வெண்ணிலா கபடிக்குழு வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம். அப்பாவை கொன்றவனை பழிவாங்கும் வழக்கமான கதை தான். அதை முடிந்த வரையில் இண்ட்ரஸ்டாக சொல்லியிருப்பதில் தான் இயக்குனரின் கைவண்ணம் தெரிகிறது.
வாழ்க்கையை பற்றி பெரிதாய் எதுவும் கவலைப்படாத கால்டாக்ஸி ட்ரைவரின் பையனான கார்த்திக்கு ஒரு கல்யாணத்தில் காஜல் அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்துவிட, முதல் பாதி முழுவதும், காதலும், கொண்டாட்டமுமாய் போகிறது. ஒரு இரட்டை கொலை சம்பத்தில் ஈடுபட்ட ஆட்களை கார்த்தியின் அப்பா பார்த்ததினால் அவரை டெம்போ ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க ஆரம்பிக்கும் போது கதையின் டெம்போ ஏறுகிறது. பின்பு அவரை கொன்றவுடன், என்ன கார்த்தி அவரை பழிவாங்க போகிறார் என்று சாதாரணமாக சொன்னாலும் திரையில் பார்க்க ஒரு விஷுவல் பரபரப்பை கொடுத்திருப்பதை திரையில காணுங்கள்.
கண்களில் பல்பும், உதட்டில் சுழித்த சிரிப்புமாய் படம் பூராவும் சந்தோஷத்தை தவிர எதையும் சந்திக்காத இளைஞனை கண் முன் நிறுத்துகிறார் கார்த்தி. கல்யாண வீட்டில் பார்த்த மாத்திரட்திலேயே காஜலை காதலிக்க லவ் பெயிலியர் மேட்டரை ஆரம்பித்து வைப்பது. மொட்டை மாடியில் காதலை பற்றி விக்ரமன்பட ஸ்டைலில் தொடர்ந்து ஃபீல் செய்து வசனம் பேசுவது, செல் நம்பரை காஜல் வாங்கியிருகிறார் என்றதும், அவரிடமிருந்து போன் வருவதற்குள் பேசி வழிவது. அபிராமி மால் காட்சிகள். காஜலின் அப்பாவிடம் போய் நேரடியாய் பெண் கேட்பது என்று ஒரு துறு துறு இளைஞனாக வலைய வரும் கார்த்தி. அப்பாவின் விபத்துக்கு பிறகு தலைகிழாக மாறி வெறி கொண்டு அலையும் ஆவேச மகனாக தெரிகிறார்.
கண்களில் பல்பும், உதட்டில் சுழித்த சிரிப்புமாய் படம் பூராவும் சந்தோஷத்தை தவிர எதையும் சந்திக்காத இளைஞனை கண் முன் நிறுத்துகிறார் கார்த்தி. கல்யாண வீட்டில் பார்த்த மாத்திரட்திலேயே காஜலை காதலிக்க லவ் பெயிலியர் மேட்டரை ஆரம்பித்து வைப்பது. மொட்டை மாடியில் காதலை பற்றி விக்ரமன்பட ஸ்டைலில் தொடர்ந்து ஃபீல் செய்து வசனம் பேசுவது, செல் நம்பரை காஜல் வாங்கியிருகிறார் என்றதும், அவரிடமிருந்து போன் வருவதற்குள் பேசி வழிவது. அபிராமி மால் காட்சிகள். காஜலின் அப்பாவிடம் போய் நேரடியாய் பெண் கேட்பது என்று ஒரு துறு துறு இளைஞனாக வலைய வரும் கார்த்தி. அப்பாவின் விபத்துக்கு பிறகு தலைகிழாக மாறி வெறி கொண்டு அலையும் ஆவேச மகனாக தெரிகிறார்.
காஜல் அகர்வாலுக்கு பெரிதாய் வேலையில்லை காதல் காட்சிகளுக்கும், பாடலுக்கு மட்டுமே பயன் படுத்தியிருக்கிறார்கள். ஸோ.. விசூவலி க்யூட். சமீபகாலமாய் பசங்க படத்திலிருந்து கலக்கி வருபவர் தயாரிபாளர் ஜெயப்பிரகாஷ். ஒரு அன்பான அப்பாவாக உலவியிருக்கிறார். கொலை செய்யும் ட்ரக் அடிக்ட் காலேஜ் மாணவர்கள் நடிகர்கள் தேர்வு அபாரம். முக்கியமாய் அந்த பெரிய கண்களுடய பையனும், அவனுக்கு துணையாய் வரும் அந்த பரட்டைத்தலை பையனும். அவர்களுடய வெறியும், பாடிலேங்குவேஜும் அட்டகாசம். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியின் ச்ண்டையில் அவர்கள் காட்டும் வெறியும், பழிவாங்கும் உணர்ச்சியும் சில்லிட வைக்கிறது.
யுவனின் பாடல்கள் ஆல் ரெடி ஹிட். வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்களில் யுவனின் பையா.. பீல் கண்டின்யூ ஆகிறது. பின்னணியிசையிலும் யுவனின் கைங்கர்யம் மேலோங்கியே இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி. பாஸ்கர் சக்தியின் நகைச்சுவை இழையோடும் வசனங்கள் முதல் பாதிக்கு மிகப் பெரிய பலம். ஆங்காங்கே பளிச்சிடும் ஒன்லைனர்களும், மிக இயல்பான மிகைப்படுத்தாத வசனங்க்ளூம் ப்ளஸ் பாயிண்ட்.
யுவனின் பாடல்கள் ஆல் ரெடி ஹிட். வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்களில் யுவனின் பையா.. பீல் கண்டின்யூ ஆகிறது. பின்னணியிசையிலும் யுவனின் கைங்கர்யம் மேலோங்கியே இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி. பாஸ்கர் சக்தியின் நகைச்சுவை இழையோடும் வசனங்கள் முதல் பாதிக்கு மிகப் பெரிய பலம். ஆங்காங்கே பளிச்சிடும் ஒன்லைனர்களும், மிக இயல்பான மிகைப்படுத்தாத வசனங்க்ளூம் ப்ளஸ் பாயிண்ட்.
படத்தின் பலத்திற்கு மிக முக்கியமான பலம் ஒளிப்பதிவாளர் மதி. முதல் பாதியில் தெரியும் இளைம துள்ளலுக்கு ஏற்றார் போல கலர்புல்லான லொக்கேஷன்கள், மேக்கிங் என்றிருந்தவர். அப்படியே க்ளைமாக்ஸின் டோனுக்கு ஏற்றார் போல ஒருவயலண்ட் மூடுக்கு கொண்டு வந்து நம்மை அதனுள் இருக்க வைத்துவிடுகிறார் மதி. கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் கொலைக்காட்சியும், க்ளைமாக்ஸ் சண்டை காட்சியும் அதகளம். க்ளைமாக்சின் சண்டை காட்சியை வடிவமைத்த அனல் அரசுவுக்கு பாராட்டுக்கள்.
முதல் பட வெற்றிக்கு பிறகு ஒரு கமர்ஷியல் கதையை தைரியமாய் எடுத்துக் கொண்டதற்கு சுசீந்திரனை பாராட்ட வேண்டும். அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குவது என்ற சாதாரண எல்லா மொழி படங்களிலும் அடித்து துவைக்கப்பட்ட ஒரு லைனை ப்ரெஷ்ஷாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தில் மைனஸ் என்று சொன்னால் ஒரு சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த கலக்ஷன் மேனேஜரிடம் பேசும் மேட்டர், கலெக்ஷனுக்காக போகும் இடத்தில் நடக்கும் காட்சிகள், அப்பா இறந்ததும் சாவு பாட்டு, என்பது போன்ற சில டெம்ப்ளேட் காட்சிகள் வழக்கம் போல இருக்கத்தான் செய்கிறது.
முதல் பாதி காதல் காட்சிகளில் வரும் காதல் காட்சிகள் நகைச்சுவை மிளிர செம லைவ்.. அண்ட் இண்ட்ரஸ்டிங்.. முவுவதும் வழக்கமாய் வரும் காட்சிகளின் ரிவர்ஸாக திரைக்கதை அமைத்தது நன்றாக இருக்கிறது. காதலை தடாலென உடைத்து பர்மிஷன் கேட்பது, மிகப் பெரிய ரவுடியை வைத்து தன் பெண்ணை காதலிக்க கூடாது என்று மிரட்ட நினைத்து காஜலின் அப்பா, கார்த்தியை அழைக்க, கடைசியில் அவர்க்ள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி, பின்னால் அந்த நட்பே தன் தந்தையின் கொலையை கண்டுபிடிக்க உதவி பெற வழிவகுப்பதும், அந்த காலேஜ் மாணவர்க் கேங்க், அந்த ஸ்கெட்ச் போடும் மாமா, அந்த தாதா, அவனுடய அல்லக்கைகள், என்று தேர்ந்தெடுத்த நடிகர்கள், திசை மாறாத விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை. ஜாலியாய் போய்க் கொண்டிருக்கும் ஒரு படத்தை சட்டென வேறொரு மூடுக்கு மாற்றி அதில் ஆடியன்ஸை பயணிக்க வைத்ததில் ஜெயித்துமிருக்கிறார். ஒரு சில காம்ப்ரமைஸுகளுடன்.
நான் மகான் அல்ல – Live And Commercial Flick
கேபிள் சங்கர்
Post a Comment
43 comments:
பார்த்துடலாம்..
பார்த்துடலாம்.
1007 க்கு வாழ்த்துக்கள்...
பார்க்கணும்
அய் வடை செந்திலுக்கு...
ஹாலி பாலி, ராமசாமி
தோதான்குளி தொர்ரி :))
தல அந்த வில்லனா பண்ணியிருக்கிற பையன் யாருன்னு தெரியுதா? நந்தாவில சின்ன வயசு சூர்யாவா பண்ணியிருப்பாரே, அவர்தான்ன்னு நினைக்கிறேன். அதே கண்ணு, உயிரோட. சூர்யா மாதிர்யே.
அவருக்கு ஒரு ரவுண்டு இருக்கு....
எனக்கும் படம் புடிச்சது. ஆனா ரெண்டாவது பாதி இப்படித்தான் இருக்கும்ன்னு மொதொபாதியில தெரிஞ்சி போகுதே அதுதான் மைனஸ்
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாஆஆஆஆக... சே.. பழக்க தோஷம்.
ஆயிரம் பாலோயர்க்கு வாழ்த்துகள் கேபிள் அண்ணே :)
பரவலாக நல்ல ரிசல்டைக் கேட்க முடிகிறது இப்படத்திற்கு.
நன்றிகள் கோடி தங்கள் விமர்சனத்திற்கு!!! தொடரட்டும் தங்கள் பணி.....
பாத்தாச்சு...
பாத்தாச்சு...
பாத்தாச்சு...
பாத்தாச்சு...
பார்க்கணும்
நல்ல விமர்சனம் கேபிள்ஜி ...அடுத்த வாரம் ஊருக்கு வந்தே பாத்துக்கலாம்..
மதராசபட்டினம் படமே நேத்து தான் இங்க வந்தது....நேத்தே பார்த்துட்டேன்....Classic Movie...
super
திக்கட்டத் திகட்டப் பாராட்டியிருக்கீங்க... பாக்கலாம்!
1007 க்கு வாழ்த்துக்கள்,நல்லாயிருக்குனா பார்த்துடலாம்,இயக்குனர் சுசீந்தரன் குழுவிற்கு வாழ்த்துக்கள்,அவரின் அடுத்த படமான அழகர்சாமியின் குதிரை பற்றிய தகவல்களை அறியத்தரவும்.
நான்.... மகான் (அவன்) அல்ல (இல்லை)
பார்த்துடலாம்..
1000 followers பெற்ற அபூர்வ சிகாமணி வாழ்க
//சி.பி.செந்தில்குமார் said...
1000 followers பெற்ற அபூர்வ சிகாமணி வாழ்க//
என்னது ஆயிரம் பாலோ(ப)யர்'ஆ ?
see here - http://www.thenaali.com/inner.php?id=186
appadiye second half inga irundhu copy panni paste pannitaanga :(
மிக அருமையான விமர்சனம்...
திரு கேபிள் சங்கர் அவர்களே உங்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள்...
மதுரை அருண்
http://maduraispb.blogspot.com/
சுப்பையா வாத்தியாருக்குப் பிறகு நீங்க தான் 1000, வேறு யாரும் இருக்காங்களா?
1007க்கு வாழ்த்துக்கள்...
Mr.Cablesankar, thanks for the review of the movie Naan Mahaan Alla. I wanted to read your review before I see the movie tomorrow here in Mumbai. As I find that if I read your review before seeing the movie, I can enjoy the movie better. - Thamizhavel.
வழக்கம் போல சூப்பர் விமர்சனம்.........
1009 followers as of now....
My hearty congratulations Shankar ji..
நல்ல விமர்சனம் :)
மொக்க படம் தல... குடும்பத்தோட போய்ட்டு விட்றுங்கடான்னு கதறிட்டேன்.... உங்களின் விமர்சன கணிப்பில் ரெண்டாவது கரும்புள்ளி...
Would rate this movie better than Raavanan. But not up to the mark..!
@krp senthil
nandri
@erumbu
nichayam
வரோ
ம்
@muralikumar padmanaban
நன்றி
@ச.செந்தில்வேலன்
நன்றி
@நந்தா ஆண்டாள் மகன்
நன்றி
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
எப்படியிருக்கு
@வெறும்பய
பாருங்க
@சீனு
நன்றி
@ஆனந்த் கிருஷ்
நன்றி
@விந்தைமனிதன்
புடிச்சிருக்கு
@அருண்
நிச்சயம் தெரிய வரும் போது சொல்கிறேன்
@ஆகாயமனிதன்
ஓக்கே
2பித்தன்
ம்..
@ஆண்டவன் கட்டளை
ஆமா
@மால்
அப்படியா..?பார்க்கிறேன்
@அருண்குமார்
நன்றி
2ஜோதிஜி
அப்படித்தான் நினைக்கிறேன் சரியா தெரியலை
@கலாநேசன்
நன்றி
@தமிழ்
நன்றி
@வழிப்போக்கன்
நன்றி
2கோபி
நன்றி
@மதுரை மோகன்
நன்றி
@சிவகாசி மாப்பிள்ளை
விடுங்க..என் கணிப்பில் இந்த படம் தப்பே பண்ணாது.. வந்து கொண்டிருக்கும் ரிசல்ட்டும் உறுதிபடுத்துகிறது தலைவரே..
@தமிழ்
ராவணனோடு கம்பேர் செய்தால் இது வேறு ஜெனர் ப்டம் தலைவரே
வணக்கம்..
இது தான் முதல் முறை நான் உங்கள் ப்லாக்-ல் விமர்சனம் படிப்பது.. இதற்கு முன்னால் இந்த ப்லாக்-ல் எதுவும் படித்ததில்லை..... .எல்லா படத்தையும் போய் பார்க்கும் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.....பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு விமர்சனம் எழுதும் உங்கள் மெனக்கேடலையும் கண்டிப்பாக நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்... i also have a question ...are u a full time blogger or do u have someother profession?
நல்ல விமர்சனம் தலை! கார்த்தியின் படங்களில் பருந்தி வீரனுக்குப் பின் ஒரு நல்ல படம்! நானும் ஒரு விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம் !!!
@sivaramkumar
நன்றி சிவா.. நிச்சயம் எழுதுங்கள்.
முதல் ஹல்ஃப் போரோ போர்.இரண்டாவது ஹல்ஃப் தான் நல்லா இருக்கு
தாமதமாகிவிட்டாலும் பரவாயில்லை. இந்தப்படம் குறித்து ஒரு விமர்சனம் கண்டிப்பாக எழுதுவேன்.
கதை ரொம்பச் சாதாரணமாக இருந்தாலும் ஒரு படமாக, காரக்டர்ஸ் உருவாக்கத்தில், லாஜிக் மெயிண்டைன் செய்ததில், திரைக்கதையில் அல்லது இயக்கத்தில் இந்தப்படம் ஒரு அரிய படம். நீங்கள் எல்லாப்படத்தைப்போலவே இதையும் அணுகியிருக்கிறீர்கள்.
உண்மையில் தமிழில் நான் இது வரை பார்த்திராத ஒரு பர்பெக்ஷன் என்று இந்தப்படத்தைக் குறிப்பிடுவேன்.
One of a great films as a film in Tamil.!
Post a Comment