நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி
”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.”
“எனக்கும் தான்”
டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது. ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது?. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது? காதல் என்றா?. காதலிக்கும் வயசா இது..?
ஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா..? இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான். என்ன எதிர்பார்க்கிறேன்? எதை தேடுகிறேன்? இன்று நான் எடுத்த முடிவு சரியா? என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில் வழிய, கண்ணாடியில் பார்த்த போது சந்தோஷ் நினப்புத்தான் ஓடியது. சந்தோஷுக்கு சிகப்பு தான் கலர். சிகப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சந்துருவுக்கு சிகப்பு கலர் பிடிக்காது. கல்யாணம் செய்த நாளிலிருந்து இது வரை சிகப்பை என் கண்ணில் காட்டியதேயில்லை. நானாக வாங்கினாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான். குழந்தை அவன். என் புருஷன். என் விஷயத்தில் எதிலும் தலையிடமாட்டான் இந்த சிகப்பு கலர் விஷயத்தை தவிர, இது வரை அதிர ஒரு வார்த்தை பேசியதில்லை. என் முகச்சுழிப்புக்கு பதில் தெரிந்தவன். எங்கேயும், எப்போதும் என்னை ஆளாமல் அன்பால் ஆட்கொள்பவன். நல்ல வசதியும் கையில் வைத்து தாங்கும் கணவன் இருந்து வேற எதை நான் சந்தோஷிடம் தேடுகிறேன்?. செக்ஸா..?
சந்தோஷ் என் டீம் லீடர். என்னை விட எட்டு வயது இளைஞன். திருமணமாகாதவன். நான் தான் டீம் லீடர் ஆகியிருக்க வேண்டும். என்னால் அந்த டென்ஷனை சமாளிக்க முடியும் என்ற நம்பிககையில்லை. அதுமட்டுமில்லாமல் நான் வேலை செய்வது சம்பளத்துக்காக அல்ல. என் சந்தோஷத்துக்காக. வீட்டிற்கு போயும் டார்கெட் குறித்து புலம்ப நான் தயாராகயில்லை. வந்த மாத்திரத்திலேயே அவன் என்னை ஆள ஆரம்பித்துவிட்டான். ஏனோ தெரியவில்லை பார்த்த மாத்திரத்தில் சில பேரை பிடிக்கும், பிடிக்காமல் போகும். எனக்கு இவனை பிடித்து போனதற்கான காரணங்கள் தெரியவில்லை. சமயங்களில் தீயாய் பரபரத்தான், குளிராய் பேசினான், சொடுக்கில் முடிவெடுத்தான். அணைப்பாய் ஆதரித்தான். ஆனால் ஆதிக்கமாய் ஆட்கொண்டான். நான் இதுவரை பார்க்காத ஒரு ஆளுமை. சமயங்களில் அவனை ச்கிக்க முடியாத அளவுக்கு ஆளுமை செலுத்தினான். எரிச்சலாய் குழுவில் நினைத்தாலும், எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.
டீமில் அவனுக்கு வேண்டிய அத்துனை விஷயங்களையும், டேட்டாக்களையூம் நான் தான் கொடுக்க வேண்டியதாக இருந்ததால். தொடர்ந்து ஆன்லைனில் பேசிக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.
முதுகில் சூடான மூச்சு பட்டு சுட்டது. சட்டென திரும்பிய மாத்திரத்தில் அவ்வளவு நெருக்கத்தில் தடுமாறி சந்தோஷின் மார்பில் சாய்ந்தாள். அவன் அணைத்தான். உடலெங்கும் ஜுரம். உதடு உலர்ந்து போனது. ஏன் ஒரு சின்ன பெண்ணைப் போல எக்ஸைட் ஆகிறேன்?. ஆணின் ஸ்பரிசம் தெரியாதவளா..? ஒரு வேளை நிச்சயம் இது காதல் தானோ.. இந்த ஜுரம் உடலுள் ஏற்படும் தேவையினால் அல்ல.. பிடித்தவனுடனான காதலின் வேகம். ஆகங்காரமாய் என்னை எடுத்துக் கொள்ளும் ஆளுமை. தட்டாமல் உள் நுழையும் ஆதிக்கம். ஆனால் இது எனக்கு நலல்தலல.. என்று மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. சந்தோஷின் அணைப்பு இறுக ஆரம்பித்து, கழுத்தில் முகம் புதைத்தான். தேவையில்லாமல் சந்துருவின் ஞாபகம் வந்தது. அவன் எப்பவும் இப்படித்தான்.
தினம் காலை குசலம், வேலை விஷயம் என்று சாட்டிலும், மெயிலிலும், பேச ஆரம்பித்து பகக்த்து கேபினிலிருந்து போனில் பேச ஆரம்பிக்கும் போது நான் தடுத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் சினிமா பற்றியும், உடைகளை பற்றி விமர்சித்த போதும் கட் செய்திருக்க வேண்டும். சல்வாரின் வெளியே தெரிந்த பிரேசியரின் பட்டையை என்னிடம் எதுவும் சொலலாமல், சட்டென தோளணைத்து சுவாதினமாய் கை வைத்து உள்ளே தள்ளி, சிரித்த போதாவது ரியாக்ட் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை.
இருக்கி அணைத்து முதுகில் மூச்சு சுட, சட்டென தூக்கத்திலிருந்து திரும்பி,”என்ன சந்துரு?” என்று தெரிந்தே கேட்டால் “ஒண்ணுமில்லை நீ தூங்கு” திரும்பி படுத்துக் கொள்வான்.
சர்தான் வாடி என்று தோள் திருப்பியதேயில்லை. முயக்கத்தில் கூட போலியாய் விரல் பட்டோ, அழுத்ததிலோ, “ஸ்…’ என்றால் “சாரி” என்று அமைதி ஆவான்.
”எனக்கு டயர்டா இருக்குப்பா.. ஒரு காப்பி போடுறியா..?”
”கொஞ்சம் கால் பிடிச்சி விடறியா..?”
”சாரி ஒரு ஹெல்ப்.. வரும் போது என் நாப்கின் வாங்கிட்டு வந்திர்றியா..?’
“எதுக்கு ரெக்வெஸ்ட்?”
சந்தோஷ் இதற்கு நேர் மாறானவன்.
”நான் எதிர்பார்கக்லை..”
”எதை நான் கை வச்சு உள்ளே தள்ளினதையா..?”
“ஆமா.. நீ என்னை தனியா கூப்பிட்டு சொல்லியிருக்கலாம்”
“சொல்லியிருக்கலாம் தான் ஆனா அதுக்கு டைமில்லை. எனக்குள்ள உன்கிட்ட எதோ உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்”
நான் பதில் சொல்லவில்லை. ரெண்டு நாள் பேசவில்லை. கேட்ட கேள்விக்கு தான் பதில். மூன்றாவது நாள் ஆபீஸின் பின் பக்க மாடிபடியில் வழிமறித்தான். நகர முற்பட்டவளை கைபிடித்து இழுத்து, சுவரோடு அழுத்தி,முகத்தருகில் வந்து “ என்னால முடியல..” என்றான்.
“என்னாலயும் தான் முடியல.. வலிக்குது கை விடு”
“வலிக்கட்டும் அப்பத்தான் என் வலி புரியும்.”
”இடியட்.. உன் வயசென்ன.. என் வயசென்ன..? I’ve a twelve year boy u know?”
”இருக்கட்டும்.. எனனால் உன்னோட பேசாம இருகக் முடியாது.. பேசுறேன்னு சொல்லு விட்டுர்றேன்.”
வெகு அருகில் அவன் கண்கள் என் கண்களை பார்த்துக் கொண்டிருந்தது. நாசியில் அவன் சிகரெட் மணம். அவன் கண்கள் பளபளவென இருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் வேறு ஒருவனை நான் விட்டதேயில்லை. எக்கித் தள்ளி விட்டிருக்க வேண்டாமோ..? என்னால் முடியவில்லை. அவனது ஆளுமையும், ஆண்மையின் அழுத்தம், வேகம் பிடிக்கத்தான் செய்தது. யோசித்த சிறு கனத்தில் சட்டென உதடு கவ்வி, முத்தமிட்டான். உடலெங்கும் விர்ரென.. ஒரு ஷாக் ஓடியது.. அவனின் மீசை முடிகள் என் நாசியில் உரசின. சந்துருவுக்கு மீசை கிடையாது. சில நொடிகள் தான்.. ஆனால் கனவு போல உள்ளே.. உள்ளே.. நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. கண் விழித்து கன்னத்தில் அரைந்தேன்.
”வேண்டாம் சந்தோஷ்.. விட்டுறு.. அப்புறம் கம்ப்ளெயிண்ட் செய்திருவேன்”
“நீ செய்ய மாட்டே.. எனக்கு தெரியும்.. உனக்கும் என்னை பிடிக்கும் ஏன் நடிக்கிற..”
“என்ன பேச்சு பேசறே?. try to behave yourself. what do you want? sex…? அப்படியெனில் நிச்சயம் நான் உனக்கு கிடைக்க மாட்டேன். என்னால் துரோகம் செய்ய முடியாது.”
“அப்படியானால் உனக்கு என்னை பிடிக்கத்தான் செய்கிறது இல்லையா..?பூஜா.. ஐ லவ் யூ”
நான் சிரித்தேன். “ஷிட்.. உன் உடல் சூட்டை தணிக்க ஒரு உடல் தேவை.. அவ்வளவுதான். அதற்கு தேவையில்லாமல் புனிதப்படுத்தாதே.. எப்படி நீயும் நானும் காதலிக்க முடியும்? ம்ஹும்.. சொல்.. எனக்கென குடும்பம் இருக்கிறது அது தெரியுமல்லவா.?”
சந்தோஷ் எதுவும் பேசாமல் கன்னத்தை தடவிக் கொண்டே போனான். அப்புறம் மேலும் இரண்டு நாட்களுக்கு எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவனின் சாரிக்களும், ஐ லவ் யூ மெசேஜுகளும், பார்வையினால் வரும் கொஞ்சலும் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. என்னிடம் அவன் அப்படி கெஞ்சுவது பிடித்துத்தானிருந்தது. டீமில் இருக்கும் இருபது வயது குதிரை நான்சியை விட்டுவிட்டு, என்னிடம் கெஞ்சுவது ஒரு கர்வமாய் இருந்தது. நான் அவ்வளவு அழகா? லேசாய் வெறும் பேச்சோடு இருக்கணும் என்ற கண்டிஷனோடு தொடர ஆரம்பிக்க, மீள் முடியாத போதையாய் போனது பேச்சு. காதலோ, காமமோ.. இது எல்லாவற்றையும் மீறி பேச்சு எவ்வளவு பெரிய போதை. முடியவில்லை. அவனுடன் பேசாமல், பார்க்காமல், இருக்க முடியவில்லை. எஸ்.எம்.எஸ்ஸிலும், சாட்டிலும், நேரிலும், பின் பக்க மாடி படியின் நெருக்கத்திலும்..
”நைஸ் சர்ட்”
“நாளையிலிருந்து செர்ரி ரெட்டில் லிப்ஸ்டிக் போடாதே.. கண்ட்ரோல் செய்ய முடியலை”
”இன்னைக்கு எத்தனாவது சிகரெட்?”
“ஒரு சிகரெட்டுக்கு ஒரு முத்தம் கொடு.. விட்டுவிடுகிறேன்”
இம்மாதிரியான பேச்சுக்களில் பரவும் ஜுர சூடும், உள்ளுக்குள் ஏற்படும் சின்ன துரோக சந்தோஷமும், எனக்காக உருகும் இளைஞன் என்ற எண்ணமும்.. என்னை வாட்ட ஆரம்பித்துவிட்டது. இது என் தினப்படி வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. பையனுக்கு பாடம் சொல்லித்தரும் போது வரும் SMSக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தும் ஆன்லைனிலும், போனிலுமாய் மாய்ந்து, மாய்ந்து பேசுவது, சந்துரு வந்தது கூட தெரியாமல், போதையாய் பேசிக் கொண்டிருப்பது என்று என் கடமை செய்ய தவறிய குற்ற உணர்ச்சி உறுத்தத்தான் செய்கிறது.
“வந்தா கூப்பிடகூடாதா சந்துரு”
“நீ ஏதோ பிஸியா பேசிட்டிருந்த அதான்..” என்று தானே காபி போட்டு குடித்துவிட்டு என் ப்ரைவசிககாக ரூமுற்குள் வராமல் டிவி பார்க்க உட்கார்ந்திருக்கும் சந்துருவை பார்க்கும் போது ஆழமான ஐஸ்கத்தி குத்து.
என் வாழ்நாளில் இந்த மாதிரியான உணர்வு குழப்பங்கள் வந்ததேயில்லை. ரெண்டு நாள் ஆபீஸுக்கு லீவ் சொல்லாமல், கொள்ளாமல் போன், நெட் எல்லாவற்றையும் கிட்டே சேர்க்காமல் இருந்தேன். ஒரு நாள் பூராவும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தேன். ம்னம் முழுக்க சந்தோஷ் ஆக்கிரமித்தான்.பேச வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடிப்பு அதிகரித்துக் கொண்டேதானிருந்ததே தவிர.. குறையவில்லை. எத்ற்கெடுத்தாலும் ஆத்திரம் வந்தது. உடம்பு சரியில்லையோ என்று எனக்காக காபி எடுத்துக் கொண்டு வந்த சந்துருவை என் நினைவு தெரிந்து திட்டினேன். சந்துரு ஏதும் பேசாமல் அடிபட்ட பார்வையோடு மெல்ல விலகி ஹாலுக்கு போனான். படித்துக் கொண்டிருந்த மகன் ரூமிலிருந்து வெளியே வ்ந்து எட்டிப் பார்த்தான். எனக்கு என்னை நினைத்து அசிங்கமாக உணர்ந்தேன்.
ஒரு நாளாவது சத்தமாய் பேசியிருபபானா..? அவனை ஏன் கசக்குகிறேன்?. மனதுள் அழுதபடி அப்படியே தூங்கிப் போனேன். முழித்து பார்த்த போது பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு. நான் முழித்ததை பார்த்து திரும்பி படுக்க முற்பட.. அவனை இழுத்து அணைத்து காதோரமாய் “சாரி சந்துரு” என்றேன்.
”பரவாயில்லை.. ஏதாவது பிரச்சனையா..? சொல்லாம்னா சொல்லு?”
“ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, சந்துருவை அணைத்துக் கொண்டேன், ‘சொல்லுடி என்று என்னை இழுத்து வைத்து அறைய மாட்டானோ? இவ்வளவு நல்லவனாகவா இருப்பான்?. இழுத்து அணைத்து முகமெல்லாம் முத்தம் கொடுத்தேன். என் வேகத்தை பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனான். சமாளித்து என்னை கீழே தள்ளி க்ழுத்தில் முகத்தை புதைத்து, மூச்சிழுத்து, சூடான முத்தமிட்டான். என் வேகத்துக்கு தோதாய் உடைகளைந்து, என்னுடையையும் விலக்கி, உடலெங்கும் முத்தமாய் அழுத்த, இழுத்து வைத்து நெஞ்சோடு அவன் முகத்தை அழுத்தினேன். என் மார்புகளுக்கிடையே முகம் அழுந்தி மூச்சடைத்து விதிர்த்து விலகி, மூச்செடுத்து, துரிதமாய் கைகள உடலெங்கும் பரவி, அழுத்தி, பிடித்து, அணைத்து, உள்ளுக்கு தீயாய் இறங்கி இயங்க, நான் ஆரம்பித்த வேகம் அவனின் செயலிலும் தெரிய, மூச்சிரைத்து எக்ஸ்டஸியில் குளித்து என் மேல் சரியும் போது உள்ளுக்குள் வெடித்த கலர் சிதறல்களுள் சந்தோஷ் தெரிந்தான். கண் திறந்து அதிர்ந்தேன். சந்துரு என் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு பாத்ரூமுக்கு சென்றான்.
என்ன இது? இப்படி அலைக்கழிக்கிறது.. சந்தோஷின் நினைப்பு என்று ஒரே குழப்பம். நிச்சயம் இதற்கு முடிவு எடுத்தாக வேண்டும். தேவையில்லாமல் அவனின் நினைப்பு என் வாழ்க்கையை புரட்டி போட நான் விடப்போவதில்லை. அவனின் ஆக்கிரமிப்பிலிருந்து வெளியே வ்ந்தே ஆகவேண்டும்.
அடுத்த நாள் காலை வரை நிறைய குழப்பங்களுடன், என்னுடன் நானே செய்து கொண்ட தர்கங்களின் தாக்கத்துடன், ஒரு முடிவெடுத்து, அவனை அழைத்தேன். குரல் நிறைய சந்தோஷத்துடன், “சொல்லு.. ஏன் ரெண்டு நாளா வரலை? இப்ப மட்டும் நீ போன் பண்ணலைன்னு வ்ச்சிக்க..I Felt Like killing my self”
“உனக்கு என்ன வேணும் ச்ந்தோஷ்?.”
“என்ன கேட்குறேன்னு புரியல பூஜா”
“எனக்கு தெரியும். உனக்கு என்ன வேணும்னு. Why dont you Book A room in mahab’s?”
டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது.
”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.”
“எனக்கும் தான்” என்றேன்.
Comments
கலக்கீட்டீங்க...கதை அட்டகாசம்.
மனோ
“எனக்கும் தான்”.
சூப்பரு..
Thala... Pineeteenga.
Idhuthan ongalooda real touch.
pinnudhu...
Cheers...
அன்பு நித்யன்.
உங்க நிதர்சனம் எப்பவுமே இந்த மேட்டர்ல தான் முடியுமா???
Avanga Kannulayea neega sonna ellathum senji iruppanga.
yes i agree this is a [your]story, and its your rights to finish how it should be........
but still i can't digest the true relationships[chandru] get cheated.........
even at stories even at some one's mind a good/true/sweat/humble person/relationship get cheatsss means what is the use of keeping hope in the terms of systems and marriage.........
i agree what all she felt and did except the last thing........
if i am in this position i will kill the author....
no true relationship/person should hurt if it does the whole world will lose its hope on the "Truthness"
பட் சாரி கேபிள், முடிவை என்னால ஜீரணைக்க முடியலை.
நடுவில் பாதியை விட்டு விட்டேன் என்பது வேறு விஷயம்.
எண்பதுகளில் வந்த குமுதம், சாவி ஒரு பக்க கதை பாணி போல.
என் ப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்தது,,,,,
நீங்கள் எழுதுவது நிதர்சனம் தான். இன்றைய சூழலில் மட்டுமல்ல. காலம்காலமாய் நடப்பதுதான். because, by nature, human beings are polygamous. ஆனால் மானுடம் தனக்கென ஒரு அறம், பண்பாடு என வளர்த்து செழுமைப் படுத்திக் கொண்டதனால்தான் இன்றைய அறிவியல் உச்சத்தை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பல்லவியைப் பாட நான் இங்கு வரவில்லை. மானுடத்தின், மானுட அறத்தின் அடிப்படையான பரஸ்பர நம்பிககை என்ற விஷயத்தைக் குறிப்பிடுகின்றேன். அந்த அடிப்படையை தெரிந்தே சிதைப்பவர்கள் சமூகத்தில் தொடர்ந்து இயங்கத் தகுதியற்றவர்கள்.
இந்தக் கதையில் பூஜாவை மனித மன உணர்வுகளின் அடிப்படையில் நீங்கள் நியாயப் படுத்தும் தொனி தெரிகிறது.மற்றபடி கதைநடை நல்ல சரளமாக உள்ளது.
டிஸ்கி(பின்னூட்டத்துக்கும் டிஸ்கி போடலாம்ல?!) கதை ரொம்ப நல்லாருக்குன்னு சொல்றவங்க “படர்க்கை” நிலையிலிருந்து அல்லாமல் “தன்மை” நிலையில் படித்துப் பார்த்து மீண்டும் ஒருமுறை “கதை ரொம்ப நல்லாருக்கு” என்று சொல்லுமாறு பணிவன்புடன்(?!) கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
வாழ்த்துகள்
இந்த வரிக்கு வேறு அர்த்தம் இல்லாத பட்சத்தில்,,,
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் :-)
// ”இன்னைக்கு எத்தனாவது சிகரெட்?”
“ஒரு சிகரெட்டுக்கு ஒரு முத்தம் கொடு.. விட்டுவிடுகிறேன்” //
i enjoyed this line.
நறுக்கும் தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில் நழுவும் என்
வேர்களை என்ன செய்வாய்?”
கவிஞர் சிற்பி எழுதியெதென்று நினைக்கிறேன்.(வார்த்தைகள் சரியாக நினைவில்லை... மறந்துவிட்டன)
நேரம்கெட்ட நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது
சந்துருகள் இதையே செய்தால் பூஜாக்கள் என்ன செய்வார்கள்?
“அடப்பாவி! உன்னையே நம்பி வந்த எனக்கு துரோகம் செஞ்சிட்டியே?”ன்னு அழுது ஆகாத்தியம் செய்வாங்களோ?
இல்ல “ என்ன மேட்டர்தான பண்ணிட்டான்... இது பெரிய விஷயமா?”ன்னு சகஜமா போவாங்களா?
கேபிள் சேர் கதையின் எந்த இடத்திலும் உடைவோ தொய்வோ இல்லை...
"விந்தை மனிதா"நீங்க சொன்ன மாதிரியும் இருந்து பார்த்தேன்..யாரால ஜீரணிக்க முடியும்....தாங்க முடியல...
ஆனா கணவன் மனைவி வாழ்க்கையில காமம் கடந்து வாழ்க்கையில் நிறைய உண்டு...
"விந்தை மனிதா"உங்க கொமென்ட்ல சொல்லியிருந்தீங்க "மானுடத்தின்,மானுட அறத்தின் அடிப்படையான பரஸ்பர நம்பிககை என்ற விஷயத்தைக் குறிப்பிடுகின்றேன்.அந்த அடிப்படையை தெரிந்தே சிதைப்பவர்கள் சமூகத்தில் தொடர்ந்து இயங்கத் தகுதியற்றவர்கள்."நானும் உங்களுக்கு ஆதரவு...
ஆனா என்ன தான் இருந்தாலும் நான் எப்போதுமே ச்ந்துருவாக இருக்க ஆசைப்படுகிறேன்...
கேடிள் அண்ணா கிறங்க அடிச்சிட்டீங்க போங்க...வாழ்த்துக்கள்.
சூப்பருங்க :-))
கதை நல்லா இருக்குண்ணா.. படிக்கும் போது எனக்கும் ஒரே நெர்வஸா இருந்தது.. இப்படி முடியக்கூடாதேன்னு புத்தி சொன்னாலும், மனம் இந்த முடிவை ஏத்துக்கத்தான் செய்யுது..
இது முற்றுப்புள்ளியா இருக்கும் பட்சத்தில் நன்று.. இதுவே காற்புள்ளியானால்????
அவனுடன் ஒரு முறை புணர்ந்துவிட்டால் குற்ற உணர்வோடு கணவனுடன் புணரவேண்டியிருக்காது என்பதற்காக பூஜா அந்த முடிவை எடுத்திருப்பதாக நீங்கள் நியாயப்படுத்த முனைந்தாலும், Ŝ₤Ω..™ சொல்வது போல இது காற்புள்ளியாக மாறிவிட்டால் சந்துரு அல்லது அவர்களின் மகனின் நிலை?
எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போக நீங்கள் மஜா மல்லிகா இல்லை. உங்களை ஃபாலோ செய்யும் தொள்ளாயிரத்துச் சொச்ச வாசகர்களுக்கும் நியாயம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.
இதற்கு மேலும் இது என் கதை என் முடிவு என்று நீங்கள் சொல்வதானால் நான் அதை எதிர்ப்பதற்கில்லை.
சீ சீ ......
யாருப்பா அது.. சோழவர்மனா.. ஏதோ வரமாட்டேன்னு பின்னூட்டம் போட்டுட்டு போன.. விடமாட்டேன்குது நம்ம பதிவு.. கமான்.. கமான்..
நிஜம் எப்போதுமே சுடும் தான் என்ன செய்ய> :((
நன்றி
@வனிலா
நன்றி
@கார்த்திகேயன் மாணிக்கம்
நன்றி
@நித்யகுமாரன்
நன்றி என்ன ஆச்சர்யம்.. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.
@தராசு
ஏண்ணே.. போன வார கதையெல்லாம்படிக்கலையோ..
@கார்திகேயன் மாணிக்கம்
ம்
@மோகன்
நன்றி
நிச்சயம் என்னாலும் ஒத்துக் கொள்ள முடியாதுதான் வினு.. ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இது போல தான் நடக்கிறது..வலிக்கத்தான் செய்கிறது.. :()
@என்.உலகநாதன்
நன்றி தலைவரே.. என்னாலும்தான்.
நன்றி
2கார்த்திக் தாட்ச் அப்ளையிட்
நன்றி
@ராம்ஜியாஹு
நன்றி
@சிவகாசி மாப்பிள்ளை
நன்றி..
போன வாரம் கொ.பரோட்டாவில் எழுதிய தத்துவம் தான் ஞாபகம் வருகிறது.. நாம் உண்மையை தேடுவதில்லை.. நான் உண்மை என்று நம்புவதை ஏற்றுக் கொள்வதை ,கொள்பவரைத்தான் ஏற்றுக் கொள்கிறோம். சமூகத்தில் நடக்காது விஷயமாய் இருந்தால் பரவாயில்லை.. நடக்கும் நிஜம் சுடத்தான் செய்யும்.. என்ன செய்ய..
அதெல்லாம் சரி.. அதென்ன படர்கை.. யார் கை?
:)
மிக்க நன்றி.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
@நிகழ்காலத்தில்
நன்றி
@சிம்பிள்மேன்
:)
2குகன்.
ம்.. அப்புறம்.
நேற்று ஒரு கவுன்சிலிங்கில் ஒரு குடும்பத்தின் கதை கேட்டேன்.. சொன்னால் ஆடிப் போய்விடுவீர்கள்.. இதெல்லாம் ஜுஜுபி..
நன்றி
@ரோமியோவின் பக்கம்
நன்றி
@கார்த்திக்
நன்றி
@பித்தன்
எனக்கும்தான்..
@
என்ன நீங்களே கதை படிச்சிங்களா..? ஆச்சர்யம்தான்.
@கோலிப்பையன்
அடுத்த முறை இன்னும் முயற்சிக்கிறேன்.
@சென்
முற்றுப்புள்ளீயாய் இருக்க வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை..:(
நன்றி
@இனியதமிழ்
நன்றி
@முகிலன்
முகிலன் உங்கள் கருத்துக்கு நன்றி..
//அவனுடன் ஒரு முறை புணர்ந்துவிட்டால் குற்ற உணர்வோடு கணவனுடன் புணரவேண்டியிருக்காது என்பதற்காக பூஜா அந்த முடிவை எடுத்திருப்பதாக நீங்கள் நியாயப்படுத்த முனைந்தாலும், Ŝ₤Ω..™ சொல்வது போல இது காற்புள்ளியாக மாறிவிட்டால் சந்துரு அல்லது அவர்களின் மகனின் நிலை? //
மஜா மல்லிகா கதை படித்ததும்.. இப்படி நீங்கள் யோசிப்பீர்களா..?
இந்தக் கதையின் மொத்த சாராம்சத்தையும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது எனக்கு தோன்றியது இவ்வளவு யோசிக்கும் பெண் பனிரெண்டு வயதுப் பையனுடன் சாத்தியமே இல்லை..
அது கதைக்காக என்றாலும்...
காரணம் வலுவாய் இருக்கணும்..( மனத்தேவை அல்லது உடல் தேவை..இரண்டும் கிடைக்குதே )
மற்றபடி காதலுக்கு வயதுண்டா?...
வெளிநாடுகளில் துணையிழந்த/விவாகரத்தான தம்பதியினர், 90 வயதிலும் காதல் கொள்கின்றனர்,..
நம் நாட்டில்தான் திருமணம் என்ற பேரில் காதலற்ற ,கட்டாயமான ,அனுமதிக்கப்பட்ட வன்புணர்ச்சிகள் ../பிள்ளை பெறுதல் ஊருக்காக.
நானும் அதைக் குறிப்பிட்டு இருக்கிறேன் தலைவரே! “by nature, human beings are polygamous" என்று. நான் குறிப்பிட்டது மனித உணர்வுகளை மட்டும் முன்னிறுத்தி பூஜாக்களை நியாயப் படுத்த முயற்சிக்ககூடாதென்று. அதைத்தாண்டி மானுடமெங்கும் வியாபித்திருக்கும் பொதுவான அறத்தை வலியுறுத்தினேன்.
//அதெல்லாம் சரி.. அதென்ன படர்கை.. யார் கை?//
அதுவா தல... வேறொண்ணுமில்ல.. தமிழிலக்கணத்துல தன்னை முன்னிறுத்தி (ex:“ நான் செய்தேன்”) ஒரு விஷயத்தைக் கூறுவது தன்மை... எதிரிலிருப்பவரை முன்னிறுத்திக் கூறுவது முன்னிலை.... மூன்றாம் நபரை முன்னிறுத்திக் கூறுவது (ex: அவன் போனான்) என்பது படர்க்கை. சுருக்கமா மூணாவது கை தான் படர்க்கை. (ஆமா நீங்க சீரியஸ்சா தான் கேட்டீங்களா?!)
நானும் அதைக் குறிப்பிட்டு இருக்கிறேன் தலைவரே! “by nature, human beings are polygamous" என்று. நான் குறிப்பிட்டது மனித உணர்வுகளை மட்டும் முன்னிறுத்தி பூஜாக்களை நியாயப் படுத்த முயற்சிக்ககூடாதென்று. அதைத்தாண்டி மானுடமெங்கும் வியாபித்திருக்கும் பொதுவான அறத்தை வலியுறுத்தினேன்.
//அதெல்லாம் சரி.. அதென்ன படர்கை.. யார் கை?//
அதுவா தல... வேறொண்ணுமில்ல.. தமிழிலக்கணத்துல தன்னை முன்னிறுத்தி (ex:“ நான் செய்தேன்”) ஒரு விஷயத்தைக் கூறுவது தன்மை... எதிரிலிருப்பவரை முன்னிறுத்திக் கூறுவது முன்னிலை.... மூன்றாம் நபரை முன்னிறுத்திக் கூறுவது (ex: அவன் போனான்) என்பது படர்க்கை. சுருக்கமா மூணாவது கை தான் படர்க்கை. (ஆமா நீங்க சீரியஸ்சா தான் கேட்டீங்களா?!)
இதுக்கு மேல கதையின் கருத்தை ஆதரித்து நான் ஏதாவது சொன்னால், எல்லாரும் என்னை கும்மிவிடுவார்கள் - எனமே மீ த எஸ்கேப்பு
ஒரு விசயம் சொல்லிக்கறேன் - மேற்கத்திய நாடுகளில்தான் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளுக்குத்தான் பொருந்தும் என்று நாம் சொல்லும் எல்லா விசயங்களும் இந்தியாவில் நடக்கிறது. நாம் அறியாமல் இருக்கிறோம் அல்லது அறியாதமாதிரி நடிக்கிறோம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
எனக்கும் ஒருமையில் பேசத் தெரியும் மிஸ்டர் சங்கரநாராயணன்.
ஆமாம் ...அப்படி என்ன நான் ஆபாச கமென்ட்டா போட்டு விட்டேன் ? எங்கே எனது கமென்ட்?
உங்களுக்கு ஜிங் ச்சா போடும் கமென்ட் மட்டும் தான் இங்கே இருக்க வேண்டுமா.
கதை பிடித்திருந்தது. வேகம்+சுவாரஸ்யம்...
//ஆக கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதை பற்றி மட்டுமே பேசியிருக்கவேண்டும். அவன் எப்படி அவளை செக்சுவலாக ஆட்கொள்கிறான். எப்படி அவள் அவன் பால் ஈர்க்கப்படுகிறாள் என்பதை மட்டுமே மிக நுட்பமாக எழுதியிருக்கவெஅண்டும். அப்போது வாசகனுக்கு இப்படி அவன் நினைப்பால் உருகி உருகி இருப்பதை விட "என்ன தான் அவன்?" என்று ஒரு முறை அவனோடு ஒரு நாள் வாழ்ந்துவிட்டு வந்தால் என்ன என்று அவளுக்கு தோன்றுவது வாசகனுக்கும் தோன்றும்.//
விசாவின் கோணம் பார்க்கையில் அப்ப்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனவும் தோன்றுகிறது...
இவ்வளோ தூரம் பழகிட்ட பொறவு என்ன>> சரி..சோழவர்மரே.. மருவாதை..மருவாதை.. பார்த்துக்கங்க.. நீங்க தானே சோவர்மரே.. வரமாட்டேர்ன்னு சொல்லிட்டு போனீங்க.. அதான் வர்மரேகேட்டேன்.. பாருங்க.. என்ன மருவாதியா எழுதியிருக்கேன்..போதுமா..?
//ஆமாம் ...அப்படி என்ன நான் ஆபாச கமென்ட்டா போட்டு விட்டேன் ? எங்கே எனது கமென்ட்?//
வர வர உங்க கமெண்ட்.. போர் அடிக்குது.. அதான் நீங்க என்னை திட்டி எழுதினதை போட்டுட்டேன் இல்லை.. சும்மா எல்லாத்தையும் போட முடியாது.. சோழவர்மரே.. இது என் இடம்.. ஒருலிமிட்தான்..
//உங்களுக்கு ஜிங் ச்சா போடும் கமென்ட் மட்டும் தான் இங்கே இருக்க வேண்டுமா//
இங்கே வெளியிட்டிருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம் ஜிக் ச்சா என்று.. தயவு செய்து தமிழ் படிக்க கற்றுக் கொண்டு வாரும்.. இல்லாட்டி உங்கள் பின்னூட்டமே வந்திருக்காது... சோழ வர்மரே.. மரியாதை.. பார்துக்கங்கப்பா..
//
ஆமாம் ஸ்ரீராம்.. அம்மாதிரி நடிப்பவர்கள் கிட்டத்தட்ட பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதுபோலத்தான்.
rightu.. ரெடிஜுட்.. வாஙக்..
தலைவரே.. எதுக்கும் ஒரு வாட்டி கதைய திரும்ப படிச்சிருங்களேன்.!!!!
நூறு சதவிகிதம் உண்மை புன்னைகைதேசம்..
எப்படி கதை எழுதவேண்டும் என்று யோசிப்பவர்கள் இந்த கதையை பார்த்து கற்றுக்கொள்ளலாம்.
கேபிள் சார் இந்த கதையை நீங்கள் மிக மோசமான முறையில் எழுதிவிட்டீர்கள் என்று சொன்னால் வருத்தப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இது நல்ல கதை. அருமையான நாட்.
இது தான் நிதர்சனம் என்று நீங்கள் சொன்னாலும் வாசகம் நம்பவில்லை.
அங்கு தான் இந்த கதை தோல்வி அடைகிறது.
முதலில் இந்த கதையை படித்துவிட்டு எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. என்னடா இப்படி எழுதிட்டாரு என்று அப்படியே விட்டுவிட்டேன். பிறகு விவாதங்களை வாசித்த பிறகு மீண்டும் ஒரு முறை கதையை படித்த போது நீங்கள் நழுவவிட்ட இடங்கள் தெளிவாக தெரிகிறது.
வாசகர் கேட்கும் கேள்விகள் மிக மிக சரி. அதாவது அவர்கள் அப்படி கேள்வி கேட்காதபடி நீங்கள் கதையில் ஞாயப்படுத்த தவறிவிட்டீர்கள். ஆனால் இது மிக மிக அருமையான ஒரு நாட். அருமையான கான்செப்ட்.
இதை மிக நுணுக்கமாக அணுகியிருக்கவேண்டும்.
அவள் எதற்காக அவனோடு செல்கிறாள். ஒரே காரணம் அவன் அவளை அந்Tஹ அளவிற்கு தொந்தரவு செய்கிறான். கொல்கிறான். தன் குழந்தை கணவன் நம்பிக்கை சமுதாயம் கலாசாரம் அதை எல்லாம் மீறி "அவள்" என்பது எல்லாம் தொலைந்து அவனோடு போக காரணம் என்ன?
அவன் அவளை ஆட்கொள்கிறான். செக்சுவலாக.
ஆக கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதை பற்றி மட்டுமே பேசியிருக்கவேண்டும். அவன் எப்படி அவளை செக்சுவலாக ஆட்கொள்கிறான். எப்படி அவள் அவன் பால் ஈர்க்கப்படுகிறாள் என்பதை மட்டுமே மிக நுட்பமாக எழுதியிருக்கவெஅண்டும். அப்போது வாசகனுக்கு இப்படி அவன் நினைப்பால் உருகி உருகி இருப்பதை விட "என்ன தான் அவன்?" என்று ஒரு முறை அவனோடு ஒரு நாள் வாழ்ந்துவிட்டு வந்தால் என்ன என்று அவளுக்கு தோன்றுவது வாசகனுக்கும் தோன்றும். தோன்றும்படியாக எழுதியிருக்கவேண்டும். எழுதியிருக்கலாம். உங்களால் முடிந்திருக்கும். ஆனால் நீங்கள் தொடங்கிய பார்மேட் தொடர்ந்து விதம் கதையை வேறு எங்கோ பயணிக்க செய்துவிட்டது.
தலைவரே எனக்கு தோன்றியதை சொன்னேன். ஒரு உரிமையில் :)
உனக்கில்லாத உரிமையா விசா.. மன்னிகக்வும் நீ போட்ட ஒரே பின்னூட்டம் பத்துக்கு மேல் இருந்ததால் அதை டெலிட் செய்யும் போது, எல்லாமே போய்விட்டது. அதனால் காப்பி பெஸ்ட் செய்து மெயிலிருந்து போட்டிருக்கிறேன் என் பெயரில்.. மன்னிக்கவும்..
வாசகர்கள் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என்றுதான். ஞாயப்படுத்தவில்லை விசா.. அது எப்படி என்று பேசுவோம்...:)
இது யார் ??
கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது.
yes i agree this is happenning every where but when its become on your story line then about 900+ followers and some one like me who yet to be your follower but still sailoy visiting your blog also happend to read your story and this story will remain in your blog forever and there is a possibility to happen a very wast number of people will read this story ...........
so that i felt this is not right
i belives each and every incidents will gives us a story but each and every story will give/generate thousands of such incidents.
so that i strongly condomned this story but wasn't put any +/- votes.
i came, i read, i enjoyed, i hurt, i hate, and i comment on that. Thats it its finish nothing else i want to do with this.
simple.
because the % of chandrus are much higher at our world and region comparing with the % of mr.dogs[santhosh]....
sorry dogs[animal] i don't wanna to degrade you to compare with these nonhumanbeings[santhosh]...
because here plenty of peoples love to be chandru not wanna to santhosh
atleast i wont wanna to be..
if i am chandru yes i will forgive pooja even i know this but i will not what santhos did.
broking the trust is the biggest crime rather than killing a person...
these crimes wont get any mercy.
here i am not came to talk abt marriage or any system some thing i am talking about the "Trust".
which values the most,& which in this world you can't get it[at any cost] you have to earn it[but to earn you have to lose plenty].
தொடர்ந்து வருகிறேன்
கதை சூப்பர்
இதெல்லாம் நாட்டுல நடக்காமலா இருக்கு,ஒரு ஒருத்தி சந்துருக்களை போட்டே தள்ளுறாளுக சந்தோஷோட சேர்ந்து,தினத்தந்தி பார்த்தால் இன்னும் மோசமாருக்கு,முடிவு யதார்த்தம்,பேருக்கேத்தாமாதிரியே,இது தான் நான் படிக்கும் உங்க முத கதை.
இது நான் படிக்கும் இரண்டாம் கதை.:))
சூப்பர் கதை தலைவரே...
அடுத்த புத்தக வெளியீடு எப்போ..???
புதுசா.. வந்திருக்காரு..
@பூந்தளிர்
விரைவில்.. அநேகமா அடுத்த மாதமாய் இருக்கலாம்.. “மீண்டும் ஒரு காதல் கதை:
அப்படியா.. மீதக்கதைகளும் படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க..
நன்றி
i too welcome their thoughts vinu
//yes i agree this is happenning every where but when its become on your story line then about 900+ followers and some one like me who yet to be your follower but still sailoy visiting your blog also happend to read your story and this story will remain in your blog forever and there is a possibility to happen a very wast number of people will read this story ...........//
one thing you have to know.. iam not a philosopher or a guide to all of them.. all these day ive been writing what i think in my own. i have lot of confidence onmy readers they are smart enough to take which is right or wrong.. soo..
//so that i felt this is not right//
//i belives each and every incidents will gives us a story but each and every story will give/generate thousands of such incidents.//
//so that i strongly condomned this story but wasn't put any +/- votes.//
even if you put -ve vote i welcome. i respect the real feeling of the other side also.
//i came, i read, i enjoyed, i hurt, i hate, and i comment on that. Thats it its finish nothing else i want to do with this.
simple.//
thanks for your real expression..
அதான்ணே இது..:)
இந்த கதையின் 2 ம் பாகம் மகாபலிபுரத்திலிருந்து ஆரம்பிக்குமா?
இதே வரியை, இந்தக் கதையின் முடிவை ஜீரணிக்க முடியாதவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...
"உலகத்தில் நியாய அநியாயங்களில், ஆதாரமாக ஒரு அபத்தம் இருக்கிறது..."
அவளின் கணவன் நல்லவனாக இருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே அவனுக்கு இத்தகைய துரோகம் இழைக்கப்படக்கூடாது என்று சிலர் வாதாடுகிறார்கள்.
நல்லவர்களுக்கு எந்த காலத்தில் நியாயம் கிடைத்தது??
இதுவே சுஜாதா எழுதியிருந்தால், இந்த விஷயம், அவள் மூலமாகவே அந்தக் கணவனுக்குத் தெரிந்து, அவன் அவளை மன்னிப்பதைப் போல முடித்திருப்பார் என்று எண்ணுகிறேன்.
anyways, hard hitting story. kind of sure that this is based on a true story.. :) cheers...
நான் அவனை எவ்வளவு நம்பினேன் ! இதை படம் எடுத்து , மீண்டும் மீண்டும் என்னை கேட்டபோதெல்லாம் மனசாட்சியை அடகுவைத்து சென்றேனே
இருந்தும் அவன் இந்த கண்றாவியை இப்படி இணையத்தளத்தில் போட வேண்டுமா , அதை பார்த்த அவரின் நண்பர் அவருக்கு சொல்லியதால் ,சை ! என்ன நினைத்து கார் ஓட்டியிருப்பார் இப்படி அடி பட்டு சாக , நானே அவரை கொன்று விட்டேனே ! ஒரு வார்த்தை என்னை கேட்கவில்லையே ! அவருடன் செய்யாத காரியங்களெல்லாம் அவனிடம் செய்தேனே , அதை பார்த்து இவளா இப்படி என நினைத்திருப்பாரோ.
என் மகனை எப்படி பார்ப்பேன் , அவனை அவன் நண்பர்கள் என்ன சொல்வார்கள் ,என் அம்மா என்ன நினைத்திருப்பாள் , உயிருடன் தான் இருப்பாளோ ? அலுவலகம் சென்றால் இனி அனைவரின் பார்வையும் ,அய்ய்யோஓ ! என் கணவர் மீது நான் கொண்ட காதல் உண்மையல்லவா , என் அடுத்த நிலை என்ன ? என் அமைதியான வாழ்க்கை எங்கு சென்றது ? என் படித்த அறிவு எடுத்த முடிவு , இன்று என்னை நிரந்தர விபச்சாரியாக்கி விடுமோ !
நான் என்ன செய்ய இப்போது ?
--
Parthasarathy rengaraj