Thottal Thodarum

Aug 23, 2010

கொத்து பரோட்டா-23/8/10

DSC00797 DSC00798
சினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டிற்கு கடும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருந்து சிறப்பித்த விழா நாயகர்கள் திரு. நா.முத்துக்குமார், திரு.பிரமிட் நடராஜன், ஒளிப்பதிவாளர் திரு. மதி அவர்களுக்கும், வந்து கலந்து கொண்டு வாழ்ததிய நல்லுங்களாகிய நண்பர்களுக்கும், விழாவை சிறப்பாக அமைத்த கிழக்கு பதிப்பக நிறுவனத்திற்கும் நன்றிகள் பல. புத்தகம் அபீஷியலாய் நேற்றுதான் வெளியானாலும், வெளியான வெகு சில நாட்களில் எல்லா கடைகளிலும் விற்று தீர்ந்து, அடுத்த ரீபிரிண்டுக்காக அர்டர் கொடுக்கும் அளவுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நன்றியோ.. நன்றி..
DSC00804 DSC00801
DSC00807 DSC00812
வீடியோ பார்க்க :http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_22.html
மேலும் படங்கள் பார்க்க : http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, உயர்வும் செய்துவிட்டார்கள். பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து, ஐம்பதாயிரம் ரூபாய் என்று ஏற்றியும், அது போதாது என்று போராட்டம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எம்.பியாக செலவழிக்கும் பணத்திற்கு நான்கு மடங்கு பெரிதாய் ஊழல் செய்யாமலே சம்பாதிக்கிறார்கள். இதில் இந்த சம்பளம் எல்லாம் ஜுஜுபி அவர்களுக்கு. நமக்கான பிரதிநிதிகளுக்கு சம்பளம் கொடுப்பதும், அவர்கள் உயர்வு கேட்பதும் நியாயம் தான் என்றால். அவர்களுக்கான சம்பளம் கொடுப்பது நமது காசில் தான் ஸோ. நாம் அவர்களின் முதலாளிகள். ஐந்து வருடங்கள் வரை காத்திராமல் ஒழுங்காய் வேலை செய்யாத எம்.பிக்கள் எல்லாரையம் வேலையைவிட்டு தூக்கும் உரிமையை அரச நமக்கு கொடுக்குமா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பதிவுலகத்தில் சமீப காலமாய் ஒரு ஜுரம் ஓடக் கொண்டிருக்கறது. அது என்னவென்றால்.. எந்திரனை தவிர்ப்போம், புறக்கணிப்போம். எந்திரனால் ஏழைகளுக்கென்ன லாபம்? தோழர், அது இது என்று ஏதேதோ.. புரட்சிகரமான கருத்துக்கள் என்று நினைத்துக் கொண்டு ஆளாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. இப்படி புறக்கணிப்போம் என்று எழுதிவிட்டால் மட்டும் புறக்கணித்துவிடுவார்களா? இல்லை இப்படி எழுதும் இவர்கள் தான் முதல் வாரத்தில் படம் பார்க்காமல் இருந்துவிடப் போகிறார்கள். சினிமா, தொலைக்காட்சியோ அது ஒரு தொழில் அதில் யாரையும் கட்டாயப்படுத்தி உள்ளே சென்றுதான் ஆக வேண்டும் என்று உள்ளே அனுப்புவதில்லை. யாருக்கு எது விருப்பமோ.. அதை அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப.. இவர்கள் பதிவெழுவதை போல..  யார் சொல்லியும் யாரும் கேட்டு விடப் போவதில்லை. So let them decide what to do? why we should impose?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
செவிககினிமை
சமீபத்தில் அய்யனார் படத்து பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் வரும் ஆத்தாடி ஆத்தாடி நல்ல மெலடி. தமன் நிஜமாகவே நனறாக கல் உடைத்திருக்கிறார்( நன்றி: ஜெட்லி). பாடலின் ஆரம்பத்தில் வரும் வயலின் நன்றாக இருககிறது. Have a ear..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார தத்துவம்
எப்போதும் ஒரு வி்ஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளூங்கள். தடைகள் உங்கள் வளர்ச்சியை த்டுப்பதில்லை. எது உங்கள் வளர்ச்சியை தடுக்கிறது என்றால் நீங்கள் தடை என்று நினைக்கும் அந்த நினைப்புததான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
இந்த குறும்படம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியது. மிக அழகான ஒரு சிறுகதை இந்த துறு குறும்படம். நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் மிக அழகான சின்ன சின்ன ஷாட்களால் மிக இயல்பாக கதை சொன்ன விதம் அருமை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்
இந்த விளம்பரம் சொல்லும் விஷயங்கள் ஆயிரம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
உங்களுக்கு தெரியுமா?
கண்ணைத் திறந்து கொண்டு யாராலும் தும்ம முடியாது.sneeze$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
லேட்டரல் திங்கிங்
சிந்திப்பது நல்ல விஷயம் அதிலும் அவுட் ஆப் த பாக்ஸ் சிந்திப்பது நமக்கு இன்னும் நல்லது. அப்படிப்பட்ட கேள்விகளை இங்கே அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமே.. (என்னா சிந்தனைப்பா?)

கேள்வி : ஒரு கூடையில் ஆறு முட்டைகள் இருக்கிறது. ஆறு பேர்கள் ஆளுக்கொரு முட்டையை எடுத்து சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்க ஒரு முட்டை மட்டும் எப்படி கூடையில் இருக்கும்?

விடை : பின்னூட்டத்தில் சொல்லுங்க..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏஜோக்
ரூபிக் க்யூபிற்கும், லுல்லாவுக்குமிருக்கும் சம்பந்தம் என்ன?
அதிக நேரம் விளையாட, விளையாட, ரெண்டுமே டென்ஷன் ஆகும்.

ஒரு ஆணின் ஈகோவை தாக்கும் முக்கியமான இரண்டு வார்ததை?
உள்ள இருக்கா?

டிஸ்னி வேர்ல்டுக்கும் வயாக்ராவுக்கு இருக்கும் பொதுவான விசயம்?
ரெண்டுத்துக்குமே ரெண்டு நிமஷ ரைடுக்காக ரெண்டு மணி நேரம் வெய்ட் பண்ணனும்.

ஆடம் ஈவிடம் முதல் முதலில் செக்ஸ் வைத்திருக்க முயலும் போது என்ன சொல்லியிருப்பான்?
ஈவ் கொஞ்சம் தள்ளியே நில்லு இது எவ்வள்வு தூரம் வளரும்னு எனக்கு தெரியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கேபிள் சங்கர்
Post a Comment

50 comments:

பாலா said...

மீ த ஃபர்ஸ்டு?!!

பாலா said...

சங்கர்.. இப்பத்தான் ஜோதிஜி ஒரு கமெண்ட் போட்டிருந்தாரு. என்ன ஏதுன்னு பதறியடிச்சிப் பார்த்தா.....

ஹி.. ஹி.. ரொம்ப தேங்க்ஸ் சங்கர். :)

இது ஒரு மேட்டரா?

Unknown said...

கூடை ஒருவன் கையில் இருந்தது ...

Unknown said...

வானம்பாடிகள் ஐயாவின் பதில் போட்ட பின்னூட்டம் இங்கும் பொருந்துகிறது ..


எந்திரன் ரிலீசாகும் அப்புறம் இன்னொரு படம் வரும் ...

காசு வச்சிருக்கவன் படம் எடுத்திருக்கான் .. காசு இருந்தா பாருங்க.. இல்ல காத்திருந்தா முப்பது ரூவாய்க்கு dvd கிடைக்கும் ஒருத்தர் வாங்கினா நூறு பேர் பாக்கலாம்..

நான் ஏழை பங்காளன் என்றால்.. பாக்கவே பாக்காதீங்க....

ஐயன்மீர் இதெல்லாமே வியாபாரம் .... சரக்கை விற்க கூவத்தான் வேண்டும்...

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
பின்ன இதை சின்ன விஷயமா எடுத்துக்க முடியுமா பாலா.. உன்னை நேர்ல பார்க்கும் போது சொல்றதவிட இதுக்காக நீ உழைத்த உதவியது மறக்க முடியாது.

Unknown said...

துறு... துரு...துரு...

Unknown said...

விளம்பரம் நூறு ரூபாய் ... சூப்பர் ..

சாஷீ said...

புத்தக வெளியீட்டு படங்கள் அருமை ,கொத்து பரோட்டா கொஞ்சம் காரம் போட்டுருக்கலாம் .

Murugesh said...

ஆறு பேரும் ஆறு முட்டை எடுத்தாங்க , ஆனா அந்த கூடையில்ருந்து தான் எடுத்தாங்களா?

செ.சரவணக்குமார் said...

புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

தல உங்களுக்கும் மழைக்கும் செம்ம ராசியோ?

மனமார்ந்த வாழ்த்துகள்.

ரசிகன் said...

கொத்துபரோட்டா (நகைச்)சுவையா இருந்துச்சுங்க:)

ரசிகன் said...

//கேள்வி : ஒரு கூடையில் ஆறு முட்டைகள் இருக்கிறது. ஆறு பேர்கள் ஆளுக்கொரு முட்டையை எடுத்து சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்க ஒரு முட்டை மட்டும் எப்படி கூடையில் இருக்கும்?//

ஒருவேளை கடைசியா முட்டைய எடுத்த ஆளு கூடையோட எடுத்துக்கிட்டாரோ என்னமோ....

Unknown said...

///கூடை ஒருவன் கையில் இருந்தது///
too obvious. ஆக வேற ஏதோ பதில் இருக்குது.

Unknown said...

சான்ஸ் இல்லை. கடைசி ஆள் கூடையோட முட்டையை எடுத்தார் என்பது தவிர வேற ஐடியாவே வரேல்லை.

Raj Chandra said...

The last one took the basket which had his share of egg.

Windows Administrator Resource said...

6 ru perum orey oru eggy i eduthaanga meethi 5 egg meetham irrukku.

Unknown said...

ஒருத்தர் திரும்ப வச்சுட்டார்.

தத்துவம் அருமை.

a said...

கேபிள்ஜி : மீதி இருக்கிற அந்த முட்டை கூ-முட்டையா இருக்குமோ???/ இல்ல கடசி முட்டய வாங்க்குறவங்களுக்கு கூடை இலவசம்ன்ணு சொல்லி குடுத்திருப்பாங்களா????

a said...

கேபிள்ஜி : குறும்படம் சூப்பர்.......... சிரிச்ிக்கிட்டே இருக்கேன்...

பா.ராஜாராம் said...

புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்ஜி!

கே.ஆர்.பி.எஸ். சரியாக சொல்லியிருக்கிறார்.

Ravichandran Somu said...

வாழ்த்துகள் தலைவரே!

புத்தகம் கிழக்கிலிருந்து போன வாரம் வந்து சேர்ந்து விட்டது.

ஜெய் said...

6 முட்டை மட்டும்தான் இருந்துச்சா... இல்ல, ஒரு கோழியும் உள்ள இருந்துச்சா? ;)

கார்க்கிபவா said...

lsat person had taken the egg with koodai...

Chandru said...

IQ கேள்வி விகடனில் சில மாதங்களுக்கு முன் வந்திருந்தது..

யாரோ ஒரு ஆள் முட்டையை கூடையோடு எடுத்து கொண்டார் என்பதே விடையாக தரப்பட்டது

DREAMER said...

கேபிள்ஜி,
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். மன்னிச்சிக்குங்க வரமுடியல. ஒரு கலயணத்துக்கு போக வேண்டியிருந்தது. சினிமாக்காரங்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் ரொம்பவும் பயனுள்ள புத்தகம்...

-
DREAMER

Anonymous said...

congrats for ur book on movie business ,,,nalla mugurtha naal ,,,, akka mariage ,,so only couldn come ,,, any way thank u for making it as bloggers meet ,,



coming to tat lateral thinking ,,,

somebody might have taken along with basket ,,,

because ive crossed this question in my CAT exam preparation ...

Regards
RaaGo

KarthikeyanManickam said...

Thala,

All the Best for your book relesing (;)) function.

Andha muttai "KOOMUTAI". Eppudiiiiiii.....

Nan Mahan alla vimarsanam nalla irundhadhu. Nanum saturday patthuttean. Susidhren making was so good.

Cheers...

நர்சிம் said...

வாழ்த்துகள்

R.Gopi said...

சங்கர் ஜி...

முதலில் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள்.... கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்து விழாவை சிறப்பித்தவர்களுக்கு நன்றி....

எம்.பி.களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்றே சொல்வார்கள்... அவர்களின் சம்பளத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுகிறார்கள்... பேசினா நமக்கு டைம் வேஸ்ட்....

எந்திரனை தவிர்ப்போம்.... இது என்ன மடத்தனம்.... படம் பிடித்திருந்தால் பாருங்கள்.... இல்லையென்றால் மூடிக்கொண்டு (கண்ணை!!) வீட்டில் இருங்கள்... மெகா பட்ஜெட் படங்களில் விக்ரம் (கந்தசாமி), கமல்ஹாசன் (தசாவதாரம்) போன்றோர் நடித்த போது வராத இந்த டகால்டி புறக்கணிப்பு போராட்டம், ரஜினி நடிக்கும் படங்களுக்கு மட்டுமே வருவதின் மர்மம் என்ன?

அய்யனார் படத்தின் ஆத்தாடி ஆத்தாடி பாடல் கேட்கிறேன்...

//எது உங்கள் வளர்ச்சியை தடுக்கிறது என்றால் நீங்கள் தடை என்று நினைக்கும் அந்த நினைப்புததான்.//

புரிஞ்சுடுச்சு தலைவா...

குறும்படம், விளம்பரம் பலே....

கண்ணை திறந்து கொண்டு தும்ம முடியாது... சரி தான்....

//கேள்வி : ஒரு கூடையில் ஆறு முட்டைகள் இருக்கிறது. ஆறு பேர்கள் ஆளுக்கொரு முட்டையை எடுத்து சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்க ஒரு முட்டை மட்டும் எப்படி கூடையில் இருக்கும்? //

அந்த ஆறு பேரில், கூடைக்காரரும் ஒருவரா?

ஏ ஜோக்ஸ் - ஓகே ரகம்....

வழக்கம் போலவே, கலக்கல் ரக கொத்து பரோட்டா சங்கர் ஜி...

R.Gopi said...
This comment has been removed by the author.
பிரபல பதிவர் said...

ஒண்ணு தைரியமா ஏ ஜோக் போடுங்க... நாலு பேருக்கு பயந்தா விட்றுங்க... ஏ ஜோக் போடுறேன் பேர்வழின்னு "நான் மகான் அல்ல" போடாதீங்க‌

Jana said...

புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. எப்போ இங்காலப்பக்கம்?

vasu balaji said...

வாழ்த்துகள் ஜி.

CS. Mohan Kumar said...

புத்தக விற்பனை குறித்து அறிந்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கேபிள்; Profile படத்தில் கலக்குறீங்க

vinu said...

nammbunga naan yaarudaiya comments saiyum padikkala, the anser for the question is the last person who took the egg took along with the Koodai[english term i don't know - is this basket]-so is this ans right now i go back to check the comments

Sukumar said...

வாழ்த்துக்கள்.. விழா நிறைவாக இருந்தது...

Vidhoosh said...

புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள்

அருண் said...

கொத்து பரோட்டா சூப்பர்,புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.தத்துவமும் அருமை.

Beski said...

வாழ்த்துக்கள்.
போட்டோ எல்லாம் சூப்பரா எடுத்துருக்காங்க.

அறிவிலி said...

வாழ்த்துகள்.

சுரேகா.. said...

கூடவே இருக்கீங்க! எப்ப எழுதுறீங்க? :)
உங்க தத்துவம் சூப்பரு!! :)

ஜோதிஜி said...

பின்ன இதை சின்ன விஷயமா எடுத்துக்க முடியுமா பாலா.. உன்னை நேர்ல பார்க்கும் போது சொல்றதவிட இதுக்காக நீ உழைத்த உதவியது மறக்க முடியாது.

பால்மணம்

ghi said...

//ஒரு கூடையில் ஆறு முட்டைகள் இருக்கிறது. ஆறு பேர்கள் ஆளுக்கொரு முட்டையை எடுத்து சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்க ஒரு முட்டை மட்டும் எப்படி கூடையில் இருக்கும்?//

கடைசியாக முட்டையை எடுத்தவர் கூடையோடு எடுத்துக்கொண்டார்.

Cable சங்கர் said...

நம் நண்பர்கள் பல பேர் ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். சரியான பதிலை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.கூடையோடு முட்டை எடுத்துச் சென்ற்துதான் சரியான விடை.

ஜானகிராமன் said...

கேபிள்ஜி, சினிமா வியாபாரம் புத்தகம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

//o let them decide what to do? why we should impose?// எந்திரன் பற்றி எதிர்மறையாக எழுதவேண்டியதில்லை என்றால், எதிர்மறையாக ஏன் எழுதுகிறாய் என்று கேட்டு impose செய்வதும் தவறு தானே...

Cable சங்கர் said...

அதனால் தான் நான் இம்போஸ் செய்யாமல் வெறுமே சொல்லியிருக்கிறேன். ஓகே
இம்போஸிங் இஸ் டிபரண்ட் ப்ரம் கன்வேயிங் ஐயம் ஜஸ்ட் கன்வேயிங்

ஸ்ரீஹரி said...

உங்க பதிவு எல்லாம் அருமை .. அப்படியே பிரபல பதிவர் ஆன எனக்கு வாழ்த்து சொல்லவில்லையா அண்ணா ?

http://sri1982-srihari.blogspot.com/2010/08/secret-tips.html

மறத்தமிழன் said...

கேபிள்,

நல்லா கொத்தியிருக்கிங்க ஜி !

அன்புடன்,
மறத்தமிழன்.

tsekar said...

Director Cable Sankar,What is the progress of your film?

-tsekar

Unknown said...

//கேள்வி : ஒரு கூடையில் ஆறு முட்டைகள் இருக்கிறது. ஆறு பேர்கள் ஆளுக்கொரு முட்டையை எடுத்து சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்க ஒரு முட்டை மட்டும் எப்படி கூடையில் இருக்கும்?///

என்னாதிது சின்னப் புள்ளைத் தனமா? ஆறாவது ஆள் கூடையோட எடுத்துட்டுப் போயிட்டாங்கறத நா எத்தனையாவது ஆளா சொல்றது... :)