குறுக்கே நிறுத்தப்படாமல் இருக்க வேண்டும்
காலை அவசரத்துக்கு
ஒரு உதையில் கிளம்ப வேண்டும்
மேம்பாலத்தில் முன் செல்லும் வண்டியின்
பிரேக் சரியாக பிடிக்க வேண்டும்
அழுந்த பிடிக்கும் போது
க்ளட்ச் வயர் கட்டாகாமல் இருக்க வேண்டும்
சாயங்காலம் திரும்ப வருகையில்
மூச்சடைக்கும் ட்ராபிக் இல்லாமல் இருக்க வேண்டும்
பின்னால் வரும் தண்ணீர் லாரி
என் மேல் இடிக்காமல் நிறுத்த வேண்டும்
வீடு வந்து சேர்வதற்குள்
உயிரோடு இருக்க வேண்டும்
என ஆயிரம் வேண்டும்கள்
இவ்வனைத்தும் நடந்தால்
அடுத்த நாளும் அஃதே நடக்க வேண்டும்.
டிஸ்கி: எண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று கடிதமெழுதியும், தொலைபேசியிலும் விரும்பிகேட்ட, சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி மற்றும் பலரின் விருப்பத்தின்படியால்..
Post a Comment
29 comments:
கவித.. கவித.. கவித....
இதுக்கு நம்ம ஹாலி பாலி ஒரு எதிர் கவித எழுதுவாருன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு :)
ஒவ்வொரு தடவயும் எண்டர அதிகமா தட்டீங்க போலருக்கு :)
//சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி //
ராமசாமி.. இவங்கல்லாம், ப்லாக் எழுதறாங்களான்னு செக் பண்ணுங்க. போய் ஆளுக்கு ஒரு 1000 கமெண்ட் போட்டுட்டு வரலாம்.
நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை கேபிள்ஜி....யாருக்கெல்லாமோ புலிட்சர் அவார்டு கொடுக்கறானுங்க...உங்களை விட்டுறானுங்க...நீங்க மனம் தளராதீங்க....எப்படியும் நாம வாங்கறோம்....:))
//இதுக்கு நம்ம ஹாலி பாலி ஒரு எதிர் கவித எழுதுவாருன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு :)//
கவித..., ஒன்லி ஃபார் மை ஸ்வேதா புஜ்ஜுகுட்டி.
சற்று முன் கிடைத்த செய்தி சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி
இவங்க மூணு பெரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தற்கொலை முயற்சி ஆக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம்.
:)
அண்ணனின் எண்டர் கவிதையை கிண்டல் அடிப்பவர்கள் தமிழ்மணத்திலும், இண்டேலியிலும் ஓட்டளித்துவிட்டு கிண்டல் அடிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
:)
நாஞ்சில் பிரதாப் said...
நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை கேபிள்ஜி....யாருக்கெல்லாமோ புலிட்சர் அவார்டு கொடுக்கறானுங்க...உங்களை விட்டுறானுங்க...நீங்க மனம் தளராதீங்க....எப்படியும் நாம வாங்கறோம்....:))
---
உசுப்பேத்தி விட்டு ரணகளமாக்றதுன்னா இதுதான்னா :)
எண்டர் உரைநடை நல்லா இருக்கு..
//எண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று கடிதமெழுதியும், தொலைபேசியிலும் விரும்பிகேட்ட, சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி மற்றும் பலரின் விருப்பத்தின்படியால்.//
இவங்கவள்ள யாராவது என் கையில மாட்டட்டும் - வச்சிக்கிறேன் கச்சேரிய.
பாலா: நல்லா விசாரிங்க, இந்த மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க - சொந்த செலவில சூன்யம் வச்சிக்க அவங்களுக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சாதரணமானவங்களோட வேண்டுதல்கள் எப்படி இருக்கும்னு பட்டியல் போட்டு காட்டிட்டீங்க! சூப்பரோ சூப்பர்!
கவித.. கவித.. கவித....
மேம்பாலத்தில் முன் செல்லும் வண்டியின்
பிரேக் சரியாக பிடிக்க வேண்டும்//
நம்ம வண்டியில ப்ரேக் பிடிக்கிறது மட்டும் இல்லாம முன்னால போற வண்டியிலயும் ப்ரேக் பிடிக்க வேண்டிக்க வேண்டி இருக்குது. என்ன கொடும சரவணா?
இந்தக் கவிதைல ஏதும் டபுள் மீனிங் இருக்குங்களா
//
விரும்பிகேட்ட, சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி
//
மொத ரெண்டு கூட ஓகே... மூணாவது பேர எங்க புடீச்சீங்க........
எண்டர் நல்லா இருக்கு..
சென்னைவாசிகளின் பீலிங்க்ஸ அப்படியே கொட்டிடீங்க! சூப்பர்!
பக்கத்துவீட்டு தாவணி
ஆறுமணி ஸ்பெஷல்கிளாஸ்
போகாமல் இருக்க வேண்டும்
காலை அவசரத்துக்கு
பாத்ரூம் கதவு மூடாமல்
இருக்க வேண்டும்
கழுத்தை மட்டும் மூடும்
துப்பட்டாக்கள் "துப்பட்டா?"
கேட்காமல்
இருக்க வேண்டும்
ஃபிகர்தேத்த டூவீலர்
பஸ்ஸ்டாண்டு போகையிலே
ஃப்ரண்டு சனியன்
தொத்தாமல்
இருக்க வேண்டும்
சாய்ங்காலம் வரும்போது
அம்மா "வாய ஊது" சொல்லாமல்
இருக்க வேண்டும்
எத்தனையோ வேண்டும்
'இன்று மட்டுமாவது'
என்றே தினமும்...
இது ஃபாலோ அப்புக்கு
இதுல ஏதோ குறையுதே.. ஏய்.. ராஜு.. வுடனே வாப்பா..
நெறைய மக்கள் எண்டர்தட்டி எழுதுனா மட்டும் கவிதை வந்துடும்னு நெனக்கிறாங்க.... தைரியமா எண்டர் கவிதைன்னு சொல்லிட்டு எழுதுற தில்லு உங்களுக்குத் தான் தல இருக்கு
அதுவும் சரிதான்...
umm....
chumma oru attendance pottuttu pollaaamunnu vanthooomungoooooooo
pottaachuu
kilamburomungoooooooooooi
வேண்டும்...வேண்டும்!! :)
எண்டர் கவிதை தலைப்புல நிதர்சன கதை எழுதியிருக்கீக....
//கடிதமெழுதியும், தொலைபேசியிலும் விரும்பிகேட்ட, சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி //
இந்த மூணு பேரோட அட்ரஸ், போன் நம்பர், மெயில் ஐடி இதெல்லாம் கிடைக்குமா?
கடிதம் எழுதி கேட்டாங்கன்னு சொல்லியிருக்கிங்க, அந்த கடிதத்த ஏன் ஸ்கேன் பண்ணி போடல?
ஒரு மிடில் கிளாஸ் மனிதன்வாழ்வு முழுக்க இதுபோன்ற சில்லறைக் கவலைகளால்தான் நிறைந்திருக்கிறது.கிரேட்.
Post a Comment