தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் தில்லாலங்கடிதான் ஜெயம் ரவி.
தன் தங்கை ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை பற்றி தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள் காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால் ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா.. கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.
காதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைகிறான்.. திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் ஜெயம் ரவி திருடனானார்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா? என்பது தான் கதை.
தன் தங்கை ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை பற்றி தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள் காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால் ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா.. கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.
காதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைகிறான்.. திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் ஜெயம் ரவி திருடனானார்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா? என்பது தான் கதை.
ஜெயம் ரவி வழக்கம் போல தெலுங்கில் ரவிதேஜா என்ன செய்தாரோ அதை அப்படியே அலட்டி கொள்ளாமல் செய்திருகிறார். படம் முழுக்க தெலுங்கு ரவிதேஜா ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள். நன்றாக ஆடுகிறார், ஓடுகிறார், கடகடவென டயலாக் பேசுகிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் ரவிதேஜாவை போல வே ஜெயம் ரவியும் நடிக்க முயற்சி செய்து ம்ஹும்.
தம்ன்னா... அழகாய் இருக்கிறார். ரவிக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் ஓப்பனிங் காட்சிகயில் தெலுங்கில் இலியானா யோகா செய்யும் காட்சி.. அந்த வைடில் அவரின் உடுக்கை போன்ற இடுப்புக்காகவே.. பார்க்கலாம். இங்கே நாலடியில் குட்டியூண்டு தமன்னாவின் இடுப்பை பார்க்கையில் கம்பேர் செய்யத்தான் தோன்றுகிறது. வெற்றி இலியானாவுக்கே..
ரவியை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். ஆனால் பெரிதாய் வேலையில்லை.. படம் முழுக்க பில்டப் நன்றாக இருக்கிறது. அவரது கேரக்டருக்கான பேஸ்மெண்ட் வீக் என்றுதான் சொல்ல வேண்டும் நிச்சயம் ஷாம் தமிழில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.
வழக்கம் போல் தெலுங்கில் ப்ரம்மானந்தம் செய்த காமெடியை, வடிவேலு செய்திருக்கிறார். நிறைய இடங்களில் காமெடி எடுபடுகிறது.. அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று காமெடி களைகட்டத்தான் செய்கிறது என்றாலும், தெலுங்கில் ப்ரம்மானந்தம் கொடுத்த எஃபெக்டில் ஒரு சில மாற்று குறைவுதான் என்பதை தெலுங்கு படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.சந்தானமும் தன் பங்குக்கு ஆங்காங்கே வந்து கலகலப்பூட்டுகிறார்.
பாடல்கள் ஒன்றும் அவ்வளவாய் மனதில் நிற்கவில்லை. ஒரு பாட்டை தவிர. ஞாபகங்கள் குறித்த பாடல். மற்றும் சொல் பேச்சு கேட்காத சுந்தரி பாடலும் ஓகே. என்ன ஆச்சு யுவன்?. ஒளிப்பதிவு நச். எஸ்.தமனின் பின்னணி இசையும் ஆஃப்ட். தெலுங்கில் தமனின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் என்றே சொல்ல வேண்டும்.
வழக்கமாய் பேமிலி செண்டிமெண்ட், லவ், கலந்த படங்களையே ரீமேக்கும் ராஜா இம்முறை கொஞ்சம் ஆக்ஷன் கலந்த கதையை எடுத்திருக்கிறார். ஒரே ஷாட்டில் பாடல் எடுத்திருப்பதாய் சொன்னாலும், ஷாட் என்னவோ ஒன்றானாலும், முழுக்க, முழுக்க சிஜியில் பல ஷாட்களை ஒருங்கிணைத்து, ஒரு ஷாட்டாய் காட்டப்பட்ட பாடல் தான். இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது.
ஒட்ட ஒட்ட தெலுங்கிலிருந்து, டயலாக் முதற் கொண்டு அப்படியே டிப்பி அடிப்பதை தவித்திருக்கலாம். படம் ஓடும் நேரம் உட்பட.. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடுகிறது. கொஞ்சமாவது ..ட்ரிம் பண்ணியிருக்கலாம். அதிலும் முதல் காட்சியில் சேசிங்கு, ரன்னிங்கு, ஃபைட்டிங்கு என்று ரைமிங்காக சொல்லும் வசனங்கள். தெலுங்கில் இருந்த டபுள் மீனிங் டயலாக்குகளை தவிர்த்தமைக்கு நன்றி. முதல் பாதி முழுவதும் ரவி, தமன்னா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைக்கதை இண்ட்ரஸ்டிங். இரண்டாவது பாதியில் நடு, நடுவே கொஞ்சம் அலைபாய்கிறது. போலீஸ் ஆபீஸர் ஷாமுக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் உன்னைப்பிடி, என்னைபிடி ஆட்டத்தில், லாஜிக் என்ற வஸ்துவே இல்லாவிட்டாலும் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் எல்லாம் ஜெண்டில்மேன் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் ஐம்பது முழப்பூ..
தில்லாலங்கடி – ”கிக்”குக்காக பார்க்கலாம்.
கேபிள் சங்கர்
Post a Comment
41 comments:
மீ த பர்ஸ்ட்...
இந்த படத்துக்கும் ஹீரோ வடிவேலுதானா :)
me the 2nd
என்ன இருந்தாலும் இலியானா மாதிரி வருமா? தமன்னாவுக்கு என்ன சோகமோ. சிரிக்கும்போதும் சோனியா அகர்வால் மாதிரி சோகமாவே இருக்கார்.
டிபிகல் ஜெயம் ரவி குடும்பப் படம் போல..நன்றி! அது apt, aft இல்லை!
தெலுங்கு கிக் நல்ல பொழுதுபோக்குப் படம். ராஜா கொஞ்சம் கூட மாத்தாம அப்பிடியேதான் எடுத்திருப்பாருன்னு நல்லாத் தெரியும்..
தில்லாலங்கடி பார்க்கணும்.
நல்ல விமர்சனம் தலைவரே.
@ இராமசாமி...
தல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க???
//”கிக்”குக்காக பார்க்கலாம்//
இந்த லைனைப் பார்த்தா... நம்பிக்கை வரலையே......!!
// இங்கே நாலடியில் குட்டியூண்டு தமன்னாவின் இடுப்பை பார்க்கையில் கம்பேர் செய்யத்தான் தோன்றுகிறது. //
இதுவல்லவோ விமர்சனம்!!!
ஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள்?? மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.
இதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே!!
காமெடிக்காக மட்டும் படம் பாக்கலாமோ..
ஓஹோ,தெலுங்குலயும் பார்த்தாச்சா,இலியானாவா?ஹூம்,வட போச்சே
Me the 3rd
ரவி குடும்பத்திலிருந்து இன்னுமொரு தமிழுங்கு படம்.
@hollywood bala
//ஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள்?? மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.//
அலோவ்.. இப்படியெல்லாம் அபாண்டமா பழி சொல்லக் கூடாது.. மூணு இடத்தில புல்ஸ்டாப் வச்சிருக்கேன். பாலா கதை படிச்சீங்களா? :)
அண்ணே நேத்தே போகலாம்ன்னு தானிருந்தேன் ..ஆனா ஒரு பதிவளருடைய அவஸ்தையை எந்த கம்பெனி புரிஞ்சிக்குறாங்க... சீக்கிரம் விடுங்க நான் படம் பார்த்து விமர்சனம் எழுதணும்ன்னு சொன்ன கேட்கவே மாட்டேன்ங்குறாங்க ....
அப்ப வடிவேலுக்கும் தமன்னாவுக்கும் டூயட் இல்லையா ண்ணே ????
சரி இன்னைக்கு படத்தை பார்த்துட்டு ...பிறகு உங்களை பார்க்க வருகிறேன் முடிந்தால்......
@ ஹாலிவுட் பாலா - படம் அவ்வளவு விறுவிறுப்பா போகுதுன்னு தல சொல்லாம சொல்லுறாரு .....
சன் டிவி யின் தில்லாலங்கடி....
//@ஹாலிவுட் பாலா said...
ஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள்?? மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.
இதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே!!//
ரிப்பீட்டேய்
தல
நாளைக்கு தில்லாலங்கடி போகவா?? இல்ல மரியாத ராமண்ணா போகவா???
நாளைக்கி வுட்டா இங்க அடுத்த வாரம் ஓடாது.... ரெண்டுமே
//தெலுங்கில் ப்ரம்மானந்தம் கொடுத்த எஃபெக்டில் ஒரு சில மாற்று குறைவுதான் என்பதை தெலுங்கு படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.//
நான் இதை trailer பார்க்கும் போதே முடிவு பண்ணிட்டேன். I am big fan of telugu Kick movie. i watched kick for more than 10 times. Entire comedy crew was rocking. After i watched Siva manasula sakthi, i thought Jeeva will be best fit to do ravi teja role. But once again this hit movie went to jayam family.
suntvila pdam hittunnu solli solliye vottituvaanga
அது எப்படி சார் , வர வர தம்ன்னா ரொம்ப அழகாகிகிட்டே போகுது ??? (இன்னும் நாலு தமனா போட்டு போட்டு இருக்கலாம் )
இந்த படம் இங்கும் ரிலீஸ் ஆகியிருக்கிறது, நாளை ஞாயிறு அன்று பார்ப்பதாய் இருந்தேன். கூட வேலை பார்ப்பவர் படம் பார்த்துவிட்டு நேற்றிலிருந்து தலைவலியோடு இருக்கிறார். அதனால்
வடிவேலு மேல உங்களுக்கு என்ன தல காண்டு?.........
@hollybally repeattu...
@ பாலி.பாலி
//ஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள்?? மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.
இதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே!!//
அண்ணே நான் திருந்தி ரொம்ப நாளாசு. இப்பல்லாம் நிறைய இடம் விட்டு, கமா போட்டு, பத்தி பிரிச்சு எழுதுறேனாக்கும். பேபிள் யூத்தில்லா, கொஞ்ச நாளானா பக்குவம் வந்துரும்..
// இதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே!!
//
என்னாது மயிலு இலக்கியவாதியா? இதுக்குப் பேருதான் நக்கலா? :)
மூணு மணி நேரம் லாஜிக் இல்லாமலா.. என்ன கொடும சார் இது..
// ஹாலிவுட் பாலா said...
@ இராமசாமி...தல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க??? //
ஹி ஹி.. மொதல்ல ரெண்டு பேரும் போன வாரம் ரிலீஸ் ஆன படத்துக்கு போங்கப்பா...
என்னது... மூணு மணி நேரம் லாஜிக் இல்லாமலா... என்ன கொடும சார் இது...
// ஹாலிவுட் பாலா said...
@ இராமசாமி...தல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க???//
ஹி ஹி... மொதல்ல ரெண்டு பேரும் போன வாரம் வந்த படத்தை பாருங்கப்பா...
//நாளைக்கு தில்லாலங்கடி போகவா?? இல்ல மரியாத ராமண்ணா போகவா???//
மரியாதை ராமண்ணா..நல்லாருக்குன்னு சொன்னாங்க..
//ஹாலிவுட் பாலா said...
@ இராமசாமி...
தல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க???//
ஹல்லோ பாலி பாலி .. அப்படியே வந்தாலும் பாக்க போறதில்ல.. டவுன்லோடே நமஹ.
//ஹி ஹி.. மொதல்ல ரெண்டு பேரும் போன வாரம் ரிலீஸ் ஆன படத்துக்கு போங்கப்பா//
இன்ஷப்ஷன்.. இன்னும் ஒரு 2 மாசத்துக்கு ஓடும். இந்தப் படமெல்லாம்.. எங்களுக்கு ஒன் & ஒன்லி ஷோ-தான்.
இப்ப விட்டா.. அவ்ளோதான்.
===
கேபிள், கதை புரிஞ்சிடுச்சி!!!
கேபிள்..
இன்று இந்த படத்தை பார்க்கலாம் என்று காரைக்குடி பாண்டியன் தியேட்டருக்கு சென்றேன்..
முதல் அதிர்ச்சி - 2 வீலர் பார்க்கிங் சார்ஜ் 5 ரூ.
இரண்டாவது அதிர்ச்சி - 4-5 வயது குழந்தைக்களுக்கும் டிக்கெட் எடுக்க கட்டாயம். இது கூட ஓகே.
மூன்றாவது - பால்கனி - 100 ரூபாய் கீழ் தளம் - 80 ரூபாய்.
ஆனால் இந்த விலையை டிக்கெட்டில் குறிப்பிட வில்லை.
நான்காவது - அடாவடியாக லேடிஸ் கைபைகளை கூட திறந்து பார்த்து குழந்தைகளுக்கு பிஸ்கட் லேஸ் சிப்ஸ் என்று இருந்தால் வெளியில் விட்டு செல்ல சொல்லி கொண்டிருந்தார்..
நானும் என் மகனுக்கு வாங்கிய பிஸ்கட்டை (வெளிப்படியாக) உள்ளே எடுத்து செல்வேன் இல்லை என்றால் எனக்கு படம் பார்க்க இஸ்டம் இல்லை பணத்தை திரும்ப தாருங்கள் என்று கேட்டு தகறாறு செய்தால் முடியாது.. இது எங்கள் கம்பனி ரூல்ஸ் என்றும் டிக்கெட்டில் விதிமுறைகள் உள்ளது பார் என்று பேச ஆரம்பிக்க, நான் ரூல்ஸ் எல்லாம் ஓகே.. அதே போல் டிக்கெட்டில் விலை ஏன் போடவில்லை என்றால் நீ எங்க வேண்டும் என்றாலும் போய் சொல் என்ற பதில்... எனக்கு எங்கயும் போகவோ, தகறாறு செய்யவோ விருப்பம் இல்லை அதே நேரத்தில் உங்களை சகித்து கொண்டு படம் பார்க்க விருப்பம் இல்லை பணத்தை திருப்பி தாருங்கள் என்றேன்
அதற்கும் முடியாது என்ற உடன் உங்க ஓனர் எங்கே? இல்லை மேனஜர் எங்கே? என்று கேட்கவும் பணத்தை திருப்பி தந்தார்கள்.
இப்படி இருந்தால் எப்படி தமிழ் சினிமா உருப்படும் ஏன் திருட்டு வீசிடி/டிவிடி விற்பனை ஆகாது ?
உங்கள் பிஸா பதிவை பார்த்து என்னால் ஆன எதிர்ப்பை காட்டிய திருப்தி..
அக்மார்க் பதிவுதிருட்டு.... இதே பதிவை நான் உங்களுக்கு முன்னாடியே போட்டு விட்டேன் ..
ஆமா அவருதான் ரீமேக் பண்றாருன்னு பார்த்தா நீங்களுமா ?
http://ilangaiunmaithamilan.blogspot.com/2010/07/blog-post.html
என்னுடைய இதே பதிவு
@unmaithamilan
பண்ற தில்லாலங்கடிய ஒழுங்கா பண்ணனும்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..:)
படத்துல ஜெயம் ரவியும், ஷாமும் கிட்டத்தட்ட டபுள் ஹீரோஸ் மாதிரி என்றும், அவர்களின் - முக்கியமாக ஷாமிந் பெயருக்காகவே படம் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்களே?
:)
இலியானா-தமனா எது பெஸ்ட்?
இலியானா-தமனா எது பெஸ்ட்?
enakku ileana thaan..
Thanks for saving my money. :)
நல்ல விமர்சனம்...ஆனால் இந்தப்படம் பார்த்து எனக்கு ஜெயம் ராஜா மேல் இருந்த நம்பிக்கையே போய் விட்டது..
நானும் இதுக்கு விமர்சனம் எழுதி இருக்கேன்..முடிஞ்சா பாருங்க..
http://rameshspot.blogspot.com/2010/07/blog-post_23.html
RKR சொல்றதிலையும் ஞாயம் இருக்கு.
படம் பார்க்க வாரவங்களை கண்டமேனிக்கு இம்சிக்க வேண்டியது.
அப்புறம் திருட்டு வி.சி.டி பார்க்கதேன்னு சூப்பர் ஸ்டார் ல இருந்து காமெடியன்கள் வரைக்கும் உபதேசம் பண்ண வேண்டியது.
Post a Comment