சினிமா கனவுகளின் ஆயிரம் வாயில்கள் நிறைந்த ஏரியாவில் கிட்டத்தட்ட வெளிக்கதவு உள்ள இடத்தில் அந்த அலுவலகம் அமைந்திருந்தது. ஒரு குட்டி ப்ளாட். அது ஒரு சினிமா சம்பந்தபட்ட கம்பெனி என்று வாசலில் விட்டிருந்த ஷூக்களையும், செருப்புகளையும் பார்த்தே தெரிந்து கொண்டேன். வாசலில் ஒரு மிக இளைஞன் ஓரமாய் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தான்.
பைக்கை வைத்து விட்டு உள்ளே யார் என்று பார்வையால் தேடிக் கொண்டிருந்த போது, அவன் சிகரெட்டை காலால் நசுக்கிவிட்டு “யார் சார்.. யாரை பாக்கணும்?” என்றான்.
“….. வரச்சொல்லியிருந்தாங்க..”
”அப்படியா.. வாங்க உள்ளே உட்காருங்க.. “ என்று சொல்லி ஒரு சேரை காண்பித்துவிட்டு, ஒரு கதவை திறந்து உள்ளே போனான். அது ஒரு சின்ன ஹால், இரண்டு சோபாக்களூம், சேர்களுமாய் இடத்தை அடைத்துக் கொள்ள, அங்கேயிருந்த டீவியில் டிவிடி முலமாய் அவர்களுடய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. சுவர் முழுவதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படமும், சில போஸ்டர்களும் தெரிய, அறையிலிருந்து வெளிவ்ந்து வெகு இளைஞன், “உள்ளே போங்க” என்றான். நான் என் உடைகளை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டு, லேப்டாப்பை ஒரு முறை சரியாய் மாட்டிக் கொண்டு உள்ளே சென்றேன்.
ஒரு சிறிய அறையில் ஒரு எல்.சி.டி கம்ப்யூட்டருடன் மூன்று பேர் உட்காந்திருக்க, டேபிளின் மேல் பல பெரிய கவர்களில் பெயர்கள் எழுதியிருந்தது. டேபிளின் நடுவிலிருந்தவர் கேட்டார்..” நீங்க தான்.. நாராயணனா..?”
‘ஆமாம்”
“உங்க படம் பார்த்தோம். அருமையா இருந்திச்சு, மேக்கிங் நல்லாருந்திச்சு.. பதினாலு நிமிஷம் கிட்ட வருது. நடுவுல மெசேஜ் எல்லாம் சொல்லியிருக்கீங்க. இதை ஒரு ஆறு நிமிஷத்துக்கு எடிட் பண்ணி தர முடியுமா..?”
எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம். ஒரு கலைஞனுக்கு இம்மாதிரியான பாராட்டை தவிர வேறு என்ன வேண்டும்?. “நிச்சயமா.. பண்ணலாம் சார்.”
நடு சீட்டிலிருந்தவர் தான் பேசினார். “நல்லாருக்கு.. தப்பா நினைச்சுக்க கூடாது.. உங்க வயச தெரிஞ்சுக்கலாமா?”
நான் தயக்கமில்லாமல் என் வயதை சொல்லி “ஏன் கேட்குறீங்க..?”
“ஒண்ணுமில்ல.. நம்ம நிகழ்ச்சியில உங்க வயசில பாதியிருக்கிறவங்க எல்லாம் கலந்துப்பாங்க.. ஒரு வேளை போட்டியில கலந்துகிட்ட உங்க படத்தை பத்தி நடுவர்கள் ஏதாவது குறை சொல்லிட்டாங்கன்னா.. ஒண்ணும் தப்பா நினைச்சுக்க கூடாது..”
எனக்கு சிரிப்பாய் வந்ததது. கிரியேட்டிவிட்டிக்கு ஏது வயது? என்ற எண்ணம் மனதுள் எழுந்தாலும் “சார்… என்னை பொறுத்த வரைக்கும் ஒரு படைப்பை வெளிய விட்டுட்டம்னா.. யார் வேணும்னாலும் அதை விமர்சனம் செய்ய உரிமை இருக்கு. எனக்கு ஏதும் கவலையில்லை.. ஒருவேளை நீங்க சொன்ன என் பாதி வயது நண்பர்கள் என் ”இளமை துள்ளும்” படங்களை பார்த்து கவலைபடாமல் இருந்தால் சரி..”
அவர் அசட்டுத்தனமாய் சிரித்தார். “அப்ப ..ஓகே.. அப்புறம் படம் நல்லா எடுத்து கொடுத்துருவீங்க இல்லை..?”
எனக்கு புரியவில்லை..” சார்.. என் கிட்ட நிறைய கதைகள் இருக்கு.. ஸொ.. கதைக்கோ. அல்லது அதை இயக்குவதற்கோ ஏதும் ப்ராப்ளம் இல்லை.”
“அதில்லைங்க.. நாங்க டாபிக் கொடுத்திருவோம். அதை வச்சித்தான் கதை பண்ணி செய்யணும். ஆனால் நான் சொன்னது அது இல்லீங்க… நாங்க ஸ்டைபண்ட் மாதிரி ஒரு அமெளண்ட் தருவோம். குவாட்டர் பைனல்ஸ் வரைக்கு ஒரு ஆறு படம் எடுக்க வேண்டியிருக்கும் அதுக்கு முழுசா நீங்கதான் பணம் ரெடிப் பண்ணி எடுத்துக் கொடுக்கணும்”
எனக்கு புஸ்ஸென்று ஆனது. என்ன ஆட்டம் இது. வருங்கால இயக்குனர்களை வைத்து குறும்படம் எடுக்கச் சொல்லி அதை வைத்து விளம்பரப் படுத்தி, விளம்பரஙக்ள் மூலமாய் வருமானம் பார்க்கும் நிகழ்ச்சிக்கு, எவ்வாறு படமெடுப்பவர்களை செலவு செய்ய சொல்ல முடியும் என்ற லாஜிக் இடித்தாலும்.
“சார்.. நீங்க எவ்வளவு ஸ்டைபண்ட் தருவீங்க்..?’
அவர் தயங்கி ‘ நாங்க ஒரு அஞ்சாயிரம் தருவோம்.. குவாட்டர் பைனல்ஸுக்கு பொறவு.. அமெளண்ட இங்க்ரீஸ் பண்ணுவோம். அது எவ்வளவுன்னு தெரியாது..”
எனக்கு கோபம் கோபமாய் வந்தது. சினிமாவில் அடியெடுத்து வைக்க வீட்டை விட்டு ஓடிவந்து, வேலையை விட்டு, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு உத்தரவாதமில்லாது, பல கனவுகளோடு திரியும் உதவி இயக்குனர்களுக்கு எங்கிருந்து ஆறு படம் எடுக்க பணம் கிடைக்கும். அப்போது இங்கேயும் பணம் உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க முடிகிற விஷயம் தானா.? என்று என்னுள் ஆதங்கங்கள் எழுந்தது.
‘சார்.. அஞ்சாயிரத்துக்கு கேமரா வாடகை கூட வராது. சார்”
‘போன செட் பசங்க எல்லாம் ஒரு லட்சம் கூட செலவு செஞ்சாங்க தெரியுமா.?”
“அது அவங்களோட ஆர்வத்துக்கு செஞ்சதுங்க.. வசதியிருக்கிறவங்களால செய்யமுடியும். எல்லாரகிட்டேயும் அதை நீங்க எதிர்ப்பார்க்க முடியுமா?”
‘சரி முடிவா சொல்லுங்க உங்களால செலவு செஞ்சி படமெடுக்க முடியுமா இல்லையா.?
நேரடியாய் இப்படி கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “ஒரு பதினைஞ்சாயிரம் கொடுத்தாக்கூட பரவாயில்லைங்க”
“அதெல்லாம் கிடையாதுங்க..முடிஞ்சா சொல்லுங்க.. “
“இல்லீங்க முடியாது.. நான் வர்ரேன்..” என்று கிளம்பினேன்.
”சார்.. சுமார் இரண்டாயிரம் படத்துல க்டைசியா வந்த 30 படங்களை செலக்ட் செய்திருக்கோம். யோசிச்சு சொல்லுங்க..”
நான் பதிலேதும் சொல்லாமல் யோசித்து” இல்லீங்க முடியாது.. ஆனா ஒரு சந்தோஷம்.. “என்று நிறுத்தி அவர்களை பார்த்தேன். அவர்களும் என்ன என்பது போல என்னை பார்க்க..
“நீஙக் முதல்ல சொன்னீங்களே என் வயசில பாதி இருக்கிறவங்க கலந்துக்குற போட்டின்னு. அவங்க படங்களில் என் படமும் இருக்கிறதே என்னுடய வெற்றிதான். நான் வர்றேன். நான் ஜெயிக்க உங்க நிகழ்ச்சி தேவையில்லை. “ என்று கிளம்பினேன். மனசு சந்தோஷமாய் இருந்தது.
Post a Comment
100 comments:
fhh;gNul; fphpNal;lh;]; me;e epfo;r;rpia
elj;Jk; NghNj nedr;Nrd;
,e;j khwp jpy;yhyq;fb Ntiy ,Uf;Fk;D
கார்பரேட் கிரியேட்டர்ஸ் அந்ந நிகழ்ச்சியை
நடத்தும் போதே நெனச்சேன்
இந்த மாறி தில்லாலங்கடி வேலை இருக்கும்னு
நல்லாருக்கு:)
உண்மை...சூப்பர் பதிவு
நான் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இவ்வளவு உள் குத்து இருப்பதை நினைத்தால் மிக வருத்தமாக தான் இருக்கிறது...
Hi Ji,
I used to watch this but i don't agree with the comments by the judges (mad).... They are not at all appreciating the hard work by the contestent. ALWAYS GIVING NEGATIVE COMMETNS...... I would like to record my "Negative Vote for the Judges" - Idhula Oru Jugde eppavume sarakku adichittu varuvaru pola...
உங்கள் நேர்மை,தைரியம், தன்னம்பிகை , தொழில் மேல் உள்ள காதல் ரொம்ப பிரமாதம்
வாழ்க நீ
கிருஷ்ணா
வாழ்க வளமுடன்....!
all the best Mr.Cable Sanakar..
நிதர்சனம், தர்சனம், சனம்.....
அண்ணே, நிஜமாலுமே இப்படித்தானா????
நிச்சயம் ஜெயிப்பீங்க தல....
நான் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இவ்வளவு உள் குத்து இருப்பதை நினைத்தால் மிக வருத்தமாக தான் இருக்கிறது..//
same feeling :(
இதிலேயும் இவ்வளவு உள்குத்து இருக்கா...ம்ம்ம்
என்ன கொடுமை கேபிள்ஜீ இது. பல வேதனைகளுடன் கனவுகளை துரத்தி வரும் படைப்பாளிகளை நொறுங்கச்செய்யும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி தம்பட்டம் அடித்துக்கொள்வதைவிட நடத்தாமலே இருக்கலாம்.
ஒருநாள் நிச்சயம் நீங்க ஜெயிப்பீங்க. அப்ப, இவங்க உங்கள ஸ்பெஷல் கெஸ்டா கூப்பிடுவாங்க. நீங்க கண்டிப்பா போகக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.
Cable sir itha nan kojamkuda expert pannala .
ivanungala summaa vidakoodathu
நான் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இவளவு கஷ்டம் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. பவம் இந்த ஏழை (நாளைய) இயக்குனர்கள்.
அண்ணா, நீங்கள் நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்பீர்கள். மனம் தளராதீர்கள்!. வெற்றி + அதிஷ்டம் எப்போதும் ஒருவர் பக்கமே இருந்ததில்லை. உங்களுக்கும் அந்த நேரம் வரும் வரை போராடுங்கள். வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
சங்கரநாராயணன் அவர்களே ,
சும்மா போகிற போக்கிலே அடிச்சு விடக்கூடாது.
சம்மந்தபட்டவர்களிடம் பேசினேன். அவர்கள் சொல்வதும் நியாயமாக தான் படுகிறது.
நிகழ்சிக்கு குறும்படத்தை அனுப்பும் போதே இது பற்றி நீங்கள் விசாரித்து இருக்க வேண்டும். குறும்பட டிவிடி கொடுக்க முன்பே போய் இருக்கிறீர்கள், அப்போதாவது கேட்டு இருக்க வேண்டும்.
அவர்கள் நேரத்தையும் வீணடித்து விட்டு. இப்படி பொதுவிலே ஒரு பெரிய நிகழ்சியை பற்றி ஓப்பனாக எழுதுவது பொறுப்பற்ற ஒரு செயலாகவே தெரிகிறது.
ஒவ்வொரு குறும்படத்துக்கும நிறுவனமே காசு கொடுத்தால் வரும் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு சொல்லி தான் தெரிய வேணுமா ?
கள்ள கணக்கு காமித்து, படத்தையும் சொதப்பலாக எடுத்து நிகழ்சிக்கு சங்கு ஊத்தி விடுவார்கள்.
சொந்த காசிலே எடுத்தால் தான் கொஞ்சம் பொறுப்பு வரும்.
உங்கள் படைப்புகளை மக்கள் பார்க்க ஒரு பெரிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி தருகிறது இதை மறுக்க முடியுமா உங்களால்.
சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக அல்லவா இருக்கிறது உங்கள் பதிவு.
Cholavarman is right.
The organisers spend money/time for selecting 30 people from 2000.
They spend money for advertising their own program.
They spend money for stage, judges and all the event management.
--
They give you opportunity to show your talents to Shankar kind of directors who themselves are producers who can give you a chance to direct your movie.
They give you fame among the people.
Above to that, they give you Rs.5000 stipend.
Finally you expect them to sponsor your movie also?
After all people understand Kalaignar TV dont run a charity to sponsor poor people to grow up.
என்ன சங்கர் இது??
லேபில்-ல
புனைவு-ன்னு போட்டாலும் கும்முறாங்க.
சொற்சித்திரம்-ன்னு போட்டாலும் கும்முறாங்க.
சிறுகதை-ன்னு போட்டாலுமா?????
-----------
இந்த மேட்டரை, கதையில் எங்க உண்மையா நடந்த விசயம்னு நீங்க சொல்லியிருக்கீங்க?
சரி.. சரி.. ஆனது ஆச்சி. பொதுவுல நின்னு மன்னிப்பு கேட்டுட்டு ஆகற வேலையை பாருங்க.
அப்புறம் மறக்காம அடுத்த தபா எங்கயாவது போறதுக்கு முன்னாடி அந்த ஆஃபீஸில் பாத்ரூம் எங்கயிருக்கு, அங்க உச்சா போலாமா -ன்னு எல்லாத்தையும் மொதல்லயே கேட்டு வச்சிக்கங்க.
அதெல்லாம்.. நிகழ்ச்சி நடத்துறவங்களோட பொறுப்பு கிடையாது. சூட்டை போட்டுகிட்டு ஆஃபீஸில் உட்கார்ந்திருக்கறவனுக்கா அந்த பொறுப்பு தேவை? இப்படி ஆர்வக் கோளாறில் அலையறவங்களுக்குத்தான் மொதல்ல பொறுப்பு வேணும்.
ஹும்.
//அப்புறம் மறக்காம அடுத்த தபா எங்கயாவது போறதுக்கு முன்னாடி அந்த ஆஃபீஸில் பாத்ரூம் எங்கயிருக்கு, அங்க உச்சா போலாமா -ன்னு எல்லாத்தையும் மொதல்லயே கேட்டு வச்சிக்கங்க//
ஹாலிவுட் பாலா, உங்கள் நக்கல் நையாண்டியை வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள்.
சங்கரநாராயணன் , பக்குவமில்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்.
----------------------------------
@ சங்கரநாராயணன்
இப்படி இருந்தால் எப்படி சினிமா உலகை அனுசரித்து போக போகிறீர்கள் ?
எப்படி டைரக்டர் ஆக போகிறீர்கள் ?
இப்படி ஒரு பெரிய நிகழ்ச்சியின் பின்னணியை பொதுவில் எழுதி வேடிக்கை பார்க்கும் நீங்கள் நாளை ஒரு பெரிய டைரக்டர் டீமில் இருந்தால் அந்த டைரக்டரை பற்று ஓப்பனாக எழுத மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம். ?
சக பிளாக்கர்கள் வேணுமானால் உங்களை கொண்டாடலாம். ஜால்ரா அடிக்கலாம் , சினிமா அல்லது சின்னத்திரை உலகம் அப்படி வரவேற்க வேண்டும் நீங்கள் எதிர்பார்காதிர்கள்.
போனில் பேசியபோது சொன்னதில் ஒரு வரி விடாமல் பதிவு செய்திருக்கிறீர்கள்.
ஒரு இடத்தில் படித்தேன்.....பருத்தி வீரன் கார்த்திக்கு சினிமா ஆர்வம் வந்ததாம். அவருக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்று ஆசையாம். உடனே அவருக்கு மணிரத்தினத்தின் பாசறையில் இடம் கிடைக்கிறது. இரண்டு மூன்று படங்களில் உதவி இயக்குனராய் பணியாற்றுகிறார். பிறகு இயக்கம் தனக்கு ஒத்துவராதென்று வந்துவிட்டாராம்.
இயக்குனர் ஆவதற்கு நல்ல எழுத்து திறமையும் கற்பனை வளமும் தேவையாம். அது தனக்கு இல்லை என்பதை மூன்று படங்களுக்கு பின் உணர்ந்து திருந்தி நடிகராகிவிட்டாராம்.
மணிரத்தினத்திடம் உதவி இயக்குனர்.
உங்களுக்கோ எனக்கு எளிதில் கிடைக்குமா?
ஆக.....என்ன சொல்ல வரேன்னா.....புரிஞ்சுகோங்க....
அதே நேரம் பணம் செலவு செய்ய வழி இருப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு அங்கீகாரத்தையோ அல்லது பிரபல்லியத்தையோ ஏற்படுத்திக்கொடுக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
ஆனால் உங்களிடம் போய் இப்படி கேட்டார்கள் என்பது கொஞ்சம் ஓவர். முதலில் உங்களை பற்றி குறைந்தபட்ச தகவல்களையாவது உங்களிடம் கேட்டு தெரிந்துகொண்டிருக்கலாம். :(
He He Hollywood Bala.
Comment: So Sad
Reaction: :-(
Comment: They are terrible
Reaction: :-(
Comment: Such a bad program
Reaction: :-(
Comment: Never knew there is so much "Ul kuthu"
Reaction: :-(
Comment: You are wrong. The program is actually good.
Reaction: This is just a story my brother. Read the title.
அய்யடா.. அண்ணன் மெரட்டுறாரு.
உங்க பேர எங்கனயாவது யாராவது சொன்னாங்களா?
இது நடந்த கதைன்னே வச்சிக்குவோம். ஒரு நிகழ்ச்சி நடத்துறவங்க அதோட ரூல்ஸ் அன் ரெகுலேசனை இப்படித்தான் ஒவ்வொருத்தரையா ஆஃபீஸில் கூப்பிட்டு வச்சி சொல்லுவாங்களா??
சங்கர் இப்பவும் சொல்லுறேன். ஆஃபீஸில் பாத்ரூம் எங்கயிருக்குன்னு மொதல்லயே கேட்டுக்கங்க. கேட்கலைன்னா.. மெரட்டுவாங்க போலயிருக்கு.
தலைவரே புனைவு எழுதியிருக்கிறீங்க.
எவனாவது "தமிழ் இயக்குனர்கள் மேல் நடத்தப்பட்ட வன்புணர்ச்சி"
இல்லேன்னா "பார்ப்பனீய இயக்குனர்களும் பகல் கொள்ளை சானல்களும்"
அப்படியீன்னு ஒரு எதிர் பதிவு போட்டு கல்லா கட்டிட போறான்.
நீங்க எந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சி பற்றி சொல்றீங்க .. கலைஞர் தொலைக்காட்சில வருதே அதுவா ...??
//இப்படி இருந்தால் எப்படி சினிமா உலகை அனுசரித்து போக போகிறீர்கள் ?
எப்படி டைரக்டர் ஆக போகிறீர்கள் ?
இப்படி ஒரு பெரிய நிகழ்ச்சியின் பின்னணியை பொதுவில் எழுதி வேடிக்கை பார்க்கும் நீங்கள் நாளை ஒரு பெரிய டைரக்டர் டீமில் இருந்தால் அந்த டைரக்டரை பற்று ஓப்பனாக எழுத மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம். ?
சக பிளாக்கர்கள் வேணுமானால் உங்களை கொண்டாடலாம். ஜால்ரா அடிக்கலாம் , சினிமா அல்லது சின்னத்திரை உலகம் அப்படி வரவேற்க வேண்டும் நீங்கள் எதிர்பார்காதிர்கள்.
//
தலைவரே இந்த மேட்டர பொது தளத்துக்கு கொண்டு வரமாட்டீங்கன்னு தான் நெனச்சேன்.
கொண்டும் வந்துட்டீங்க. ஆனா இந்த பார்மேட் இந்த சமாசாரத்துக்கு எடுபடல என்பதை இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.
பணமும் செல்வாக்கும் இருப்பவர்கள் கலையை எளிதில் வாங்கிவிடமுடியும் என்பதை சினிமா உலகில் சம்மந்தப்பட்ட உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
நீங்கள் இந்த பதிவை நீக்கி விடுவது உத்தமம்.
தேவையற்ற கமேன்ட்டுகளை அனுமதிக்க வேண்டாம்.
//தமிழ் இயக்குனர்கள் மேல் நடத்தப்பட்ட வன்புணர்ச்சி//
விசா.. சரியா சொல்லனும். அது..
டிவி தயாரிப்பாளர்கள் மேல் நடத்தப்பட்ட எழுத்து வன்புணர்ச்சி
//டிவி தயாரிப்பாளர்கள் மேல் நடத்தப்பட்ட எழுத்து வன்புணர்ச்சி//
அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க!!!!
///நீங்கள் இந்த பதிவை நீக்கி விடுவது உத்தமம்.
தேவையற்ற கமேன்ட்டுகளை அனுமதிக்க வேண்டாம்.//
ஹா.. ஹா.. ஹா..! கேபிள்.. உங்களை பத்தித் தெரியல போல!!
---
//ஆனா இந்த பார்மேட் இந்த சமாசாரத்துக்கு எடுபடல என்பதை இங்கே பதிவு செய்துகொள்கிறேன்///
நான் அப்படி நினைக்கலை. இங்க ஒவ்வொரு ப்ரொக்ராமிலும்.. அந்த ப்ரொகாமுக்கு நீங்க எப்படி ப்ரிப்பேர் பண்ணிட்டு வரணும், அதோட சட்ட திட்டங்கள் என்னன்னு மொதல்லயோ அல்லது நிகழ்ச்சியின் முடிவிலோ ஒரு ஸ்லைட் போடுவாங்க.
அதுவும் இல்லைன்னா.. அந்த நிகழ்ச்சியோட வெப்ஸைட்டில் அந்த மேட்டர் இருக்கும்.
அந்த நிகழ்ச்சிக்கு வர்ற பார்வையாளர்களுக்குக் கூட என்னென்ன ரூல்ஸ் கடைபிடிக்கனும்னு கூட போட்டிருக்கும்.
அதையெல்லாம் பண்ணாம... கூப்பிட்டு வச்சி சொல்லிகிட்டு இருந்தா...??
//அய்யடா.. அண்ணன் மெரட்டுறாரு.//
பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியை கண்டிக்கிறேன்
///நீங்கள் இந்த பதிவை நீக்கி விடுவது உத்தமம்.
தேவையற்ற கமேன்ட்டுகளை அனுமதிக்க வேண்டாம்.//
எது தேவையுள்ள ஆணி எது தேவையில்லாத ஆணி என்று கணித்து சொன்னால் பிடுங்கி எறிந்துவிடுவோம்.
//பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியை கண்டிக்கிறேன்//
சார்.... நீங்க ப்லாகுக்கு புதுன்னு நினைக்கிறேன். இதை வேற மாதிரி சொல்லனும்.
பிரச்சனையை நீர்க்கச் செய்துவிட்டான் இந்த கோமாளி - என்பதே சரியான வாதம்.
(இதையும் உங்களை கிண்டல் பண்ணுறேன்னு நினைச்சிக்காதீங்க :) ).
விஷயம் இது தான். கேபிளை அருகில் அழைத்து விதியை காதில் சொல்லி கிலி ஏற்றியிருக்கவேண்டாம். இது ஒன்று மட்டுமே பிழை மற்றபடி தயாரிப்பு எக்சட்ரா எல்லாம் நிகழ்ச்சி நடத்துபவர் விருப்பம்.
விதிமுறைகளை நேரில் அழைத்தும் சொல்லலாம். ஆனால் சொல்வதற்கு முன் கேபிளை பற்றி தெரிந்துகொண்டுவிட்டு அழைத்திருக்கலாம். அல்லது தொலைபேசியிலாவது அவரை பற்றி கேட்டு இப்படி ஒரு விதி உள்ளது அதற்கு நீங்கள் தயாரா என்றாவது கேட்டிருக்கலாம் என்பது மட்டுமே என் குறை.
இதை குறையை வேறு விதமாக அழகாக பதிவு செய்திருக்கலாம்.
சில விசயங்களை பொதுவில் பகிர்வதால் ஏற்படும் இடஞ்சல்களில்
இதுவும் ஒன்று...
//ஒவ்வொரு ப்ரொக்ராமிலும்.. அந்த ப்ரொகாமுக்கு நீங்க எப்படி ப்ரிப்பேர் பண்ணிட்டு வரணும், அதோட சட்ட திட்டங்கள் என்னன்னு மொதல்லயோ அல்லது நிகழ்ச்சியின் முடிவிலோ ஒரு ஸ்லைட் போடுவாங்க.
அதுவும் இல்லைன்னா.. அந்த நிகழ்ச்சியோட வெப்ஸைட்டில் அந்த மேட்டர் இருக்கும்.
அதையெல்லாம் பண்ணாம... கூப்பிட்டு வச்சி சொல்லிகிட்டு இருந்தா...??//
சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது , இதே கேள்வியை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போய் சொல்லிப்பாருங்கள்.
சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பின் அரிச்சுவடியே தெரியாதவர்களிடம் விவாதம் செய்வது வீண் வேலை என்று தான் தோன்றுகிறது.
அண்ணே.. உங்களுக்கு எல்லாம் தெரியும்ணே..! தமிழ் சேனலை ஆறு வருசமா பார்க்காத தற்குறி நானு.
இதுல போயி.. சூப்பர் சிங்கராவது, ஒன்னாவது!!
//சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது , இதே கேள்வியை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போய் சொல்லிப்பாருங்கள்.
//
கேபிள் இவரை.. உட்டுடாதீங்க. ஏகப்பட்ட ரெஃபரன்ஸ் தெரிஞ்சு வச்சிருக்கார் போல. புடிச்சிக்கங்க.
சம்பந்தப்பட்டவங்க கிட்டயே பேசினாராம். ஆனா.. சகப் பதிவர்கள் நாங்கதான் ஜால்ரா போடுறோம். ஒத்துக்கங்க.
//சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பின் அரிச்சுவடியே தெரியாதவர்களிடம் விவாதம் செய்வது வீண் வேலை என்று தான் தோன்றுகிறது.//
நேரடியாகவே கேட்கிறேன்.
மணிரத்னம் 1980ல் ஒரு குறும்படம் எடுக்கிறார். அது உங்கள் கைக்கு 2010ல் கிடைக்கிறது.
2010ல் மணிரத்தினத்தை பற்றி விசாரிக்காமல் அல்லது அவரை பற்றி தெரியாமல் நேராக உங்கள் அலுவலகத்திற்கு அழைத்து "அய்யா ஒரு குறும்படம் 5000 ரூபாய் தருவோம்...இது தான் சின்னத்திரை விதி" என்று பேசுவீர்களா?
முதலில் அழைப்பவரை பற்றி குறைந்தபட்ச தகவல்களையாவது சேகரித்திருக்க வேண்டாமா என்பது தான் என் கேள்வி. அது மட்டுமே இங்கே தவறு.
இதற்காக கேபிளை மணிரத்தினத்தோடு ஒப்பிட்டுவிட்டதாக பகடி செய்து பின்னூட்டம் இடவேண்Dஆம். ஒரு உதாரண்த்திற்கு....
உங்களுடைய சின்னத்திரை தயாரிப்பு விதிகளை நானும் அறிவேன்.
//தமிழ் சேனலை ஆறு வருசமா பார்க்காத தற்குறி நானு.//
நாசமாப்போச்சு...
இத மொதல்லையே சொல்ல கூடாதா.
கூத்துல கோமாளி மாதிரி.....சே சே
//சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பின் அரிச்சுவடியே தெரியாதவர்களிடம் விவாதம் செய்வது வீண் வேலை என்று தான் தோன்றுகிறது//
சாரிங்க!! எனக்கு தற்போதைக்கு.. இதைவிட நல்ல ஆணியில்லை. அதனால.. நான் இங்க ஆஜர். உங்களுக்கு????
//நாசமாப்போச்சு...
இத மொதல்லையே சொல்ல கூடாதா.
கூத்துல கோமாளி மாதிரி.....சே சே//
அவர் சின்னத்திரையை ஆறு வருடமாக பார்க்காததால் கோமாளி ஆனார். பார்த்தவர்கள் பேமானி ஆகிவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்.
//நாசமாப்போச்சு...
இத மொதல்லையே சொல்ல கூடாதா.//
தோடா...!!! இவருக்கு மட்டும் நாம மொதல்லயே சொல்லனுமாம்.
ரூல்ஸை மட்டும்.. நாமளே மொதல்ல கேட்டுக்கனுமாம்.
///அவர் சின்னத்திரையை ஆறு வருடமாக பார்க்காததால் கோமாளி ஆனார். பார்த்தவர்கள் பேமானி ஆகிவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்//
ஹலோ.. கொஞ்சம் அடக்கி வாசிங்க. அவரு.. சம்பந்தப்பட்டவங்க கிட்ட ‘பேசிட’ப் போறாரு. எனக்கு ஆட்டோ அனுப்ப முடியாது. நீங்க மாட்டிக்கப் போறீங்க! :)
//நாசமாப்போச்சு...
இத மொதல்லையே சொல்ல கூடாதா.//
முதல்ல மட்டும் நீங்க சொல்லியிருந்தீங்க இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தன் வாத திறமையால் உங்களை வீழ்த்தியிருப்பார் என்பது திண்ணம்.
///முதல்ல மட்டும் நீங்க சொல்லியிருந்தீங்க இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தன் வாத திறமையால் உங்களை வீழ்த்தியிருப்பார் என்பது திண்ணம்.///
ஹா.. ஹா.. ஹா.. ஹா..!! மீ வெய்ட்டிங்! :)
//முதலில் அழைப்பவரை பற்றி குறைந்தபட்ச தகவல்களையாவது சேகரித்திருக்க வேண்டாமா என்பது தான் என் கேள்வி. //
இது என்ன உங்க ஊர் கேபிள் டி வி'ல வினாடி வினா நிகழ்ச்சி நடத்துற மாதிரின்னு நினைத்தீர்களா?
ரெண்டாயிரம் குறும்படம் வரும் , அதுல சிறந்த படங்கள பார்த்து செலக்ட் பண்ண ஒரு டீம் இருக்கும் , அவங்க செலக்ட் பண்ணது தான் சங்கரநாராயணன் அவர்களின் படம்.
அத்தனை படங்களையும் மேலே உள்ளவர்களும் பார்த்தல் மண்டை காய்ஞ்சு போகும்.
--------------------------------
கிடைத்த வாய்ப்பை அநியாயமாக கோட்டை விட்டு விட்டார் என்றே நினைக்கிறேன்.
சங்கரநாராயணன் அவர்கள் படம் நல்ல படமாக இருந்ததாக செலக்ட் செய்தவர்கள் கூறுகிறார்கள் , கிடைத்த மேடையை நழுவ விட்டு விட்டீர்களே சங்கரநாராயணன் .
//கூத்துல கோமாளி மாதிரி.....///
யப்பா... இந்த நாட்டமைங்கள... ’கோமாளி’-ன்னு சொல்ல வைக்கறதுக்குள்ள... நொரை தள்ளிடுச்சிடா சாமி.
//இது என்ன உங்க ஊர் கேபிள் டி வி'ல வினாடி வினா நிகழ்ச்சி நடத்துற மாதிரின்னு நினைத்தீர்களா? //
விசா.. என்னாதிது??? மொதல்லயே.. நீங்க எந்த ஊருன்னு சொல்லுறதில்லையா? இதுக்கெல்லாமா ஆஃபீஸ்ல கூப்பிடுவாங்க?
ரிஜக்டட்.. ரிஜக்டட்
//ரெண்டாயிரம் குறும்படம் வரும் , அதுல சிறந்த படங்கள பார்த்து செலக்ட் பண்ண ஒரு டீம் இருக்கும் , அவங்க செலக்ட் பண்ணது தான் சங்கரநாராயணன் அவர்களின் படம்.//
சங்கர் நாராயணனுக்கு போன் பண்ணி கூப்பிட்ட ஊழியர் யார்?
அவர் கேட்டு தெரிந்துகொண்டிருக்கலாமே?
அல்லது
டி.வி யிலிருந்து அழைப்பு என்றவுடன் யாரும் ஓடி வருகிறார்கள் என்று பொது சிந்தனையால் அந்த முயற்சியை அந்த ஊழியர் எடுத்திருக்கமாட்டார் என்று ஒத்துக்கொள்கிறீர்களா?
கேபிள் அண்ணா...இது போன்ற விவாதங்கள் நாளை உங்கள் வளர்ச்சிக்கு
தடையாக அமைந்து விடக்கூடாது...
சங்கரநாராயணன் அவர்கள் பதில் சொன்னால் தான் இனி விவாதம் .
//அத்தனை படங்களையும் மேலே உள்ளவர்களும் பார்த்தல் மண்டை காய்ஞ்சு போகும்.//
பாஸ்....இப்படி எல்லாம் பேசக்கூடாது. சம்பளத்துக்கு தானே பாத்தீங்க. இல்ல தர்மத்துக்கா...இல்லை கலை சேவைன்னு செஞ்சீங்களா?
2000 படத்த பாத்து செலக்ட் பண்ண ஒருத்தன் சம்பளம் வாங்கினானா இல்லையா.
//சங்கரநாராயணன் அவர்கள் பதில் சொன்னால் தான் இனி விவாதம் //
நல்லவேளைடா சாமி!! இப்ப பாத்ரூம் போகலாம்.
எதுக்கும் லேப்டாப்பை பாத்ரூமுக்கு எடுத்துட்டு போய்டுறேன்.
//நல்லவேளைடா சாமி!! இப்ப பாத்ரூம் போகலாம்.
எதுக்கும் லேப்டாப்பை பாத்ரூமுக்கு எடுத்துட்டு போய்டுறேன்.//
ha ha ha ha ha ha
//சம்பளத்துக்கு தானே பாத்தீங்க. இல்ல தர்மத்துக்கா...இல்லை கலை சேவைன்னு செஞ்சீங்களா//
ஒருவேளை... பத்துப் படம் பார்க்க இத்தனைக் காசுன்னு பார்த்தவங்க கிட்ட வசூல் பண்ணியிருப்பாங்களோ?
ஓ...நம்ம ..பிலாக் கும்மியா..!
நல்லா கும்முங்க..
//சங்கர் நாராயணனுக்கு போன் பண்ணி கூப்பிட்ட ஊழியர் யார்?
அவர் கேட்டு தெரிந்துகொண்டிருக்கலாமே?//
சங்கரநாராயணன் அவர்கள் தான் ஒரு பிளாகர் என்றும் கேபிள் டிவி உரிமையாளர் என்றும் தான் தன்னை அறிமுகம் செய்து கொண்டு உள்ளார்.
அங்கே யாரும் தமிழ் ப்ளாக் படிப்பதில்லை.
அப்படியே படித்தாலும் இவர் பிரபல பிளாகர் என்பதற்காக விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா ?
உங்க நிகழ்ச்சியில வர்ற குறும்படத்த பாத்து கிலி ஆனவன் நானு.
நேத்தைக்கு பைனல்ஸ்ல ஒரு குறும்படம் போட்டான். தலைவாசல் விஜய் கூட நடிச்சிருந்தாரேன்னு பாத்தேன்.
"எங்க தொழிலுக்கு பெண் குழந்தை தானே வசதி"
அந்த டயலாக்க சொன்ன பிறகு பிளாஷ் பேக் போட்டா சிறந்ததா....அல்லது பிளாஷ் பேக்கில் நடந்த சம்பவங்களை சொல்லிவிட்டு இறுதியில் அந்த வசனம் வந்தால் சிறந்ததா.
இதை ஒரு அடிப்படை சினிமா ரசிகனிடம் கேட்டால் கூட சொல்லுவான்.
அதை கூட சரியாக யூகிக்க முடியாதவர்களாக போட்டியாளர்கள் இருக்கிறார்களே என்று வருத்தம்.
பாலச்சந்தர் அதை சரியாக அவதானித்து விமர்சித்தார்.
//அப்படியே படித்தாலும் இவர் பிரபல பிளாகர் என்பதற்காக விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா ?
//
Hello Simple question.
உங்க கடையில பொருள் வாங்க கூப்பிடுறீங்க. பொருளோட விலை ஒரு லட்ச ரூபாய். போன் பண்ணி ஒரு லட்ச ரூபா இருக்கான்னு கேப்பீங்களா மாட்டீங்களா? ஒரு வேளை நீங்கள் அழைக்கும் நபர் கேர் ஆப் பிளாட்பாரமாக கூட இருக்கலாம். அதனால் முதலில் ஒரு காலத்தில் குறும்படம் எடுத்தவரின் தற்போதைய நிலை என்ன என்பதை போனில் அறிந்துகொண்டுவிட்டு அழையுங்கள்.
பிளாகருக்கும் குறும்படத்திற்கும் சம்மந்Tஹமில்லை.சும்மா எதையாவது உளறவேண்டாம்.
//அங்கே யாரும் தமிழ் ப்ளாக் படிப்பதில்லை.
//
ஹிந்தி பிளாக் படிப்பாய்ங்களோ...
எச்சூச்மீ..
மெசேஜ் ஃப்ரம் பாத்ரூம்!!
எதுனா... எங்கள மாதிரி தற்குறிகளுக்கு ஏத்தா மாதிரி.. பேசவும்.
ஒன்னியும் புர்ல.
""" 5000 ல , அவிங்க கொடுக்குற தலைப்புல ,6 படம் """...... அதுக்கு பொறவு கொஞ்சம் கூட்டி கொடுப்பாய்ந்கலாம் ....
ஒன்னு--- அந்த 3பேர் ல ஒருத்தனும் வாழ்கையில் ஒரு குறும் படத்தைக்கூட எடுத்திருக்க மாட்டானுங்க ...
இல்ல ---இந்த நிகழ்ச்சிக்கான விழாமபரத்துக்காக லட்சகணக்கில் துட்டு பார்த்த பிறகும் இன்னமும் நாக்கு வழிக்கிற பஞ்ச பரதேசிகளா இருக்கணும் !
////அங்கே யாரும் தமிழ் ப்ளாக் படிப்பதில்லை.//
வாள்க.. டமிள்!! வாள்க கலிஞ்ஜர்.
//ஒன்னு--- அந்த 3பேர் ல ஒருத்தனும் வாழ்கையில் ஒரு குறும் படத்தைக்கூட எடுத்திருக்க மாட்டானுங்க ...//
மொதல்ல.. பார்த்திருப்பாங்களான்னு கேளுங்க தல!!
எல்லாம் நம்மள மாதிரிதானே...! எல்லாம் தெரிஞ்சா மாதிரி சபைல பேசறது ரொம்ப சுளுவு. மீ த எக்ஸாம்பிள்.
வாட் ஹேப்பனிங்?
நான் குளிச்சிட்டு வர்ற நேரங்கறது, ஜெயலலிதா தூங்கி எந்திரிக்கிற நேரத்துக்கு சமம். அப்பவும் இங்க ஒரு கமெண்டையும் காணாம்?
ஹலோ.... ஹலோ..!!
இனி வ்ரும் எல்லா பின்னூட்டங்களும் சிறுகதையை பற்றிய பின்னூட்டமாக இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். இது ஒரு புனைவு.. யாரையும் குறிப்பிடுவன அல்ல.. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கர்.. சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்க.
அவுரு.. எங்கள மாதிரி ஜால்ரா தட்டுறவுங்களுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாராம். அண்ணன் அடிக்கிற அடியில ட்ரம்ஸ் கிழிஞ்சிடும் போலகீது.
வாங்க.. வாங்க.. இன்னிக்கு.. இங்கனதான் கும்மி!!!
//இது ஒரு புனைவு.. யாரையும் குறிப்பிடுவன அல்ல.. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//
ஹா.. ஹா.. ஹா..!!
இதைத்தானே நான் மொதல்லயே சொன்னேன்.
//இது ஒரு புனைவு.. யாரையும் குறிப்பிடுவன அல்ல.. //
இது காமெடியா அல்லது தப்பிக்கும் முயற்சியா?
ஒன்று பதிவை நீக்குங்கள் அல்லது எனது கமெண்டுகளை வெளியிடுங்கள்.
நீங்கள் என்ன வேணா எழுதி போடுவீர்கள் அதற்கு யாரும் கேள்வி கேட்டால் மாடரேட் செய்து விடுவீர்கள் , அப்படி தானே ?
நல்லா இருக்குதுங்க உங்க எழுத்து சுதந்திரம் ....
//ஒன்னு--- அந்த 3பேர் ல ஒருத்தனும் வாழ்கையில் ஒரு குறும் படத்தைக்கூட எடுத்திருக்க மாட்டானுங்க ...//
இது போன்ற கமெண்டுகளை அனுமதித்து உங்கள் கோபத்தை தீர்த்து கொள்கிறீர்கள் போலும்.
தல அழகா கதைய எழுதி,
[நிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர். ]
தெளிவா தலைப்பும் லேபிளும்[Labels: short story, சிறுகதை, நிதர்சன கதைகள் ],குடுத்தீங்க, அதன் பின் வந்த பின்னூட்டத்துக்கு போட்டவரே பொறுப்பு.நீங்க அதை ஆமோதிச்சு பதிலும் சொல்லலை.எந்த இடத்திலும் சம்பந்த பட்ட நிறுவனத்தின் பேரையோ அட்ரசையோ,நடுவர் பேரையோ சொல்லலை.
=====
ரொம்ப நல்ல கதை,இதையே ஷார்ட் ஃப்லிமா எடுக்கலாம்,ட்ரை பண்ணுங்க,
செம ரீச் இருக்கும்.
=====
தல ,கோசுக்காம தொடர்ந்து மாடரேஷன் வைங்க.
ஆமா கீதப்பிரியன்..நன்றி
//தெளிவா தலைப்பும் லேபிளும்[Labels: short story, சிறுகதை, நிதர்சன கதைகள் ],குடுத்தீங்க, அதன் பின் வந்த பின்னூட்டத்துக்கு போட்டவரே பொறுப்பு.//
பொறி வைத்தல் என்றால் என்ன? சிறு குறிப்பு வரைக.
---
//தல ,கோசுக்காம தொடர்ந்து மாடரேஷன் வைங்க//
ஏங்க.. அப்புறம்.. நானெல்லாம் ஆஃபீஸில் என்ன பண்ணனும்னு நினைக்கறீங்க? கும்மிக்கு எங்க போறது?
எனக்கு நல்லது பண்ணலைன்னாலும் பரவாயில்ல. அட்லீஸ்ட்!! :)
------
ஆஹா.. கமெண்ட் பப்ளிஷ் ஆகனும்னா ‘சிறுகதை’ பத்தி எதுனா சொல்லனுமே.....
ஓகே!! சிறுகதை.. வாழ்க வாழ்க!!
கீதாபிரியனுக்கு மட்டும் உடனே பதில் சொல்கிறீர்கள்?
ஆக , தெரிந்தே தான் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.
@சோழவர்மன்
கீதப்பிரியன்..புனைவை பற்றி சொன்னார் அதற்கு பதில் சொன்னேன். கீதப்பிரியனை எனக்கு தெரியும். அவருக்கு ஒரு ப்ரொபைல் இருக்கிறது. ஆனால் சோழவர்மன் என்பவருக்கு ப்ரொபைல் கூட இல்லை. அதுமட்டுமில்லாமல். இது ஒரு புனைவு.. இப்புனைவு பற்றிய கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியும்.. அதற்கு சம்மந்தமில்லாத கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது..? அதனால் தான் மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடவிலலை.. தலைவரே.. அதுமட்டுமில்லாமல் நான் இப்போதுதான் ஆன்லைனுக்கு வந்தேன். வந்து பார்த்த போதுதான் தேவையில்லாத கும்மி ஓடிக் கொண்டிருப்பதால் அதை கட்டுப்படுத்த, மாடரேஷன் வைத்திருக்கிறேன். தலைவரே.. நன்றி.
@சோழ்வர்மன்
உங்களுடன் பேச வேண்டுமே.. உங்கள் தொலை பேசி எண்ணை மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா?
//நல்லா இருக்குதுங்க உங்க எழுத்து சுதந்திரம் .//
பாவங்க சங்கர்!! ரொம்ப காண்டாவுறாரு. எதுனா பார்த்துப் பண்ணுங்க.
சிறுகதை.. வாழ்க.. வாழ்க..!!
//உங்களுடன் பேச வேண்டுமே.. உங்கள் தொலை பேசி எண்ணை மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா?//
தனியா கூப்பிட்டு சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள போகிறீர்களோ?
சம்மந்தப்பட்டவர்கள் எண் உங்கள் போனிலேயே உள்ளதே,
அனைவரும் உங்கள் பதிவை படித்து விட்டார்கள் , தாராளமாக அவர்களிடமே பேசலாம்.
//கீதப்பிரியன்..புனைவை பற்றி சொன்னார் அதற்கு பதில் சொன்னேன்.//
அப்பட்டமாக குறிப்பிட்டு எழுதுவது ,
யாராவது ஏன் இப்படி என்று கேட்டால் "இது புனைவு" என்று சொல்லி தப்பித்து கொள்வது
நீங்களுமா ?
// கீதப்பிரியனை எனக்கு தெரியும். அவருக்கு ஒரு ப்ரொபைல் இருக்கிறது. ஆனால் சோழவர்மன் என்பவருக்கு ப்ரொபைல் கூட இல்லை. //
ப்ரோபைல் என்ன பாஸ்போர்ட் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா ?
அவனவன் இஷ்டத்துக்கு அதில் புருடா விட்டு கொண்டு இருக்கிறான்.
//தனியா கூப்பிட்டு சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள போகிறீர்களோ? //
அலோ.. தலைவரே.. இப்போ என்ன வந்துவிட்டது உங்களுடன் சமாதானம் பேச..? முகம் தெரியாத உங்களை பற்றி தெரிந்து கொள்ளவே.. அது மட்டுமில்லாமல் ப்ரொபைலே கொடுக்காமல் உள்ள நீங்கள் உங்க தொலை பேசி எண்ணை பொதுவில் வைக்க சங்கடப்படுவீர்கள் என்ற எண்ணத்தில் தான். மின்னஞச்லில் கேட்டேன்.உங்களை பற்றி தெரிந்து கொள்ளவே தவிர.. வேறெதுக்குமில்லை.. விருப்பமில்லையெனில்
அனுப்பத் தேவையில்லை. நண்பரே.. நன்றி
:)
//சோழவர்மன் said...
ஒன்று பதிவை நீக்குங்கள் அல்லது எனது கமெண்டுகளை வெளியிடுங்கள்.
நீங்கள் என்ன வேணா எழுதி போடுவீர்கள் அதற்கு யாரும் கேள்வி கேட்டால் மாடரேட் செய்து விடுவீர்கள் , அப்படி தானே ?
நல்லா இருக்குதுங்க உங்க எழுத்து சுதந்திரம் ....//
என்னாய்யா நடக்குது இங்க....????!
சோழவர்மன் நீங்க கலைஞர் டிவி பிஆர் ஓ வா இப்பிடி டென்ஷன் ஆவுறீங்க....
இது புனைவுன்னு அவரு சொல்லுறாரு.. நீங்க இல்லைன்னு சொல்லுறீங்க ஸோ வாட்....
இது உண்மை நிகழ்ச்சியா இருந்தால் என்ன எழுத கூடாதுன்னு சொல்லுறீங்களா..?
நெனச்சேன். இப்படி நீங்க கேட்டா.. உடனே தலைல உட்கார்ந்துக்குவாய்ங்களே..!!
எங்கிருந்துதான் கிளம்புறாய்ங்களோ.. ஜமுக்காளத்தையும், சொம்பையும் தூக்கிகிட்டு.
சிறுகதை வாழ்க வாழ்க.
ஹைய்யோ.. மறந்துட்டனே...
சிறுகதை வாழ்க.. வாழ்க..
//தனியா கூப்பிட்டு சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள போகிறீர்களோ? //
ஆமாங்க!! நார்வே நாட்டு அதிபரு கூட உங்களுக்காகத்தான் வெய்ட்டிங்.
சார்.. பிஸிங்களா??
//எங்கிருந்துதான் கிளம்புறாய்ங்களோ.. ஜமுக்காளத்தையும், சொம்பையும் தூக்கிகிட்டு.//
aiyoa aiyoa....
//நெனச்சேன். இப்படி நீங்க கேட்டா.. உடனே தலைல உட்கார்ந்துக்குவாய்ங்களே..!! //
புனைவு புனைவு என்று தலையில் அடித்து சத்தியம் செயபவர்களோடு என்ன விவாதம் செய்ய ?
Koyyala yaruda indha சோழவர்மன்??
கேபிள் அண்ணாச்சி...இந்த மாதிரி தில்லாலங்கடி இல்லைன்னாதான் நான் ஷாக் ஆகியிருப்பேன்.
ஒரு காலத்துல அரசியலில் ஆர்வம் இருப்பவர்கள் வந்து பெரிய அளவில் வளர முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது கோடிக்கணக்கில் பணமும் ஆள் பலமும் வாரிசும்தான் அரசியலில் நுழையவே முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்கள் இன்று சினிமாவையும் அப்படி ஆக்கி விட்டார்கள்.
அவர்களின் வாரிசுகள் நல்ல தயாரிப்பாளர்களையும் துறையை விட்டே ஓடச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதால் நம்மால் குமுறத்தான் முடிகிறது.
ஒரு படத்தில் மிக அதிக உழைப்பைக் கொடுக்கும் உதவி இயக்குனர்களுக்குதான் பண நெருக்கடி நேரத்தில் பேட்டா கட் ஆகும். அதற்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
Hi shankar,
Excellent record. I really apprieciate your efforts.
In this blog, i see the honesty and freedom.
Please continue to do so. Dont get influence on you. Then you lose your identity.
Please take it as advise not suggestion.
Regards
Edwin R
Oh My God.. எனக்கு தொலை பேசியில் உங்கள் எண்ணிற்கு பரிசு விழுந்திருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அழைத்துவிட்டு 5000 ரூபாய் கட்டி சேரச் சொல்லும் லிங்க் பிஸினஸ் நினைவுக்கு வருகிறது.. மிகவும் வருத்தம். My support is to the hero in this story...
தல உங்க ட்விட்டர் விட்ஜெட்டில் எதோ கோளாறு,உங்க ப்ரொஃபைலுக்கு பதில் யாரோ அமெரிக்கனின் ப்ரொஃபைல் காட்டுது,நீங்க பிளாகர் டெம்ப்ளேட்டுக்குள்ளே இருக்கும் ட்விட்டெர் விட்ஜெட்டையே போடலாம்,
கோட் நடுவில் உங்கள் தளத்தின் ஐடியை போடுங்கள்,
ஃபேஸ்புக் பேஜ் விட்ஜெட்டும் வைத்தால் பலனிருக்கும் தல.
இதிலேயும் இவ்வளவு உள்குத்து இருக்கா???????????
Sooooopaaaruuuuuu matter Sooooopaaaruuuuuu
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!
@இளா
நன்றி..இளா
Post a Comment