
ஒரு பையன் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல முயற்சிப்பதே கதை. இதில் முதல் இயர் படிக்கும் மாணவனான ஹீரோவுக்கு, பைனல் இயர் படிக்கும் ஹிரோயின் மேல் காதல். மற்றபடி இம்மாதிரியான காதல் கதைகளில் பெரிசாக என்ன திரும்ப திரும்ப சொல்லிவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் முடிஞ்சா முடியும்னு சொல்லியிருக்காங்க..
பாலாஜி ஒரு தச்சரின் மகன். பார்த்த மாத்திரத்திலேயே சஞ்சனாவை காதலிக்க ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரெண்ட் ஆகிறார் பாலாஜி. அதுவும் எப்படி? சஞ்சனாவை காதலிக்க ஆசைப்படும் சீனியர் மாணவர்களுக்கு ஹெல்ப் செய்வதை போல தொடர்ந்து சஞ்சனாவுடன் பயணிக்கிறார். எப்படி பாலாஜி தன் காதலை சஞ்சனாவிடம் சொல்கிறார் அதை சஞ்சனா ஏற்றுக் கொண்டாரா..? என்பதுதான் கதை.

படம் முழுக்க முடிந்த வரை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினை இம்பரஸ் செய்வதற்காக சீனியர் மாணவரிடம் அரசு பேருந்து நீ ஏறியவுடன் அரசி பேருந்து என்றெல்லாம் கவிதை எழுதி கொடுப்பது. நாயை கொஞ்சினாள் என்பதற்காக அந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து இலையில் சோறு போட்டு ஊட்டுவதும், அவள் தன்னை விட ரெண்டு வயது பெரியவள் என்றதும், நாயை கல்லை எடுத்து அடித்து துரத்துவதும், காதலை பற்றி ஏதோ சொல்லும் போது விஜய் ஒரு விக்ரமன் படத்தில் சொல்வது போல காதல் ஒரு முறை தான் வரும் என்பதை போல சீரியஸாய் பேசுவது என்று.. முதல் பாதி முழுக்க ஒரே கலகலப்பாய் தான் போகிறது.
சஞ்சனாவிடம் காதலை சொன்ன பிறகுதான் என்ன செய்வது என்று படத்தின் கேரக்டர்கள் குழம்புவதை போல திரைக்கதையும் போகும் வழி தெரியாமல் அலைகிறது. கொட்டாவி வர வைக்கிறது. தயாரிப்பாளருக்கு என்ன ப்ரச்சனையோ.. எதோ ஒரு வீட்டு பின் கட்டை எல்லாம் ரெண்டு வசனம் சொல்லி சீனை ஒப்பேத்த பின்பக்கமாய் நடந்து வந்து நின்று பேசிவிட்டு போவதெல்லாம் ரொம்பவே ஓவர்.. பாஸு இப்பல்லாம் சீரியலிலேயே இந்த மாதிரி எடுக்கிறதில்லை.

கனாகானும் காலங்கள் பையன் பாலாஜி தான் ஹீரோ.. மிக இயல்பாக செய்திருக்கிறார். பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் உறுத்தாமல் இருக்கிறார். சஞ்சனா சில சூடியில் அர்புதமாய் இருக்கிறார். கொஞ்சம் வயதானவராக தெரிந்தாலும் கதை படி பாலாஜியை விட பெரிய பெண் என்பதால் சரியாக இருக்கிறது.படத்தின் மிக முக்கிய ப்ளஸ் பாயிண்ட் யுவனின் இசையும், பின்னணி இசையும் தான். ஸ்வீட். ஒளிப்பதிவு ஒன்றும் பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை.

கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியவர் பூபதி பாண்டியன். முதல் பாதி முழுவதும் கலகலப்பாக கொண்டு போகும் முயற்சியில் வெற்றிப் பெற்றிருக்கிறார். ரெண்டாவது பாதியில் தான் சம்பவங்கள் இல்லாமல் தொய்ந்து போய் விழுகிறது ஆங்காங்கே.. ஹீரோயின் தன் மேல் உள்ளது காதல் இல்லை என்று நிறுபிப்பதற்காக ஹீரோவை அழைத்துக் கொண்டு லாட்ஜுக்கு போவதெல்லாம் ஓவர். அதற்கு பாலாஜி சொல்லும் பதில் எல்லாம் தனுஷை ஞாபகப்படுத்தும் காட்சிகள். பட் ஒட்டல சார்.. மொத்ததில் இன்னும் கொஞ்சம் கிரிஸ்பாக நாடகத்தன்மை குறைத்து கவனித்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்குமோ..? அதே போல க்ளைமாக்ஸ் போன வார பாணா காத்தாடியைநினைவு படுத்துவதாகவும், மற்றும் சில காட்சிகள் சமீபத்திய வி.தா.வருவாயா? வை ஞாபகப்படுத்துவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
காதல் சொல்ல வந்தேன்- டைம் பாஸ்..
கேபிள் சங்கர்
Comments
//viSva.. ஆனாலு எப்பவும் இந்நேரத்துக்கு முழிச்சிட்டு இருக்கீங்க... காலையில என்ன மாதிரி பத்து மணிக்கு ஆபீஸ் போக முடியாதே எப்படி// நாங்க 9.30 எல்லாம் போய்டுவோம்ல.
அடுத்தது யார் பாண்டியா..??
ஓப்பன் பண்ணா.....
........ ...... .....
..... ...... ........
....... ....... .....
யாராவது ஊர்ல இருந்து மஞ்சப்பையோட வர்றானான்னு பாக்குறேன்!
கனாகானும் காலங்கள் பையன் பாலாஜி தான் ஹீரோ../////////
அடுத்தது யார் பாண்டியா..??
---
அண்ணா பதிவு போடறதல்லாம் என்னாச்சு :)
நானு அங்க உணர்ச்சிகரமா (ஹி.. ஹி.. ஹி) ஒரு பதிவு போட்டா இங்க லவ்வு கேக்குதா??
---
பேசாம இதுக்கு ஒரு எதிர் கவுத எழுதுங்க பாலி பாலி...
நானு விருமாண்டி மாறி. என்னை தூண்டி விட்டே பெரியாளாக்கிடுங்க! :)
//பேசாம இதுக்கு ஒரு எதிர் கவுத எழுதுங்க பாலி பாலி...//
நானு விருமாண்டி மாறி. என்னை தூண்டி விட்டே பெரியாளாக்கிடுங்க! :) //
நாங்க எதுக்குங்க உங்கள பெரிய ஆளாக்கானும்.. Already you are in that league only.
:)))
ஓப்பன் பண்ணா.....
........ ...... .....
..... ...... ........
....... ....... .....
யாராவது ஊர்ல இருந்து மஞ்சப்பையோட வர்றானான்னு பாக்குறேன்!
apdina nanthan hero..producer and director nama SENTHANAI SIRPI CABLE SANKAR..HOLIVOOD MEGA HIT DIRECTOR.
UNGA FILIMLA ORU SIDE ACTERA VANTHAKOODA POTHUM..
OK SCHOLLUKU NERAM AITU...
//
தல.. உங்க படத்துக்கு இவர யூஸ் பண்ணலாம்... நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு... உங்க வேவ் லெங்த் செட் ஆகும்...
Vimarsanam nalla irunkkudhu, ippo ellam ongalooda vimarsanathukku adict ayittean.
cableji rocks...!!!
இதுக்குப் பேருதான் சைடுகேப்பில சரக்குக் கப்பல ஓட்டுறதா?
nan DIRECTER CABLE ANNA enna cholrangalo athapola samatha nadipenakkum..
thanks annathey..
http://www.tripleclicks.com/9929738/go
http://www.tripleclicks.com/9929738/go
தேனம்மை அக்கா சொன்னதையே வழி மொழிகிறேன்.