Thottal Thodarum

Jul 30, 2010

எண்டர் கவிதைகள்


Dave_loves_Sonia_Love
கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.

பழகினால் புரியும் என்றாள்

பழகினேன் அவள் பேச்சே

கவிதையாய் இருந்தது

ஓ.. இது தான் கவிதையா என்றேன்

இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு

இது வெண்பா என்றாள்

அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்

சீர், தளை, விருத்தம் என்றாள்

கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.    



கேபிள் சங்கர்

டிஸ்கி: ரிப்பீட்டு..

Jul 28, 2010

சாப்பாட்டுக்கடை

Photo0146
ஒரு மழை நாளில் ஒரு நண்பருடனான மீட்டிங்கை முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டது. அவருடய அலுவலகத்திலிருந்து கிளம்பி வெளியே வந்தால் பெரும் மழை. இரவு மணி சுமார் 12.30 இருக்கும். கோடம்பாக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி வரை திறந்திருக்கும் ஒரு உணவகம் அன்று மூடிவிட்டிருந்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் பசி தெரியவில்லை. ஆனால் இப்போது பசி பின்னி எடுத்தது.

அப்போதுதான் எனக்கு சட்டென ஞாபகம் வந்தது. TWILIGHT TAKEOUT. மாலை 7 மணி முதல் அடுத்த நாள்காலை 7 மணி வரை சுடச்சுட உணவு கிடைக்குமிடம். ஆனால் ஒன்லி பார்சல். நுங்கம்பாக்கத்தில் லேக் ஏரியாவில், பார்க் தெருவில் இருக்கிறது. அந்த மழை இரவிலும் படு சுறுசுறுப்பாக வியாபாரம் நட்ந்து கொண்டிருந்தது.

நட்ட நடு இரவில் நல்ல சுடச்சுட வெஜ், நான் வெஜ் பிரியாணிகள், நான், பட்டர் நான், ப்ரைட் ரைஸ், மற்றும் சைட் டிஷ்ஷுகள் கிடைக்கும். இதை தவிர இன்னும் நிறைய உணவு வகைகள் கிடைக்கிறது விடிய..விடிய..  போன் செய்து ஆர்டர் செய்துவிட்டு கூட போய் வாங்கிக் கொள்ளலாம். டெலிவரியும் செய்கிறார்கள்.

நாங்கள் அன்று ஆளுக்கு ஒரு பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு காரிலேயே உட்கார்ந்து சாப்பிட்டோம். மிக அருமையான பாக்கிங். கொஞ்சம் கூட சூடு குறையாமல் நடு ராத்திரி 1.30 மணீக்கு சாப்பிட்டது திருப்தியாக இருந்தது. நல்ல சுவையும் கூட.. நீங்க்ளூம் ஒரு முறை ட்ரை செய்து பாருங்களேன்.

பி.கு : மழையில் காரில் உட்கார்ந்து கொண்டே படமெடுத்ததால் கொஞ்சம் தண்ணியாக இருக்கும் துடைத்துவிட்டு பார்க்கவும்.:)
கேபிள் சங்கர்

Jul 27, 2010

Maryada Ramanna

maryadramannareview தெலுங்கு திரையுலகின் கமர்ஷியல் ஹிட் மேக்கர் எஸ்.எஸ்.ராஜ்மெளலியின் படம் என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு ரசிகர்கள் தயாராகிவிடுவார்கள். அதுவும் தெலுங்கு மெஹா ஹிட்டான மகதீராவுக்கு பின் வரும் படம் எனும் போது எதிர்பார்ப்புக்கு குறைவேயிருக்காது. இப்போது முதல் முறையாக காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக்கி ஒரு முழு நீள காமெடி கலந்த செண்டிமெண்ட் படத்தை கொடுத்திருக்கிறார்.

ராமனின் அப்பா ராயலசீமாவில் நடக்கும் ஊர் பிரச்சனையில் கொல்லப்பட, ராமனை காப்பாற்ற ஹைதராபாத்துக்கு வந்து செட்டிலாகிறாள் அவனுடய அம்மா. அம்மாவின் மறைவிக்கு பிறகு மிகவும் கஷ்டப்படும் ராமனுக்கு அவனது கிராமத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வருகிறது. 5 ஏக்கர் நிலத்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி வர, சந்தோஷமாய் ரயிலில் ஊருக்கு கிளம்புகிறான். ரயிலில் அபர்னாவை  சந்திக்கிறான், அவளின் அப்பா ராமநீடு ரொம்ப வருஷமாக ராமனை கொல்ல காத்திருக்கிறான். ஏனென்றால் ராமனின் அப்பாதான் ராமநீடுவின் தம்பியை ஊரில் நடக்கும் பிரச்சனையின் போது கொன்றுவிடுகிறார். அதற்கு பழி வாங்க காத்திருக்கிறார் அபர்ணாவின் தந்தையான ராமநீடு. ஊருக்குள் வந்து அபர்ணா விட்டுப் போன புத்தகத்தை கொடுப்பதற்காக அவளின் வீட்டிற்கு வரும் ராமனுக்கு தெரிய வருகிறது தன்னை அவளுடய அப்பா கொல்ல காத்திருக்கிறார் என்று. அவருக்கு ஒரு பழக்கம் தன் வீட்டிற்கு விருந்தாளியாய் வந்தவர்களை எக்காரணம் கொண்டு வீட்டில மனவருத்தம் ஏற்படக்கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததும், அவனை வெட்ட ஏற்பாடு செய்திருக்க.. இது தெரிந்த ராமன் வீட்டை விட்டு வெளியேறாமல் பிரச்சனைகளை பெரிதாக்குகிறான். அவன் தப்பித்தானா? அவனுக்கும், அபர்ணாவுக்குமான காதல் என்னாயிற்று என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
maryadramannareview2 முழுக்க முழுக்க இது ஒரு இயக்குனரின் படம். பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஒரு சூப்பர்ஹிட் இயக்குனர். ஒரு காமெடியனை ஹீரோவாக்கி ஒரு முழுப் படத்தை இயக்கியிருப்பது அவரது திறமையையே காட்டுகிறது. படத்தில் கிட்டத்தட்ட, ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஒரு வீட்டை சுற்றியே கதை ஓடினாலும் கொஞ்சம் கூட அலுக்க வைக்காமல், சும்மா விறுவிறுவென நகைச்சுவையுடன் திரைக்கதையமைத்து தூள் பரத்தியிருக்கிறார்.

ss-rajamouli-maryada-ramanna-287x300
ரயில் காட்சியில் ராமனுக்கும், அபர்ணாவுக்கும் இடையே மலரும் நட்பும், லேசாய் துளீர்க்கும் காதலும் க்யூட்.. ஓடும் ரயிலில் ஏற அபர்ணா ஓடிவர, அவரை கைபிடித்து தூக்குகிறேன் என்று கைநீட்டி ராமன் பிளாட்பாரத்தில் கீழே விழுவதில் ஆரம்பித்து, எதையும் கிண்டல் செய்யும் எதிர் சீட்டுக்காரன், இளநீர் வாங்குகிறேன் என்று ரயில் கிளம்பும் சமயம் வரையில் பேரம் பேசிவிட்டு இளநீரை வாங்க, ஜன்னலுக்கு வெளீயே இளநீர் மாட்டிக் கொள்ள உள்ளே இழுக்க அவர் ப்ரயத்தன படும் இடம், என்று  மிக இயல்பான  நகைச்சுவையை தூவிக் கொண்டே சென்றிக்கிறார் இயக்குனர்.

கீரவாணியின் இசையில் தெலுகு அம்மாயி, உட்பட இரண்டு மூன்று பாடல்கள் சுவையான மெலடி. பின்னணியிசையிலும் மனிதர்  ஒரு இம்பாக்டை கொடுத்திருக்கிறார்.

ஒரு படத்தை முழுக்க, முழுக்க தன்னுடய நடிப்பால் ஈடு கொடுத்து நிற்க வைத்திருக்கிறார் சுனில். உடல் இளைத்து, சேசிங் காட்சிகளில் ஓடியும், மிக இயல்பான பயம், கல்வரம், காமெடி என்று பல விஷயஙக்ளை கொடுத்து இயக்குனரின் நம்பிக்கைக்கு ஈடு கொடுத்திருக்கிறார் என்றே சொலல் வேண்டும்.
m1

அபர்ணாவாக சலோனி மிக
அழகான எக்ஸ்பிரஸிவான பெரிய கண்கள், சட் ச்ட்டென முகபாவங்கள் கொடுக்கிறார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அபர்ணாவின் வீட்டில் தங்க போராடும் ராமனை பார்த்து, அவளுடய மாமா அவன் உன்னை காதலிக்கிறான் அதை சொல்லத்தான் என்று அபர்ணாவிடம் சொல்ல, ஒரு கட்டத்தில் அவளின் காதல் அப்பாவுக்கு  என்ற அர்த்தத்தில் அபர்ணா “அப்பாவுக்கு தெரிஞ்சிருச்சு” என்று சொல்ல, ராமன் தான் தான் அவர்களுடய எதிரியின் பையன் என்பது அவளது அப்பாவுக்கு  என்று  புரிந்து கொண்டு “ஆமாம் தெரிஞ்சிருச்சு” என்று சொல்வது, க்ளைமாக்ஸில் காதலை சொல்லி புரிந்து கொண்டு ராமன் பேசும் வசனங்கள் நச்.

வழக்கமான ஊர் பெரியவர், அவரது, ராயலசீமா, கிராம தகராறு, பழிக்கு பழி, லாஜிக் மீறிய காட்சிகள்  என்று ஒரு வித மான டெம்ப்ளேடுக்குள் இருந்தாலும், நகைச்சுவையுடன் கூடிய ஒரு எண்டெர்டெயினரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ மெளலி.

தமிழ் சினிமாவின் காமெடியன்களுக்கு ஒரு சரியான படம்..  விவேக்கோ, கருணாஸோ, நிச்சயம் முயற்சிக்கலாம்.
Maryada Ramanna- A Feel good Entertainer.
கேபிள் சங்கர்

Jul 26, 2010

கொத்து பரோட்டா-26/07/10

சமீப காலமாய் சென்னையின் முக்கிய ரோடுகளில் பாதாள சாக்கடைக்காகவோ, அல்லது வேறு ஏதாவது பிரச்சனைக்காகவோ.. பள்ளம் நோண்டினால், அதை மூடிவிட்டு புதிய ரோடு போடுவதில்லை. நிறைய இடங்களில் ஒரு பாதி ரோடு பள்ளமாகவே இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அமைச்சர்கள், துணை முதலைமைச்சர் வருகிறார்ரென்றால் உடனடியாக தார் சாலை போடப்பட்டு பளபள ரோடாகிறது. ஒரு காலத்தில் ரோடு போடுவததென்றால் போட்ட ரோடின் மீதே மீண்டும் தார் போட்டு புதுசாக்கிவிடுவார்கள். அது அடுத்த மழை வரைக்கும் தான். ஆனால் இப்போது ஒரு நல்ல விஷயம் செய்கிறார்கள். ஏற்கனவே போட்ட ரோட்டை சுரண்டி எடுத்து, பின்பு பழைய உயரத்துக்கே ரோடு போடுகிறார்கள். மிக நல்ல ஆரோக்கியமான விஷ்யம். ஆனால் என்ன எழவு.. சுரண்டினதை திரும்ப எப்ப போடுவாங்கன்னு தெரியத்தான் மாட்டேங்குது.  பாதி ரோடு சுரண்டியும், பாதி ரோடு மேடு பள்ளமாவும் சென்னையில பல ரோடுகள் இருக்கு.. ஒரு மாதிரி ஜிம்னாஸ்டிக் செஞ்சுதான் வண்டி ஓட்ட வேண்டியிருக்கு. கடவுள் தான் ரோட்டுல போறவுங்களை காப்பாத்தணும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Photo0168 Photo0163 Photo0169
சென்னையில் புதியதாய் மக்களின் புழக்கத்திற்காக திறக்கப்பட்டிருக்கும் புதிய மால் எக்ஸ்ப்ரஸ் அவின்யூ. பிரம்மாண்டமான இந்த மாலில் நான்கு ப்ளோர்களில் சத்யமின் எட்டு தியேட்டர்கள்(அடுத்த மாதம் திறக்கிறார்கள்), குழந்தைகளுக்கான பெரிய Fun City, புட்கோர்டுகள், கடைகள், என்று  ஏற்கனவே திறந்திருக்கிறார்கள்.  இன்னும் பல ஸ்டோர்களும், இந்தியா மற்றும் உலகில் உள்ள சிறந்த ப்ராண்ட்கள் அனைவரும் இந்த மாலில் ஒரு கடையை எடுத்திருப்பதாய் சொன்னார்கள். மால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் முழுவதுமாய் முடியவில்லை. வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட மால்களில் சற்றே பெரிய விஸ்தீரணத்தை கொண்டதாக எனக்கு படுகிறது. பிக்பஸார் பெரிய ப்ளோரை எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பார்க்கிங்கில் கொள்ளையடிக்கும் தலைநகரான நம் ஊரில் மீண்டும் பார்கிங் கொள்ளையை ஆரம்பித்திருகிறார்கள். பைக்குக்கு ஒரு மணி நேரத்திற்கு 15 ரூபாயாம். இவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் எல்லா மால்களிலும் இதையே பாலோ செய்வதை எதிர்பார்க்கலாம்.  
Photo0171  Photo0174
Photo0175 Photo0178
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
போன வாரம் ட்விட்டரிலும், பஸஸிலும் “எழுத ஏதும் தோன்றவில்லை. பணம் நிர்ணையிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றோ” என்று எழுதினேன். நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள், மெயில்கள், சாட்டுகள் என்று நண்பர்கள், வாசகர்களின் அன்பு எனனை திக்கு முக்காட வைத்துவிட்டது. இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?. அல்லது என்ன செய்துவிட்டேன்?. அத்துனை பேரும் “ஏன்? என்னாச்சு.? என்ன பிரச்சனை?” என்று  கேட்டு ஆறுதல் சொன்னார்கள். என்ன உதவி வேண்டுமானாலும் கேளூங்கள் என்று சொல்லி , என்னை உற்சாகப்படுத்திய அவர்களின் அன்பு என்னை நெகிழச் செய்துவிட்டது. மிக நெருங்கிய நண்பர்களை தவிர மற்றவர்களிடம் என் சந்தோஷத்தை தவிர பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டது இல்லை.. ஆனால் இவ்வளவு பேரின் அன்பினால் என்  மனம் லேசாகிவிட்டது.. நடப்பது நடக்கட்டும். நீங்களெல்லாம் இருக்கையில் எனக்கு என்ன கவலை. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
ரெண்டு மாதத்திற்கு மேலிருக்கும் என்று நினைக்கிறேன். விஜய் டிவி நீயா நானாவில் கலந்து கொண்டு. அப்துல்லா, நர்சிம், மணிஜி, பட்டர்ப்ளை சூர்யா ஆகியோருடன், நானும் கலந்து கொண்டேன். அவர்களின் வழக்கம் போல ஏழு மணிக்கு வரச் சொல்லி, சுமார் பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பித்து அடுத்த நாள் விடியற்காலை முடித்த கதை தான் உங்களுக்கு தெரியுமே. நிகழ்ச்சிக்கு பங்கு பெறுவதற்காக ஒரு முறைக்கு பத்து முறை கூப்பிட்டு  காக்க வைத்து, பங்கு பெற பேசிய நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.  இரண்டு மாதம் ஆகிவிட்டது. எங்களுக்கு அப்புறம் எடுத்த நிகழ்ச்சியையெல்லாம் போட்டுவிட்டார்கள். ஆனால் அன்று ஷூட் செய்த நிகழ்ச்சியை இதுவரை போடவில்லை. ஏன் போடவில்லை என்பதுக்கான காரணம் எங்களுக்கு புரிந்தாலும், அட்லீஸ்ட் ஒரு கர்டஸிக்காகவாவது, நிகழ்ச்சிக்கு வரச் சொல்ல, பத்து முறை போன் செய்தவர்கள். வெளியாகாது என்று தெரிவிக்க ஒரு போனாவாது செய்திருக்கலாம் அல்லாவா..?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
கடல் எல்லாருக்கும் பொதுவானது. சில பேர் முத்துக்களூம், சில பேர் மீன்களையும், சிலபேர்கள் கால்களைமட்டும் நினைத்து கொண்டும் வருவார்கள். அது போலத்தான் வாழ்க்கையும், எல்லாமே இருக்கிறது நீ தான் முடிவெடுக்க வேண்டும் எதை எடுப்பது  என்று.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்யாசம்?
வீட்டிலேர்ந்து டாஸ்மாக்குக்கு கூட்டிட்டு போறது காதல். டாஸ்மாக்கிலேர்ந்து பத்திரமா வீட்டிற்கு கூட்டிட்டு போறது நட்பு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஜோக்
பிச்சைகாரன்1 : நான் நேத்து ராத்திரி தாஜ் ஹோட்டல்ல அருமையான டின்னர் சாப்பிட்டேன்
பிச்சைக்காரன்2: எப்பூடி?
பிச்சைக்காரன்1 : ஒரு ஆளு எனக்கு 100 ரூபாய் பிச்சைப் போட்டான். நான் அதை எடுத்துட்டு போயி 5000 ரூபாய்க்கு சமமான சாப்பாட்டை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு பில் வந்தவுடனே காசில்லைன்னு சொன்னேன். அவங்க போலீஸுக்கு போன பண்ணி வரச்சொல்ல, அவன் வெளியே கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு போற வழியில கையில இருந்த 100 ரூபாவ கொடுத்தேன் அவன் விட்டுட்டான். வாழ்க போலீஸ்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தமிழ் மூலம் ஹிந்தி கற்பது எப்படி?
Duniya me koyi nahi
உலகத்தில கோழி இல்லை.
Koyi baath nahi
கோழி குளிக்கிறது இல்லை.
Tumbi mere saath aao
தும்பி செத்துருச்சு.
uthar pakdo
பக்கோடா அங்க இருக்கு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
ஒரு பியருக்கான விளம்பரம். நிச்சயம் கடைசியில் சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார குறும்படம்
உருகுவே நாட்டிலிருந்து கேன்ஸில் பங்கு கொண்ட படம். மனித உறவுகள் எவ்வளவு நுட்பமானது அதை கம்ப்யூட்டர் எப்படி ஆக்கிரமிக்கிறது என்பதை பற்றிய படம்.. வசனமேயில்லாமல் வெறும் காட்சிகளாலேயே ஒரு வெறுமையை உணர வைத்திருப்பது டச்சிங்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஏ ஜோக்
சொர்க்கத்தின் வாசலில் மூன்று இளைஞர்கள் நின்றிருக்க, வாசலில் நின்றிருந்தவர், “உங்களில் யார் மிகவும் நல்லவராக உங்கள் மனைவியிடம் நடந்து கொண்டிருக்கிறீர்களோ அவர்களுக்கு ஒரு சிறந்த வாகனம் தரப்படும் என்றார்.
நம்பர்1 : நான் இதுவரை என் மனைவிக்கு துரோகம் செய்ததே இல்லை என்றான். அவனுக்கு ஒரு ரோல்ஸ்ராயஸ் காரை கொடுத்து போகச் சொன்னார்.
நம்பர்2 : நான் மிகவும் குறைந்த முறையே என் மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறேன் என்றான். அவனுக்கு ஒரு ஹோண்டா சிட்டி காரை கொடுத்து போகச் சொன்னார்.
நம்பர்3 : நான் என் மனைவிக்கு நிறைய முறை துரோகம் செய்திருக்கிறேன் என்றவுடன் அவனுக்கு ஒரு ஸ்கூட்டரை கொடுத்து போக சொன்னார்.
அடுத்த நாள் ஸ்கூட்டரில்  ரோல்ஸ் ராயஸ் வைத்திருப்பவன் அழுது கொண்டே வந்து கொண்டிருக்க, அவனை பார்த்த தேவன் “ஏன் அழுகிறாய்? உனககுதான் நல்ல அருமையான கார் கொடுத்தேனே? என்று கேட்க, “என் மனைவியை இங்கு ரோலர் ஸ்கேட்டரில் பார்த்தேன்.” என்றான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Jul 24, 2010

தில்லாலங்கடி

thillalangadi-wallpaper-tamanna-03 தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் தில்லாலங்கடிதான் ஜெயம் ரவி.
thillalangadi-wallpaper-tamanna-24 தன் தங்கை  ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை  பற்றி  தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள்  காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால்  ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா.. கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.
thillalangadi-wallpaper-tamanna-21 காதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு  மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைகிறான்.. திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் ஜெயம் ரவி திருடனானார்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா? என்பது தான் கதை.

ஜெயம் ரவி  வழக்கம் போல தெலுங்கில் ரவிதேஜா என்ன செய்தாரோ அதை அப்படியே  அலட்டி கொள்ளாமல் செய்திருகிறார். படம் முழுக்க தெலுங்கு ரவிதேஜா ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள்.  நன்றாக ஆடுகிறார், ஓடுகிறார், கடகடவென டயலாக் பேசுகிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் ரவிதேஜாவை போல வே ஜெயம் ரவியும் நடிக்க முயற்சி செய்து ம்ஹும்.

தம்ன்னா... அழகாய் இருக்கிறார். ரவிக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் ஓப்பனிங் காட்சிகயில் தெலுங்கில் இலியானா யோகா செய்யும் காட்சி.. அந்த வைடில் அவரின் உடுக்கை போன்ற இடுப்புக்காகவே.. பார்க்கலாம். இங்கே நாலடியில் குட்டியூண்டு தமன்னாவின் இடுப்பை  பார்க்கையில் கம்பேர் செய்யத்தான் தோன்றுகிறது. வெற்றி இலியானாவுக்கே..
thillalangadi-wallpaper-tamanna-08 ரவியை  துரத்தும் போலீஸ் ஆபீஸராய்  ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். ஆனால் பெரிதாய் வேலையில்லை.. படம் முழுக்க பில்டப் நன்றாக இருக்கிறது. அவரது கேரக்டருக்கான பேஸ்மெண்ட் வீக் என்றுதான் சொல்ல வேண்டும் நிச்சயம் ஷாம் தமிழில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.

வழக்கம் போல் தெலுங்கில் ப்ரம்மானந்தம் செய்த காமெடியை, வடிவேலு செய்திருக்கிறார். நிறைய இடங்களில் காமெடி எடுபடுகிறது.. அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல,  ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று காமெடி களைகட்டத்தான் செய்கிறது என்றாலும், தெலுங்கில் ப்ரம்மானந்தம் கொடுத்த எஃபெக்டில் ஒரு  சில மாற்று குறைவுதான் என்பதை தெலுங்கு படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.சந்தானமும் தன் பங்குக்கு ஆங்காங்கே வந்து கலகலப்பூட்டுகிறார்.
thillalangadi-wallpaper-tamanna-19 பாடல்கள் ஒன்றும் அவ்வளவாய் மனதில் நிற்கவில்லை. ஒரு பாட்டை தவிர. ஞாபகங்கள் குறித்த பாடல். மற்றும் சொல் பேச்சு கேட்காத சுந்தரி பாடலும் ஓகே. என்ன ஆச்சு யுவன்?. ஒளிப்பதிவு நச். எஸ்.தமனின் பின்னணி இசையும் ஆஃப்ட். தெலுங்கில் தமனின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் என்றே சொல்ல வேண்டும்.

வழக்கமாய்  பேமிலி செண்டிமெண்ட், லவ், கலந்த படங்களையே ரீமேக்கும் ராஜா இம்முறை கொஞ்சம் ஆக்‌ஷன் கலந்த கதையை எடுத்திருக்கிறார்.  ஒரே ஷாட்டில் பாடல் எடுத்திருப்பதாய் சொன்னாலும், ஷாட் என்னவோ ஒன்றானாலும், முழுக்க, முழுக்க சிஜியில் பல ஷாட்களை ஒருங்கிணைத்து, ஒரு ஷாட்டாய் காட்டப்பட்ட பாடல் தான். இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது.

ஒட்ட ஒட்ட தெலுங்கிலிருந்து, டயலாக் முதற் கொண்டு அப்படியே டிப்பி அடிப்பதை தவித்திருக்கலாம்.  படம் ஓடும் நேரம் உட்பட.. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடுகிறது. கொஞ்சமாவது ..ட்ரிம் பண்ணியிருக்கலாம். அதிலும் முதல் காட்சியில் சேசிங்கு, ரன்னிங்கு, ஃபைட்டிங்கு என்று ரைமிங்காக சொல்லும் வசனங்கள். தெலுங்கில் இருந்த டபுள் மீனிங் டயலாக்குகளை தவிர்த்தமைக்கு நன்றி. முதல் பாதி முழுவதும் ரவி, தமன்னா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைக்கதை இண்ட்ரஸ்டிங்.  இரண்டாவது பாதியில் நடு,  நடுவே கொஞ்சம்  அலைபாய்கிறது.  போலீஸ் ஆபீஸர் ஷாமுக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் உன்னைப்பிடி, என்னைபிடி ஆட்டத்தில்,  லாஜிக் என்ற வஸ்துவே  இல்லாவிட்டாலும்  இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் எல்லாம் ஜெண்டில்மேன் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் ஐம்பது முழப்பூ.. 
தில்லாலங்கடி – ”கிக்”குக்காக பார்க்கலாம்.

கேபிள் சங்கர்

Jul 23, 2010

ஒரு உதவி இயக்குனர், இயக்குனர் முகத்தில் குத்து விட நினைக்கும் தருணங்கள்.

1. காலையில் அடித்து பிடித்து பக்கத்து ரூம் சாப்ட்வேர் பையனின் பைக்கில் லிப்ட் வாங்கி.. காலை டிபன் சாப்பிட வந்தால். இன்னைக்கு ப்ரொடியூசர் வரலை.. அதனால டிபன் கிடையாதுன்னு சொல்லிட்டு, இவரு மட்டும் ஆறு இட்லி வடகறி சாப்பிட்டு ஏப்பம் விடறப்ப....ஒரு குத்து.

2. தனியா டீ சாப்பிடும் போது இந்த சீனில எனக்கு சரியா செட்டே ஆவுலடா.. என்று புலம்புவதை பார்த்து மனமிறங்கி தன் படத்துக்காக வைத்திருக்கும் ஒரு சீனை வேறு வழியில்லாமல் உருவிவிட்டு, மத்யானம் லஞ்ச் முடிஞ்சதும், “ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு, ஒரு ஸ்பார்க் வந்து, ஒரு சீன் சொல்றேன் பாரு” என்று அவன் முன்னால் வைத்தே தன் சீனாய் சொல்லும் போது ஒரு குத்து

3. கம்ப்யூட்டர் என்றால் ஏதோ ஜீபூம்பா பெட்டி என்று ”அப்படியாடா..ன்னு ” கேட்டு வாய் பிளந்து தமிழில் டைப் அடிப்பதை பார்த்துவிட்டு , ப்ரொடியூசர் வரும் போது. “எல்லாம் ரெடியாயிருச்சு சார்.. இப்பத்தான் என்.ஹெச்.எம் டவுன்லோட் பண்ணி.. கம்ப்யூட்டர்லேயே அடிக்க சொல்லி பழக்கப்படுத்தியிருக்கேன். ரெண்டு நாளில ரெடியாயிரும். இப்பத்தான் பழகறான் அதான் கொஞ்சம் ஸ்லோ பையன்.  ஸ்கிரிப்டு.. டி.டி.பி. செலவு மிச்சம் பாருங்க..” என்று எலலாம் தெரிந்தார் போல் பேசும் போது.. ஒரு குத்து.

4. அஸிஸ்டெண்ட் டைரக்டர்னா.. மனுஷனில்லையா.. அவனுக்கு தினப்படிக்கு பேட்டாகூட இல்லாம எப்பூடி சாப்பிடுவான் என்று மேனேஜரிடம் ஆளுக்கு கன்வேயன்ஸ் நூறை வாங்கிவிட்டு, தனியே கூப்பிட்டு.. தபார்ரா.. கஷ்டப்பட்டு போராடி ஆளூக்கு 25ரூபா பீராயரத்துக்குள்ள.. என்னைப்பிடி.. உன்னைப்பிடின்னு ஆயிருச்சு.. வச்சிக்கங்க.. சந்தோஷமா இருங்க் என்று மிச்சம் ஆளுக்கு 75 ஆட்டைய போடும் போது ஒரு குத்து.

5. பட ஷூட்டிங்கின் போது, க்ளோசப் இரண்டு பாக்கி இருக்குன்னு சொன்னா.. எனக்கு தெரியதா..? இங்க் நீ டைரக்டரா..? நான் டைரக்டரா..?ன்னு கேட்டுட்டு.. எடிட்டிங் டேபிளில்ல க்ளோசப் இல்லைன்னு தேடுறப்ப.. அஸிஸ்டென்ட் டைரக்டருங்க வேலை செய்யலைன்னு சொல்லும் போது ஒரு குத்து.

6. ஷூட்டிங்கின் போது, நடிக்கிற நடிகர்கள் ஏதாவது சொதப்புனா.. அவனை திட்ட முடியாம, அஸிஸ்டெண்ட் டைரக்டரை வாயில வந்தபடி திட்டுறது எல்லாம் நம்மளை இல்லைன்னு தெரிஞ்சாலும் தேவையில்லாம படு கேவலமா திட்டுறப்ப…. தோணும் ஒரு குத்து விடலாமான்னு.

7. ஸ்பாட்டுக்கு வர்ற ஜூனியர் ஆர்டிஸ்ட்டை கூட விடாம கடலை போட்டுட்டு, ஆபிஸுக்கு வந்ததும்.. “இதபாருங்கப்பா.. நமக்கு ஒழுக்கம் முக்கியம்.. ஷூட்டிங்கில கண்டவ கிட்ட வழிஞ்சிட்டு நின்னீங்க்ன்னு வச்சிக்க பிச்சிப்பிடுவேன். எனக்கு பிடிக்காத விஷயம்.. இதுன்னு சொல்லுறப்போ.. ஒரு குத்து.

8. டிஸ்கஷன்போதே சொல்லியிருப்போம்.. இந்த இடத்தில கொஞ்சம் சரி செய்யணும் சார்ன்னு.. உனக்கு தெரியாதுடா.. என் மொத்த படத்தோட ஃபீலே அங்க தான் இருக்கப் போவுது.. தமிழ்நாடே அழும்பாரு.. படம் ரிலீஸாகி படம் பார்த்தவங்க நொந்து போய் அழுதுட்டு வரும் போது.. பார்த்தியா.. எல்லாம் முகத்திலேயும் ஈயாடலை.. அப்படியே ஸ்டன் ஆயிட்டாங்கன்னு சொல்லும் போது ஒரு குத்து.

9. சரக்கு அடிக்கும் போது மட்டும் அன்னைக்கு ஒரு சீன் சொன்னியே.. அது சூப்பர்..இது சூப்பர்ன்னு சொல்லி பாராட்டுனாரேன்னு கொஞ்சம் சந்தோஷத்துல டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தா.. ஏற, இறங்க பார்த்துட்டு, இங்க நீ டைரக்டரா? நான் டைரக்டரா..? கேட்கும் போது ஒரு குட்து.

10. ஷூட்டிங்கல எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் டயலாக் சொல்லி கொடுக்க நம்மளை  அனுப்பிட்டு, ஹீரோயினுக்கு மட்டும் தான் பேடை எடுத்துட்டு போவும்போது.. ஒரு குத்து.
கேபிள் சங்கர்

Jul 22, 2010

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

Need_4____Hesitation_by_Losing_My_Marbles என் முழு உடலையும் எதிரில் தெரியும் கண்ணாடியில் உற்று பார்த்தேன். புதிய சிகப்பு புடவையில் உடலின் வளைவுளும், செழுமைகள்  எல்லாம் கச்சிதமாய் தெரிய, “முப்பத்தி அஞ்சிலேயும் நீ அழகுதாண்டி” என்று மனதுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெளிச்சமாய் தெரிய, உடன் இந்த புடவையில சந்தோஷ் பார்த்தான்னா என்ன சொல்வான்? என்று மனதுள் ஓடிய அடுத்த வினாடி, மின்னல் ஆஃப் ஆகி அமைதியானேன்.


”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.”

“எனக்கும் தான்

டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது.  ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது?. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது? காதல் என்றா?. காதலிக்கும் வயசா இது..?

ஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா..? இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான்.  என்ன எதிர்பார்க்கிறேன்? எதை தேடுகிறேன்? இன்று நான் எடுத்த முடிவு சரியா? என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில் வழிய, கண்ணாடியில் பார்த்த போது சந்தோஷ் நினப்புத்தான் ஓடியது.  சந்தோஷுக்கு சிகப்பு தான் கலர். சிகப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சந்துருவுக்கு சிகப்பு கலர் பிடிக்காது.  கல்யாணம் செய்த நாளிலிருந்து இது வரை சிகப்பை என் கண்ணில் காட்டியதேயில்லை. நானாக வாங்கினாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான். குழந்தை அவன். என் புருஷன். என் விஷயத்தில் எதிலும் தலையிடமாட்டான் இந்த சிகப்பு கலர் விஷயத்தை தவிர, இது வரை அதிர ஒரு வார்த்தை பேசியதில்லை. என் முகச்சுழிப்புக்கு பதில் தெரிந்தவன்.  எங்கேயும், எப்போதும் என்னை ஆளாமல் அன்பால் ஆட்கொள்பவன். நல்ல வசதியும் கையில் வைத்து தாங்கும் கணவன் இருந்து வேற எதை நான் சந்தோஷிடம் தேடுகிறேன்?. செக்ஸா..?

சந்தோஷ் என் டீம் லீடர். என்னை விட எட்டு வயது இளைஞன். திருமணமாகாதவன். நான் தான் டீம் லீடர் ஆகியிருக்க வேண்டும். என்னால் அந்த டென்ஷனை சமாளிக்க முடியும் என்ற நம்பிககையில்லை. அதுமட்டுமில்லாமல் நான் வேலை செய்வது சம்பளத்துக்காக அல்ல. என் சந்தோஷத்துக்காக. வீட்டிற்கு போயும் டார்கெட் குறித்து புலம்ப நான் தயாராகயில்லை. வந்த மாத்திரத்திலேயே அவன் என்னை ஆள ஆரம்பித்துவிட்டான். ஏனோ தெரியவில்லை பார்த்த மாத்திரத்தில் சில பேரை பிடிக்கும், பிடிக்காமல் போகும். எனக்கு இவனை பிடித்து போனதற்கான  காரணங்கள் தெரியவில்லை.  சமயங்களில் தீயாய் பரபரத்தான், குளிராய் பேசினான், சொடுக்கில் முடிவெடுத்தான். அணைப்பாய் ஆதரித்தான். ஆனால் ஆதிக்கமாய் ஆட்கொண்டான். நான் இதுவரை பார்க்காத ஒரு ஆளுமை. சமயங்களில் அவனை ச்கிக்க முடியாத அளவுக்கு ஆளுமை செலுத்தினான். எரிச்சலாய் குழுவில் நினைத்தாலும், எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

டீமில் அவனுக்கு வேண்டிய அத்துனை விஷயங்களையும், டேட்டாக்களையூம் நான் தான் கொடுக்க வேண்டியதாக இருந்ததால். தொடர்ந்து ஆன்லைனில் பேசிக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

 முதுகில் சூடான மூச்சு பட்டு சுட்டது. சட்டென திரும்பிய மாத்திரத்தில் அவ்வளவு நெருக்கத்தில் தடுமாறி சந்தோஷின் மார்பில் சாய்ந்தாள். அவன் அணைத்தான். உடலெங்கும் ஜுரம். உதடு உலர்ந்து போனது. ஏன் ஒரு சின்ன பெண்ணைப் போல எக்ஸைட் ஆகிறேன்?. ஆணின் ஸ்பரிசம் தெரியாதவளா..? ஒரு வேளை நிச்சயம் இது காதல் தானோ.. இந்த ஜுரம் உடலுள் ஏற்படும் தேவையினால் அல்ல.. பிடித்தவனுடனான காதலின் வேகம். ஆகங்காரமாய் என்னை எடுத்துக் கொள்ளும் ஆளுமை. தட்டாமல் உள் நுழையும் ஆதிக்கம். ஆனால் இது எனக்கு நலல்தலல.. என்று மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. சந்தோஷின் அணைப்பு இறுக ஆரம்பித்து, கழுத்தில் முகம் புதைத்தான். தேவையில்லாமல் சந்துருவின் ஞாபகம் வந்தது. அவன் எப்பவும் இப்படித்தான்.

தினம் காலை குசலம், வேலை விஷயம் என்று சாட்டிலும், மெயிலிலும், பேச ஆரம்பித்து பகக்த்து கேபினிலிருந்து போனில் பேச ஆரம்பிக்கும் போது நான் தடுத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் சினிமா பற்றியும், உடைகளை பற்றி  விமர்சித்த  போதும் கட் செய்திருக்க வேண்டும். சல்வாரின் வெளியே தெரிந்த பிரேசியரின் பட்டையை என்னிடம் எதுவும் சொலலாமல், சட்டென தோளணைத்து சுவாதினமாய் கை வைத்து  உள்ளே தள்ளி, சிரித்த போதாவது ரியாக்ட் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை.


இருக்கி அணைத்து முதுகில் மூச்சு சுட, சட்டென தூக்கத்திலிருந்து திரும்பி,”என்ன சந்துரு?” என்று தெரிந்தே கேட்டால்  “ஒண்ணுமில்லை நீ தூங்கு” திரும்பி படுத்துக் கொள்வான்.

சர்தான் வாடி என்று தோள் திருப்பியதேயில்லை. முயக்கத்தில் கூட  போலியாய் விரல் பட்டோ, அழுத்ததிலோ, “ஸ்…’ என்றால் “சாரி” என்று அமைதி ஆவான்.

”எனக்கு டயர்டா இருக்குப்பா.. ஒரு காப்பி போடுறியா..?”

”கொஞ்சம் கால் பிடிச்சி விடறியா..?”

”சாரி ஒரு ஹெல்ப்.. வரும் போது என் நாப்கின் வாங்கிட்டு வந்திர்றியா..?’

“எதுக்கு ரெக்வெஸ்ட்?”

சந்தோஷ் இதற்கு நேர் மாறானவன்.

நான் எதிர்பார்கக்லை..”

”எதை நான் கை வச்சு உள்ளே தள்ளினதையா..?”

“ஆமா.. நீ என்னை தனியா கூப்பிட்டு சொல்லியிருக்கலாம்”

“சொல்லியிருக்கலாம் தான் ஆனா அதுக்கு டைமில்லை. எனக்குள்ள உன்கிட்ட  எதோ உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்”

நான் பதில் சொல்லவில்லை. ரெண்டு நாள் பேசவில்லை. கேட்ட கேள்விக்கு தான் பதில். மூன்றாவது நாள் ஆபீஸின் பின் பக்க மாடிபடியில் வழிமறித்தான். நகர முற்பட்டவளை கைபிடித்து இழுத்து, சுவரோடு அழுத்தி,முகத்தருகில் வந்து “ என்னால முடியல..” என்றான்.

“என்னாலயும் தான் முடியல.. வலிக்குது கை விடு”

“வலிக்கட்டும் அப்பத்தான் என் வலி புரியும்.”

”இடியட்.. உன் வயசென்ன.. என் வயசென்ன..? I’ve a  twelve year boy u know?”

”இருக்கட்டும்.. எனனால் உன்னோட பேசாம இருகக் முடியாது.. பேசுறேன்னு சொல்லு விட்டுர்றேன்.”

வெகு அருகில் அவன் கண்கள் என் கண்களை பார்த்துக் கொண்டிருந்தது. நாசியில் அவன் சிகரெட் மணம். அவன் கண்கள் பளபளவென இருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் வேறு ஒருவனை நான் விட்டதேயில்லை. எக்கித் தள்ளி விட்டிருக்க வேண்டாமோ..? என்னால் முடியவில்லை. அவனது ஆளுமையும், ஆண்மையின் அழுத்தம், வேகம் பிடிக்கத்தான் செய்தது.  யோசித்த சிறு கனத்தில் சட்டென உதடு கவ்வி, முத்தமிட்டான். உடலெங்கும் விர்ரென.. ஒரு ஷாக் ஓடியது.. அவனின் மீசை முடிகள் என் நாசியில் உரசின. சந்துருவுக்கு மீசை கிடையாது. சில நொடிகள் தான்.. ஆனால் கனவு போல உள்ளே.. உள்ளே.. நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. கண் விழித்து கன்னத்தில் அரைந்தேன்.

”வேண்டாம் சந்தோஷ்.. விட்டுறு.. அப்புறம் கம்ப்ளெயிண்ட் செய்திருவேன்”

“நீ செய்ய மாட்டே.. எனக்கு தெரியும்.. உனக்கும் என்னை பிடிக்கும் ஏன் நடிக்கிற..”

“என்ன பேச்சு பேசறே?. try to behave yourself. what do you want? sex…? அப்படியெனில் நிச்சயம் நான் உனக்கு கிடைக்க மாட்டேன். என்னால்  துரோகம் செய்ய முடியாது.”

“அப்படியானால் உனக்கு என்னை பிடிக்கத்தான் செய்கிறது  இல்லையா..?பூஜா.. ஐ லவ் யூ”

நான் சிரித்தேன். “ஷிட்.. உன் உடல் சூட்டை தணிக்க ஒரு உடல் தேவை.. அவ்வளவுதான்.  அதற்கு தேவையில்லாமல் புனிதப்படுத்தாதே.. எப்படி நீயும் நானும் காதலிக்க முடியும்? ம்ஹும்.. சொல்..  எனக்கென குடும்பம் இருக்கிறது அது தெரியுமல்லவா.?”

சந்தோஷ் எதுவும் பேசாமல் கன்னத்தை தடவிக் கொண்டே போனான். அப்புறம் மேலும் இரண்டு நாட்களுக்கு எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவனின் சாரிக்களும், ஐ லவ் யூ மெசேஜுகளும், பார்வையினால் வரும் கொஞ்சலும் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. என்னிடம்  அவன் அப்படி கெஞ்சுவது பிடித்துத்தானிருந்தது.   டீமில் இருக்கும் இருபது வயது குதிரை நான்சியை விட்டுவிட்டு, என்னிடம் கெஞ்சுவது ஒரு கர்வமாய் இருந்தது. நான் அவ்வளவு அழகா? லேசாய் வெறும் பேச்சோடு இருக்கணும் என்ற கண்டிஷனோடு தொடர ஆரம்பிக்க, மீள் முடியாத போதையாய் போனது பேச்சு. காதலோ, காமமோ.. இது எல்லாவற்றையும் மீறி பேச்சு எவ்வளவு பெரிய போதை. முடியவில்லை. அவனுடன் பேசாமல், பார்க்காமல், இருக்க முடியவில்லை. எஸ்.எம்.எஸ்ஸிலும், சாட்டிலும், நேரிலும், பின் பக்க மாடி படியின் நெருக்கத்திலும்..

”நைஸ் சர்ட்”

“நாளையிலிருந்து செர்ரி ரெட்டில் லிப்ஸ்டிக் போடாதே..  கண்ட்ரோல்  செய்ய  முடியலை”

”இன்னைக்கு எத்தனாவது சிகரெட்?”

“ஒரு சிகரெட்டுக்கு ஒரு முத்தம் கொடு.. விட்டுவிடுகிறேன்”

இம்மாதிரியான பேச்சுக்களில் பரவும் ஜுர சூடும், உள்ளுக்குள் ஏற்படும் சின்ன துரோக சந்தோஷமும், எனக்காக உருகும் இளைஞன் என்ற எண்ணமும்.. என்னை வாட்ட ஆரம்பித்துவிட்டது. இது என் தினப்படி வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. பையனுக்கு பாடம் சொல்லித்தரும் போது வரும் SMSக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தும் ஆன்லைனிலும், போனிலுமாய் மாய்ந்து, மாய்ந்து பேசுவது, சந்துரு வந்தது கூட தெரியாமல், போதையாய் பேசிக் கொண்டிருப்பது என்று என் கடமை செய்ய தவறிய குற்ற உணர்ச்சி உறுத்தத்தான் செய்கிறது.

“வந்தா கூப்பிடகூடாதா சந்துரு”

“நீ ஏதோ பிஸியா பேசிட்டிருந்த அதான்..” என்று தானே காபி போட்டு குடித்துவிட்டு என் ப்ரைவசிககாக ரூமுற்குள் வராமல் டிவி பார்க்க உட்கார்ந்திருக்கும் சந்துருவை பார்க்கும் போது ஆழமான ஐஸ்கத்தி குத்து.

என் வாழ்நாளில் இந்த மாதிரியான உணர்வு குழப்பங்கள் வந்ததேயில்லை. ரெண்டு நாள் ஆபீஸுக்கு லீவ் சொல்லாமல், கொள்ளாமல் போன், நெட் எல்லாவற்றையும் கிட்டே சேர்க்காமல் இருந்தேன். ஒரு நாள் பூராவும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தேன். ம்னம் முழுக்க சந்தோஷ் ஆக்கிரமித்தான்.பேச வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடிப்பு அதிகரித்துக் கொண்டேதானிருந்ததே தவிர.. குறையவில்லை. எத்ற்கெடுத்தாலும் ஆத்திரம் வந்தது. உடம்பு சரியில்லையோ என்று எனக்காக காபி எடுத்துக் கொண்டு வந்த சந்துருவை என் நினைவு தெரிந்து திட்டினேன். சந்துரு ஏதும் பேசாமல் அடிபட்ட பார்வையோடு மெல்ல விலகி ஹாலுக்கு போனான். படித்துக் கொண்டிருந்த மகன் ரூமிலிருந்து வெளியே வ்ந்து எட்டிப் பார்த்தான். எனக்கு என்னை நினைத்து அசிங்கமாக உணர்ந்தேன்.

ஒரு நாளாவது சத்தமாய் பேசியிருபபானா..? அவனை ஏன் கசக்குகிறேன்?. மனதுள் அழுதபடி அப்படியே தூங்கிப் போனேன். முழித்து பார்த்த போது பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு. நான் முழித்ததை பார்த்து திரும்பி படுக்க முற்பட.. அவனை இழுத்து அணைத்து காதோரமாய் “சாரி சந்துரு” என்றேன்.

”பரவாயில்லை.. ஏதாவது பிரச்சனையா..? சொல்லாம்னா சொல்லு?”

“ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, சந்துருவை அணைத்துக் கொண்டேன், ‘சொல்லுடி என்று என்னை இழுத்து வைத்து அறைய மாட்டானோ? இவ்வளவு நல்லவனாகவா இருப்பான்?. இழுத்து அணைத்து முகமெல்லாம் முத்தம் கொடுத்தேன். என் வேகத்தை பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனான். சமாளித்து என்னை கீழே தள்ளி க்ழுத்தில் முகத்தை புதைத்து, மூச்சிழுத்து, சூடான முத்தமிட்டான்.  என் வேகத்துக்கு தோதாய் உடைகளைந்து, என்னுடையையும் விலக்கி, உடலெங்கும் முத்தமாய் அழுத்த, இழுத்து வைத்து நெஞ்சோடு அவன் முகத்தை அழுத்தினேன். என் மார்புகளுக்கிடையே முகம் அழுந்தி மூச்சடைத்து விதிர்த்து விலகி, மூச்செடுத்து, துரிதமாய் கைகள உடலெங்கும் பரவி, அழுத்தி, பிடித்து, அணைத்து, உள்ளுக்கு தீயாய் இறங்கி இயங்க, நான் ஆரம்பித்த வேகம் அவனின் செயலிலும் தெரிய, மூச்சிரைத்து எக்ஸ்டஸியில் குளித்து  என் மேல் சரியும் போது உள்ளுக்குள் வெடித்த கலர் சிதறல்களுள் சந்தோஷ் தெரிந்தான். கண் திறந்து அதிர்ந்தேன். சந்துரு என் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு பாத்ரூமுக்கு சென்றான்.

என்ன இது? இப்படி அலைக்கழிக்கிறது.. சந்தோஷின் நினைப்பு என்று ஒரே குழப்பம். நிச்சயம் இதற்கு முடிவு எடுத்தாக வேண்டும். தேவையில்லாமல் அவனின் நினைப்பு என் வாழ்க்கையை புரட்டி போட நான் விடப்போவதில்லை. அவனின் ஆக்கிரமிப்பிலிருந்து வெளியே வ்ந்தே ஆகவேண்டும்.

அடுத்த நாள் காலை வரை நிறைய குழப்பங்களுடன், என்னுடன் நானே செய்து கொண்ட தர்கங்களின் தாக்கத்துடன், ஒரு முடிவெடுத்து, அவனை அழைத்தேன். குரல் நிறைய சந்தோஷத்துடன், “சொல்லு.. ஏன் ரெண்டு நாளா வரலை? இப்ப மட்டும் நீ போன் பண்ணலைன்னு வ்ச்சிக்க..I Felt Like killing my self”

“உனக்கு என்ன வேணும் ச்ந்தோஷ்?.”

“என்ன கேட்குறேன்னு புரியல பூஜா”

“எனக்கு தெரியும். உனக்கு என்ன வேணும்னு. Why dont you Book A room in mahab’s?”

டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது.

எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.”

“எனக்கும் தான்”  என்றேன்.
கேபிள் சங்கர்

Jul 20, 2010

ஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து.

அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம்.

எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது.

ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண். போச்சுடா வம்பு வந்த்து. நம்ம் குரு ஷங்கரநாராயணன் நினைப்பு வந்த்து. அவர் இந்த புக்கெல்லாம் படிக்காதே கீதா மாப்பசான் படின்னு சொல்ற மாதிரியும் இருந்தது.  நாம தினம் மாதா, பிதா, குரு தெய்வம்ன்னு இவங்களை கும்பிடலாம். பேச்சை மீறி அடி வாங்கிட்டு வந்து அப்புறம் கால்ல விழறது  தான் சகஜம். ஷங்கர் சாரை நோக்கி திரும்பி மன்னிசிக்குங்க சார். ஏப்ரல், மேயில பசுமையே இல்லை சார்ன்னு பாடிட்டு புத்தகத்தை வாங்கி வந்தாச்சு. அட்டையில் இருந்த போஸ் வேற கவருது.

“நாந்தாண்டா இங்க பெரிய்யய எழுத்தாளன்”னு மிரட்டற மாதிரி லுக் இருந்த்து. மாம்பழ வாசனை நல்ல வேளை இல்லை. பின்னட்டையில் ஆசிரியர் குறிப்ப திரும்ப திரும்ப படிச்சேன். நமக்கு திருச்சில ஏர்போர்ட் பக்கத்தில செம்பட்டுனு சொல்வாங்க். இங்கே தாதாக்கள் புகழ் அதிகம். கேபிள் சங்கர் பெயரை வச்சிட்டாலும் நல்ல தாதா போலருக்குன்னு நினைச்சிட்டு படிக்கவும், ரசிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.   இதையெல்லாம் ஏன் நான் இவ்வளவுதூரம் சொல்றேன்னா நான் இப்படித்தான் சார் என் தேடல் எங்க ஆரம்பிக்குது, அது எங்க முடியுதுன்னு எனக்கே தெரியாது. சரி கதைகளுக்கு வருவோம்.

சங்கர் தனது சிறுகதைகளில் ஜெயிக்கும் விதம், கதையை எடுத்தவுடனே நம்பிக்கையோட ஆரம்பிச்சுடறார். அதுலே எனக்கு பிடிச்சது முன்னுரையில வேற இந்த மாதிரி, இந்த மாதிரின்னு எழுதினவர் ஒரு மாதிரி சாக்லெட் தந்துட்டார். ஸோ.., படிக்க ச்சும்மா ரன்வேயில விமானம் மெதுவா வேகமெடுத்து கிளம்புற மாதிரி, அழகா கதையில் ஒரு முன்னேற்றம் (அப்பாடா.. ஏர்போர்டுல வசிக்கிறது நல்லதா போச்சு) வந்துருது.

அப்புறம் எந்த சம்பவத்தையும் எழுத்தில் சொன்னாலும் நம்பறா மாதிரியே எழுதறாரே, அது எப்படின்னு இன்னமும் பிரம்மிப்போட இருக்கேன் நிஜமாலுமே. ஆனாலும் எனக்கென்ன பயம்னா நிச்சயம் முட்டாள்களோட பழகிடலாம், இந்த கேபிள் சங்கரோட பழ்கலாமான்னு பயம் வந்துட்டே இருந்தது நிஜம். இதுதான் நான் மொத்தமா தொகுப்பின் கதைகளுக்கு நான் தர்ற விமர்சனம். ரசிக்க தகுந்த இண்டலிஜெண்ட் பெர்சன். இவை எல்லாமே தமிழ்க் கதைகள் தான், நடப்பதும் நம்ம தமிழ் சூழலில் தான் ஆனா வெளிநாட்டில் ந்டக்கிற மாதிரி ஜாலியா எழுதியிருக்காரு.. இந்த மாதிரி பெண்கள் யாரும் கவிதை எழுதிட்டா விட்டுருவாங்களா..?ங்கிற கேள்வி மனதுள் எழத்தான் செய்த்து.

பெரும்பாலான கதைகளில் சர்வ சாதாரணமாக பெண்கல் குறுக்கே வருகிறார்கள், படுத்துக் கொள்கிறார்கள், கொல்கிறார்கள், காதலன், கணவன், சாமியார் என்று ஏமாறுகிறார்கள். கதாநாயகன் மட்டும் அதிபுத்திசாலியாய் இருக்கிறான் அல்லது சமயத்தில் குழந்தையாக ஏமாற்றிச் செல்கிறான். என்ன கொடுமை சங்கர் இது? கதைகளை பற்றி விமர்சனம் என்று ஜல்லியடித்து, எப்படி எழுதினாலும், திட்டினாலும், நிஜமாகவே சங்கரின் கதைகள் வசீகரிக்கின்றன. நிஜமாய் நம்மோடு  நம்மோடு பேசுகின்றன என்பது நிஜம். பால் பேதம் மறந்து, வயது மறந்து உரையாட தயாராய் எப்போது இருக்கிறோம்.  எனக்குப்பட்டது இதுதான்.

இந்த தொகுப்பு பட்டினப்பாலையான சென்னையில் இருக்கையில் என் மேல் விழுந்த முதல் மழைத்துளியாய் என்னை நினைத்து குளிர்வித்தது எனப்தை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும், வெட்கமும் இல்லை.  நிறைய எழுதுங்கள் சங்கர். என்னைப் போன்றவர்களுக்காகவும், பலருக்காகவும் தமிழில் வாசிக்க நினைத்தால் ஏனோ சட்டதிட்டங்கள், போட்டு குரலால் மிரட்டி, உருட்டி, குருகுல வாசம், அசுர சாதகம் செய்யணும் என்றெல்லாம் பேனர் வைக்காமல் எழுதுங்கள். இப்படி வந்தமா, பாத்தமா படிச்சமா, ரசிச்சமா, விசிலடிச்சமான்னு எழுதினாத்தானே நலலா இருக்கும். திரைத்துறையில் பல அனுபவங்கள் உள்ளதால் களம் பிடிக்க எளிதாக இருக்கிறது. எழுதும் மொழியும் அப்படியே சரளமாய் வருகிறது. சோம்பல் அற்ற பதிவுகள் நிறைய மின்னட்டும் அதிகமாக திரையுலகிலும்.
ப்ரியங்களுடன்
கவிஞர். கீதாஞ்சலி ப்ரியதர்சினி
(திருச்சி) 

Jul 19, 2010

கொத்து பரோட்டா-19/07/10

சாரு ராவோடு ராவாக Rawவாக அடித்துவிட்டோ, அல்லது அடிக்காமலோ எழுதி, எடுத்துவிட்ட பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்களை வைத்து ஒரு வாசகனை அப்படி திட்டக்கூடாது, இப்படி பேசியிருக்க கூடாது என்று ஆளாளுக்கு பஸ்ஸிலும், ட்ரைனிலும்.. ச்சே.. சாரி.. டிவிட்டரிலும், பதிவுகளும், எழுதித்  தாளித்து  கொண்டிருக்கிறார்கள். அவராவது பரவாயில்லை.. அவர் பதிவிலேயே எழுதி விட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே எடுத்துவிட்டார். இதை பற்றி பேசுபவர்களில் ஒருவர் அவர் நினைத்ததை அவர் பதிவில் எழுதாமல் வேறு ஒருவர் பெயரில் எழுதிவிட்டு, கண்ட மேனிக்கு மற்றவர்களை குற்றம் சாட்டிவிட்டு, பின்பு தான் தான் எழுதினேன் என்று ஒப்புக் கொண்டுவிட்டு, அதிலிருந்து சில பேரின் பெயர்களை மட்டும் எடுத்தவர். பரவாயில்லையா.. நடு ராத்திரியில் எழுதி எடுத்தாலும் காத்திருந்து படிக்கிறாங்க போலருக்கு.  அப்புறம் இன்னொரு விஷயம் இந்த வார விகடனில் சாருவின் மனம் கொத்தி பறவை அருமை.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
SHEYLA-dalam உலகிலேயே பெரிய மார்பகங்களை (38FFF) கொண்ட பிரேசில் மாடல் ஷைலா ஹெர்ஷே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இவர் இதுவரை முப்பது முறை தன் மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஒரு கேலனுக்கு மேல் சிலிக்கான் இம்ப்ளாண்ட் செய்யக்கூடாது என்று சட்டமிருப்பதால் தன் தாய்நாடான பிரேசிலுக்கு சென்று இந்த ஆப்பரேஷனை செய்து கொண்டவருக்கு. அதனாலேயே பிரச்சனை ஆகிவிட்டது. ப்ளட் ஸ்ட்ரீமில் இன்பெக்‌ஷன் ஆகி, இரண்டு மார்பகளிலும் பரவி விட்டது. இவரின் உயிரை காக்க வேண்டுமானல் உடனடியாய் அவரது மார்பகங்களையே எடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் டாக்டர்கள். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தத்துவம்
ஒரு எதிர்பாராத நிலைமை உன் முன்னால் இருப்பதற்கான அர்த்தம் என்ன  தெரியுமா? நீ மிக வேகமாக அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாய் வளர்கிறாய் என்று.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
நாம் பெரும்பாலும் உண்மையை தேடுவதில்லை. நாம் சொல்வதை உண்மை என்று ஆதரிப்பவர்களைத்தான் தேடுகிறோம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார விளம்பரம்
இந்த விளம்பரங்கள் நம் மனதை அதிர வைக்கும் விளம்பரங்கள். நிச்சயம் விளம்பரம் பார்த்துவிட்டு சில நிமிடங்கள் சிந்திக்க வைக்கும் விளம்பரங்கள்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார புத்தகம்
சேத்தன் பகத்தின் 2 States.. the story of my Marraige படித்துக் கொண்டிருக்கிறேன். செம க்யூட்டான காதல் கதை. நிச்சயம் சினிமாவாகும் சாத்தியக்கூறுகள்  உள்ள எல்லா, கமர்சியல் டகால்டிகளும் இருக்கிறது. சமீபத்தில் பெ’ண்’களூருக்கு சதாப்தியில் பயணம் செய்த போது படிக்க முடிந்த  இரண்டு புத்தஙகளில் ஒன்று. படித்து மிகவும் இம்ப்ரசான ஒரு புத்தகம் தமிழ்மகனின்”வெட்டுப்புலி”. படித்து முடித்த பின்னும் மனதினுள் ஒரு ஓட்டம் ஓடுகிறது. நேற்று விஜயமகேந்திரனின் புத்தக விமர்சன விழாவில் அவரை சந்திக்க நேர்ந்த்து. மிக அருமையான, இனிமையான மனிதர். வெட்டுப்புலி விமர்சனம் படிக்க..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இந்த வார குறும்படம்
நளனின் இந்த குறும்படம் அவரது இரண்டாவது படமாம். தற்கொலையை பற்றிய ஒரு சீரியஸான கருத்தை வலியுறித்து எடுத்திருக்கிறார். வழக்கம் போல அவரது படங்களில் நடிக்கும் கருணாவின் நடிப்பு கச்சிதம். முடிவை முன்பே ஊகிக்க முடிவதும், கேமரா மற்றும் வசனங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி ஒரு நல்ல முயற்சி..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%ஏஜோக்
இளைஞன் ஒருவன் தன்னுடய லுல்லாவின் மேல் தீடீரென ஒரு சிவப்பு வளையம் போல ஒன்று இருப்பதை பார்த்துவிட்டு அலறியடித்துக் கொண்டு டாக்டரிடம் ஓடினான். டாக்டரும் அதை பார்த்துவிட்டு ஒரு க்ரீமை கொடுத்து இதை  போட்டுப்பார் சரியில்லை என்றால் நாளை திரும்ப வா என்றார். அடுத்த நாள் டாக்டரிடம் வந்த் இளைஞன் இன்னும் போகவில்லை என்று கூற, டாக்டர் வேறு ஒரு க்ரீமை கொடுத்தார், மீண்டும் அடுத்த நாள் திரும்ப வந்த இளைஞன் ஒரே க்வலையுடன்,”டாக்டர் இன்னும் கூட சரியாகவில்லையே..” என்று அழ, இம்முறை நிச்சயம் சரியாகிவிடும் என்று வேறு ஒரு க்ரீமை கொடுத்தார். அடுத்த நாள் திரும்ப வந்த இளைஞன் மகிழ்ச்சியுடன் “டாக்டர் இன்றைக்கு என் லுல்லாவில் அந்த வளையம்  போய்விட்டது. அப்படி என்ன மருந்து கொடுத்தீர்கள்? “ என்று கேட்க.. டாக்டர் “லிப்ஸிடிக் ரிமூவர்” என்றார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கேபிள் சங்கர்

Jul 17, 2010

வெட்டுப்புலி –புத்தக விமர்சனம்

vettupuli இப்புத்தகத்தை பற்றி நிறைய பேர் சிலாகித்து சொன்னார்கள். எழுதியிருந்தார்கள். ஒரு சினிமாவை பற்றி பதிவெழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை இப்படி விமர்சித்து நிறைய பேர் சொன்னது என்னுள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சொல்லி வைத்து டிஸ்கவரியிலிருந்து வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.

வெட்டுபுலி படம் போட்ட தீப்பெட்டியில் இருக்கும் தன் மூதாதையரான தாத்தாவின் வரலாறு தேடி போவதாய் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் சினிமாத்தனமான ஆரம்பமாக இருந்தாலும், ஒரு அருமையான் கதை சொல்லிக்கான யுக்தியாய் தான் தெரிந்தது. படிப்பவர்களை மெல்ல கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான யுக்தி. முப்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. லஷ்மணரெட்டி வெள்ளைக்காரனின் குதிரையை உடல் சிராய்த்து, ரத்தம் வழிய ஓட்டப்பழகுவதோடு கதை ஆரம்பிக்கிறது. 

முப்பதுகளிலிருந்து இன்றைய காலம் வரை நம் தமிழ் நாட்டு மக்களிடையே, அதுவும் கிராமத்து மக்களிடையே இருந்த கலாச்சாரம், ஜாதி, பள்ளி, பறையன், பாப்பார ஜாதிகளுக்கிடையேயான மதிப்பீடுகள், அரசியல், சினிமா, சுதந்திர தாகம், எதிர்ப்பு, ஆங்கிலேயனுக்கான மறைமுக ஆதரவு, ஆங்கிலேயனை வைத்து பிழைப்பு நடத்தி வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ளூம் லட்சுமணனின் பெரியப்பா. என்று அந்த கால காட்சிகளை கண் முன்னே விரிக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன்.

தசரத ரெட்டி, அவரது மகன் லஷ்மண ரெட்டி, விசாலாட்சி, நடராசன், தமிழ் செல்வன், நாகம்மை என்று ஒரு ட்ரீ. ஆறுமுக முதலி, ஆவ்ர் மானைவி சுந்தராம்பாள், மகன் சிவகுரு, சகோதரன் கணேசன், மகன்கள் நடேசன், தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இரு குடும்ப கிளைகளின் மூலம் கதை சொல்லப் படுகிறது.

லஷ்மண ரெட்டிக்கும் கீழ் ஜாதிக் பெண்ணான குணவதிக்குமான காதலும், அதன் தோல்வியும், ஒரு தனிக்கதை என்றால், தசரத ரெட்டி தன் மச்சினிச்சியை பெண்டாள நினைக்கும் எபிசோட் ஒரு தனிக்கதை. ஆறுமுகமுதலிக்கும் சுந்தராம்பாளுக்குமிடையே இருக்கும் இண்டிமஸியும், சுந்தராம்பாளுக்கு அவர் கொடுக்கும் முக்யத்துவமும், தன் கணவனின் வளர்ச்சிக்கு ஏற்ப உணர்ந்து, அவனது ஈகோவை குத்தாமல், வளைந்து கொடுத்து குடும்பத்தை நிலை நிறுத்தும் பெண்ணாக அவளை  பார்க்கையில் பெண்ணியம், ஆணாதிக்கம் என்றெல்லாம் இன்றளவிலும் கூவிக் கொண்டுதிரியும் பல பேர்களுக்கு நிஜமாகவே இருவரும் மனதளவில் மதிப்பு கொடுத்து நடத்தும் ஆட்கள் அக்காலத்திலேயே இருக்கத்தான் செய்திருக்கிறார்கள் அதை பார்த்து புரிந்து கொண்டு வாழத்தான் அடுத்து வந்த சந்ததிகள் பழகவில்லை என்று புரிகிறது.

முப்பதுகளீல் ஆரம்பித்த கதையில் அரசியல் குறித்த பார்வையாய் பெரியார், காமராஜர், காந்தி,  அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஸ்டாலின் அழகிரி, வைகோ என்று சம கால அரசியல்வாதிகளை பற்றிவரை  மதிப்பீடுகள் விரிந்து கொண்டு போகிறது. அதே போல பெரியாரின் கருத்துக்களை வைத்து பேசப்படும் பேச்சுக்களும், அதில் முக்கியமாய் சேரவேண்டியதை சேராமால் வெறும் பிராமண எதிர்ப்பை மட்டுமே தூக்கி அலைவதை பற்றியும், பெரியாரின் கருத்துக்களை ஏற்று அதை வழக்கமாக்கி கொண்டவர்கள் பிராமணர்கள்தான் என்றும் சொல்கிறார்.

ஆறுமுக முதலியின் சினிமா ஆசையும், அதற்காக அவர் சென்னை வந்து பழைய சினிமா ஸ்டுடியோவின் முதலாளிகளை பார்ப்பதும், அக்கால தயாரிப்பாளர்களின் ப்ரச்சனையும், அப்போதே ஆரம்பித்திருந்த சினிமா தொழில் போட்டிகளை பற்றியும் விரிவாக அலசியிருக்கிறார். சினிமாவுக்கு அன்றைய காலகட்டத்தில் தேவை தயாரிப்பாளர்களை விட திரையிட உதவும் திரையரங்குகள்தான் அதனால் பின்னால் தயாரித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி, கடைசியில் ஒரு திரையரங்கு ஓனாராகி திருப்தி அடையும் ஆறுமுக முதலி, அப்பாவிட்டதை மகன் சிவகுரு சினிமா தயாரிக்க வந்து , எதற்கு செலவு செய்ய வேண்டுமோ, அதற்கு செலவு செய்யாமல், எதற்கு செலவு செய்யக்கூடாதோ அதற்கெல்லாம் செலவு செய்து இருந்த காசையும், சொத்தையும் இழந்து பிச்சைக்காரனாகி இறக்கும் சிவகுருவை போல, புகழுக்கும், பெண்களுக்கும் செலவு செய்து அழியும் பல சினிமா சபலிஸ்டுகளை இன்றைக்கும் நாம் பார்க்க முடியும்.

அதே போல தியாகராஜன், ஹேமலாதா கேரக்டர்களின் மூலம் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியையும், திமுக, ஆதிமுக வின் வளர்ச்சியையும், அதே காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் வளர்ச்சியை மீறி ஏ.ஜி.எஸ் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டே பிரகாசித்த பாலசந்தர், ஸ்ரீதர் என்று ரஜினி, கமல் என்று வளரும் சினிமாவையும், வாழ்க்கையில் தன் கொள்கையை திணிக்க நினைத்து, திரிந்து போன வாழ்கையாய் குடிகாரனாய் அலையும் தியாகராசன், இட்லிகடை முதல் கள்ளச்சாராயம், கள்ளக்காதல் என்று தனக்கான வாழ்க்கையை கணவனை பழிவாங்குவதற்காகவே வாழும் ஹேமலாதாவுக்குமான வாழ்க்கை நிதர்சன வாழ்க்கை.

இப்படி இரண்டு குடும்பங்களை வைத்து சுமார் என்பது வருட தமிழ்நாட்டின் வரலாற்றை, அரசியலை, வாழ்க்கையை, சினிமாவை, கலாச்சாரத்தை நிதர்சனமாய் ஓடவிட்டிருக்கும் எழுத்தாளரின் நடைக்கு ஒரு சபாஷ்.. முழு புத்தகத்தை படித்து முடித்தவுடன் டைம்மிஷினில் போய்விட்டு வந்த  எபெக்ட் நிச்சயம் இரண்டு நாளுக்கு இருக்கும் என்பது சத்தியம்.


நூல் : வெட்டுப்புலி

ஆசிரியர் : தமிழ்மகன்


விலை : ரூ.220/-


பக்கங்கள் : 376


வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,


11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,


சென்னை - 600 018. போன் : 24993448


மின்னஞ்சல் :uyirmmai@gmail.com


 ஆன்லைனில் நூலினை வாங்க :http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262
கேபிள் சங்கர்

Jul 16, 2010

கேட்டால் கிடைக்கும்

dominos_pizza_profile_profile
நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை  அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம்.

சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது.

“என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?”

”சேஞ்ச் இல்லை சார்..”

“நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?”

“நாலனாதானே சார்..”

“சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?”

சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் வாங்கிக்கங்க.” என்றான் ஒரு விதமான ஏளனத்தோடு. எதோ நமக்கு அவன் பிச்சை போடுவதை போல,  நான் கொஞ்சம் கூட வெட்கபடவில்லை. என்னிடமிருந்து என் பணத்தை மிகுதியாக பிடுங்க வெட்கப்படாத நீயும், உன் கம்பெனியுமிருப்பதையும் பார்க்கும் போது எனக்கெதுக்கு வெட்கம் என்று நினைத்துக் கொண்டேன்.

”தாராளமா கொடுங்க நான் வாங்கிப்பேன். ஒன்ணு நீங்க சேஞ்ச் வாங்கி வைக்கணும். அப்படியில்லைன்னா.. நீங்க ரவுண்ட் பண்ற அமெளண்ட குறைச்சு 303 ரூபாயா ரவுண்ட் பண்ணனும். உங்க காசு ஒரு ரூபா கூட விட மாட்டீங்க.. ஆனா எங்க காசுன்னா.. அது வெறும் நாலணா தானேன்னு கேட்குறீங்க?.”

அவர் ஏதும் பேசாமல் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுக்க, என் ஆர்டர் வருவதற்காக காத்திருந்தேன். பக்கத்தில் அவருடய ஆர்டருகாக நின்றிருந்த வயதானவர் “தம்பி.. எனக்கும் நீங்க எக்ஸ்ட்ராவா வாங்கியிருக்கீங்க..?” என்றார். அவரை பார்த்த இன்னும் சிலர்.. என்று ஒரு பத்து பேர் கூடிவிட்டார்கள். அத்துனை பேருக்கும் அவர் சில்லரை மிகுதியாக வாங்கியிருக்கிறார்.

நம்மில் பல பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு நாலணா காசுக்கு போய் தகராறு செய்ய வேண்டுமா..? என்று.. இதை செய்வது தகராறு இல்லை.. உங்கள் உரிமை.. எவ்வளவோ இடங்களில் நம்மை தெரியாமல் ஏமாற்றுகிறார்கள். ஆனால் தெரிந்தே நம்மிடமிருந்து காசை எடுப்பவர்களை நாம் கண்டிக்காமல் விட்டால் அதை போல ஒரு சுரணை கெட்ட விஷயம் வேறேதுமிருப்பதாய் தெரியவில்லை.

இந்த மனோநிலைதான் நம் நாட்டை கொஞ்சம், கொஞ்சமாய் பலவீனப்படுத்தும் மனோநிலையாய் மாறி போகிறது. எதற்கும் நம் எதிர்ப்பை காட்டுவதில்லை. நமக்கெதுக்கு என்றிருப்பது, நான் ஒருத்தன்  கேட்டால் நடந்துடுமா? என்ற எண்ணங்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவர்களை குற்ற்அம் சாட்டுவது எந்தவிதத்தில் ஞாயம்?. நாம் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பொது மக்கள் கேட்பார்கள் என்ற பயம் இருந்தால் தானே?. ஸோ.. நண்பர்களே.. Know Your Rights, Act Immediately….
கேபிள் சங்கர்

Jul 15, 2010

சாப்பாட்டுக்கடை

மைலாப்பூர் என்றாலே நல்ல பல மெஸ்ஸுகள் ஞாபகத்துக்கு வரும். கற்பகாம்பாள், ராயர் கடை, என்று வரிசைக்காய்.. அந்த வரிசையில் மயிலையில் பிரபலமானது மாமீஸ் மெஸ்.
Photo0147 கிழக்கு மாட வீதியின் முடிவிற்கு முன் ஒரு சின்ன தெரு போகும், இல்லாவிட்டால் யாரிடம் கேட்டாலும் மாமீஸ் மெஸ்ஸை கேட்டாலும் சொல்வார்கள். முன்பு சின்ன கடையாய் இருந்ததை இப்போது இடித்து பெரிதாக பாஸ்ட் புட் கடைகள் போல நின்று கொண்டு சாப்பிடும்படியாக மாற்றியிருக்கிறார்கள். மாமீஸ் டிபன் செண்டர் என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். முன்பை விட நீட்டாக உள்ளது.

மதியம் புளி, சாம்பார், தயிர், என்று சாத வகைகளும், முப்பது ரூபாய்க்கு அளவு சாப்பாடும் தருகிறார்கள். அளவு சாப்பாட்டில் ஒரு பெரிய கிண்ண சாதம், ஒரு பொரியல், கூட்டு, ஊறுகாய், தொகையல், சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர்.  சாம்பார், ரசம், காரக்குழம்பெல்லாம் அவ்வளவு ருசி.  வீட்டில் செய்து போல. என்ன மோர் மட்டும் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீராம நவமி நீர் மோர் போல கையில் ஒட்டாமல் ஓடியது. மற்றபடி திருப்தியான சாப்பாடு.
Photo0148 மாலையில் டிபன் வகைகள் தோசை, இட்லி, பரோட்டா என்று களை கட்ட ஆரம்பித்துவிடுகிறது. நிச்சயம் வயிற்றை கெடுக்காத சுவையான வீட்டு சமையல் ருசியில், நியாயமான விலையில் சாப்பிட வேண்டுமானால் நிச்சயம் மாமீஸ் மெஸ் ஒரு தரமான இடம்.

Jul 13, 2010

ஆனந்தபுரத்துவீடு

Ananthapurathu-Veedu வழக்கமான பயமுறுத்தும் பேய் படத்தை எதிர்பார்த்து இப்படத்திற்கு போனீர்களானால் நிச்சயம் பெரும் ஏமாற்றம் ஏற்படுவது உறுதி. ப்ளாங் மைண்டோடு சென்றீர்கள் என்றால் உங்களால் என் ஜாய் செய்ய முடியும். ஏற்கனவே சீரியல் உலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர், கதாசிரியர் இணைந்து இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வந்திருக்கும் படம்.

AananthapurathuVeedu
நந்தா, சயாசிங், அவரது பையனுடன் தங்களுடய கிராமத்து வீட்டுக்கு வெக்கேஷனுக்காக வருகிறார்கள். வந்த இடத்தில் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதை முதலில் சிறுவன் உணர்கிறான். ஆனால் அவனால் பேச முடியாது. அந்த பேய் வேறு யாரும் கிடையாது  நந்தா சிறு வயதாக இருக்கும் போது ஆக்ஸிடெண்ட்டில் அகாலமாய் இறந்து போன அப்பா அம்மா தான்.  மகன் வந்திருப்பது ஒரு பிரச்சனையில் ஐம்பது லட்ச ரூபாய் கடனை திரும்ப கொடுக்க முடியாமல், அங்கிருந்து பிரச்சனையிலிருந்து தப்ப, யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் நந்தா. நந்தாவை தொடர்ந்து வரும் கடன் கொடுத்த நட்வர்லால் அவன் வீட்டிலேயே ஹவுஸ் அரஸ்ட் செய்து பணம் கொடுத்துவிட்டு வெளியே போ அப்படி இல்லையென்றால் உன் மனைவியை என் பொறுப்பில் வைத்து விட்டு போ என்கிறான். கூடவெ இருந்து ஏமாற்றும் நண்பனிடமிருந்து எப்படி தன் மகனை பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறார்கள் அந்த பேய் பெற்றோர்கள் என்பதே கதை.

ananthapurathu-veedu-movie-review
வழக்கமான பேய்படங்களிலிருந்து விலகி வித்யாசமான லைன். ஆரம்ப காட்சியில் தன் பேரனை சேரில் வைத்து ஆட்டுவதும், அறையிலுள்ள ட்ராயர்களை தானாக திறந்து அதிலுள்ள பேனாக்களை காடுவதும் அதை பார்த்து சிறுவன் காட்டும் ரியாக்‌ஷன்களும், உடல் விதிர்ப்புக்ளூம் அட்டகாசம். அந்த க்யூட் முகத்தில் அவ்வளவு இயல்பான ரியாக்‌ஷன்களை கொண்டுவந்த இயக்குனரை பாராட்ட வேண்டும்.நந்தா  தன் பிரச்சனைகளை தானே சரி செய்ய முடியும் என்று நம்பும் இளைஞனாக வரும் போது  கூலாகவும், ப்ரச்சனையை சமாளிக்க முடியாமல் தேம்பி அழும்போது ரியலிஸ்டிக்கான ஒரு குடும்பஸ்தனை கண் முன் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்.

க்ளஸ்ட்ரோபோபியா நோயால் பாதிக்கப்பட்ட சாயாசிங், வீட்டில் பேய் இருக்கிறது என்று தெரிந்த நேரத்திலிருந்து பயந்து நடுங்குவதும், பின்பு தன் மாமனார் மாமியார் தங்களுக்கு நல்லது தான் செயவார்கள் என்று நம்பியவுடன், தன் க்ளஸ்ட்ரோபோபியா பயம் விலகி கணவனுக்கு உறுதுணையாய், கோபத்தில் கோடரி எடுக்கும் போது கூட அதை தடுக்குமளவுக்கு பொறுப்புணர்ந்து செய்திருக்கிறார். என்ன முகத்தில் தான் இளமையை தேட வேண்டியிருக்கிறது.
 
நட்வர்லாலாக வரும் மேகவர்ணபந்த்தின் குரலும், பாடி லேங்குவேஜும் அட்டகாசம். இவரின் நடிப்புக்கு முக்கிய க்ரெடிட் போக வேண்டியது இவருக்கு டப்பிங் கொடுத்திருக்கும் நடிகர் மோகன் ராமுக்குதான் போய் சேர வேண்டும். மிகவும் கண்ட்ரோல்ட் மாடுலேஷனில் குரலிலேயே நடித்திருக்கிறார்.  ஆனால் வீட்டு வாசலிலேயே அவரும் சடார் சடாரென காரில் வந்து இறங்குவதும், திரும்ப திரும்ப பேசியதையே பேசுவதும் மிரட்டுவதற்கு பதிலாய இம்பாக்டை குறைகக்வே செய்கிறது. வீட்டை விட்டே வெளியே வர முடியாத நிலையில் நந்தா தன் நண்பனுடன் பேச வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டை விற்க முயற்சி செய்வது எப்படி?

படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் தான் பெரிதாய் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் பயமுறுத்த ஏதுமில்லாததால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஒளிப்பதிவு அருள்மணி. துல்லியம். அதிலும் பின்பக்க குளத்தில் குழந்தையுடன் குளிக்கும் காட்சியில் அந்த கரும்பச்சை தண்ணீரும், வீட்டின் பேக்ரவுண்டும் அருமை.anantha300
நாகா இயக்கத்தில் அவர் எடுத்துக் கொண்ட வித்யாசமான லைனுக்கு பெரியதாய் ட்விஸ்ட், டர்ன் உள்ளார் போல திரைக்கதை அமையவில்லை என்பது வருத்தமே..திரும்ப திரும்ப இரண்டு பேருக்குள் நடக்கும் நிகழ்வுகளில் ஒரு மொனாட்டனி வருவதை தவிர்க்க முடியவில்லை திரைக்கதையில். மிக மெதுவாக ஒவ்வொரு விஷயமாய் பில்டப் செய்து, செய்து மெல்ல, மெல்ல, டெம்போ ஏற்றுகிறார். ஆனால் அது வரை பொறுமை காக்க முடியவில்லை. எப்போது பேய் இருக்கிறது என்று தெரிந்து விட்டதோ, அது நல்ல பேய் என்று தெரிந்துவிட்டதோ, அடுத்தடுத்து நிகழ்வுகள் நடக்க வேண்டும். அப்படியில்லாமல் நந்தாவும், சாயாசிங்கும் இருக்கு, இல்லை என்று தர்கவாதம் செய்து கொண்டிருப்பது அலுப்பாகவே இருக்கிறது.  இரண்டாவது பாதியில் தான் சுறுசுறுப்பாகிறது.  நந்தாவின் நண்பன் தான் ஏமாற்றுகிறான் என்பதை முன்பே தெரிந்து கொண்ட ஆவிகள் ஏன் படம் கடைசிவரை அதை வெளிப்படுத்த க்ளைமாசுக்காக காத்திருபது  போல இருப்பது டெம்போவை இன்னும் குறைக்கிறது.

நாகாவின் மேக்கிங் ஸ்டைல் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நான் அவரது இயக்கத்தில் சிதம்பர ரகசியத்தில் நடித்திருக்கிறேன். ஒரு சின்ன ரியாக்‌ஷனைக்கூட விட மாட்டார் மிகப் பொறுமையாய் அது வரும் வரை எடுக்கக்கூடியவர். குழந்தை, கலைவாணி, மேகவர்ணபந்த், அந்த ரியல் எஸ்டேட் ப்ரோக்கர், வீடு பார்க்க வரும் செட்டியார், என்று பல கேரக்டர்களில் தெரிகிறது. குறிப்பாக குழந்தை ஊஞ்சலில் ஆட, அதை பார்த்து சாயாசிங் கத்த, ஒரு கணம் அந்த கத்தலில் விதிர்க்கும் குழந்தையின் ரியாக்‌ஷன் சூப்பர்ப். தன் மருமகளை அடித்த மகனை கைத்தடியால் அடித்து விளாசுவதும், இரவு நாட்டுவைத்திய பத்து அரைத்து போடும் அம்மா பேயும், உருக்கம். அதே போல சாயாசிங்கின் க்ளஸ்ட்ரோபோபியாவை விளக்க எடுக்கபட்ட காட்சிகள் தத்ரூபம். பாக்கும் நமக்கு மூச்சடைக்கிறது

நம் மூதாதையர்கள் நம்மை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை நம் நாட்டில் உண்டு.  அதற்காகத்தான் வருடா வருடம் நாம் செய்யும் காரியங்கள் திவசங்கள் அது உண்மையென உணர்த்தும் இப்படத்தை பார்க்கும் போது நம் கஷ்டத்தையும் இறந்து போன நம் தாய் தந்தையர்கள், தாத்தா பாட்டிகள் பார்த்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் போது லேசாய் சிலிர்த்தது.  நம் கஷ்டங்களையும், ஆசைகளையும் சந்தோஷத்தையும் இவர்கள் வந்து வழிநடத்தி கொடுக்க மாட்டார்களா என்ற ஆசை மனதில் எழத்தான் செய்கிறது. எனக்கு என் அப்பா நினைவு வந்தது.ஒரு வித்யாசமான கதைகளனில் ஒரு  குடும்ப படம்.

 இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ நாகா சார்..

அனந்தபுரத்துவீடு – ஒரு வித்யாசமான முயற்சி.
கேபிள் சங்கர்

Jul 12, 2010

கொத்து பரோட்டா-12/07/10

சமீப காலமாய் தாய் தந்தையர்களை வைத்து ஒழுங்காக பராமரிக்காத மகன்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் சுமார் மூன்று மகன்களை கைது செய்து சிறையிலிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு 102 வயது முதியவர் இம்மாதிரி விஷயத்துக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்து கொண்டு, தொலைபேசியில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த சில மணி நேரங்களில் அவரது மகனை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்ற் காவலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளார். பெற்ற தாய் தந்தையரை வைத்து போஷிக்க வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு கடமையாகவாவது செய்யக்கூடாதா..?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இனிமேல் விவாகரத்து கேஸ்கள் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடக்கும். ஏனென்றால் குடும்ப நல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக இருப்பதால் இனி சனிக்கிழமைகளிலும் கோர்ட்டு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. What a Pity?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார காமெடி
சன் டிவி டாப் டென் நிகழ்ச்சியில் புதுவரவு பகுதியில் ஒரு படத்தை காட்டினார்கள். அந்த படம் ரிலீஸாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி ரேட்டிங்கிலேயே வந்துவிட்டது. அதற்கு அடுத்து காட்டிய படம் அனந்தபுரத்துவீடு. ஒரு வேளை இவர்கள் அடிக்கும் ஜிங்சக்கை இன்னும் அழுத்தமாய் நிலைநிறுத்த போட்டார்களோ..? அவர்கள் புதுவரவாய் போட்டபடம் எது தெரியுமா? கலைஞரின் “பெண் சிங்கம்”. இத்தனை நாளுக்குபிறகு எப்படி புதுவரவாய் வரும். அவ்வளவு மோசமாகவா சன் டிவியின் நிகழ்ச்சியின் தயாரிபாளர் இருக்கிறார். இப்படியே போனால் அவ்வளவுதான். ஏற்கனவே இவர்களின் ரேட்டிங்கை எவரும் மதிப்பதில்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச வீவர்ஷிப்பும் இந்நிகழ்ச்சிக்கு போயிரும் போலருக்கே..
############################################################
செவிக்கினிமை.

சில பாடல்கள் கேட்டவுடன் மனதில் ‘பச்சக்”கென ஒட்டிக் கொள்ளூம். சிலதை படத்தில் பார்த்தவுடன் மனதிலோடும். படத்தில் பார்த்த கேட்ட கணம் முதல் Haunting ட்யூனாய் மனதிலோடுவது மதராசபட்டினத்தில் வரும் “பூக்கள் பூக்கும் தருணம்” பாடல் தான். அதில் வரும் ஆரம்ப கோரஸும், அதன் பிறகு வரும் அற்புதமான ரூப் குமார் ரதோடும், ஹரிணியும் குரலில் ஆரம்பிக்கும் ஹிந்துஸ்தானி கலந்த ஒரு ராகத்தில் ஒலிக்க ஆரம்பிக்க, தேன். நா.முவின் வரிகள் ரொம்பவே அழகு. ஆரம்ப கோரஸும், கொஞ்சம் ரிதமும், ஏ.ஆர்.ரஹமானின் ”கண்களால் கைது செய்’ படத்தில் வரும் “அனார்கலி” பாடலை ஞாபகபடுத்தினாலும். டிவைன்.
############################################################
10072010329 10072010325
சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் இணையம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச அழைத்திருந்தார்கள். பதிவுலகம் சார்பில் நான், யுவகிருஷ்ணா, உண்மைதமிழனை அழைத்திருந்தார்கள். உண்மைத்தமிழனுக்கு உடல் நிலை சரியில்லாததால் வர முடியாமல் போய்விட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்குக்கு சுமார் 40 பேர் வந்திருந்தது சந்தோஷமாய் இருந்தது. மலேசியாவிலிருந்து வந்திருந்த பாலாபிள்ளை, கோவையிலிருந்து ஓசை செல்லா, மணிவண்ணன், சிறுகதை ஆசிரியர் முருகன், உமாஷக்தி ஆகியோர் வந்திருந்து கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டது சந்தோஷமாக இருந்த்து. என் முதல் மேடைப் பேச்சு எப்படியிருந்தது என்பதை கேட்ட மக்களிடம் வினவ வேண்டும். மற்றபடி நிறைவான ஒரு கருத்தரங்கு.
10072010328 10072010337
மற்ற படங்களுக்கு இங்கே க்ளிக்கவும்
############################################################
இந்த வார குறும்படம்
கார்த்திக் சுப்பாராஜுன் பழைய குறும்படம். வேறு ஒரு குறும்பட தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு மெசேஜ் சொல்லும் படம்.

############################################################
இந்த வார விளம்பரம்.

############################################################
ஏ ஜோக்
ஒரு பெண் கைனகாலஜிஸ்டிடம் மிகவும் அவரசம் என்று வெளியே இருந்த ரிசப்ஷனிட்டிடம் கேட்டு அனுமதி பெற்று அவசரம் அவசரமாக தன் வெஜினாவை செக் செய்ய சொன்னாள். டாக்டரும் பார்த்து தலையாட்டியபடியே.. “வெப்பரேட்டர் மாட்டியிருக்குது. அதை வெளிய எடுக்க ரொம்ப செலவாகும். உங்களால கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்த பெண் “ முடிஞ்சா ட்ரை பண்ணுறேன். அது இருக்கிறபடி இருக்கட்டும், அதை எடுக்கிற வரைக்கும் ஒரு புது செட் பேட்ட்ரி போட முடியுமா? என்றாள்.
############################################################
கேபிள் சங்கர்

Jul 10, 2010

மதராசபட்டினம்

 madharasapattinam-audio-launch-posters-02 வெள்ளைக்கார பெண், இந்திய ஏழை ஆண் இவர்கள் இருவருக்குமிடையே காதல், சுதந்திர இந்தியா காலத்தின் பின்னணியில் பெரிதாய் என்ன இருந்திருக்க முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பும், அவர்களது நிஜமாகவே புத்திசாலித்தனமான டீஸ்ர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தது.

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம். ஆரம்ப காட்சிகளில் டைட்டானிக்கை ஞாபகப்படுத்தினாலும், மெல்ல, மெல்ல, பழம் பெரும் சென்னையை கண் முன்னே விரித்து, அதில் வரும் கேரக்டர்களில் ஒருவராய் நம்மை படத்தினுள் நுழைத்துவிடுகிறார்கள். 
  Madharasapattinam-Movie-Stills-001 தற்காலத்தில் லண்டனில் ஏமியிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. மெல்ல அன்போல்ட் ஆகி 1947 வாழ்ந்த, காதலித்த பரிதியை தேடி, அவன் கொடுத்த தாலியை அவனிடம்  சேர்ப்பதற்காக, என்றோ ஒரு காலத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவாய் ப்ளட் க்ளாட் ஆகி உயிருக்கு ஆபத்தான ஆபரேஷனுக்கு முன் பரிதியை சந்திப்பதற்காக இந்தியா வருகிறாள் ஏமி. அவளின் தேடலை, முன்னும், பின்னும் போகும் திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள்.
Madharasapattinam-Movie-Stills-009 படத்தின் முதல் பாகம் சுமார் 1.40 நிமிடங்கள் போகிறது. வெள்ளைக்கார கவர்னர் பெண்ணுக்கும், சலவை தொழிலாளிக்கு இடையே ஏற்படும் காதலை உருவாக்க, மெல்ல,மெல்ல, அதற்கான சினிமா லாஜிக்கோடு, ஏற்படுத்தி, அவன் மீது அவளுக்கு காதல் ஏற்படுவதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்ல அவ்வளவு நேரம் தேவைதான் படுகிறது. இதற்கிடையில் பழைய மதராசபட்டினத்தையும், ஆளும் வெள்ளைகாரர்களுக்கும், இவர்களுக்குமிடையே எழும் ப்ரச்சனை, அவர்களது வாழ்க்கை, சுதந்திரத்தை பற்றிய அன்றைய மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு, எதிர்ப்பு, நேதாஜியை பாலோ செய்யும் குஸ்தி வாத்தியார், சுதந்திரம் வந்திட்டா மட்டும் என்ன பெரிசா கிடைச்சிரப் போவுது என்று அங்கலாய்க்கும் நொள்ளைக்கண் தகப்பன், இருக்கிற ஒரே மரத்தடி வாத்தியார், எப்பபார் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒருவன், பரிதியின் நண்பர் குழாமிலிருக்கும் ஊமை, தெலுங்கு பேசுபவன், ஏரோப்ளேன் போனால் குண்டு போடப்போறாங்க என்று கத்தியபடி அலைபவன், எதுவும் நடக்காது என்று அம்மா சொன்னதாக சொல்லும் பரிதியின் தங்கை, போட் ஓட்டும் தாத்தா, தீவிரவாதம் செய்யும் ஒரு குழு தலைவன், துபாஷி ஹனிபா என்று பார்த்து, பார்த்து கேரக்டர்களை நுழைத்து, சுதந்திரத்துக்கு முன் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஆசாபாசங்கள் என்று மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.

ப்ரிதியாக ஆர்யா, நிறைவான நடிப்பு, கண்களில் குறும்புடன், வாத்யார் வீட்டின் வாசலில் வந்து நின்று நன்றி சொல்வதற்கு என்ன சொல்வது என்று நண்பர்களுடன் கும்பலாய் கேட்பதும், உள்ளேயிருந்து முனகலாய் மனைவி யாருங்க என்பதும், பின்பு மீண்டும் ஒரு முறை பகலில் கதவு தட்ட, அதே முனகலுடன் மனைவி கூப்பிட, பகல்லேயேவா? என்றபடி மீண்டும் கொரஸாய் கேள்வி எழுப்புமிடத்திலும், வாத்யாரிடமே  ஆங்கிலம் தப்பாய் சொல்லித்தருகிறாய் என்று பேசுமிடத்திலும், ஆக்ரோஷமாய் குஸ்தி போடுமிடத்திலும், காணாமல் போன காதலியை தேடி அலைந்து பார்த்தும் ஒரு கணம் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல் அடிக்கும் காட்சிகளிலும் அடக்கி வாசித்திருந்தாலும் மனதில் நிற்கும் ந்டிப்பு. நிச்சயமாய் ஆர்யாவுக்கு ஒரு மைல் கல் படம் இது.
Madharasapattinam-Movie-Stills-018 என்னதான் ஆர்யா, பழைய மதராஸை திரும்ப காட்டியிருந்தாலும், இது முழுக்க, முழுக்க கதாநாயகியின் படம். பார்த்த மாத்திரத்திலேயே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டு காதலிக்க வைக்கும்  முகமும், நடிப்பும் இல்லாவிட்டால் படமே விழுந்துவிடக்கூடிய அபாயம் உள்ள கதை. எமி ஜாக்ஸனின் அழகும், அவரது நடிப்பும் அவரை காதலிக்க வைக்கிறது. அவரின் முகத்தில் உள்ள ஒரு இன்னொசென்ஸே, நம்மை இன்னும் கவர்கிறது.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். லண்டனில் படம் ஆரம்பத்திலிருந்து சென்னைக்கு வந்து, மதராச பட்டனத்துக்கு போய் வருவது என்று  அட்ட்காசமான விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரும், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவும். பழைய செண்ட்ரல், அங்கே ஓடும் கூவம் நதி, ட்ராம்கள், கைரிக்‌ஷாக்கள், பின்னணியில் நடமாடும் மனிதர்கள், அந்த டோபிகானா, கார்கள், என்று ஒவ்வொன்றிலும் பார்த்து, பார்த்து செய்திருக்கிற இவர்களின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.  

படத்தில் இன்னொரு முக்கிய பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். மிக அருமையான பின்னணி இசை. வாம்மா துரையம்மா, அந்த எம்.எஸ்.வி பாடல், காதல் துளிர்க்கும் அந்த உதித் நாராயன் பாடல் என்று படத்தோடு இணைந்து ரசிக்க வைக்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் ஜி.வி.

Madharasapattinam_18_

இவர்கள் எல்லோருக்கும் சிகரமாய் பாராட்டப்படவேண்டியவர் இயக்குனர் விஜய். முந்தைய படங்களான க்ரீடம், பொய் சொல்லப் போறேன் போன்ற படங்களிலிருந்து முழுவதும் வேறு பட்ட கதைகளத்தை எடுத்து கொண்டிருக்கிறார். வழக்கமாய் சுதந்திர போராட்ட காலத்தை எடுத்துக் கொண்டு அதை பற்றி சொல்லாமல் அந்த காலத்தில் ஒரு காதலர்களுடய கதையை எடுத்துக் கொண்டு அருமையாய் சொல்லியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மனம் நெகிழ்ந்து வெளிவராமல் இருக்க முடியாது. நானெல்லாம் அழுது பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாய் அழுதது மலையாள “தன்மாத்ரா”வுக்குதான். மிக சின்ன கேரக்டர்களுக்கு கூட டீடெயிலிங் கொடுத்து, கடைசி வரை பரிதியை தேடி அலையும் போது அதற்கான சஸ்பென்ஸோடு திரைக்கதையை நகர்த்தி சென்றதும், முதல் பாதியில் காதலுக்கு கொடுத்த வேகத்தை இரட்டிப்பாக ஆக்‌ஷன் ப்ளாக்காக மாற்றி பரபரக்க வைத்து, குப்பென நெகிழ வைத்து மிரட்டியிருக்கிறார். இயக்குனர்.

இப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு பாராட்டுக்கள். ஒரு வித்யாசமான படத்தை கொடுத்ததற்காக. படத்தில் குறையாய் இருக்கிற சில விஷயங்கள் இருந்தாலும் மிக குறைவே. ஆங்காங்கே டைட்டானிக், லகான், படம் போன்ற காட்சிகள், கொஞ்சம் லெந்தான முதல் பாதி, இரண்டாவது பாதியில் வரும் முதல் பாடல் என்பது போன்ற சிறு சிறு குறைகளே.. இப்படத்தின் குழுவினரின் டெடிக்கேஷனுக்கு இதெல்லாம் சாதாரணமே.. கண்டிப்பாக படம் பார்த்துவிட்டு வரும் போது மனதில் நிற்கும் படம்.

மதராசபட்டினம்- A Excellent Journey to the Vintage Love

கேபிள் சங்கர்