பச்சை வயல் கனவு
பெட்ரோல் விலையுர்வை ரிலையன்ஸ் போன்ற கார்பரேட்டுகளின் ப்ரஷருக்கு தலைவணங்கி விட்டு, மாநில அரசுகள் வரிகளை குறைத்து மக்களுக்கு விலையை குறைக்கலாமே என்கிறது. ஏன் அதையே மந்திய அரசு செய்யலாமே?. ஆனால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி காரணம் சொல்கிறார்களே தவிர பிரச்சனைக்கான சொல்யூஷனை யாரும் தருவதாய் இல்லை. ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் ஏறிய விலைவாசி மீண்டும் அது ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் குறைந்தால் குறைய வேண்டுமல்லவா.. ஆனால் குறைவதேயில்லை. அதனை மக்களும் கேட்பதில்லை. அரசும் கேட்பதில்லை. எதிர்கட்சி எழவும் எப்படியாவது மத்திய அரசு கட்சியின் பார்வையை தங்கள் பக்கம் திருப்புவதற்காக மெளனியாகவே இருந்து உறுத்தாமல் போராட்டம் நடத்துகிறேன் பேர்விழி என்று “போர்” ஆட்டம் ஆடுகிறது.
தமிழ் நாட்டில் விளைகின்ற காய்கறிகள் எல்லாம் இப்போது விளைவிப்பதேயில்லை. ஏனென்றால் விவசாயம் செய்யும் நிலத்தையெல்லாம் இப்போது சல்லிசான விலையில் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், ரெஜிஸ்ட்ரேஷன் இலவசம், என்று கூறு போட்டு விற்றுக் கொண்டிருப்பதினால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லாம போய். கார்ப்பரேட் விவசாயிகளான ரிலையன்ஸ், டாடா, போன்றவர்கள் விளைவித்து கொடுக்கும் காய்கறிகளை, தானியங்களை கிலே நூறு ரூபாய் என்று சொன்னாலும், அவர்கள் சொல்லுகிற விலையில் வாங்கி சாப்பிடுகிற நிலைதான் வரும்.
அரசாங்கம் விளை நிலங்களை விற்பதற்கு ஒரு தடையுத்தரவை போட்டு தமிழ்நாடு வெறும் கான்க்ரீட் காடுகளாய் மாறாமல் போக செய்ய வேண்டும் இல்லையேல் மேற்சொன்ன விஷயம் நிச்சயம் நடக்கத்தான் நடக்கும்.
சமீபத்தில் தஞ்சை மாவட்டத்துகாரர்கள் ஊருக்கு போய்விட்டு வந்தபோது புலம்பியது.. ஒரு காலத்தில் ஏன் ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால் கூட ஊரை விட்டு வெளியே வந்தால் ஒரே வயல் வரப்பும், தோட்டம் துரவுமாய்தான் இருக்கும் இப்போது ஒரே ப்ளாட் போட்டு மார்கிங்கைத்தான் பார்க்க முடிகிறது என்று வருந்தினர். அதென்னவோ உண்மைதான். நாட்டின் ஒரு பகுதி வறட்சியில் வாட, இன்னொரு பக்கம் விளைவித்த பொருட்கள் எல்லாம் சேமித்து வைக்க முடியாமல் புழுத்துப் போய் கெட்டு போகும் விஷயமும் இங்குதான் நடக்கிறது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அரிசி,மற்றும் கோதுமை உற்பத்தியில் முன்ணணியில் இருக்கிறது. அப்படியிருக்க, உற்பத்தி செய்த பொருட்களை கொள்முதல் செய்யும் அரசே அதை பாதுகாக்க தவறி விழலுக்கிரைத்த நீராய் செய்வது என்ன நியாயம். பெருகும் ஜனத்தொகைக்கு ஏற்ப உணவு பொருட்களுக்கான தேவையும் அதிகமாகிக் கொண்டேதானிருக்கும் அதற்கேற்ப நாம் உற்பத்தியையும், பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளையும் தயார் செய்து வைக்காவிட்டால் நிலைமை அதோகதியாகத்தான் ஆகும்.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அரிசி,மற்றும் கோதுமை உற்பத்தியில் முன்ணணியில் இருக்கிறது. அப்படியிருக்க, உற்பத்தி செய்த பொருட்களை கொள்முதல் செய்யும் அரசே அதை பாதுகாக்க தவறி விழலுக்கிரைத்த நீராய் செய்வது என்ன நியாயம். பெருகும் ஜனத்தொகைக்கு ஏற்ப உணவு பொருட்களுக்கான தேவையும் அதிகமாகிக் கொண்டேதானிருக்கும் அதற்கேற்ப நாம் உற்பத்தியையும், பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளையும் தயார் செய்து வைக்காவிட்டால் நிலைமை அதோகதியாகத்தான் ஆகும்.
நான் கேள்விபட்ட வரை இது உண்மையா என்று தெரியாது. குஜராத்தில் விளைநிலங்களை குறைந்தது பத்து வருடங்களுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே விற்க முடியுமாம். அப்படி ஒரு சட்டம் குஜராத்திலே செய்ய முடியும் என்றால் ஏன் இந்தியா முழுக்க செய்ய முடியாது? இந்தியாவின் சுவசமான விவசாயத்தை காப்பாற்றி, கார்பரேட்டுகளின் கோரிக்கைக்களுக்கு பணியாமல், உடனடியாய் அரசு இதை கவனித்து ஆவன செய்யுமா?
கேபிள் சங்கர்
Comments
பச்சை வயல் கனவு
//
இந்த கனவும் இன்செப்ஷன் மாதிரியா :)
இது எந்த வருசத்து ஸ்டாஸ்டிக்ஸ்ணா ?
இங்கயும் இருந்துருக்கும்.. தாத்தா பேமிலில்ல யாராவது ரிய்ல் எஸ்டேட் பிஸினஸ்ல இரங்கிறுப்பாங்க.. அதுனால யாருக்கும் தெரியாம அந்த சட்டத்த உருவிருப்பாங்க
ஏங்க... நாமெல்லாம் அந்த ரேஞ்சுக்கு யோசிக்கிறவங்களா??
குஜராத்தில் விளைநிலங்களை குறைந்தது பத்து வருடங்களுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே விற்க முடியுமாம்
//
அப்படியா கேபிள்ஜி............ புதிய விசயம்...
ஏற்கனவே இந்த அரசியல்வாதி பிராடு நாயிக நாட்டுல இருக்குற எல்லா வளத்தையும் வித்துட்டாணுக... இப்ப மிச்சம் இருக்கிறது இந்த
விவசாயம் ஒன்னு தான்.... அதுக்கு ஒரு வழி வகை செய்யாம எவன் எவனுக்கோ கால கழுவி விட்டு,கைல காச வாங்கிட்டு வந்துராணுக...
என்னத்த சொல்ல....
தொலை நோக்கு பார்வையுள்ள கட்டுரை... ஏற்கனவே நூறுநாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் விவசாய வேலைக்கு ஆள் இல்லாமல் செய்து விட்டார்கள்.
கடுமையான உழைப்பாளிகள் நிறைந்த எங்கள் ஊரின் பெரும்பான்மை நிலங்கள் தென்னை வைத்து விட்டார்கள்...
கேபிள் அண்ணனுக்கு பாராட்டுக்கள் ...
பாத்து.. புழல் நல்லா இருக்காம்....
Arumaiyana Pathivu, Indha kalakattathulla kandippa idha arasu theriyapaduthiyagavendiya kattayathulla naama irukkom.
illana namakku adhuttha generation neenga sonna mathiri corporates-a than nambi irukkanum.
Mattram varuma... ?
Arumaiyana Pathivu, Indha kalakattathulla kandippa idha arasu theriyapaduthiyagavendiya kattayathulla naama irukkom.
illana namakku adhuttha generation neenga sonna mathiri corporates-a than nambi irukkanum.
Mattram varuma... ?
நமது மத்திய உணவு அமைச்சருக்கு சொந்தமான பீர் பாக்டரி மகாராஷ்டிரா 'ல இருக்கு.. பதுக்கி வைத்திருக்கம் கோதுமை எல்லாம்..
Cheers .. குஜராத் பாராட்டப்படவேண்டிய நல்லுதாரணம்..
எல்லாம் உள்ளப்போக போறீஙக்...
ஆடுங்கடா ஆடுங்க...
அது தானே நீங்க சொல்ல வறீங்க :)
ஆனால் ஒரு சிறு விஷயம். வெறும் புலம்ப்புவதை விட்டு நாம் வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும்.
என்னை பொறுத்தவறை இது பற்றி நாம் எல்லோருமே அடுத்தவ்ர் ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
விவசாயம் அழிவதற்கு முக்கிய காரணம் படித்தவர்கள் எவரும் விவசாயம் செய்வதில்லை. ஏனென்றால் படித்தவர்கள் விவசாயம் செய்வது நம் சமூகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
நம்முடைய கல்வி முறையில் அதற்கான வாய்ப்பும் குறைவு. B.Sc. Agri படித்தவர்கள் கூட விவசாயம் பார்க்க முன் வருவதில்லை.
மற்றொரு காரணம், செயற்கை உரங்களும், பூச்சிகொல்லி மருந்துகளும் நம் விளை நிலங்களை பாழ்படுத்திவிட்டது. இவைகளால் ஆரம்பத்தில் பயன் இருந்தாலும் போக போக நிலம் பாழ்பட்டதோடு, செலவுகளும் அதிகம் ஆயின. இது வெவசாயிகளை கடன் குழியில் தள்ளின.
இயற்கை விவசாயத்தை அரசு ஆதரிக்க வேண்டும்.
படித்தவர்கள் விவசாயத்தை ஒரு தொழிலாக செய்ய முன் வந்தாலொழிய இந்நிலமை மாறாது.
இப்படிக்கு
மகேஷ்.
'நிலமென்னும் நங்கை நல்லாளி'ன் சீரழிவு பற்றிய ஆய்வு ஒரு பெருந்தொடராய் நீளவேண்டும்.
ஒரு விஷயம் யோசிச்சீங்களா? மக்கள்நலனைக் கருத்தில் கொண்டு ஒருவர் ஆதங்கப்படவும் ஆராயவும் தொடங்கும்போது அவர்கள் தவிர்க்க முடியாமல் இடதுசாரிச் சிந்தனையின் பக்கம் சாய்ந்தே ஆகவேண்டும்! நல்லது நடந்தா சரி!
இம்மாதிரியான பதிவுகளை உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்
கவலை தரும் விடயம்
உங்ககிட்ட இருந்து இந்தமாதிரி கட்டுரை பதிவு பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குங்க . தொடர்ந்து மழை தண்ணீர் சேமிப்பு ,நீர் நிலை அபகரிப்பு பற்றியும் எழுதுங்க .
(இந்த மாதிரி பதிவுகள நானும் எழுதலாம் நு தண்ணீர் தண்ணீர் நு ஒரு ப்ளாக் தொடங்கினேன் . எங்க ஊர்ல இருந்த ஏரி ஆக்கிரமிப்பு காரணமா காணாம போய்டுச்சு .இப்போ எங்க ஊர்ல தண்ணீர் ரொம்ப கஷ்டமா இருக்கு ...அதா பத்தி எல்லாம் எழுதலாம் நு இருந்தேன் ..தொடர் வேலை காரணமா என்னால எழுத முடியல)
இப்போ உங்க கிட்ட இருந்து இந்த பதிவு பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குங்க
நன்றி
கலீல்
We also have the same rule like Gujarat, but for 7 years. Before approval given for built the house in the area, they should verify this. But, they are getting the money and then bypass this rule
விவசாயம் அழிவதற்கு ரியல் எஸ்டேட் மட்டும் காரணம் அல்ல.. பெரும்பாலான ரியல் எஸ்டேட்கள் வெறும் பொட்டல் காடாய் கிடந்தவை
விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை, என்பதே முக்கியமான கூற்று
எங்கள் பகுதியில் ஒரே ஒரு கம்பெனி மட்டும் பத்தாயிரம் பேரை திருடியிருக்கிறது. அவர்கள் எல்லோரும் விவசாயத்தில் ஈடு பட்டு வந்தவர்கள்.
அதிக வீச்சுள்ள கேபிளிடம் இருந்து இது போன்ற இடுகைகள் இன்னும் வந்தால் மகிழ்வேன்
ஊதும் சங்கை ஊதி வைப்போம்... கேட்போர் காதில் கேட்கட்டும்... அனைவரின் காதும் செவிடல்லவே..
இந்த ப்ரொஃபைல் இல்லாத ஆசாமிங்க தொல்லை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுப்பா...
எத எழுதினாலும் நொள்ளை, நொட்டை சொன்னா, என்ன தான் செய்ய முடியும்....??
எனக்கு என்னமோ மிகபெரிய புரட்சி இந்தியாவில் நடக்க போகிறது என்று மனம் சொல்கிறது.
பார்போம்...
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.
நடக்கும்..
ஈரோடு கதிர் சொன்னது போல இதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்னும் 5 to 10 வருடங்களில் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் போதுதான் நமக்கும் அரசியல்வியாதிகளுக்கும் உறைக்கும். நாம் என்று தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியிருக்கோம்! விவசாய குடும்பத்தில் வந்தவன் என்பதால் இந்த பிரச்சனை பற்றி நானும் சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன் என் பார்வையில்...
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
Yentha pathivu ku comments pottu eruka pathi peruku mela agriculture nilam vangi invest panni erupanga sir future la kolatha labam sambathika..
Sankar anna enga oorulae enga pattan nilam eruku athula vivasayam panringala..
Arun - aruns.com@gmail.com
1. Educated young ppl should realise this issue first.
2. There should be some leadership for making chainges in society. WE dont have that now
3. Goverment - No use
4. Our indian ppl looks more self centred tha other nation's. That also to be considred.