1. காலையில் அடித்து பிடித்து பக்கத்து ரூம் சாப்ட்வேர் பையனின் பைக்கில் லிப்ட் வாங்கி.. காலை டிபன் சாப்பிட வந்தால். இன்னைக்கு ப்ரொடியூசர் வரலை.. அதனால டிபன் கிடையாதுன்னு சொல்லிட்டு, இவரு மட்டும் ஆறு இட்லி வடகறி சாப்பிட்டு ஏப்பம் விடறப்ப....ஒரு குத்து.
2. தனியா டீ சாப்பிடும் போது இந்த சீனில எனக்கு சரியா செட்டே ஆவுலடா.. என்று புலம்புவதை பார்த்து மனமிறங்கி தன் படத்துக்காக வைத்திருக்கும் ஒரு சீனை வேறு வழியில்லாமல் உருவிவிட்டு, மத்யானம் லஞ்ச் முடிஞ்சதும், “ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு, ஒரு ஸ்பார்க் வந்து, ஒரு சீன் சொல்றேன் பாரு” என்று அவன் முன்னால் வைத்தே தன் சீனாய் சொல்லும் போது ஒரு குத்து
3. கம்ப்யூட்டர் என்றால் ஏதோ ஜீபூம்பா பெட்டி என்று ”அப்படியாடா..ன்னு ” கேட்டு வாய் பிளந்து தமிழில் டைப் அடிப்பதை பார்த்துவிட்டு , ப்ரொடியூசர் வரும் போது. “எல்லாம் ரெடியாயிருச்சு சார்.. இப்பத்தான் என்.ஹெச்.எம் டவுன்லோட் பண்ணி.. கம்ப்யூட்டர்லேயே அடிக்க சொல்லி பழக்கப்படுத்தியிருக்கேன். ரெண்டு நாளில ரெடியாயிரும். இப்பத்தான் பழகறான் அதான் கொஞ்சம் ஸ்லோ பையன். ஸ்கிரிப்டு.. டி.டி.பி. செலவு மிச்சம் பாருங்க..” என்று எலலாம் தெரிந்தார் போல் பேசும் போது.. ஒரு குத்து.
4. அஸிஸ்டெண்ட் டைரக்டர்னா.. மனுஷனில்லையா.. அவனுக்கு தினப்படிக்கு பேட்டாகூட இல்லாம எப்பூடி சாப்பிடுவான் என்று மேனேஜரிடம் ஆளுக்கு கன்வேயன்ஸ் நூறை வாங்கிவிட்டு, தனியே கூப்பிட்டு.. தபார்ரா.. கஷ்டப்பட்டு போராடி ஆளூக்கு 25ரூபா பீராயரத்துக்குள்ள.. என்னைப்பிடி.. உன்னைப்பிடின்னு ஆயிருச்சு.. வச்சிக்கங்க.. சந்தோஷமா இருங்க் என்று மிச்சம் ஆளுக்கு 75 ஆட்டைய போடும் போது ஒரு குத்து.
5. பட ஷூட்டிங்கின் போது, க்ளோசப் இரண்டு பாக்கி இருக்குன்னு சொன்னா.. எனக்கு தெரியதா..? இங்க் நீ டைரக்டரா..? நான் டைரக்டரா..?ன்னு கேட்டுட்டு.. எடிட்டிங் டேபிளில்ல க்ளோசப் இல்லைன்னு தேடுறப்ப.. அஸிஸ்டென்ட் டைரக்டருங்க வேலை செய்யலைன்னு சொல்லும் போது ஒரு குத்து.
6. ஷூட்டிங்கின் போது, நடிக்கிற நடிகர்கள் ஏதாவது சொதப்புனா.. அவனை திட்ட முடியாம, அஸிஸ்டெண்ட் டைரக்டரை வாயில வந்தபடி திட்டுறது எல்லாம் நம்மளை இல்லைன்னு தெரிஞ்சாலும் தேவையில்லாம படு கேவலமா திட்டுறப்ப…. தோணும் ஒரு குத்து விடலாமான்னு.
7. ஸ்பாட்டுக்கு வர்ற ஜூனியர் ஆர்டிஸ்ட்டை கூட விடாம கடலை போட்டுட்டு, ஆபிஸுக்கு வந்ததும்.. “இதபாருங்கப்பா.. நமக்கு ஒழுக்கம் முக்கியம்.. ஷூட்டிங்கில கண்டவ கிட்ட வழிஞ்சிட்டு நின்னீங்க்ன்னு வச்சிக்க பிச்சிப்பிடுவேன். எனக்கு பிடிக்காத விஷயம்.. இதுன்னு சொல்லுறப்போ.. ஒரு குத்து.
8. டிஸ்கஷன்போதே சொல்லியிருப்போம்.. இந்த இடத்தில கொஞ்சம் சரி செய்யணும் சார்ன்னு.. உனக்கு தெரியாதுடா.. என் மொத்த படத்தோட ஃபீலே அங்க தான் இருக்கப் போவுது.. தமிழ்நாடே அழும்பாரு.. படம் ரிலீஸாகி படம் பார்த்தவங்க நொந்து போய் அழுதுட்டு வரும் போது.. பார்த்தியா.. எல்லாம் முகத்திலேயும் ஈயாடலை.. அப்படியே ஸ்டன் ஆயிட்டாங்கன்னு சொல்லும் போது ஒரு குத்து.
9. சரக்கு அடிக்கும் போது மட்டும் அன்னைக்கு ஒரு சீன் சொன்னியே.. அது சூப்பர்..இது சூப்பர்ன்னு சொல்லி பாராட்டுனாரேன்னு கொஞ்சம் சந்தோஷத்துல டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தா.. ஏற, இறங்க பார்த்துட்டு, இங்க நீ டைரக்டரா? நான் டைரக்டரா..? கேட்கும் போது ஒரு குட்து.
10. ஷூட்டிங்கல எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் டயலாக் சொல்லி கொடுக்க நம்மளை அனுப்பிட்டு, ஹீரோயினுக்கு மட்டும் தான் பேடை எடுத்துட்டு போவும்போது.. ஒரு குத்து.
Post a Comment
51 comments:
:-)))))))))))))))))))))
nalla irukkuthu....! super......!
nalla irukkuthu....! super.....!
கேபிள்ஜி: : 10 குத்தும் நச்சின்னு இருக்கு....
நீங்கள் சொல்லும் அனைத்தும் ஒரு உதவி இயக்குனரின் உண்மையான ஆதங்கங்கள்..
பத்துதானா? நூறாவது இருக்குமே...
ஞாநி
romba anubavamo ?
@ஞாநி..
அது இருக்கு நிறைய சார்.. :))) எல்லாத்தையும் வெளிய சொல்ல முடியுமா.?
All 10 superb. Particularly 10th superb குத்து Anna.
இவ்வளவு படித்த, புதிய இளைய, கிராமியம் சார்ந்த இயக்குனர்கள் வந்த பின்பும், உதவி இயக்குனர்களை கொடுமை படுத்தும் மனோ பாவம் மாறாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கல்லூரிகளில் நடக்கும் ராகிங் போலவே இதுவும் தொடர்கதையாக மாறி விடுகிறது
அந்த கடைசி குத்து பலமா விழும் போலயே:)))
எல்லா குத்தும் கும்மாங் குத்து !
:)))
உதவி இயக்குநர்களின் அவலத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களிடம் பணியாற்றுபவர்கள் இந்தப் பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஸ்ரீ....
உங்க பதிவுக்கெல்லாம் வெண்ணையா கமெண்ட் போடு சோழவர்மன் முகத்துல ஒரு குத்து ...
"அஸிஸ்டெண்ட் டைரக்டர்னா.. மனுஷனில்லையா.. அவனுக்கு தினப்படிக்கு பேட்டாகூட இல்லாம எப்பூடி சாப்பிடுவான் என்று மேனேஜரிடம் ஆளுக்கு கன்வேயன்ஸ் நூறை வாங்கிவிட்டு, தனியே கூப்பிட்டு.. தபார்ரா.. கஷ்டப்பட்டு போராடி ஆளூக்கு 25ரூபா பீராயரத்துக்குள்ள.. என்னைப்பிடி.. உன்னைப்பிடின்னு ஆயிருச்சு.. வச்சிக்கங்க.. சந்தோஷமா இருங்க் என்று மிச்சம் ஆளுக்கு 75 ஆட்டைய போடும் போது ஒரு குத்து."
இப்டியெல்லாம் நடக்குதா சார்..
கஷ்டமா இருக்கு .. நீங்க டைரக்டர் ஆனதும் இப்படி உங்க உதவி இயக்குனர்கள் சொல்லாமல் பாத்துக்கங்க..சார்..
அன்புடன்
பொன்.சிவா
குத்துங்க எசமான்..குத்துங்க..
இந்த டைரக்டர்களே இப்படித்தான்..
நாளைய இயக்குனரே.. நீங்கள் இப்படி இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்..
அத்தனை குத்தும் நச்.ஒரு கேள்வி.வெறும் 75ரூபாயை ஆட்டை போடும் அளவுக்குத்தான் இயக்குனர்களின் நிலமையும் இருக்கிறதா?எல்லா இயக்குனர்களும் ஷங்கர்,கௌதம் மேனன் மாதிரி கோடிகளில் புரளாவிட்டாலும் ஓரளவிற்கு பொருளாதார ரீதியில் வலுவாகத்தானே இருப்பார்கள்.இருந்தும் உதவி இயக்குனருக்கு கொடுக்க வேண்டிய சொற்ப தொகையிலும் கை வைப்பது ரொம்ப டூஊஊஊஊ மச்சாக படுகிறது.உதவி இயக்குனர்களுக்கு படப்பிடிப்பு நடக்கும் மாதங்களில் மட்டுமாவது மாதச்சம்பளம் வழங்கலாம்.குறைந்த பட்சம் நீங்கள் இயக்குனராக உயரும் பட்சத்தில் உங்கள் உதவி இயக்குனர்களை கௌரவமாக நடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?
இவரு மட்டும் ஆறு இட்லி வடகறி சாப்பிட்டு ஏப்பம் விடறப்ப....ஒரு குத்து.
//
என்னுடைய குத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!!
Very nice. Intha vaaram enna Kuthu vaaramaa?
10 குத்தும் நச்சின்னு இருக்கு....
(ஷூட்டிங்கல எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் டயலாக் சொல்லிட்டு அனுப்பிட்டு, ஹீரோயினுக்கு மட்டும் தான் பேடை எடுத்துட்டு போவும்போது.. ஒரு குத்து)
இந்த ரணகளத்துலயூம் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது
ஹஹஹ சூப்பர் அண்ணே...
தல,
பத்துக்கே மனசு கஷ்டமாருக்கு,நூறையும் கொட்டுனீந்க்கன்னா?நினைச்சி பாக்கவே முடியலை,உண்மை சுடும்
எலலாமே நல்ல குத்து. ஞாயமன குத்தும்கூட..!
நல்லா வக்கணையா எழுதிட்டு நாளைக்கு நீங்க குத்து வாங்காம இருந்தா சரிதான்.
:)))
கடைசி சூப்பர் கேபிள்..
நல்லா இருக்கு .காயத்திலிருந்து பிறக்கும் நகைச்சுவை ஆழமாய் இறங்கும் . இதில் இருக்கும் எள்ளல் கடந்து உள்ளிருக்கும் வலி
சபாஷ் கேபிளாரே
அண்ணே ...கடைசி POINT க்கு மட்டும் விளக்கம் தேவை ....
டைரக்டர் உள்ளே போய் என்ன பண்ணுவார்ன்னு சொல்லிருந்த நல்ல இருந்திருக்கும் ....
அண்ணே உங்க படத்துல என்னையும் assist director யாக சேர்த்துகோங்க ..... நானும் ஹீரோயினியும் டிஸ்கஸ் பண்ணுவோம் ல ஹி ஹி ஹி ஹி
உலகமே குத்துக்கள் மயமானது...
பாவம்தாங்க...என்ன செய்ய...பொறுத்தவர் பூமி ஆள்வார்
குத்து மொத்தம் பத்து
அதில் எல்லாமே முத்து
cable சங்கர் அல்ல. இனிமேல் குத்து சங்கர். ரசனை.
//ஷூட்டிங்கல எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் டயலாக் சொல்லிட்டு அனுப்பிட்டு, ஹீரோயினுக்கு மட்டும் தான் பேடை எடுத்துட்டு போவும்போது.. ஒரு குத்து//
பார்ப்போம் பார்ப்போம்... ஆகவே மகாஜனங்களே! நாளைபின்ன கேபிள் படம் எடுக்குறப்போ ஹீரோயின்கிட்ட சீன் சொல்ல அஸிஸ்டண்ட் டைரக்டர்களைத்தான் அனுப்புவாராம்... அஸிஸ்டண்ட் வாய்ப்புக்கு அலைமோதுறவங்க மோதலாம்!
அங்கயும் ஐடி மாதிரி தானா..!!!
என் மேல பயங்கர கோவத்துல இருக்கீங்க போல.
விமர்சனத்த தாங்குற பக்குவம் வரணும்.
எனது கமென்ட்டை பார்த்து மட்டும் ஏன் இப்படி பயப்படவேண்டும் ?
கமான் ....வந்து எதிர்வினை ஆற்றுங்கள்.
அட சோழவர்மரே.. கோவமா உங்களை பார்த்தா ஒரே சிப்பு..சிப்பா வருது.. ஒண்ணு ஒழுங்கா முழுசா படிச்சிட்டு பேசுறேன்ன்னு எழுதணூம்.. நீங்க் என்னடான்னா.. கிடைகிற டைமில அரைகுறையா படிச்சிட்டு எழுதுறேன்னு எழுதி உங்க மரியாதைய நீங்களே குறைச்சிக்கிறீங்க.. அதுனால. முழுசா எல்லாத்தையும் படிச்சிட்டு ஒரு மெயில் அனுப்புங்க்.. அப்புறம் பார்ப்போம்.. பயப்படுற ஆளா இல்லையான்னு உங்களுக்கே தெரியும். நான் ஒரு தூசு மாதிரியான் கோயபல்ஸுன்னு.. :) இனிமே ஒழுங்கா முழுசா படிச்சிட்டு போடணும் பின்னூட்டம்.. ஓகே..
வெளங்கும்.. இதுக்கு இன்னமுமா பதில் சொல்லிகிட்டு இருக்கீங்க??
எந்த B Grade டைரக்டர் படத்தில் நீங்க வேல பார்த்தீங்க ..இன்னுமா இப்படி இருக்காங்க ..
இருந்தாலும் ஒரு இயகுனராகனும் என்று நினைக்கிறவன் இதையெல்லாம் பொதுவுல புலம்பக்கூடாது...
எந்த எந்த நேரங்களில் ஒரு இயக்குனருக்கு சபாஷ் போடலாம் என்று ஒரு தொகுப்பு போடலாமே ..
I think your Concept is taken from Vigenswari blog.. But, this is very interesting.. Hats off
Sir..
Pad to Heroin..? Which pad..? Oh. is it notepad OR WXXXPER PAD?
நிதர்சனம் தலைவரே..
@thulasi gopal
நன்றி
@செந்தில்குமர்
நன்றி
@வழிப்போக்கன் கிறுக்கல்கள்
நன்றி
@ரெகோ
அதெல்லாம் ரகசியம்
@கோழிபையன்
:_)
@ராம்ஜி யாஹு
சில இயக்குனர்கள் தான் நன்றாக நடத்துவார்கள்..
@வானம்பாடிகள்
ஹி..ஹி
@வெற்றி
நன்றி
@மங்களூர் சிவா
நன்றி
@ஸ்ரீ
நிச்சயம் நான் என் உதவியாளர்களை பட்டினியோ, கன்வேயன்ஸோ சம்பளோ கொடுக்காமலிருந்ததில்லை
@கே.ஆர்.பி.செந்தில்
பாவம்ணே அவரு.. தினம் நீங்கல்லாம் ஒரு வாட்டி தான் வர்றீங்க.. நிமிஷத்துக்கு நிமிசம் என் பதிவை தொடர்ந்து ”பார்த்து” பின்னூட்டம் போடுறாரு..
@பொன்.சிவா
நிறைய இடங்களில் பேட்டா, சாப்பாடு கூட இல்லாமல் இருக்குமிடங்கள் நிறைய..
@சென்
நம்புங்க.. நம்பிக்கைதானே வாழ்க்கை
@லஷ்மிகாந்தன்
ம் நிச்ச்யமாய்
@தேவ்ன்மாயன்
ம் கொடுத்திறேங்க..
@மோகன்குமார்
நன்றி
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
ம்
@தஞ்சை ஜெமினி
சில சமயம் சின்ன கிளுகிளுப்பெல்லாம் தான் ரணத்துக்கு ஒத்தடமா இருக்கும்
@சந்தோஷ்
நன்றி
@கீதப்பிரியன்
ம் அவ்வளவுதான்
@டிஸ்கவரி புக் பேலஸ்
அது சரி..
@டி.வி.ராதாகிருஷணன்
நன்ரி
@ஜாக்கிசேகர்
உனக்கு தெரிஞ்சிருக்குமே நீ பார்த்திருப்பே..:)
@நேசமித்ரன்
நன்றி
@டம்பி மேவி
உன்னை உள்ளேயே விடமாடேன்..:)
@அமுதாகிருஷணன்
நன்றி
2ராசராசசோழன்
ம்
@உடன்பிறப்பு
நன்றி
@ஜோதிஜி
ஹா..ஹா.
@விந்தைமனிதன்
பாருங்க..பாருங்க
@கிருத்திகன்
ம்ஹும்
@ஹாலிவுட்பாலா
ம்கும்.. ம்ஹும்
@அம்மாகண்னு
எத்தனை ஏகிரேட் டைரக்டர் தமிழ்ல இருக்காங்க..? வேணுமின்னா சபாஷ் போட்றதுன்னு ஒரு விஷயத்தை ஆரம்பிக்க போடுவோம். வர வர நகைச்சுவை உணர்ச்சி குறைஞ்சிருச்சுப்பா..:)
வாத்தியாரே, பதிவில் ஆங்கில வாடை அதிகமாக அடிக்குது...ஆங்கில வார்த்தைகள் தமிழோடு சேர்ந்து பட்டைய கிளப்புது....போதிய மட்டும் ஆங்கில வார்த்தைகள் தவிர்த்து தமிழ் வார்தைகளை இணையுங்கள்...
இது நண்பர்களின் கோரிக்கை...
இதை விட எல்லாம் வலி தரும் குத்துக்கள் நிறைய இருக்குமே, நீங்கள் ஞானியிடம் சொன்னது போல...
உங்களிடம் இருந்து வெளிப்பட்ட இந்த பத்து குத்துகளை விட, மறைக்கப்பட்ட (அ) வெளியிடப்படாத அந்த விஷயங்களே இன்னும் டெர்ரரா இருக்கும்....
// பட ஷூட்டிங்கின் போது, க்ளோசப் இரண்டு பாக்கி இருக்குன்னு சொன்னா//
இத எதுக்கு சொல்லனும் க்ளோசப் பாக்கி இருந்தா, எடுத்துட்டு போய் பல்லு வெளக்கவேண்டியதுதானே?
இப்ப எல்லாம் ஏதோ க்ளோசப் கிஸ்ஸோமீட்டருன்னு ஒன்னு இருக்காம் பாஸ், யூஸ் ஆவும்!
குத்து குத்து கும்மாங்குத்து................
Post a Comment