Thottal Thodarum

Aug 7, 2010

பாணா காத்தாடி

Banna-movie ஸ்கூல் படிக்கும் வடசென்னை ஸ்லம் பையனுக்கும், பேஷன் டெக்னாலஜி படிக்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்படும், காதல், மோதலை பற்றிய படம். நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமாயிருக்கும் படம். சத்யஜோதியின் பேனரில் வரும் படம் என்பதால் ஒரு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த படம்.

ஒவ்வொரு க்ளாஸிலும் இரண்டிரண்டு வருடங்கள் நின்று நிதானமாய் படித்து வரும் ரமேஷ், காத்தாடி விடுவதில் மன்னன். ஒரு டீலில் அறுந்த காத்தாடியை பிடிக்க ஓடும் போது சமந்தாவின் மேல் மோதிவிட, அவள் கழுத்தில் மாட்டியிருக்கும் பென் ட்ரைவ் அதர்வாவின் பைக்குள் மாட்டிவிட, இது தெரிந்து சமந்தா அவனை தொடர்ந்து டார்ச்சர் செய்கிறாள். ஒரு கட்டத்தில் தன் பாக்கெட்டில் பென் ட்ரைவ் இருப்பதை கண்டு அவளிடம் கொடுக்க, இருவரும் நண்பர்களானார்கள். நட்பு காதலாகிறது. அதர்வா தன் காதலை சொல்லப் போகும் போது நடக்கும் பிரச்சனையில் இருவரும் பிரிய. முடிவில் காதலர்கள் இருவரும் சேர்ந்தாரக்ளா? இல்லையா என்று சொல்லியிருக்கிறார்கள்.
Banna-movie1 நடிகர் முரளியின் மகன் அதர்வா.. ஆள் நன்றாக இருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். ஆனால் மெட்ராஸ் பாஷை தான் வாயில் நுழைய மாட்டேனென்கிறது. அவனை சுற்றியுள்ள நண்பர்கள் எல்லோரும் மெட்ராஸ்பாழையில் சரியாக பேச இவர் மட்டும், ம்ஹும்.

சமந்தா ஏற்கனவே அறிமுகமாகியவர்தான். விண்ணைதாண்டி வருவாயா படத்தின் சின்ன ரோலில் நடித்தவர். ஆனால் தெலுங்கில் அவர் தான் கதாநாயகி. தற்போது செம பிஸியான நாயகி. அழகாய் இருக்கிறார். மேலுதடு வித்யாசமாய் இருக்கிறது. பல இடங்களில் அழகாயிருக்கிறார்.

படத்தை ஒரளவுக்கு கலகலப்பாக கொண்டு போவது கருணாஸ் தான். முதல் காட்சியில் போலீஸ் ஸ்டேஷனின் “கோத்துவிடுறாங்க சார்” என்று புலம்புவதில் ஆரம்பித்து. ஆங்காங்கே மாட்டிக் கொண்டு விழிப்பதாகட்டும், அப்பா பாக்கெட்டில் திருட முயற்சி செய்து தோற்குமிடங்களாட்டும் கலகலப்பு.

அதர்வாவின் அம்மாவாக மெளனிகா.. இவர் ஒருவர் தான் கொடுத்த காசுக்கு எக்ஸ்ட்ராவாக நடித்திருக்கிறார். அருமையான  மெட்ராஸ் பாஷை டிக்‌ஷன். பாடி லேங்குவேஜ். ப்ரசன்னா கேரக்டர் ஆங்காங்கே வருகிறது. கொலை செய்கிறது. க்ளைமாக்சில் ஹீரோவையே கொல்ல வருகிறது. என்று பல பில்டப்புகள் இருந்தாலும் பெரிதாய் மனதில் நிற்கத்தான் மாட்டேன் என்கிறது அவரது கேரக்டர். இந்த தொழில் வேண்டாம் என்று பேசும் இடத்தில் ப்ரசன்னாவின் டயலாக்கும் அவரது நடிப்பும் அருமை.
Banna-movie2 யுவனின் பாடல்கள் வெகு சுமார். என் நெஞ்சில் பாடலும்,இரண்டு பாடல்களை தவிர பெரிதாய் ஏதுவும் நினைவில் நிற்கவில்லை. பிண்ணனி இசை சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. ரிச்சர் நாதனின் ஒளிப்பதிவில்  என் நெஞ்சில் பாடலில் வரும் வெளிப்புற காட்சிகள் பளிச். ராதாகிருஷ்ணனின் வசனங்கள் அவரது மீண்டும் மீண்டும் சிரிப்பு போலவே நிறைய நாடகத்தனம். ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ராஜ்குமாரின் ஆட்டம் அருமை.

திரைக்கதை இயக்கம் பத்ரி வெங்கடேஷ். இவருக்கு இது முதல் படம். முடிந்த வரை கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய முயற்சித்திருக்கிறார். முதல் பாதியில் விறுவிறுப்பாக சொல்ல வேண்டிய கதையை மிக மெதுவாக நகர்த்தியிருப்பதும், இரண்டாம் பாதியில் பிரசன்னா கேரக்டரை வைத்து கொஞ்சம் பரபரப்பாக்கியிருக்கிறார். ப்ரசன்னா நல்ல நடிகர் என்றாலும் தாதாவாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. தவறான காஸ்டிங். கதையை ஓட்ட வேண்டும் என்பதற்காகவே இங்கிருக்கும் அதர்வாவை குஜராத்துக்கு பட்டம் விடும் திருவிழா என்று குஜராத் அனுப்பி, திருவிழா என்றால் எல்லார் வீட்டு மொட்டை மாடியிலும் பட்டம் விடுவார்கள் என்பதை போல ஒரு காட்சியை காட்டிவிட்டால் திருவிழா ஆகிவிடுமா..? கதையில் எந்த விதத்தில் இந்த காட்சிகள் கதைக்கு உபயோகப்பட்டது?. பட்ஜெட் காரணமோ என்னவோ..? திரும்ப திரும்ப, பஸ் ஸ்டாண்ட், ஹீரோயினுடய வேன் என்று அது கூட ஓடுகிற் மாதிரி எடுக்காமல் நின்ற வாக்கிலே நாடகத்தனமாக பேசிக் கொண்டிருப்பதற்கான காரணம் பட்ஜெடா? அல்லது மேக்கிங் குறையா? இம்மாதிரி படங்கள் எல்லாம் மேங்கிங்கில் மிரட்டினால்தான் உண்டு. அதற்கு முதல் காத்தாடி சேசிங் காட்சி. அதில் நிறைய ஸ்கோர் செய்திருக்கலாம் மிஸ் செய்துவிட்டார்கள். சரியாக சொல்லியிருந்தார்களேயானால் க்ளைமாக்ஸில் நம் தொண்டையை அடைத்திருக்க  வேண்டிய படம். ம்ஹும்.
பாணா காத்தாடி – நூல் விட்டிருக்கணும்.
கேபிள் சங்கர்
Post a Comment

37 comments:

பாலா said...

ராமசாமி..

தோத்தாங்கொள்ளி தொர்ர்ரி

பாலா said...

குட் நைட் சங்கர்...

இந்த குட் நைட்டை நான் 40 நிமிசமா சொல்லிகிட்டு இருக்கேன்.

காலைல வர்றேன்

Cable சங்கர் said...

kud nightu..

Unknown said...

இந்தப் படம் பார்க்கிறதுக்கு இலக்கணப் பிழை பார்க்கலாம்...

Unknown said...

எப்படி பாலா, சொன்ன மாதிரியே செஞ்சுட்டிங்க....

Unknown said...

ராமசாமிக் கண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.....

நர்சிம் said...

காப்பாற்றியதற்கு நன்றி.

Cable சங்கர் said...

@narsim
பின்னூட்டியதற்கு மிக்க நன்றி:)

THOPPITHOPPI said...

sankar sir ungalukku nigar neenga mattum thaan.

ungal vimarsanatha vida neenga sollura andha kadaisi punch.
U R GREAT SIR.

"பாணா காத்தாடி – நூல் விட்டிருக்கணும். "

ENGALUKKAGA NIGHT TIMELA VIMARSANAM ELUDHAADHINGA. PLS TAKE REST

எறும்பு said...

//ஆனால் மெட்ராஸ் பாஷை தான் வாயில் நுழைய மாட்டேனென்கிறது. அவனை சுற்றியுள்ள நண்பர்கள் எல்லோரும் மெட்ராஸ்பாழையில் சரியாக பேச இவர் மட்டும், ம்ஹும்.//

நம்ம உண்மை தமிழன் இப்படி சொல்லி இருக்கார்

//முரளியின் மகன் அதர்வாதான் ஹீரோ. ரமேஷாக உருமாறியிருக்கிறார். நிஜமாகவே நல்ல நடிப்பு. முதல் படம் போலவே தெரியவில்லை.. சென்னையிலேயே பிறந்து வாழ்ந்தவர் என்பதால் கூவம் பாஷையிலும் பொளந்து கட்டியிருக்கிறார்////

ஹூம்... ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்....

எறும்பு said...

this is yours
//சரியாக சொல்லியிருந்தார்களேயானால் க்ளைமாக்ஸில் நம் தொண்டையை அடைத்திருக்க வேண்டிய படம். ம்ஹும்.//

This is true tamilans

//பொதுவாக தங்களுடைய முதல் படத்திலேயே இப்படியொரு கிளைமாக்ஸுக்கு கதாநாயகனும், இயக்குநரும் பெரும்பாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எப்படி இதில் தயாரிப்பாளரை காம்பரமைஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் ஆச்சரியம்தான்.. சந்தடிச்சாக்கில் தயாரிப்பாளரின் முதுகிலும் ஒரு டின் கட்டிவிடுவோம்.. சூப்பருங்கோ ஸார்..////

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...

எறும்பு said...

ஜெட்லி விமர்சனம் மிஸ்ஸிங்.எங்கள் தலை ஜெட்லியை படம் பார்க்காமல் செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கிறோம்.

பிரபல பதிவர் said...

என்ன தல...
செம்மொழி மாநாட்டுக்கப்புறம் எல்லா டமிழ் படங்களையும் விளாசுறீங்க...ஆனா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்களை மட்டும் புகழோ புகழ் என புகழ்றீங்களே,,,, என்ன விஷயம்....

THOPPITHOPPI said...

UNGAL cinemakaaran BLOG PADIKKA ARUMAIYAGA ULLADHU DHAYAVU SEIDHU UPDATE PANNAVUM SIR.

Sukumar said...

// மேலுதடு வித்யாசமாய் இருக்கிறது //

உங்க அளவுக்கு நோட் பண்ணி விமர்சனம் பண்ண இன்னொருத்தர் பிறந்துதான் வரனும்...

சி.பி.செந்தில்குமார் said...

கேபிள் சார்,நூல் விட்டிருக்கனும்னா என்ன அர்த்தம்?படம் ஓடும்கறீங்களா?ஓடாதுங்கறீங்களா?

ஜெட்லி... said...

//மேலுதடு வித்யாசமாய் இருக்கிறது. //

அப்புறம்....

ஜெட்லி... said...

//எறும்பு said...

ஜெட்லி விமர்சனம் மிஸ்ஸிங்.எங்கள் தலை ஜெட்லியை படம் பார்க்காமல் செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கிறோம்.

//


ஏன் அண்ணே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்தப் படம் பார்க்கிறதுக்கு இலக்கணப் பிழை பார்க்கலாம்... //

நிஜமாத்தான் சொல்லிரிகளா?

ராம்ஜி_யாஹூ said...

சென்னிமலை செந்தில்குமார், பதினெட்டு வருஷம் சினிமா சார்ந்த எழுத்துக்களே எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளீர்கள்.
இந்த படம் பதினெட்டு காட்சி கூட ஓடாது என்று தெரியாதா, இதில் என்ன சந்தேகம் ஓடுமா, ஓடாதா.

க ரா said...

ஹாலிவுட் பாலா said...

ராமசாமி..

தோத்தாங்கொள்ளி தொர்ர்ரி
----

எம்முட்டு சந்தோஷமப்பா.. சரி சரி பொழச்சு போங்க :)

Unknown said...

ANTHA 'PAANA KATHADILA' NEENGALUM KONJAM NOOL VITU IRUKINGALE ATHA PATHI YEN BOSS NEENGA ETHUVUM SOLLAVE ILLA?....NATRAJ

Cable சங்கர் said...

ரவிதா.. அதுல நான் விட்ட நூலூக்கு மாஞ்சா சரியா போடலை.. நூலு மட்டுமிருக்கும்.:(

சி.பி.செந்தில்குமார் said...

ராம்ஜி அண்ணே,18 வருஷம் ஜோக்ஸ்தான் எழுதுனேன்.சினிமாவுல கேபிள்தான் சீனியர்.அவர்கிட்ட கருத்துக்கேட்கறது ஒரு குத்தமாண்ணே

பாரதி said...

சூப்பர் விமர்சனம் சார்

www.bharathikavidhai.blogspot.com

THOPPITHOPPI said...

INDRU MULUVVADHUM (LINK WITHIN ) UNGAL OLD POSTS PADITHTHEN. TIME PONADHE THERIYAVILLAI.


I LOVE YOU SHANKAR

Cable சங்கர் said...

@krp senthil
அப்படியும் சொல்ல முடியாதுண்ணே

@கலாநேசன்
என்ன பாலா சொன்ன மாதிரி செஞ்சிட்டீங்க

Cable சங்கர் said...

@ramya
உங்க கரிசனத்துக்கு மிக்க நன்றி.. அப்படியெல்லாம் கஷடப்பட்டெல்லாம் எழுதறதில்லை..

@எறும்பு
மொதல்ல அவருக்கு சென்னை பாஷை தெரியாதில்லை.. வேண்டுமானல் படம் பாருங்க.. அதர்வாவின் அம்மாவாக நடிக்கும் மெளனிகாவின் மாடுலேஷனில் ஒரு 2 சதவிகிதம் கூட பேசியிருக்க மாட்டார்.. மற்றபடி பரவாயில்லையான நடிப்புதான்.

Cable சங்கர் said...

@எறும்பு
ஜெட்லி ஒரு நாளாவது நிம்மதியா இருக்கட்டுமே

@ரம்யா
சாரி டைம் இல்லை..

@சுகுமார் சுவாமிநாதன்
பின்ன படம் பாக்குறதுன்னா சும்மாவா..:)

@சி.பி.செந்தில்குமார்
யோசிச்சு சொல்ல்லுங்க பார்க்கலாம்

@ஜெட்லி
அப்புறமென்ன.. அடுத்து அடுத்துசொல்லிட்டே போகவேண்டியதுதான்/:)

Cable சங்கர் said...

@ரமேஷ் ரொமப் நல்லவன்
அலோ.. அவர்தான் சொல்றாருன்னா.. நீ பிட்டுபடம் பார்க்க அவரை காரணம் காட்டி போலாம்னு பாக்கிறியா..:)

@இராமசாமி கண்ணன்
ஒருத்தர் கஷ்டம் இன்னொருத்தருக்கு சந்தோஷம்..:)

@உஜிலாதேவி
நன்றி

@சி.பி.செந்தில்குமார்
யாரு வேணா யார் கிட்டயும் சந்தேகம் கேட்கலாம்ணே..

Cable சங்கர் said...

@பாரதி
நன்றி

@ரம்யா
முடிஞ்சா எலலாத்துக்கும் ஒரு பின்னூட்டம் போடுங்க மேடம் சந்தோஷமா இருக்கும்.:)

Ŝ₤Ω..™ said...

// சரியாக சொல்லியிருந்தார்களேயானால் க்ளைமாக்ஸில் நம் தொண்டையை அடைத்திருக்க வேண்டிய படம். ம்ஹும்.//

நச் விமர்சனம் அண்ணா..

முரளி இன்னமும் காலேஜில் படிக்கிறார் என நக்கலடித்திருப்பது நல்லா இருக்கு.. அப்பா காலேஜ் மாணவர் என்பதால், மகன் ஸ்கூல் மாணவரா?? முடிக்கவில்லைங்கண்ணோவ்வ்..

R.Gopi said...

ஷங்கர் ஜி...

முரளியே இன்னும் காலேஜ் ஸ்டூடண்டா தானே நடிச்சுட்டு இருக்காரு (!!).. ஓஹோ அவருக்கு தான் இப்போ சான்ஸ் இல்லையோ?

கார்த்திக்கோட மகனை மணிரத்னம் அறிமுகப்படுத்தறார்னு ஒரு நியூஸ் படிச்சேன்.. எந்தளவுக்கு உண்மையோ?

//
Cable Sankar said...
ரவிதா.. அதுல நான் விட்ட நூலூக்கு மாஞ்சா சரியா போடலை.. நூலு மட்டுமிருக்கும்.:(//

மாஞ்சா சரியா போட தெரியலேன்னா, மாஞ்சா வேலு கிட்ட ட்யூஷன் எடுத்துக்கலாமே ஷங்கர் ஜி!!?

vinthaimanithan said...

//ப்ரசன்னா நல்ல நடிகர் என்றாலும் தாதாவாக ஒத்துக் கொள்ள முடியவில்லை//

அஞ்சாதேயில எப்படி?!

//என்ன தல...
செம்மொழி மாநாட்டுக்கப்புறம் எல்லா டமிழ் படங்களையும் விளாசுறீங்க...ஆனா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்களை மட்டும் புகழோ புகழ் என புகழ்றீங்களே,,,, என்ன விஷயம்...//

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!

VeeTee said...

kpf;f ed;wp

mazhai kaala nanban said...

comment is good.....

Are you a creater?

Interest in new ideas?
Young and passionate?
Then why are you waiting?come to mazhai kaala nanban...A blog for creative innovations..
Visit mazhaikaalananban.blogspot.com
come and feel the vibrations !

சி.பி.செந்தில்குமார் said...

கேபிள் சார்,சால்ட் விமர்சனம் டாப் 5 இல் இடம் பிடித்து ஜீஜிக்ஸ் குழுமத்தால் ரூ 500 பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்