிந்தி படம் பார்த்து விமர்சனம் எழுதுங்க. ஆஷுதோஷ் ராணா (தூர்தர்ஷன் புகழ் "சுரபி" ரேணுகா-வின் கணவர்) என்ற இன்னொரு மனோஜ் பாஜ்பாயை காண்பீர்கள்.
பார்த்துரலாம்.
nice review.
http://www.ciniposters.com
Try to see this movie after dubbed into Tamil.
Thanks ANNA.
//
படம் முழுக்க என்னால் தலைவரின் குடும்பத்தை வைத்துதான் புரிந்து கொள்ள முடிந்தது. இண்ட்ரஸ்டிங்..:)//
No chance...Sariyana Punch Dialogue sir...
Hi,
This is a blatant copy of Mahabharatha, as one of the bloggers has pointed out...Nana is more like Krishna..even the last scene where he prods Ranbir, to kill Ajay and Manoj proves it. However, Mahabharatha was far more complex and infinitely more interesting than this movie...quite a boring and predictable fare...
@krp senthil
நிச்சயம்
@ஆண்மைகுறையேல்
அட நம்ம ஆளு.. ஆமா.. அதுல நான் நடிச்சிருக்கேன்
@பிரசன்ன ராஜன்
வேண்டுமென்றே தான் எழுதியிருக்கிறேன். நான் படம் பார்த்த மன நிலையை விளக்க..:)
@என்.பார்திபன்
நன்றி
@முரளீகுமார் பத்மநாபன்
நிச்சயம்பாருங்க.
@பாரத்
எனக்கு போரடிக்கவில்லை.. மகாபாரதத்தை காப்பியடித்தால் என்ன.. ? உங்களுக்கு மகாபாரதம் தெரிந்த அளவுக்கு எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தலைவரே.. அதனால்.. சல்தா ஹே..:)
@கார்திக் சிதம்பரம்
படம் பாருங்க தலைவரே..
@விக்னேஷ்வரி
ஆமாம் கேள்வி பட்டேன்
@நேசமித்ரன்
ம்..
@ஹாலிவுட் பாலா..
நானும் கொஞ்சம் குறைக்க பார்க்கிறேன்..
@பாரத்
ஆமாம் கிட்டத்தட்ட..ஒரு ப்ளோவா போவுது..
@விதூஷ்
குழம்ப வில்லை விதூஷ்.. அவர்கள் சொல்லியிருக்கும் முறையை சிலேடைகக முயற்சி செய்தேன்..
@இராமசாமி கண்ணன்
நன்றி
@சினி போஸ்டர்
நன்றி
@கோழிபையன்
நடக்கிற காரியத்தை பாருங்க..
@குரு
ஹி..ஹி
@எம்பிஏ
ஆமாம் நான் தான் தப்பு செய்துவிட்டேன் ச்குனியென எழுதி.. அது கிருஷ்னர் கேரக்டர் தான்..
Post a Comment