மைலாப்பூர் என்றாலே நல்ல பல மெஸ்ஸுகள் ஞாபகத்துக்கு வரும். கற்பகாம்பாள், ராயர் கடை, என்று வரிசைக்காய்.. அந்த வரிசையில் மயிலையில் பிரபலமானது மாமீஸ் மெஸ்.
கிழக்கு மாட வீதியின் முடிவிற்கு முன் ஒரு சின்ன தெரு போகும், இல்லாவிட்டால் யாரிடம் கேட்டாலும் மாமீஸ் மெஸ்ஸை கேட்டாலும் சொல்வார்கள். முன்பு சின்ன கடையாய் இருந்ததை இப்போது இடித்து பெரிதாக பாஸ்ட் புட் கடைகள் போல நின்று கொண்டு சாப்பிடும்படியாக மாற்றியிருக்கிறார்கள். மாமீஸ் டிபன் செண்டர் என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். முன்பை விட நீட்டாக உள்ளது.
மதியம் புளி, சாம்பார், தயிர், என்று சாத வகைகளும், முப்பது ரூபாய்க்கு அளவு சாப்பாடும் தருகிறார்கள். அளவு சாப்பாட்டில் ஒரு பெரிய கிண்ண சாதம், ஒரு பொரியல், கூட்டு, ஊறுகாய், தொகையல், சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர். சாம்பார், ரசம், காரக்குழம்பெல்லாம் அவ்வளவு ருசி. வீட்டில் செய்து போல. என்ன மோர் மட்டும் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீராம நவமி நீர் மோர் போல கையில் ஒட்டாமல் ஓடியது. மற்றபடி திருப்தியான சாப்பாடு.
மாலையில் டிபன் வகைகள் தோசை, இட்லி, பரோட்டா என்று களை கட்ட ஆரம்பித்துவிடுகிறது. நிச்சயம் வயிற்றை கெடுக்காத சுவையான வீட்டு சமையல் ருசியில், நியாயமான விலையில் சாப்பிட வேண்டுமானால் நிச்சயம் மாமீஸ் மெஸ் ஒரு தரமான இடம்.
Post a Comment
15 comments:
6 மாதம் மயிலாப்பூர் ல வேலை செஞ்சப்போ அப்போ அப்போ சாப்ட்ட ஞாபகம். என்ன, நீங்க இப்ப எழுதற சாப்பாட்டு கடைலாம் படிக்கத்தான் முடியுது...வெளிநாட்ல வேலை செஞ்ச இந்த மாதிரி நிறைய இழப்புகள்.....
//
மோர் மட்டும் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீராம நவமி நீர் மோர் போல
//
என்னதொரு உவமை...
மயிலாப்பூர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு... அடுத்த தடவை போனா மதிய சாப்பாடு அங்கதான்
மாமீஸ் மெஸ் சுவை! அங்கு சமையல் ஆட்கள் / சப்ப்லையர்ஸ் சுத்தம் சரி இல்லை. சென்ற வாரம் இரவு டிபனுக்கு சென்ற போது காபியில் ஒரு பெரிய குழவி. வேறு கொடுத்தார்கள். நிறைய இன்செக்ட் கில்லர் வாங்கி வைக்கணும். இனி அங்கு வரமாட்டேன் என்று குழந்தைகள் சொல்லிவிட்டார்கள்.
நாக்கில் நீரூறும் சுவை கொண்டது மாமீஸ் மெஸ் பல நாள் உண்டதுண்டு. இப்பொழுது அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லை.
மாமீஸ் மெஸ் எங்கே உள்ளது என்பதை கூகிள மாப் கொண்டு காட்டி இருக்கலாம். சென்னை சங்கீத சீசனில், சபா காண்டீன்களில் அதிக விலை கொடுத்து, குறைந்த சுவை உள்ள உணவு வகைகளை சாப்பிட்டு நொந்து போவதைவிட என் மாதிரி ஆட்களுக்கு, மாமீஸ் மெஸ் அதிகம் உபயோககரமாக இருக்கும்.
நீங்கள் சொல்டின்களா போய் சாப்பிடவேண்டியதுதான்...
இப்பதான், எனக்கு ஏத்தா மாதிரி சொல்லியிருக்கீங்க. நான்-வெஜ் பத்தி இல்லாத ஒரே சாப்பாட்டுக்கடை பதிவு இது மட்டும்தான்னு நினைக்கிறேன்.
தல
அக்டோபர் 14_15 சென்னை பட்டிணம் வர்றேன்.
நல்ல சாப்பாட்டு கடைக்கு கூட்டிட்டு போங்க
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நின்று கொண்டே மீல்ஸ் சாப்பிடுவது வசதியாக இருக்குமா, நான் அப்படி சாப்பிட்டதில்லை இது வரை.
ஸ்ரீ ராம நவமி மோர்- எனக்கு சமீபத்தில் தொலைகாட்சியில் ஒளி பரப்பிய பாமா விஜயம் ஞாபகம் வந்து விட்டது.
சினிமா நடிகை வீட்டிற்க்கு வருவதால் நாகேஷ் பாதாம் கீர், பழ ரசம் தயார் செய்து வைத்து இருப்பார். வந்த நடிகையோ நீர் மோர் போதும் என்பார்.
அப்பொழுது நாகேஷ் பேசும் வசனம்- சினிமா நடிகை என நினைத்தேன் நீங்கள் என்ன ஸ்ரீ ராம நவமி யாக இருக்கிறீர்கள். (வசனம் யாரு-அனந்து வா).
நீங்க சொல்ற கடைகள்ல சாப்பிடுறதுக்காகவே சீக்கிரம் ஊருக்கு வரணும் போலையே! :-)
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
You can add the vote button on you blog:
http://thalaivan.com/page.php?page=blogger
THANKS
Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com
பதிவை திரட்டியில் சேர்த்த நண்பர் மோகன் குமாருக்கு நன்றி..
மயிலாப்பூர் போய் சாப்பிட தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.
சாப்பாட்டு கடையா சுத்தி சுத்தி சாப்புடறீங்களே வூட்டம்மா தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்களோ???
குடுத்து வச்சவர் :)
Post a Comment