சாப்பாட்டுக்கடை
ஒரு மழை நாளில் ஒரு நண்பருடனான மீட்டிங்கை முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டது. அவருடய அலுவலகத்திலிருந்து கிளம்பி வெளியே வந்தால் பெரும் மழை. இரவு மணி சுமார் 12.30 இருக்கும். கோடம்பாக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி வரை திறந்திருக்கும் ஒரு உணவகம் அன்று மூடிவிட்டிருந்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் பசி தெரியவில்லை. ஆனால் இப்போது பசி பின்னி எடுத்தது.
அப்போதுதான் எனக்கு சட்டென ஞாபகம் வந்தது. TWILIGHT TAKEOUT. மாலை 7 மணி முதல் அடுத்த நாள்காலை 7 மணி வரை சுடச்சுட உணவு கிடைக்குமிடம். ஆனால் ஒன்லி பார்சல். நுங்கம்பாக்கத்தில் லேக் ஏரியாவில், பார்க் தெருவில் இருக்கிறது. அந்த மழை இரவிலும் படு சுறுசுறுப்பாக வியாபாரம் நட்ந்து கொண்டிருந்தது.
நட்ட நடு இரவில் நல்ல சுடச்சுட வெஜ், நான் வெஜ் பிரியாணிகள், நான், பட்டர் நான், ப்ரைட் ரைஸ், மற்றும் சைட் டிஷ்ஷுகள் கிடைக்கும். இதை தவிர இன்னும் நிறைய உணவு வகைகள் கிடைக்கிறது விடிய..விடிய.. போன் செய்து ஆர்டர் செய்துவிட்டு கூட போய் வாங்கிக் கொள்ளலாம். டெலிவரியும் செய்கிறார்கள்.
நாங்கள் அன்று ஆளுக்கு ஒரு பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு காரிலேயே உட்கார்ந்து சாப்பிட்டோம். மிக அருமையான பாக்கிங். கொஞ்சம் கூட சூடு குறையாமல் நடு ராத்திரி 1.30 மணீக்கு சாப்பிட்டது திருப்தியாக இருந்தது. நல்ல சுவையும் கூட.. நீங்க்ளூம் ஒரு முறை ட்ரை செய்து பாருங்களேன்.
பி.கு : மழையில் காரில் உட்கார்ந்து கொண்டே படமெடுத்ததால் கொஞ்சம் தண்ணியாக இருக்கும் துடைத்துவிட்டு பார்க்கவும்.:)
Comments
where is the wiper to clean and see the pic
பி.கு : மழையில் காரில் உட்கார்ந்து கொண்டே படமெடுத்ததால் கொஞ்சம் தண்ணியாக இருக்கும் துடைத்துவிட்டு பார்க்கவும்.:)
//
ஓ... காருக்குள்ளயும் மழயா........
// ஓ... காருக்குள்ளயும் மழயா..//
குடைக்குள் மழை பெய்யும் போது காருக்குள்ளே மழை பெய்யக் கூடாதோ???
ஜோதிஜி.. எப்பவுமே சில விஷயங்களை சொல்லும்போது.. விலையை கேட்டு முடிவு செய்யக்கூடாது.. அதனால் தான் சொல்வதில்லை. நான் சொல்லும் இடங்கள் எல்லாம் மிக காஸ்ட்லியான இடங்கள் இல்லை..
/* cable sankar thirundhitta pola irukku?. A joke kaaram kuraiva irukku? eppadiyo thirundhuna sari./*
சினிமா தொழிலில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் ஆபாசம் இல்லாத ஒன்றை எதிர் பார்க்க கூடாது. அது அவர்களுக்கு ஹோர்லிக்ஸ் மாதிரி. வன்முறையான ஆபாசம் நிறையவே இருக்கும்.
ஆதி.. இது எனக்கு போன வாரம்தான் தெரியும்
@தமிழ் அமுதன்
ஒரு சோழவர்மன் போயி.. இன்னொரு தமிழ் அமுதனா?
ஆபாசம் என்பது பார்பவ்ர்களின் பார்வையை பொறுத்து நண்பரே..