எ.வ.த.இ.மா.படம் -Peepli (Live)
எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்னு ஏங்க வைகிற படம் பீப்லி. வெகு சிம்பிளான மேக்கிங். ஆனால் மனதில் அறையும் கதை. மிகவும் கசப்பான விஷயத்தை சிரிப்பு என்கிற மருந்தோடு முழுங்க கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு இயல்பாக ஒரு கதையை சொல்ல முடியுமா? மேக்கப்பில்லாத அழுக்கு முகங்களை வைத்து நம்மை வசீகரீக்க முடியுமா? கொஞ்சம் கூட கமர்ஷியல் இல்லாத ஒரு படத்தை அமீர்கான் தயாரிக்க முன்வந்ததை போல தமிழில் எந்த நிதிகளுக்காகவாவது தைரியம் இருக்கிறதா?. படத்தில் தான் கமர்ஷியல் விஷயம் இல்லையே தவிர படத்தை பொறுத்த வரை கமர்ஷியல் ஹிட் தான். ஏனென்றால் பிவிஆர், சத்யம், ஐநாக்ஸில் தொடர்ந்து வீக்கெண்டில் ஹவுஸ்புல். விவசாயிகள் தற்கொலைதான் படத்தின் அடிநாதம், விவசாயம் நொடித்துப் போய், வறுமையிலும், பேங்க் லோன்கள் கட்ட முடியாமல் கடனிலும் நிலத்தை இழப்பது மானக்கேடு என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை பற்றிய படம். நத்தாவும் அவனுடய அண்ணன் புடியாவும் பேங்க் லோன் கட்ட முடியாமல் அவர்களது நிலத்தை பேங்கிடம் இழக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் பணம் புரட்ட முடிய்வில்லை. எனவே லோக்கல் அரசியல் வாதியிடம் போய் ...