இப்புத்தகத்தை பற்றி நிறைய பேர் சிலாகித்து சொன்னார்கள். எழுதியிருந்தார்கள். ஒரு சினிமாவை பற்றி பதிவெழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை இப்படி விமர்சித்து நிறைய பேர் சொன்னது என்னுள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சொல்லி வைத்து டிஸ்கவரியிலிருந்து வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.
வெட்டுபுலி படம் போட்ட தீப்பெட்டியில் இருக்கும் தன் மூதாதையரான தாத்தாவின் வரலாறு தேடி போவதாய் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் சினிமாத்தனமான ஆரம்பமாக இருந்தாலும், ஒரு அருமையான் கதை சொல்லிக்கான யுக்தியாய் தான் தெரிந்தது. படிப்பவர்களை மெல்ல கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான யுக்தி. முப்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. லஷ்மணரெட்டி வெள்ளைக்காரனின் குதிரையை உடல் சிராய்த்து, ரத்தம் வழிய ஓட்டப்பழகுவதோடு கதை ஆரம்பிக்கிறது.
முப்பதுகளிலிருந்து இன்றைய காலம் வரை நம் தமிழ் நாட்டு மக்களிடையே, அதுவும் கிராமத்து மக்களிடையே இருந்த கலாச்சாரம், ஜாதி, பள்ளி, பறையன், பாப்பார ஜாதிகளுக்கிடையேயான மதிப்பீடுகள், அரசியல், சினிமா, சுதந்திர தாகம், எதிர்ப்பு, ஆங்கிலேயனுக்கான மறைமுக ஆதரவு, ஆங்கிலேயனை வைத்து பிழைப்பு நடத்தி வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ளூம் லட்சுமணனின் பெரியப்பா. என்று அந்த கால காட்சிகளை கண் முன்னே விரிக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன்.
தசரத ரெட்டி, அவரது மகன் லஷ்மண ரெட்டி, விசாலாட்சி, நடராசன், தமிழ் செல்வன், நாகம்மை என்று ஒரு ட்ரீ. ஆறுமுக முதலி, ஆவ்ர் மானைவி சுந்தராம்பாள், மகன் சிவகுரு, சகோதரன் கணேசன், மகன்கள் நடேசன், தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இரு குடும்ப கிளைகளின் மூலம் கதை சொல்லப் படுகிறது.
லஷ்மண ரெட்டிக்கும் கீழ் ஜாதிக் பெண்ணான குணவதிக்குமான காதலும், அதன் தோல்வியும், ஒரு தனிக்கதை என்றால், தசரத ரெட்டி தன் மச்சினிச்சியை பெண்டாள நினைக்கும் எபிசோட் ஒரு தனிக்கதை. ஆறுமுகமுதலிக்கும் சுந்தராம்பாளுக்குமிடையே இருக்கும் இண்டிமஸியும், சுந்தராம்பாளுக்கு அவர் கொடுக்கும் முக்யத்துவமும், தன் கணவனின் வளர்ச்சிக்கு ஏற்ப உணர்ந்து, அவனது ஈகோவை குத்தாமல், வளைந்து கொடுத்து குடும்பத்தை நிலை நிறுத்தும் பெண்ணாக அவளை பார்க்கையில் பெண்ணியம், ஆணாதிக்கம் என்றெல்லாம் இன்றளவிலும் கூவிக் கொண்டுதிரியும் பல பேர்களுக்கு நிஜமாகவே இருவரும் மனதளவில் மதிப்பு கொடுத்து நடத்தும் ஆட்கள் அக்காலத்திலேயே இருக்கத்தான் செய்திருக்கிறார்கள் அதை பார்த்து புரிந்து கொண்டு வாழத்தான் அடுத்து வந்த சந்ததிகள் பழகவில்லை என்று புரிகிறது.
முப்பதுகளீல் ஆரம்பித்த கதையில் அரசியல் குறித்த பார்வையாய் பெரியார், காமராஜர், காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஸ்டாலின் அழகிரி, வைகோ என்று சம கால அரசியல்வாதிகளை பற்றிவரை மதிப்பீடுகள் விரிந்து கொண்டு போகிறது. அதே போல பெரியாரின் கருத்துக்களை வைத்து பேசப்படும் பேச்சுக்களும், அதில் முக்கியமாய் சேரவேண்டியதை சேராமால் வெறும் பிராமண எதிர்ப்பை மட்டுமே தூக்கி அலைவதை பற்றியும், பெரியாரின் கருத்துக்களை ஏற்று அதை வழக்கமாக்கி கொண்டவர்கள் பிராமணர்கள்தான் என்றும் சொல்கிறார்.
ஆறுமுக முதலியின் சினிமா ஆசையும், அதற்காக அவர் சென்னை வந்து பழைய சினிமா ஸ்டுடியோவின் முதலாளிகளை பார்ப்பதும், அக்கால தயாரிப்பாளர்களின் ப்ரச்சனையும், அப்போதே ஆரம்பித்திருந்த சினிமா தொழில் போட்டிகளை பற்றியும் விரிவாக அலசியிருக்கிறார். சினிமாவுக்கு அன்றைய காலகட்டத்தில் தேவை தயாரிப்பாளர்களை விட திரையிட உதவும் திரையரங்குகள்தான் அதனால் பின்னால் தயாரித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி, கடைசியில் ஒரு திரையரங்கு ஓனாராகி திருப்தி அடையும் ஆறுமுக முதலி, அப்பாவிட்டதை மகன் சிவகுரு சினிமா தயாரிக்க வந்து , எதற்கு செலவு செய்ய வேண்டுமோ, அதற்கு செலவு செய்யாமல், எதற்கு செலவு செய்யக்கூடாதோ அதற்கெல்லாம் செலவு செய்து இருந்த காசையும், சொத்தையும் இழந்து பிச்சைக்காரனாகி இறக்கும் சிவகுருவை போல, புகழுக்கும், பெண்களுக்கும் செலவு செய்து அழியும் பல சினிமா சபலிஸ்டுகளை இன்றைக்கும் நாம் பார்க்க முடியும்.
அதே போல தியாகராஜன், ஹேமலாதா கேரக்டர்களின் மூலம் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியையும், திமுக, ஆதிமுக வின் வளர்ச்சியையும், அதே காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் வளர்ச்சியை மீறி ஏ.ஜி.எஸ் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டே பிரகாசித்த பாலசந்தர், ஸ்ரீதர் என்று ரஜினி, கமல் என்று வளரும் சினிமாவையும், வாழ்க்கையில் தன் கொள்கையை திணிக்க நினைத்து, திரிந்து போன வாழ்கையாய் குடிகாரனாய் அலையும் தியாகராசன், இட்லிகடை முதல் கள்ளச்சாராயம், கள்ளக்காதல் என்று தனக்கான வாழ்க்கையை கணவனை பழிவாங்குவதற்காகவே வாழும் ஹேமலாதாவுக்குமான வாழ்க்கை நிதர்சன வாழ்க்கை.
இப்படி இரண்டு குடும்பங்களை வைத்து சுமார் என்பது வருட தமிழ்நாட்டின் வரலாற்றை, அரசியலை, வாழ்க்கையை, சினிமாவை, கலாச்சாரத்தை நிதர்சனமாய் ஓடவிட்டிருக்கும் எழுத்தாளரின் நடைக்கு ஒரு சபாஷ்.. முழு புத்தகத்தை படித்து முடித்தவுடன் டைம்மிஷினில் போய்விட்டு வந்த எபெக்ட் நிச்சயம் இரண்டு நாளுக்கு இருக்கும் என்பது சத்தியம்.
நூல் : வெட்டுப்புலி
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.220/-
பக்கங்கள் : 376
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,
சென்னை - 600 018. போன் : 24993448
மின்னஞ்சல் :uyirmmai@gmail.com
ஆன்லைனில் நூலினை வாங்க :http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262
கேபிள் சங்கர்
Post a Comment
14 comments:
விமர்சனம் நன்றாக உள்ளது.படிக்க வேண்டும்.
மனோ
தலைவரே இந்தப் புத்தகம் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்..
கண்டிப்பாக படிக்க வேண்டும்,
(ஆமா.. யார் அந்த சோழவர்மன். அவருக்கு ஏன் உங்க மேல இவ்ளோ நல்ல எண்ணம்?)
@kavithaikathalan
நிச்சயம் ஒரு நல்ல அனுபவமாய் இருக்கும்.. சோழவர்மன் என் தொடர்வாசகர்..:)
உங்கள் விமர்சனம் மிக அருமை
நன்றி
படிக்க தூண்டியது...நல்ல பதிவு
படிக்கணும் தலைவரே..:-)))
டைம்மிஷின் எஃபக்ட்காக கண்டிப்பாக படிக்க வேண்டும்
//ஆமா.. யார் அந்த சோழவர்மன். அவருக்கு ஏன் உங்க மேல இவ்ளோ நல்ல எண்ணம்?//
யாருய்யா அது, என் பெயரை இங்கு இழுப்பது ?
---------------------
பதிப்பகம் எவ்ளோ ஷேர் கொடுக்கும் சார், இது போன்ற பதிவுக்கு ?
@மனோ
நிச்சயம் படியுங்கள்.மனோ..
@கே.ஆர்.பி.செந்தில்
ஆமாம்
@கவிதை காதலன்
நன்றி நிச்சயம்
@உலவு.காம்
நன்றி
@வானம்பாடிகள்
படித்து விட்டு நீங்கள் சொல்லுங்க தலைவரே
@ராசராசசோழன்
நன்றி
2கார்த்டிகை பாண்டியன்
ம்
@பின்னோக்கி
ஒரு நடை போயிட்டு வாங்க..
//பதிப்பகம் எவ்ளோ ஷேர் கொடுக்கும் சார், இது போன்ற பதிவுக்கு ?//
நாளைய இயக்குனர் சிறுகதையில் வருவது போலா எல்லாரும் இருப்பாங்க..:)
இப்போ போறேன் .........
திரும்பி ...
வர...மாட்டேன்னு சொல்ல வந்தேன்.
Post a Comment