Thottal Thodarum

Jul 1, 2010

இசையெனும் ‘ராஜ’ வெள்ளம்-5

இளையராஜாவின் இசையை பற்றி எழுதப் போனால் இத்தோடு முடிந்தது என்று முடிக்க முடியாது. போய்க் கொண்டேயிருக்கும். முக்கியமாய் பாடல்களை பற்றி எழுத ஆரம்பித்தால் அவ்வளவுதான். இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களுக்காகவே ஓடிய மொக்கை படங்கள் நிறையவே இருக்கிறது. இன்றளவில் நடக்கும் எவ்வளவோ டேலண்ட் ஹண்ட் போட்டிகளில் முதன்மையாக தங்கள் சங்கீத திறமைகளை முன்னெடுத்து வைக்க பாடப்படும் பெரும்பாலான பாடல்கள் இளையராஜாவின் பாடல்களே. வேற்று மொழியில் நடத்தப்படும் போட்டிகளிலும் இதே நிலைமைதான்.

ஒரு படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக வந்திருந்து பெரிதாய் பேசப்படாத படம் பற்றிசொன்னோமானால் அதில் “இன்று நீ.. நாளை நான்” படத்தை சொல்லலாம். சி.ஏ.பாலன் என்கிற எழுத்தாளர் மாலைமதியில் எழுதிய நாவலை, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கினார். அடல்ட்டரியை மையப்படுத்தி இருக்கும் கதையில் எல்லோருமே போட்டி போட்டு நடித்திருந்தாலும், அக்காலக்கட்டத்தில் இம்மாதிரியான கதைகள் ஒரு விதமான ஒவ்வாமை இருந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் மிக அருமையான பாடல்கள் இருந்தும் பெரிதாய் போகாத பட லிஸ்டில் இப்படம் வந்திருகாது.

சுலக்‌ஷணா, சிவகுமார், லஷ்மி, ஜெய்சங்கர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை என்னவென்றால், எப்போது அரசியல், அரசியல் என்ற்ய் அலையும் அண்ணனுக்கு, மகாலஷ்மியாய் லஷ்மி மனைவியாய் வர, அவர்களுக்குள் செக்ஸ் நடக்காமல் இருக்க, அரசியல் தோல்வியால் அண்ணன் குடிக்கு அடிமையாகி இறக்கிறார். தம்பிக்கு சுலக்‌ஷனாவை திருமணம் செய்து வைத்து அழகு பார்க்கும் அண்ணிக்கும், தம்பிக்கு ஒரு வீக்கான நேரத்தில் தொடர்பு ஏற்பட்டுவிட, அதன் பிறகு நடக்கும் விஷயங்களே படம். மிகவும் அழுத்தமாய் சொல்லப்பட்ட இப்படத்தில் ஆரம்ப பாடல்கள் காட்சியிலேயே ராஜா தூள் கிளப்ப ஆரம்பித்துவிடுவார்.

“காங்கேயம் காளைகளே” என்று ஆரம்பிக்கும் பாடல், அதன் பிறகு அண்ணன் திருமணத்தில் சுலக்‌ஷனாவும், சிவகுமாரும் பாடும் போட்டி பாடலும், சுலக்‌ஷனா கர்ப்பம் தரித்ததும், “மொட்டு விட்ட சின்ன கொடி” பாடலும். சூப்பர் ஹிட்டான “பொன்வானம்” பாடலையும் மறக்க முடியுமா..?

இதே “பொன்வானம்” பாடல் ட்யூனையே மீண்டும் என்னுயிர் கண்ணம்மா படத்தில் உபயோகப்படுத்தியிருப்பார் இளையராஜா.. அந்த பாடலிலும் லஷ்மி தான் நடித்திருப்பார்.

****************************************************************

கேபிள் சங்கர்
Post a Comment

16 comments:

Unknown said...

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம் ...
ராஜாவின் ராஜாங்கம்...

முரளிகண்ணன் said...

கேபிள்ஜி,

லட்சுமி ஏக்கத்தில் பாடும் பாடலை அக்கு வேறு ஆணி வேறாக அலசி மகேந்திரன் என்பவர் எழுதியிருந்தார். (சரவணகுமரன் பிளாக்கில் என்று நினைக்கிறேன் (கெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்) அதைப் படித்து விட்டு அந்தப் பாடலைக் கேட்டால், உங்கள் பாணியில் சொல்வதென்றால் ம்ம்ம் டிவைன்.

முரளிகண்ணன் said...

அந்த இடுகைக்கான தொடுப்பு.


http://www.saravanakumaran.com/2009/10/blog-post_23.html

சசிகுமார் said...

ராஜாவை பற்றி எவ்வளவு எழுதினாலும் அது மிகையாகாது. அந்த அளவுக்கு பெரிய மனிதர் அவர். தொகுப்பு அருமையாக இருந்தது சங்கர் சார். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்.

Kolipaiyan said...

கலக்கல் பதிவு அண்ணே

Kumky said...

கள்ளக்காதல் பதிவான்னே..?

Thamira said...

Ponvanam song.. beutifull.!

Raman Kutty said...

when i tried to watch this song on movie i got this error

///500 Internal Server Error

Sorry, something went wrong.

A team of highly trained monkeys has been dispatched to deal with this situation.

If you see them, show them this information:
gcPZGERLZ7yYUFyDAfPUQjyys16padu8HiHRndhEIt7_FnZ2ojlXl_ucvDN5
xEzhDTC9WdY1wJUhN7fWkTr6CPs3e86pKOnTmg84mT4vSlIPNr8CVM5MChT8.....//

:-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

arumaiyana collection

நேசமித்ரன் said...

I request you to write about your caller tune song 'thumbi vaa'
in malayalam and 'santhathil 'in tamil thalaivare

:)

Cable சங்கர் said...

#கே.ஆர்.பி செந்தில்
ம்ஹும்..

@முரளீகண்ணன்
படித்துவிட்டேன் நன்றி

@சசிகுமார்
மிக்க நன்றி

@கோலிபையன்
நன்றி

@கும்க்கி
எப்படிண்ணே..?

2ஆதிமூலகிருஷ்ணன்
ஆமாம்.
@ராமன் பேஜஸ்
:)

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி

@நேசமித்ரன்
நிச்சயம்

Vinodh S said...

Cable sir Neenga Music ah pathi ezhudhunga, enaku music romba pidikum adhulayum ilayaraja sir music na avalo dhaan... I saw your interview in Jaya Tv, you were so humble.

கோபிநாத் said...

கலக்கல் பகிர்வு தல ;)

Villavarayens said...

ராஜா ராஜா தான்.....
மிக நல்ல பதிவு....
தொடர வாழ்த்துகிறேன்..

G.Ragavan said...

இன்று நீ நாளை நான் மிகவும் நல்ல படம். ஆனால் படம் வந்த நாளுக்குப் பொருத்தமில்லாப் படம். சரி அல்லது தவறு என்று சொல்ல முடியாத உறவுச் சிக்கலைக் கொண்டு வெளிவந்த படத்தை நமது பண்பாட்டுப் பாதுகாப்பாளர்கள் எதிர்க்காமல் இருந்தது அதிசயம்.

பாடல்களும் பின்னணி இசையும் சிறப்போ சிறப்பு. மொட்டு விட்ட முல்லக்கொடி என்று எஸ்.ஜானகி கள்ளக்குரலில் ஆரம்பிக்கும் பொழுதே கேட்ப்பவர்களுக்குத் துள்ளல்தான்.

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்... ஆகா... ஆகா.. பாட்டா அது. இசைக்காவியம். தன்னன்னனனா தன்னன்னனனா....

prem kumar said...

entha oru padipum kalathai vendru irukkavendum ilayaraja than unmaiana creator