Thottal Thodarum

Sep 22, 2010

எண்டர் கவிதைகள்-12

dancing_girl_by_Nizira_Hathor
ஆறு வயதில்

உடை மாற்ற வேண்டுமென்றால்

தனியறைக்கு போ என்றடித்தவள்

பதினாறு வயதிலும்

அதையே சொன்னாள்

நானும் கதவடைத்து

உடை மாற்றினேன்

இன்று நூறு பேர்

முன்னிலையில் குதித்தாட

உள்கச்சை வேண்டாமென்றாள்

காரவன் வாசலில் காவல் காக்கும்


 என் அம்மா அந்த

உதவி இயக்குனனிடம் சொன்னாள்

“பேபி.. டிரஸ் மாத்துதென்று

அவளுக்கு நான் இன்னமும்

பேபி தான்.

Post a Comment

28 comments:

Ŝ₤Ω..™ said...

நான் தான் ஃபஸ்ட்.. நான் தான் ஃபஸ்ட்..

வெயிட்.. படிச்சிட்டு வாரேன்

க ரா said...

இதுவும் கவிததான்... :)

Ŝ₤Ω..™ said...

சோகம் இழையோடுத்துண்ணே..
ப்ச்..

VISA said...

கவிதையின் கரு அருமை. ஆனால் கொஞ்சம் 'எடிட்டி' பட்டி டிங்கரிங் பார்த்து அழகுபடுத்தியிருக்கலாமே?

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...

கவிதையின் கரு அருமை.
பல பேர் முன்னிலையில் ஆடும் அந்தப் பெண்ணின் சோகம் இழையோடுகிறது.

அன்பரசன் said...

கான்செப்ட் நல்லா இருக்குங்க.
கூடவே கவிதையும்.

pichaikaaran said...

கவிதை சூப்பர். ஆனால் படம் சரியில்லை...
இலக்கியவாதி நண்பர் பாணியில் படங்களுடன் கவிதைனு வெளியிட்டு இருந்தால் , இலக்கிய உலகில் பரபரப்பு ஏற்பட்டு இருந்திருக்கும்..

sriram said...

இன்றைய தின மலர் செய்தி:
""வரும் சட்டசபை கூட்டத்தொடரில், வன்கொடுமை சட்டம் தொடர்பாக வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கேபிள் எங்க மேல எண்டர் கவுஜங்கற பேரில ஏவும் வன்கொடுமைக்காக குரல் கொடுக்கும் டாக்டர். குடிதாங்கி வாழ்க வாழ்க..

R. Gopi said...

super

பிரபல பதிவர் said...

என்னமோ போங்க.... வெயில்ல ரொம்ப சுத்தாதீங்க‌

thiyaa said...

கவிதை சூப்பர்

Ahamed irshad said...

அந்த உதவி இயக்குனர் ....?!

மதன்செந்தில் said...

நச்..

நீங்கள் சினி துறையை சார்ந்தவர் ஆதலால் கேட்கிறேன்.. பெண்கள் மீது திணிக்கப்படுகிறதா நடிக்கும் வேலை??

www.narumugai.com

Unknown said...

இன்றைக்கு என்டர் கவிதை எதார்த்தம் ....

ருத்ர வீணை® said...

ரைட்டு..இப்படியே போனா, தெனிக்கும் ஒரு எண்டர் கீ வாங்க வேண்டியதுதான்..

VELU.G said...

கவிதை நல்லாயிருக்குங்க

சிவகுமார் said...

Kavitha Kavitha Enter kavitha LA , Best For this!

Ashok D said...

தலைவரே... கவிதைக்கு கிட்ட வந்திட்டீங்க...

கவிதையின் பாடுபொருள்... கேபிள்டச் ;)

Paleo God said...

களத்தில் கிடைத்த கவிதைகளா தல! :))

Anonymous said...

How to customize add this share button for your blog?

http://ramasamydemo.blogspot.com/2010/09/how-to-customize-add-this-share-button.html

vasu balaji said...

nice one

THOPPITHOPPI said...

ISO கம்பெனிக்கு ஆட்கள் தேவை

http://govindha420.blogspot.com/2010/09/iso.html

vinthaimanithan said...

//கவிதைக்கு கிட்ட வந்திட்டீங்க... //

அது என்ன கிட்ட???!!!

கவிதைன்னா இப்டித்தான் இருக்கணும்னு இலக்கணம் இருக்கா என்ன? மரபுக்கவிதை எழுதிட்டு இருந்தப்போ புதுக்கவிதைகூட ஏளனமாத் தான் பார்க்கப்பட்டிச்சி.

நெறைய்ய்ய பேரு ஊரு பூரா ஹைக்கூன்ற பேர்ல உசிர வாங்குறப்போ அண்ணன் எழுதுற எண்டர் கவிதை சத்தியமா சூப்பர்!

நீங்க கலக்குங்கண்ணா! இந்த கவிதை நெசமாவே க்ளாஸ்!

சுரேகா.. said...

சரி..சரி..தொழில் ரகசியத்தை வெளில சொல்லாதீங்க! :))

Ashok D said...

விந்தை கிட்டன்னாக்கா... ஒரு பத்து கிலோமீட்டரு...

உங்களுக்கு நான் சொல்லவேண்டியது... கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா....

Thamira said...

இது ஓகே.!

ரோஸ்விக் said...

சூட்டிங் ஸ்பாட் களைகட்டுது போல... நடக்கட்டும்...

Cable சங்கர் said...

தட்டியும், குட்டியும் பாராட்டிய அன்பர்கள் அனைவருக்கும்.. என் மனமார்ந்த நன்றி.. தொடர்ந்து எண்டர் கவிதை எழுதும் படி என்னை ஊக்குவிக்கும் நணபர் பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..:)