Thottal Thodarum

Jul 13, 2010

ஆனந்தபுரத்துவீடு

Ananthapurathu-Veedu வழக்கமான பயமுறுத்தும் பேய் படத்தை எதிர்பார்த்து இப்படத்திற்கு போனீர்களானால் நிச்சயம் பெரும் ஏமாற்றம் ஏற்படுவது உறுதி. ப்ளாங் மைண்டோடு சென்றீர்கள் என்றால் உங்களால் என் ஜாய் செய்ய முடியும். ஏற்கனவே சீரியல் உலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர், கதாசிரியர் இணைந்து இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வந்திருக்கும் படம்.

AananthapurathuVeedu
நந்தா, சயாசிங், அவரது பையனுடன் தங்களுடய கிராமத்து வீட்டுக்கு வெக்கேஷனுக்காக வருகிறார்கள். வந்த இடத்தில் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதை முதலில் சிறுவன் உணர்கிறான். ஆனால் அவனால் பேச முடியாது. அந்த பேய் வேறு யாரும் கிடையாது  நந்தா சிறு வயதாக இருக்கும் போது ஆக்ஸிடெண்ட்டில் அகாலமாய் இறந்து போன அப்பா அம்மா தான்.  மகன் வந்திருப்பது ஒரு பிரச்சனையில் ஐம்பது லட்ச ரூபாய் கடனை திரும்ப கொடுக்க முடியாமல், அங்கிருந்து பிரச்சனையிலிருந்து தப்ப, யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் நந்தா. நந்தாவை தொடர்ந்து வரும் கடன் கொடுத்த நட்வர்லால் அவன் வீட்டிலேயே ஹவுஸ் அரஸ்ட் செய்து பணம் கொடுத்துவிட்டு வெளியே போ அப்படி இல்லையென்றால் உன் மனைவியை என் பொறுப்பில் வைத்து விட்டு போ என்கிறான். கூடவெ இருந்து ஏமாற்றும் நண்பனிடமிருந்து எப்படி தன் மகனை பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறார்கள் அந்த பேய் பெற்றோர்கள் என்பதே கதை.

ananthapurathu-veedu-movie-review
வழக்கமான பேய்படங்களிலிருந்து விலகி வித்யாசமான லைன். ஆரம்ப காட்சியில் தன் பேரனை சேரில் வைத்து ஆட்டுவதும், அறையிலுள்ள ட்ராயர்களை தானாக திறந்து அதிலுள்ள பேனாக்களை காடுவதும் அதை பார்த்து சிறுவன் காட்டும் ரியாக்‌ஷன்களும், உடல் விதிர்ப்புக்ளூம் அட்டகாசம். அந்த க்யூட் முகத்தில் அவ்வளவு இயல்பான ரியாக்‌ஷன்களை கொண்டுவந்த இயக்குனரை பாராட்ட வேண்டும்.நந்தா  தன் பிரச்சனைகளை தானே சரி செய்ய முடியும் என்று நம்பும் இளைஞனாக வரும் போது  கூலாகவும், ப்ரச்சனையை சமாளிக்க முடியாமல் தேம்பி அழும்போது ரியலிஸ்டிக்கான ஒரு குடும்பஸ்தனை கண் முன் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்.

க்ளஸ்ட்ரோபோபியா நோயால் பாதிக்கப்பட்ட சாயாசிங், வீட்டில் பேய் இருக்கிறது என்று தெரிந்த நேரத்திலிருந்து பயந்து நடுங்குவதும், பின்பு தன் மாமனார் மாமியார் தங்களுக்கு நல்லது தான் செயவார்கள் என்று நம்பியவுடன், தன் க்ளஸ்ட்ரோபோபியா பயம் விலகி கணவனுக்கு உறுதுணையாய், கோபத்தில் கோடரி எடுக்கும் போது கூட அதை தடுக்குமளவுக்கு பொறுப்புணர்ந்து செய்திருக்கிறார். என்ன முகத்தில் தான் இளமையை தேட வேண்டியிருக்கிறது.
 
நட்வர்லாலாக வரும் மேகவர்ணபந்த்தின் குரலும், பாடி லேங்குவேஜும் அட்டகாசம். இவரின் நடிப்புக்கு முக்கிய க்ரெடிட் போக வேண்டியது இவருக்கு டப்பிங் கொடுத்திருக்கும் நடிகர் மோகன் ராமுக்குதான் போய் சேர வேண்டும். மிகவும் கண்ட்ரோல்ட் மாடுலேஷனில் குரலிலேயே நடித்திருக்கிறார்.  ஆனால் வீட்டு வாசலிலேயே அவரும் சடார் சடாரென காரில் வந்து இறங்குவதும், திரும்ப திரும்ப பேசியதையே பேசுவதும் மிரட்டுவதற்கு பதிலாய இம்பாக்டை குறைகக்வே செய்கிறது. வீட்டை விட்டே வெளியே வர முடியாத நிலையில் நந்தா தன் நண்பனுடன் பேச வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டை விற்க முயற்சி செய்வது எப்படி?

படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் தான் பெரிதாய் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் பயமுறுத்த ஏதுமில்லாததால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஒளிப்பதிவு அருள்மணி. துல்லியம். அதிலும் பின்பக்க குளத்தில் குழந்தையுடன் குளிக்கும் காட்சியில் அந்த கரும்பச்சை தண்ணீரும், வீட்டின் பேக்ரவுண்டும் அருமை.anantha300
நாகா இயக்கத்தில் அவர் எடுத்துக் கொண்ட வித்யாசமான லைனுக்கு பெரியதாய் ட்விஸ்ட், டர்ன் உள்ளார் போல திரைக்கதை அமையவில்லை என்பது வருத்தமே..திரும்ப திரும்ப இரண்டு பேருக்குள் நடக்கும் நிகழ்வுகளில் ஒரு மொனாட்டனி வருவதை தவிர்க்க முடியவில்லை திரைக்கதையில். மிக மெதுவாக ஒவ்வொரு விஷயமாய் பில்டப் செய்து, செய்து மெல்ல, மெல்ல, டெம்போ ஏற்றுகிறார். ஆனால் அது வரை பொறுமை காக்க முடியவில்லை. எப்போது பேய் இருக்கிறது என்று தெரிந்து விட்டதோ, அது நல்ல பேய் என்று தெரிந்துவிட்டதோ, அடுத்தடுத்து நிகழ்வுகள் நடக்க வேண்டும். அப்படியில்லாமல் நந்தாவும், சாயாசிங்கும் இருக்கு, இல்லை என்று தர்கவாதம் செய்து கொண்டிருப்பது அலுப்பாகவே இருக்கிறது.  இரண்டாவது பாதியில் தான் சுறுசுறுப்பாகிறது.  நந்தாவின் நண்பன் தான் ஏமாற்றுகிறான் என்பதை முன்பே தெரிந்து கொண்ட ஆவிகள் ஏன் படம் கடைசிவரை அதை வெளிப்படுத்த க்ளைமாசுக்காக காத்திருபது  போல இருப்பது டெம்போவை இன்னும் குறைக்கிறது.

நாகாவின் மேக்கிங் ஸ்டைல் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நான் அவரது இயக்கத்தில் சிதம்பர ரகசியத்தில் நடித்திருக்கிறேன். ஒரு சின்ன ரியாக்‌ஷனைக்கூட விட மாட்டார் மிகப் பொறுமையாய் அது வரும் வரை எடுக்கக்கூடியவர். குழந்தை, கலைவாணி, மேகவர்ணபந்த், அந்த ரியல் எஸ்டேட் ப்ரோக்கர், வீடு பார்க்க வரும் செட்டியார், என்று பல கேரக்டர்களில் தெரிகிறது. குறிப்பாக குழந்தை ஊஞ்சலில் ஆட, அதை பார்த்து சாயாசிங் கத்த, ஒரு கணம் அந்த கத்தலில் விதிர்க்கும் குழந்தையின் ரியாக்‌ஷன் சூப்பர்ப். தன் மருமகளை அடித்த மகனை கைத்தடியால் அடித்து விளாசுவதும், இரவு நாட்டுவைத்திய பத்து அரைத்து போடும் அம்மா பேயும், உருக்கம். அதே போல சாயாசிங்கின் க்ளஸ்ட்ரோபோபியாவை விளக்க எடுக்கபட்ட காட்சிகள் தத்ரூபம். பாக்கும் நமக்கு மூச்சடைக்கிறது

நம் மூதாதையர்கள் நம்மை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை நம் நாட்டில் உண்டு.  அதற்காகத்தான் வருடா வருடம் நாம் செய்யும் காரியங்கள் திவசங்கள் அது உண்மையென உணர்த்தும் இப்படத்தை பார்க்கும் போது நம் கஷ்டத்தையும் இறந்து போன நம் தாய் தந்தையர்கள், தாத்தா பாட்டிகள் பார்த்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் போது லேசாய் சிலிர்த்தது.  நம் கஷ்டங்களையும், ஆசைகளையும் சந்தோஷத்தையும் இவர்கள் வந்து வழிநடத்தி கொடுக்க மாட்டார்களா என்ற ஆசை மனதில் எழத்தான் செய்கிறது. எனக்கு என் அப்பா நினைவு வந்தது.ஒரு வித்யாசமான கதைகளனில் ஒரு  குடும்ப படம்.

 இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ நாகா சார்..

அனந்தபுரத்துவீடு – ஒரு வித்யாசமான முயற்சி.
கேபிள் சங்கர்
Post a Comment

31 comments:

மேவி... said...

தல ..ஆனாலும் நீங்க சொல்லுரதுனால போய் பார்க்குறேன். ஆனாலும் graphics கொஞ்சம் மொக்கைன்னு கேள்விபட்டேனே ..உண்மையா ???

shortfilmindia.com said...

அப்படி ஒண்ணும் பெரிசா தெரியலை.. டம்பி.. ஒரு சேஞ்சுக்கு போய் பாக்கலாம்..

Unknown said...

மர்மதேசம் கொடுத்த சொதப்பல் வீடு...

ஆர்வா said...
This comment has been removed by the author.
ஆர்வா said...

எஸ் பிக்சர்ஸ் கம்பெனியில இருந்து வர்ற படம் அப்படிங்கிறதுக்காக
வேண்டுமானால் பார்க்கலாம். Nothing Special. பொதுவா நாகா எல்லார்கிட்டேயும் பயங்கரமா வேலை வாங்குவார். சவுண்ட் எஞ்சினியர்கிட்ட சின்னதா ஒரு ஈ பறந்தா கூட அதுக்கு எஃபெக்ட் ஏன் கொடுக்கலைன்னு வாதம் பண்ணுவார். அவ்ளோ பர்ஃபெக்ஷனிஸ்ட்.
(எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம்) எடிட்டிங்'ல எல்லாம்
அவர்கூட உட்கார்ந்தா அவ்ளோதான். சின்னச்சின்ன விஷயங்களுக்காக
ரொம்பவும் மெனக்கெடுவார். எடிட்டர் எல்லாம் எப்படா இந்த ஆளு
முடிச்சிட்டு போவான் ஆப்படின்னு நினைக்குற அளவுக்கு பொறுமையை
சோதிப்பார். இந்தப்படத்துல கூட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில்
அவர்காட்டிய சிரத்தை ரொம்பவும் அதிகம். ஃபிரேம் பை ஃபிரேம்
அவரோட ஈடுபாடு பிரமிப்பா இருக்கும். ஆனா இவ்ளோ உழைப்புக்கும்
பலன் இருக்கா????? நிச்சயமா இல்லைன்னுதான் சொல்லணும். நாகா அவருக்கு கீழ வொர்க் பண்ற டெக்னீஷியன்கிட்ட தன்னை புத்திசாலின்னு நிரூபிச்சா மட்டும் போதாது. மக்கள்கிட்டேயும் நிரூபிக்கணும். அந்த விஷயத்துல நாகா கோட்டை விட்டுட்டார்.

ஆர்வா said...

சங்கர் சார்.. ஒரு சின்ன திருத்தம் தப்பா எடுத்துக்காதீங்க. இந்தப்படம் பேரு அனந்தபுரத்துவீடு இல்லை.. ஆனந்தபுரத்துவீடு.. உங்க டைட்டில்ல கரெக்ட் பண்ணிடுங்க. (ஆ)னந்தபுரத்து (வீ)டு.. "ஆவி" அப்படின்னு வரணுங்கிறதுக்காக ரொம்ப மெனக்கெட்டு இந்த டைட்டிலை வெச்சிருக்கார் போல..... அதனாலதான் அந்த ரெண்டு எழுத்துக்களை மட்டும் ரெட்கலர்ல ஹைலைட் பண்ணி காட்டி இருக்கார்

Cable சங்கர் said...

@கவிதைகளின் காதலரே.. நாகா ஒரு சிறந்த டெக்னீஷியன் என்பதை பற்றி எழுதியிருக்கிறேன். ஒரு திரைக்கதையாசிரியராக சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

பிரபல பதிவர் said...

என்ன தல‌
மொக்க படத்த போய் உ.த. அளவுக்கு ரசிச்சி விமர்சனம் எழுதியிருக்கீங்க‌

Cable சங்கர் said...

நிச்சயம் இது ஒரு மொக்கை படமில்லை.. தலைவரே.. வழக்கமான படஙக்ளிலிருந்து வித்யாசமாக எடுக்கப்பட்ட முயற்சி.. திரைக்கதை சொதப்பலால் .. .. என்ன சொல்ல..?

ஆர்வா said...

உண்மையாகவே இது ஒரு வித்தியாசமான முயற்சி. ஆனால் நம்மை ரசிக்க வைக்க தவறியிருப்பதுதான் மைனஸ். எவ்வளவோ புதியவர்கள் மிக அற்புதமான கதைகளுடன் அலைகிறார்கள். ஷங்கர் நாகா போன்று சாதித்தவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்பை, அவர்களுக்கு கொடுத்தால் தமிழில் மிக அற்புதமான படைப்புகள் வரும். யோசிப்பாரா ஷங்கர்???

Sukumar said...

நீங்கள் சொன்னது போல கண்டிப்பாக பிளாங்க் மைண்டோடு சென்றால்தான் படத்தை ரசிக்க முடியும்.. நாகா, ஷங்கர் என நான் முதல் காட்சி எதிர்பார்த்து சென்றதுதான் பெரிய தவறாகி விட்டது. பிண்ணனி இசை நன்றாக இருந்ததாக நான் கருதுவதை தவிர படம் பற்றிய உங்களது மற்ற கருத்துக்களோடு உடன்படுகிறேன்...

CS. Mohan Kumar said...

படம் ஓடாது என தெரிகிறது.

இவரது சன் டிவி சீரியல் ரசித்து பார்த்தோம்.. படம் இவருக்கு சரி வரலை போலும்

Anonymous said...

படம் முதல் பாதி வரை ஓரளவுக்கு தொய்வில்லாமல் இருந்தது. முடிவை நாம் இலகுவாக யூகிக்க முடிவது தான் கதையின் பலவீனம்.

சிறுவன் ஆர்யன் மற்றும் ராணியின் நடிப்பு அருமை.

ஒவ்வொரு காட்சியின் பிண்ணனியில் இருந்த கடின உழைப்புக்காகவே நாகாவைப் பாராட்டலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paakkalaamaa venaamaA?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paakkalaamaa venaamaA?

Vediyappan M said...

உங்களோடு முன்பே அறிமுகமான இயக்குனராக நாகா இருந்தாலும் விடாமல் படத்தை துள்ளியமாக அலசியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

Unknown said...

இதே வித்தியாசமான முயற்சிக்கு செல்வராகவனை விட்டுத் தாளிச்சிங்க? இப்ப இவருக்குப் பாராட்டா?

Cable சங்கர் said...

@முகிலன்
அது என்னை பொறுத்த வரை.. வேண்டாம் விடுங்கள்..

பாலா said...

//இதே வித்தியாசமான முயற்சிக்கு செல்வராகவனை //

உங்களுக்கு ரொம்பத்தான் குறும்பு தல! :)

Mohans Musings said...

எனது பின்னணி குரலை பாராட்டியதர்ற்கு நன்றி

Cable சங்கர் said...

@mohan's musings
நன்றி மோகன்ராம் சார்...

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
:)

@டிஸ்கவரி புக் பேலஸ்
நன்றி

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
வேணும்னா ஒரு ட்ரைபண்ணு

@வெயிலான்
மொத்தத்தில் ஸ்கீரீன் ப்ளே ஒரு லெட்டவுந்தான்..

Cable சங்கர் said...

@மோகன்குமார்
பட்ம் ஓடுவது வேறு மோகன்.. இவரது முதல் முயற்சியில் கொஞ்சம் சறுக்கியிருக்கலாம் ஆனால் நிச்சயம் அடுத்த முயற்சி இவருக்கு வெற்றியை கொடுக்கட்டும்...

@சுகுமார் சுவாமிநாதன்
நன்றி

சரவணகுமரன் said...

மேகவர்ணபந்த் யாரு சார்?

Unknown said...

this movie is a different one as sankar sir said. just for a change and thriller we can watch..

வவ்வால் said...

Naga script sothapiya kaaranam original padam eduthavangala thaan kaaranam.

Copy adikkum pothu sariya adikka venamaa?

"Bhooth nath"hindi filmla amithab asathi iruppaar.comedya vanthirukkum.

Ithulavum comedy kalanthirukkalam.

Guruji said...

நன்றி சார்...

Victor Suresh said...

படம் பார்க்க உங்கள் விமர்சனம் உதவியது, நன்றி.

சத்யம் காம்ப்ளக்ஸ் 6 டிகிரிசில் நேற்றிரவு 6:30 மணிக் காட்சி. அரங்கு நிறைந்திருந்தது. எல்லோருமே படத்தை ரசித்துப் பார்த்தது போலவே தோன்றியது. பல காட்சிகளில் சிரிப்பலைகள். கடைசியில் க்ரெடிட் போட்டதை வாசித்துக் கொண்டே எல்லோரும் நிதானமாக வெளியேறினோம்.

நல்ல பொழுது போக்குப் படம் என்பதில் சந்தேகமில்லை. க்ராபிக்ஸ் விட்டலாச்சார்யாத்தனமாக உள்ளதுதான். ஆனால், இது சிறு பட்ஜட் படம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் முன்பாதி இன்னும் கொஞ்சம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்திருக்கலாம்.

படத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட வட்டார மொழி, அதிலும் காடு சேர்ந்த பகுதிகளில் பேசப்படும் மொழி, நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக வரும் நண்பரின் தோற்றம், உடல் மொழி, பேச்சு ஆகியவை. அது போலவே பேயோட்டுபவராக வருபவரின் மொழியும். மயிலம்மாவாக வருபவருக்கு இந்த வட்டார மொழி சரியாக கைகூடவில்லை.

உங்கள் விமர்சனத்தில் கொஞ்சம் விகடன் வாசனையடிக்கிறது. சாயசிங் முகத்தில் வயது தெரிகிறது என்று சொல்கிறீர்கள். மூன்று வயதுப் பையனுக்கு தாயாக காட்டப்பட்டுள்ள ஒரு பெண் எப்படி காட்டப்பட வேண்டுமோ, அப்படித்தான் காட்டப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த படத்தின் casting ரொம்ப சரியாக செய்யப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. கைவிட்டு எண்ணக் கூடிய பாத்திரங்கள் என்றாலும் எல்லா பாத்திரங்களுக்கும் சரியான நடிகர்கள்.

தமிழில் வரும் மற்ற பேய்ப் படங்களைப் போல் இல்லாமல் இந்தப் படம் பல பரிமாணங்கள் கொண்டதாக உள்ளது. முக்கியமான பரிமாணம், இறப்பிற்குப்பின் உள்ள வாழ்வு. கேரி ஷ்வார்ட்ஸ் (Gary Schwartz) என்னும் அரிசோனா பல்கலைக்கழக (University of Arizona) பேராசிரியர் "The Afterlife Experiments: Breakthrough Scientific Evidence of Life After Death" என்னும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில், இப்படத்தில் வருவது போலவே, நமக்கு இந்த உலக வாழ்வில் நெருக்கமாக உள்ளவர்கள், இறப்பிற்குப் பின்னும் நம் கூடவே இருக்கிறார்கள்; நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதை அறிவியல் ரீதியாக நிறுவ எடுத்த முயற்சிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இன்னொரு பரிமாணம் பாத்திரங்களின் மனோதத்துவத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம். சாயாசிங்கின் க்ளாஸ்ட்ரோஃபோபியா தவிர நந்தாவின் பார்ட்னர், மற்றும் அவரது மனைவி இருவருக்குமிடையே உள்ள சாடிச-மசோக்கிச உறவு. ஆனால் க்ளைமாக்சில் ஏன் நந்தா தற்காலிகமான ஒரு மனமுறிவு நிலைக்கு தள்ளப்படுகிறார் என்பது புரியவில்லை.

காதல், சண்டை, விரசம், குத்துப் பாட்டு போன்று எதுவுமில்லாத இது போன்ற வித்தியாசமான படங்கள் பொதுசன பொழுதுபோக்காக இருப்பதும், பரவலான வெற்றியடைவதும் நல்லது.

உங்கள் விமர்சனத்திற்கு மீண்டும் நன்றி.