1970-80களில் மும்பையை, கோலோச்சியிருந்த ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ரஹீமின் நிஜ நிழலுலக வாழ்க்கையை கடை விரித்திருக்கிறார்கள். ஏற்கனவே மும்பை முழுவதும், ஹாஜி மஸ்தானின் கட்சியினரும் படத்துக்கான தடை செய்வதற்கான முயற்சி செய்து தோற்றுவிட்டனர். மும்பையில் படம் நன்றாக போவதாய் கேள்வி. ஏற்கனவே இதே போன்ற கேங்ஸ்டர் கதைகளை நாம் முன்னமே பார்த்திருந்தாலும் கேரக்டர்களின் பலத்தினாலும், மேக்கிங்கினாலும் சாதித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
சுல்தான் மும்பையின் மிகப்பெரிய கடத்தல்காரன். ஷோஹப் லோக்கல் ஏரியாவில் சின்ன, சின்ன திருட்டுகளை செய்து கொண்டிருக்கும் ஒரு சிறு குற்றவாளி. ஒரு போலீஸ்காரனின் மகன். ஒரு கட்டத்தில் சுல்தானிடம் வேலைக்கு சேரும் ஷோஹப். கொஞ்சம் கொஞ்சமாக அவனது வலதுகரமாக மாற, சுல்தானின் பர்சனல் ப்ரச்சனை மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக இடம் மாற வேண்டிய சூழ்நிலையில் பொறுப்பை ஷோஹப்பிடம் கொடுக்க, பணமும், பலமும் ஷோஹப்பின் கண் மறைக்க, சுல்தானுக்கும், ஷோஹப்புக்கும் இடையே இடைவெளி வருகிறது. முடிவை வெள்ளித்திரையில் கண்டு கொள்ளுங்கள்.
நாம் ஏற்கனவே தமிழ் நாயகன், ராம்கோபால் வர்மாவின் கம்பெனி, சத்யா, போன்ற பல படங்களில் பார்த்த விஷயமாக இருந்தாலும், இவர்கள் கதை சொன்ன விதத்திலும், நடிகர்களின் பெர்பாமென்ஸிலும் சொல்லி அடித்திருக்கிறார்கள்.
சுல்தானாக அஜய்தேவ்கன். இவரை விட்டால் இவ்வளவு சப்மிசிவாக இந்த கேரக்டரில் நடிப்பதற்கு வேறு ஆளை தேட வேண்டும் போலிருக்கிறது. பல இடங்களில் சிறு அசைவுகள், கண் பார்வை பரிமாற்றங்கள், குரலில் தெரியும் மாடுலேஷனில் என்று மனுஷன் வெளுத்துக் கட்டுகிறார். இவரின் காதலியாய் வரும் கங்கனா ராவத் நிஜமாகவே 70களில் இருந்த கதாநாயகிகளை கண் முன் நிறுத்துகிறார். போடும் காஸ்ட்யூமிலிருந்து, நடை உடை பாவனைகள் வரை. மீண்டும் சொல்கிறேன் தாம்தூமில் கொத்தவரங்காயாய் காட்டப்பட்ட இவரா இது என்றால் நம்ப முடியாது.அஜய்க்கும், கங்கணாவிற்கும் இடையே ஆரம்பிக்கும் காதலாகட்டும், அதன் பிறகு அவர்களுக்குள் இருக்கும் உறவின் ஆழமாகட்டும், மனதில் நிற்கிறது.
ஷோஹப்பாக இம்ரான், வழக்கமாய் லேட்டஸ்ட் கேங்ஸ்டராக எப்படியாவடு ஒரு முத்த காட்சியில் வருபவராக இருந்தவர் இப்படத்தில் அழுத்தமாய் நடிக்க முயற்சித்து குறைந்த பட்சமாய் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கோபம் வந்து அழுந்த கை பிடித்து காதலியை பார்வையாலேயே நிறுத்துமிடத்திலும், அஜயின் ஆட்களின் முன் அடிபட்டு, எழுந்து, அடிபட்டு, எழுந்து நின்று அவருக்கு முன்னால் தன்னை நிலை நிறுத்த முயற்சிக்கும் காட்சி, காதலியின் நகைக்கடையில் கண்ணாடி தூண்களுக்கிடையே செய்யும் ரொமான்ஸாகட்டும் இம்ரான் இஸ் இம்ப்ரஸிவ்.
இவர்களின் எதிரியாக வரும் ஏ.ஸி.பி ஏக்னல் செய்யும் முயற்சிகள் பெரிதாய் ஏதும் வெற்றி பெறாமல் கடைசியாய் தற்கொலை செய்ய முயன்று தோற்று, அவரின் பாயிண்ட் ஆப் வியூவில் கதை அன்போல்ட் ஆவது நன்றாகவே இருக்கிறது. கிடைத்த இடத்திலெல்லாம் வசனத்தாலேயே பஞ்ச் அடிக்கிறார். இவர்.
பீரிதமின் இசையில் இரண்டு பாடல்கள் திரும்ப பார்த்தால் கேட்கலாம். அதே போல ஒளிப்பதிவும் அருமை. முக்கியமாய் கொஞ்சம் செபியா டோனும், மஞ்சளூமாய் ஆன கலரில் கிடைக்கும் எக்ஸ்போஷர் அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் எடிட்டிங் அருமை.
மிலிந்த் லுத்ரேயா வின் இயக்கத்தில் ரஜத் ஆரோராவின் திரைக்கதையில் ஏற்கனவே சொல்லப்பட்ட கதையை இண்ட்ரஸ்டாக சொல்லியிருப்பது பாராட்டுக்குறியது. என்னதான் விறுவிறுப்பாய் சொன்னாலும், நாம் ஏற்கனவே பார்த்த படங்களை நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் ஆங்காங்கே நச்நச்சென தங்கள் முத்திரையை பதித்திருக்கிறார்கள். முக்கியமாய் அஜய், கங்கனாவின் காதல் காட்சிகள், வசனங்கள். அதே போல வன்முறையே இல்லாமல் ஒரு வன்முறையாளர்களின் கதை சொன்னது போன்ற விஷயஙக்ளுக்கு நிச்சயம் இவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
-
ONCE UPON A TIME IN MUMBAI –WORTH WATCHING
Post a Comment
32 comments:
பாத்துற வேண்டியதுதான அப்படின்னா...
அடப்பாவிகளா..
இராமசாமி வர்றதுக்குள்ள... ‘பார்த்துட வேண்டியதுதான்’-ன்னு கமெண்ட் போடலாம்னு வந்தேன்.
ஜாக்ஸன்வில்-லில் வெட்டியா இருக்கறதுறதுல... எங்க ரெண்டு பேருக்கும் சரி போட்டி.
avvalavu வெட்டியாவாஇருக்கே.. நீ..
இந்த படத்துக்கு உங்க விமர்சனம் பார்க்க சந்தோஷமா இருக்கு கேபிள் ஜி!!!
ONCE UPON A TIME IN MUMBAI –WORTH WATCHING
// நேசமித்ரன் said...
இந்த படத்துக்கு உங்க விமர்சனம் பார்க்க சந்தோஷமா இருக்கு கேபிள் ஜி!!!//
இந்த மாதிரி ஒரு விமர்சனம் நான் எழுதியிருந்தா சந்தோஷப்படுகின்றேன் என்று சொல்லுவது கரெக்ட்டு.. கேபிள் எழுதியிருப்பதில் சந்தோஷம் என்று சொல்வதன் உள்குத்து என்ன... என்ன?
விமர்சனம் நல்லயிருக்குன்னே .....நேரம் கிடைச்ச பார்த்துவிடுகிறேன். நான் இன்னும் அஜய் தேவனுடைய halla bol படத்தையே பார்க்கல. அதை முதல பார்க்கணும்
//இராகவன் நைஜிரியா said..இந்த மாதிரி ஒரு விமர்சனம் நான் எழுதியிருந்தா சந்தோஷப்படுகின்றேன் என்று சொல்லுவது கரெக்ட்டு.. கேபிள் எழுதியிருப்பதில் சந்தோஷம் என்று சொல்வதன் உள்குத்து என்ன... என்ன?//
வழக்கமா மொக்கை படங்களுக்குதான் எழுதுவாரு.. இப்ப அந்த பாவத்தை உ.த. அண்ணாச்சி ஏத்துகிட்டதால..
நல்ல படங்களுக்கும் விமர்சனம் கேபிள் எழ்துராராமா...?..
கேபிள்..கேபிள்..இப்ப பாருங்களேன், கொஞ்ச நேரத்துல ஒருத்தர் வந்து, ”தமிழ் வலைப்பதிவரான நீங்க ஹிந்தி பட விமர்சனமெல்லாம் எழுதுறீங்க?!? அசிங்கமா இல்லை?! வெட்கமாயில்லை?!!?” அப்படின்னு பின்னூட்டம் போடுவாரு :))
@abdullah
அ.ஹா.ஹா..அஹா.. ஒரே சிப்பு..சிப்பா வருது..
நல்ல விமர்சனம்.பின்னூட்டங்கள் கூட படிக்க ஜாலியா இருக்கு
அப்துல்லா, ஹிந்தி படத்துக்கு தமிழில் விமர்சனம் எழுதி இருப்பதால் அப்படில்லாம் போட மாட்டாருன்னு நினைக்கிறேன்.
அப்புறம் கேபிள் உடம்பு சரியில்லையா?? ஸ்பெல்லிங் மிஸ்டேக் கம்மியா இருக்கு....
//இராமசாமி வர்றதுக்குள்ள... ‘பார்த்துட வேண்டியதுதான்’-ன்னு கமெண்ட் போடலாம்னு வந்தேன். //
ஹஹஹ...தல ராமசாமியை முந்துறது கொஞ்சம் கஷ்டம்தான்.
இந்த கேங்கஸ்டர் படஙகள் எத்தனை பார்த்தாலும் சலிக்காத கதைக்களம் கேபிள்ஜீ... இதையும் பார்த்துடறேன்...
@sivakasi mappillai
அலோவ்.. என்ன நக்கலா.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுறவன் எல்லாரையும் என்னை வந்து கலாய்க்கிறியே. நேத்து ஒருத்தர்.. மிஸ்டேக்கே ஸ்பெல்லிங்கா இருந்தாரே எங்க போனீங்க..?:))
//அலோவ்.. என்ன நக்கலா.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுறவன் எல்லாரையும் என்னை வந்து கலாய்க்கிறியே. நேத்து ஒருத்தர்.. மிஸ்டேக்கே ஸ்பெல்லிங்கா இருந்தாரே எங்க போனீங்க..?:))
//
இது தல டச்....
ஒண்ணுமே புரியல பாருங்க
Cable Sankar said...
@abdullah
அ.ஹா.ஹா..அஹா.. ஒரே சிப்பு..சிப்பா வருது.. ////
எங்க ஹிந்தி படத்துக்கு தமிழ்ல எப்படி நீங்க விமர்சனம் எழுதலாமுன்னு , இன்னொரு ஹிந்தி குரூப் வேற கிளம்பிருச்சாம் , இதுல உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாவருதா
@சிவகாசி மாப்பிள்ளை
நண்பன் குசும்பனுக்குப் பிறகு நான் மிகவும் ரசிக்கும் டைமிங் பார்ட்டிண்ணே நீங்க :))
இந்தப் படத்தை அஜய் தேவ்கானுக்காகவே பார்க்கலாம். அந்த வேடத்தில் அவரை தவிர்த்து வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
TOI இதுக்கு நெறய ஸ்டார்ஸ் குடுத்து இருந்தாங்க.
தமிழ் படம் பாக்கவே நேரம் இல்ல. இதையும் 'பாத்துரவேண்டியதுதான்' லிஸ்டுல சேத்துரவேண்டியதுதான்!
அப்புறம், பின்னூட்டங்கள் பதிவை விட நீளம் மற்றும் இன்ட்ரஸ்டிங் ;)
”தமிழ் வலைப்பதிவரான நீங்க ஹிந்தி பட விமர்சனமெல்லாம் எழுதுறீங்க?!? அசிங்கமா இல்லை?! வெட்கமாயில்லை?!!?”
//நண்பன் குசும்பனுக்குப் பிறகு நான் மிகவும் ரசிக்கும் டைமிங் பார்ட்டிண்ணே நீங்க :))///
ஆமாம் நண்பா எப்போவும்... வாட்ச், மொபைல், லேப்டாப், ஆபிஸ் கடிகாரம் நாலுலயும் டைம் பாத்துகிட்டே இருப்பேன்.. எப்படா அஞ்சு மணியாகும் வீட்டுக்கு போலாம்னு.... அதான் டைமிங் செட் ஆகுது..
//தஞ்சாவூரான் said...
TOI இதுக்கு நெறய ஸ்டார்ஸ் குடுத்து இருந்தாங்க. ///
துரை இங்கிலிஸ் பேப்பர்லாம் படிக்குது.... அப்புறம் TOI ல படிச்ச விமர்சனம் புரியாம தானே இங்க வந்து படிச்சீங்க... அதனால தானே ஸ்டார் கணக்க மட்டும் சொல்றீங்க :))
//தஞ்சாவூரான் said...
TOI இதுக்கு நெறய ஸ்டார்ஸ் குடுத்து இருந்தாங்க. ///
எத்தன ஸ்டார்னு எண்ண கூட தெரியாம குத்துமதிப்பா நிறைய ஸ்டார்
மாப்ள.. புல்பார்ம்ல இருக்கீங்க போலருக்கே..
// Cable Sankar said...
மாப்ள.. புல்பார்ம்ல இருக்கீங்க போலருக்கே..
//
சக பதிவரின் பின்னூட்டத்தை கிண்டல் செய்வதை என்கரேஜ் செய்யும் நீங்கள்லாம் ஒரு மனுஷனா???
வெட்கமாயில்லை....ச் சீ சீ
என்று ஒரு பின்னூட்டம் வந்தால் நான் பொறுப்பல்ல...
சோழ வறுமையை காணுமே .. குறும்படக் கியூவில் நிற்கிறாரோ...
//சோழ வறுமையை காணுமே .. குறும்படக் கியூவில் நிற்கிறாரோ...
///
செந்தில்
சிங்கத்த சீண்டாதீங்க.... மியாவ்... மியாவ்...
//சிங்கத்த சீண்டாதீங்க.... மியாவ்... மியாவ்//
அது சொறியறதுங்க.
எங்க போச்சி அது இன்னிக்கு??
தல இந்த படம் வீக்கெண்டுக்கு போலாம்னு இருக்கோம்,அஜய் தேவகன் என் ஃபேவரிட் நடிகர்,நல்ல விமர்சனம் தல,தல நேற்று இதற்கு முத ஆளா ஓட்டு போட்டேன் ,இன்னும் ஓட்டு ஏறலையே,ஹிந்திக்கு எல்லோரும் எதிரியா?;))
@ஹாலி பாலி
தல நீங்க இங்கயா இருக்கீங்க?
ஹிந்தி ஒழிக,ஹிந்தி ஒழிக:))
//ஹிந்தி ஒழிக,ஹிந்தி ஒழிக:))//
அந்த பயம் இருக்கட்டும்!!! :) :)
ஹாஜி மஸ்தான் நம்ம வூர்.
ராமநாதபுரம் மாவட்டம் , பனை குளம் பிறந்து வளர்ந்த வூர்.
பிறகு பாம்பே போய் தாதா ஆகி விட்டார்
Post a Comment