ஒரே இடத்தில் சைவம், அசைவம், இரண்டும் கிடைத்தால், அதுவும் சுமாரான விலையோடு, நல்ல தரமான ருசியோடு, கிடைத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்.
சென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் மெயின் ரோடில் இருக்கும் த்ரினேத்ரா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்கும் இடத்தில் மூன்று கிஸோக்குகளில் ஸ்பைஸி பாயிண்ட், தோசா பாயிண்ட் என்று பாஸ்ட் புட் ஜாயிண்டுகளாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஸ்பைசி பாயிண்டில் பிரியாணி, ப்ரைட் ரைஸ், தந்தூரி, மற்றும் சிக்கன், ஸ்பெஷல் கிரேவிகள் என்று வெஜ் மற்றும் நான் வெஜ் அயிட்டங்கள் உடனடியாய் தயாரிக்கப்பட்டு தரப் படுகிறது. அதே தோசா பாயிண்டில் தோசை, பொடி தோசை, பெசரட்டு தோசை, உப்புமா தோசை, வெங்காய ஊத்தப்பம், அடை அவியல் என்று லிஸ்ட் கட்டியம் கூறுகிறது.
பிரியாணி டேஸ்ட் நன்றாக இருக்கிறது. அத்துடன் இங்கு தரப்படும் நான் வகைகள் மிக நன்றாக இருக்கிறது. சைட் டிஷ் வகைகளில் செட்டிநாடு வகைகள் சுவையாக இருக்கிறது. சைனீஸ் பற்றி தெரியவில்லை. தோசை வகைகளில் மூன்று விதமான சட்னியுடன், நல்ல திக்கான சாம்பாருடன் தருகிறார்கள். அடையை அவியலுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ம்…. டிவைன். அவியல் அவ்வளவு டென்ஸ்லி திக் வித் வெஜிடபிள்ஸ். தோசையில் எண்ணையை கொட்டாமல் மிதமாக ஊற்றி சுவையாக தருகிறார்கள்.
இங்கிருக்கும் ஒரே குறை சாப்பிடக்கூடிய வகையில் டேபிள்கள் இல்லாதது தான். சாப்பிடுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். பல சமயங்களில் நின்றபடி சாப்பிட கையில் இருக்கும் தட்டை வைப்பதற்காகவாவது ஏதாவது ஒரு சின்ன டேபிளை ரெடி செய்யலாம். அதே போல் கை கழுவும் இடம், இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கலாம் என்று என் எண்ணம். உடனடி பார்சலுக்கு மிக சிறந்த இடம். சர்வீஸ் நன்றாகவே இருக்கிறது.
எசக்கி ரிசார்ட்ஸ் என்று குற்றாலத்தில் பெரிய ரிசார்ட்ஸ் வைத்து நடத்தும் குடும்பத்திலிருந்து ஒரு கடைக்குட்டி வாரிசான கிஷோரின் கைவண்ணம் இந்த புட் ஜாயிண்ட். இவர்கள் குடும்பம் சினிமா தயாரிப்பாளர்கள் குடும்பம் வேறு.. சிவாஜியின் பேரனை வைத்து இவர்கள் தான் முதல் முதலில் படம் தயாரித்தார்கள்.
HAVE A TRY
கேபிள் சங்கர்Post a Comment
15 comments:
நல்ல ருசியாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.. தரமான சாப்பாடு நம்பி சாப்பிடக் கூடிய இடம் ...
thaniyaa poi saappittaa vayiru valikkumaa?
வேணுமின்னா என்னையும், செந்திலையும் கூட்டிட்டு போயேன்.. நாங்க தனியா சாப்ட்டு காட்றோம்..
கேபிள் சங்கர்
Thala,
Bangalore-layum indha mathiri try pannunga.
Adha patthiyum oru article ezhudhunga..
Nice ..,
http://www.ceilao.com/ceilao/cms/videoplay.php?id=1871
Cableஜி நான் உங்க விமர்சனம் பாத்ததால தான் சில படங்கள் ஆர்வமா பாத்திருக்கேன்.
இந்த படம் பற்றி என்ன நினைக்கிறீங்க?
உங்க பார்வைல உங்க விமர்சனத்த சொல்லுங்க...
உடனடி உணவகங்களில் எனது அனுபவம் இதோ.
சீன, தாய், மெக்சிக்கன் உணவுகளைப் போல இந்திய உணவுப் பதார்த்தங்கள் உடனடி தயாரிப்புக்கு உகந்தவை அல்ல.
விரைவில் உணவைத் தயாரிக்க, முன்பே வேக வைத்த இறைச்சியைப் பயன் படுத்துவார்கள். அதனால் மசாலா இறைச்சியுடன் ஒட்டாது. அதனை மறைக்க காரம், உப்பு மற்றும் மசாலாக்கள் தூக்கலாக போடப்பட்டிருக்கும். உண்ணும்போது சப்புக் கொட்டி சாப்பிட்டாலும், நல்ல உணவை உண்ட திருப்தி கிடைப்பதில்லை, மறுநாள் 'பேக்-ப்ராப்ளம்' வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
இதனாலேயே உடனடி உணவகங்களில் உண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பெரும்பாலும் பிரியாணி போன்ற உணவையே தெரிவு செய்வேன். அதிலும் ஒரு சிக்கல். அவை பல மணி நேரம் முன்பே சமைக்கப்பட்டவையாக இருக்கலாம்.
மேலும் நான் கண்ட வரையில் விலை குறைவான (கொலஸ்ட்ரால் கூடுதலான) பனை எண்ணையையே பயன் படுத்துகிறார்கள்.
மக்கள் இவ்விடயங்களை கருத்தில் கொள்வது நல்லது.
குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ் வந்திருக்கீங்களா ? குற்றாலம் மெயின் அருவியிலிருந்து நடந்து போயிரலாம் என் வீட்டுக்கு(2 கிமீ நடக்க துணிவிருந்தால்) அடுத்த முறை இங்கு வந்து மேலகரம் ஸ்ரீவிநாயகா டிபன் செண்டர்-ல டிபன் சாப்டுட்டு பாண்டியன் லாட்ஜ் பிரியாணி சாப்டுட்டு ஒரு பதிவு போடுங்க
///சிவாஜியின் பேரனை வைத்து இவர்கள் தான் முதல் முதலில் படம் தயாரித்தார்கள்///
நல்லவேளை... பேரனை வச்சி இன்னொரு படமெடுத்திருந்தா.., இவரு கையேந்திபவன் தான் வச்சிருக்க முடியும் (இப்பவும் அப்படித்தான் போல).
ஹாலி.. ஹா..ஹா....வாய்யா...வாய்யா..
Thalaivare intha maathiri nalla idangalai arimuga paduthurathu nalla irruku.
Ore oru request, post title podum pothu saapattu kadai peru poteengana usefull irrukum.. unga periya blog-la oru kuripitta sapadu kadai thedurathu kashtama irruku..
http://tamildigitalcinema.com/?p=1493
இங்க போய் கொஞ்சம் பாருங்க. சினிமா வியாபரம் புத்தக விமர்சனம் வந்திருக்கு.
There is a 3 days Kamalhaasan film festival is going on in Newdelhi , in recoginition of Kamal's contribution to Indian cinema for 50 years. The 3 days Kamal's films only would be telecasted.
I wonder why there is no post from you or Jackiesekar or unmaitamilan on this event.
யூத்து,
நான் பொறந்து வளர்ந்து, 28 வருஷம் வாழ்ந்தத் தெரு ரங்கராஜபுரம் மெயின் ரோடு. அப்பல்லாம் அது Pure Residential Area.. டார்ட்டாயிஸ் சுத்த வச்சிடுச்சி உங்க இடுகை, அடுத்த முறை வரும் போது கண்டிப்பா போகலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@கார்திகேயன் மாணீக்கம்
போனவாரம் பெங்களூர் வந்த போது ப்ரேக் பாஸ்ட் மெக்டொனால்டிலேயும், லஞ்ச் ஒரு நணபருடய வீட்டிலேயும், இரவு கிருஷ்ணகிரியிலும் சாப்பிட்டேன் நிச்ச்யமாய் அடுத்த முறை ஒரு நல்ல கடை ட்ரை பண்ணுவோம்
@சிவகுமார்
நன்றி
@கூல்பாய்கிருத்திகன்ன்
பார்குறேன் தலைவரே
@இந்தியன்
நீங்கள் சொல்வது உண்மையும் கூடத்தான். ஆனால் நான் சொல்லும் பல கடைகளில் நீங்கள் சொல்லும் பேக் ப்ராப்ளம் இல்லாத கடைகள் தான்.
@பொன்சந்தர்
அப்படியா அடுத்த முறை உங்களுடன் டேரோ போட்டு விடுவோம்
@ராஜெஷ்குமர் மனோகரன்
நீங்கள் ஏரியா பேர் போட்டு சர்ச் செய்தால் வருமாறுதான் கொடுத்திருக்கிறேன்
@ராம்ஜி யாஹு
எழுதணும்னுதான் நினைச்சேன். மறந்திட்டேன்
@ஸ்ரீராம்
இப்போவெல்லாம் டாஸ்மாக் எல்லாம் கொடி கட்டி பறக்குது.
Post a Comment