சமீப காலமாய் தாய் தந்தையர்களை வைத்து ஒழுங்காக பராமரிக்காத மகன்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் சுமார் மூன்று மகன்களை கைது செய்து சிறையிலிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு 102 வயது முதியவர் இம்மாதிரி விஷயத்துக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்து கொண்டு, தொலைபேசியில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த சில மணி நேரங்களில் அவரது மகனை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்ற் காவலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளார். பெற்ற தாய் தந்தையரை வைத்து போஷிக்க வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு கடமையாகவாவது செய்யக்கூடாதா..?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இனிமேல் விவாகரத்து கேஸ்கள் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடக்கும். ஏனென்றால் குடும்ப நல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக இருப்பதால் இனி சனிக்கிழமைகளிலும் கோர்ட்டு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. What a Pity?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார காமெடி
சன் டிவி டாப் டென் நிகழ்ச்சியில் புதுவரவு பகுதியில் ஒரு படத்தை காட்டினார்கள். அந்த படம் ரிலீஸாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி ரேட்டிங்கிலேயே வந்துவிட்டது. அதற்கு அடுத்து காட்டிய படம் அனந்தபுரத்துவீடு. ஒரு வேளை இவர்கள் அடிக்கும் ஜிங்சக்கை இன்னும் அழுத்தமாய் நிலைநிறுத்த போட்டார்களோ..? அவர்கள் புதுவரவாய் போட்டபடம் எது தெரியுமா? கலைஞரின் “பெண் சிங்கம்”. இத்தனை நாளுக்குபிறகு எப்படி புதுவரவாய் வரும். அவ்வளவு மோசமாகவா சன் டிவியின் நிகழ்ச்சியின் தயாரிபாளர் இருக்கிறார். இப்படியே போனால் அவ்வளவுதான். ஏற்கனவே இவர்களின் ரேட்டிங்கை எவரும் மதிப்பதில்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச வீவர்ஷிப்பும் இந்நிகழ்ச்சிக்கு போயிரும் போலருக்கே..
############################################################
செவிக்கினிமை.
சில பாடல்கள் கேட்டவுடன் மனதில் ‘பச்சக்”கென ஒட்டிக் கொள்ளூம். சிலதை படத்தில் பார்த்தவுடன் மனதிலோடும். படத்தில் பார்த்த கேட்ட கணம் முதல் Haunting ட்யூனாய் மனதிலோடுவது மதராசபட்டினத்தில் வரும் “பூக்கள் பூக்கும் தருணம்” பாடல் தான். அதில் வரும் ஆரம்ப கோரஸும், அதன் பிறகு வரும் அற்புதமான ரூப் குமார் ரதோடும், ஹரிணியும் குரலில் ஆரம்பிக்கும் ஹிந்துஸ்தானி கலந்த ஒரு ராகத்தில் ஒலிக்க ஆரம்பிக்க, தேன். நா.முவின் வரிகள் ரொம்பவே அழகு. ஆரம்ப கோரஸும், கொஞ்சம் ரிதமும், ஏ.ஆர்.ரஹமானின் ”கண்களால் கைது செய்’ படத்தில் வரும் “அனார்கலி” பாடலை ஞாபகபடுத்தினாலும். டிவைன்.
############################################################
சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் இணையம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச அழைத்திருந்தார்கள். பதிவுலகம் சார்பில் நான், யுவகிருஷ்ணா, உண்மைதமிழனை அழைத்திருந்தார்கள். உண்மைத்தமிழனுக்கு உடல் நிலை சரியில்லாததால் வர முடியாமல் போய்விட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்குக்கு சுமார் 40 பேர் வந்திருந்தது சந்தோஷமாய் இருந்தது. மலேசியாவிலிருந்து வந்திருந்த பாலாபிள்ளை, கோவையிலிருந்து ஓசை செல்லா, மணிவண்ணன், சிறுகதை ஆசிரியர் முருகன், உமாஷக்தி ஆகியோர் வந்திருந்து கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டது சந்தோஷமாக இருந்த்து. என் முதல் மேடைப் பேச்சு எப்படியிருந்தது என்பதை கேட்ட மக்களிடம் வினவ வேண்டும். மற்றபடி நிறைவான ஒரு கருத்தரங்கு.
மற்ற படங்களுக்கு இங்கே க்ளிக்கவும்
############################################################
இந்த வார குறும்படம்
கார்த்திக் சுப்பாராஜுன் பழைய குறும்படம். வேறு ஒரு குறும்பட தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு மெசேஜ் சொல்லும் படம்.
இந்த வார விளம்பரம். ############################################################
ஏ ஜோக்
ஒரு பெண் கைனகாலஜிஸ்டிடம் மிகவும் அவரசம் என்று வெளியே இருந்த ரிசப்ஷனிட்டிடம் கேட்டு அனுமதி பெற்று அவசரம் அவசரமாக தன் வெஜினாவை செக் செய்ய சொன்னாள். டாக்டரும் பார்த்து தலையாட்டியபடியே.. “வெப்பரேட்டர் மாட்டியிருக்குது. அதை வெளிய எடுக்க ரொம்ப செலவாகும். உங்களால கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்த பெண் “ முடிஞ்சா ட்ரை பண்ணுறேன். அது இருக்கிறபடி இருக்கட்டும், அதை எடுக்கிற வரைக்கும் ஒரு புது செட் பேட்ட்ரி போட முடியுமா? என்றாள்.
############################################################
கேபிள் சங்கர்
Post a Comment
37 comments:
அப்படியே தட்கால் விவாகரத்து, ஒன் ஹவர் எக்ஸ்ப்ரஸ் விவாகரத்து எல்லாம் வந்துடும்..! :)
பெண் சிங்கம் பத்தி ரிங் மாஸ்டர் ஹாலிபாலி கிட்டத்தான் கேக்கணும்.
--
புட்பால் பத்தி ஒரு சால்னாவாவது போட்டிருக்கலாமே தல! :)
நல்ல சுவாரஸ்யமான பேச்சுதான்..
குறும்படம் மெசேஜ் மற்றும் விளம்பரம் ரசிக்கும்படி இருந்தது..
இங்க சைலன்ஸ கூட சத்தமாதான் சொல்லவேண்டி இருக்குன்னு சொல்றமாதிரி, பெற்றோரிடத்தில காட்டுற அன்ப கூட வலுக்கட்டாயம்மாத்தான் வர வைக்க வேண்டியிருக்கு. நல்ல பதிவு. நன்றி.
தல முத விஷ்யதுக்கான சட்டம் ஒரு வருஷம் முன்னாடியே வந்துருச்சுன்னு நினைக்கிறேன் ...
-
அப்ப ஒவ்வொரு சனி அன்றும் சில பேருக்கு AUGUST 15 ன்னு சொல்லுங்க
-
நான் எரிச்சலாகி சன் டிவி டாப் டென் யை பார்ப்பதை விட்டு ரொம்ப நாள் ஆகிருச்சு
-
ஆமா ...எனக்கு அந்த பாட்டும் வாமா தொரையம்மா பாட்டும் பிடிசுருக்குண்ணே
-
பதிவுலகத்தால் இன்னும் நிறைய வெற்றிகளை நீங்கள் காண வாழ்த்துக்கள் ...சீக்கிரம் படம் எடுங்க தல
-
குறும்படத்தையும் விளம்பரத்தையும் நான் முன்னமே பார்த்துவிட்டேன்
-
A joke எனக்கு புரியல (கடைசி லைன் மட்டும்)
நல்ல பதிவு.
Suntv programmes are family functions like always they blurb about their "veera theera paraakkiramangal"
உங்க பேச்சு ரொம்ப நன்றாக இருந்தது..
sun tv top 10? what is this?
முதல்ல ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்...
கொ.ப. - காரம் கம்மி...
அண்ணே,
ஜோக் சூப்பர்.
இந்த போஸ்டரை பார்த்தீங்களா?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
அட .. இன்னொரு தருமி இருக்காரே !!
ஏங்க இந்த மாதிரி ஜோக்கையெல்லாம் பப்ளிக் பிளேஸ்ல போடறீங்க? உங்க வயசுக்கு வந்த அக்காகிட்ட படிக்கச் சொல்வீங்களா இப்படிப்பட்ட ஜோக்குகளை. மனசுக்கு வருத்தமா இருக்குங்க.
நீங்க இப்ப பிரபலமான ரைட்டர் வேற ஆகிட்டீங்க. இன்னமுமா இந்த பப்ளிசிட்டி தேவைப்படுது உங்களுக்கு.
உடனே அவன் எழுதலையா இவன் எழுதலையான்னு கேக்காதீங்க. செருப்புக் கடையில ஆயிரம் செருப்பிருக்கலாம், ஆனா கோயில்ல?
//ஏங்க இந்த மாதிரி ஜோக்கையெல்லாம் பப்ளிக் பிளேஸ்ல போடறீங்க? உங்க வயசுக்கு வந்த அக்காகிட்ட படிக்கச் சொல்வீங்களா இப்படிப்பட்ட ஜோக்குகளை. மனசுக்கு வருத்தமா இருக்குங்க.//
அவ்வ்வ்வ்வ் போன வாரம் இதே மாதிரி ஒரு கமெண்ட் வந்து பெரிய விவாதமா போச்சுல்ல? இந்த வாரம் சுந்தர்ஜி தொடங்கியிருக்காரு. ம்ம்
ஏ ஜோக்க பத்தி நான் எதுவும் சொல்லமாட்டனே ஜூ ஜூ
இன்னைக்கு நாட்டாமை யாரையும் காணோமே .
visa, ஹாலிவுட்பாலா.. எங்கிருந்தாலும்வ் வரவும் துணைக்கு..:)
Present sir. வெட்டியதான் இருக்கேன்.
உள்ளேன் அய்யா..!!
-பிஸியாக நடிக்கும் வெட்டி
(சன் டிவியை பத்தி எழுதினதுக்குப் பதிலா.. கலிஞ்சர் டிவி பத்தி எழுதியிருக்கலாமில்ல ;0 )
//கலிஞ்சர்//
ஸாரி.. ஸ்பெல்லிங் தப்பாயிடுச்சி. அது “கழிஞ்சார்”.
//பெண் சிங்கம் பத்தி ரிங் மாஸ்டர் ஹாலிபாலி கிட்டத்தான் கேக்கணும்//
ரிப்பீட்டு..!!
அசத்திடீங்க....
visa, ஹாலிபாலி.. எனக்கு அழுகை, அழுகையா வருது.. ஏன்னா.. ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர் ஆயிட்டேன்னு சொல்லிட்டாரே..
//ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர் //
ஏ ஜோக் எழுத்தாளராம்!!! ;0
இப்பத்தான் போன வார கொத்துல மீதி கமெண்ட்ஸை படிச்சேன். :))
போன வார மேட்டரை கலாய்ச்சி ஆதரவாத்தான் எழுதிருக்காரு.. :)
எனக்கு அழுகைன்னா.. சந்தோஷ அழுகை.. அவரு வாயால நம்மளை எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாருன்னு.. நான் மதிக்கும் முக்கிய நபர்.
மோதிரக் கையால் மூக்கில் குத்து வாங்கியிருக்கீங்க. வாழ்த்துகள்!! :) :)
லேபிள் எதுக்கு இருக்கு?? :) :) :) :)
//போன வார மேட்டரை கலாய்ச்சி //
ஒருவேளை எழுத்தாளர்-ன்னு சொன்னதும் அந்த கலாய்ப்பில் ஒரு பகுதியோ??! :) :)
கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது நண்பர் தான் உங்களுடைய வலைபக்கத்தின் முகவரியை அறிமுகம் செய்தார். நான் தினமும் படிப்பதில் உங்களுடைய வலைபக்கமும் ஒன்று. எனக்கு உங்கள் மேல் பொறாமையும் வந்து உள்ளது அந்த அளவுக்கு உங்கள் விமர்சனமும், கொத்து பரோட்டாவில் வரும் விஷயங்களும் இருந்தது. ஆனால் கடந்த வாரம் A ஜோக் ஏற்படுத்திய விவாதம் அருவருக்க தக்கதாக இருந்தது. அதுவும் உங்கள் blog கில் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. தயவு செய்து A ஜோக் தவிர்க்கலாம். கொத்து பரோட்டாவில் இன்னும் கொஞ்சம் மக்கள் பிரச்சனைகளை அலசி விவரித்தால் உங்களால் சில மாற்றங்கள் முடியும் என்று நம்புகிறேன். உங்களுடைய வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இப்படிக்கு உங்கள் ரசிகன்
ரைட்டு... உள்ளேன் அய்யா...
//ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர்
ஏ ஜோக் எழுத்தாளராம்!!! ;0 //
Cable sankar is A JOKE writer
meaning : கேபிள் சங்கர் ஒரு ஜோக் எழுத்தாளர்.
@ஷங்கர்
வந்தாலும் வந்திரும்
புட்பால் ஒண்னு கூட முழுசா பாகக்லை.. நேத்து பைனல் உட்பட,
@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி
@தருமி
நன்றி
@டம்பிமேவி
ஆமா ஆனா இப்பத்தான் யூஸ் செய்ய அரம்பிச்சிருக்கானுங்க..
அப்படி சொல்ல முடியாது..
நான் மட்டும் சன் டீவி டாப் டென்னை விரும்பியா பார்த்தேன். அகஸ்மாத்தா பாத்த நேரத்தில வந்திச்சு
அப்படியா
நன்றி உங்கள் அன்புடன்
அப்படியா:(
ஏ ஜோக்புரியலையா.. ஓகே.. தனியா போன்ல சொல்றேன்.
#டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி
@பித்தன்
:)
@காவேரிகணேஷ்
நன்றி
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அது சரி
@க.பாலாசி
நன்றி அடுத்த வாரம் சரி செய்திடலாம்..
@வெடிகுண்டு வெங்கட்
நன்றி
பார்த்திடறேன்.
@தருமி
அவரு பழைய ஆளு தலைவரே..
@நான் ஆதவன்
ம்
@விசா
:(
@ரோமியோ
நீங்க ஏன் இருக்கக்கூடாது..?:)
@ஹாலிவுட் பாலா
கழிஞ்சார்..ஹி..ஹி..
பெண் சிங்கம் பார்த்த அமெரிக்க சிங்கம் ஹாலிபாலி வால்க..
@ராசராச சோழன்
நன்றி
@ஹாலிவுட் பாலா
:)
@கலாய்ப்பில் ஒரு பகுதியாய் இருந்தாலும்... எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாரே..அவ்வ்வ்வ்
@ரவிகுமார்
விடுங்க ரவி.. இப்படி ஏதாவது யாரையாவது வம்பிழுக்கிழுத்து வாயை பிடுங்கறது தான் இவங்க வேலை .. லூஸ்ல விடுங்க.. நன்றி
@சுகுமார் சுவாமிநாதன்
நன்றி
@நாகரீக பின்னூட்டம் மட்டும்
இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் மற்றவர்களை சிரிக்க வைப்பதுதான். ஸோ.. ஏஜோக் எழுத்தாளர் ஒன்றும் குறைவானது இல்லை.. அதுக்கு எழுதணும்.. எப்படியோ நானும் எழுத்தாளர் ஆயிட்டேன்..:)
திரு கேபிள் சங்கர் நான் உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன். சுவையான ஐஸ் கிரீமிற்கு கூட ஒரு செர்ரி தேவைபடுகிறது. அந்த செர்ரியும் சுவையாக உள்ளது. இன்றைய கால கட்டதில் censor என்பது அவரவர் மனதில் மட்டுமே உள்ளது.
Post a Comment