20 தேதி போராட்டம்
இருபதாம் தேதி முதல் எல்லா பெட்ரோல் பங்குகளும் வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்கள். இவர்களுடய கமிஷன் தொகையான ஏற்றி கொடுக்க வேண்டும் என்றும், புதிதாக பெட்ரோல் பங்குகளை திறக்க அனுமதிக்க கூடாதென்றும் பெட்ரோல் பங்க் வைத்திருப்போர் சங்கம் முடிவெடுத்து, வருகிற 20ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்லா பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களிலும், கொள்முதலும், விற்பனையையும் நிறுத்தி வைக்கப் போகிறார்கள்.
இவர்களுடய கோரிக்கைக்காக போராடுவதில் தவறில்லை. ஆனால் அது பொது மக்களை பாதிக்கும் என்று இருக்கும் போது அதற்கான எதிர்விளைவுகளை யோசித்து இவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் இல்லையென்றால் எவ்வளவு விஷயங்கள் பாதிக்கும். ஒரே நாளில் எவ்வளவு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும், பொது மக்களுக்கு எவ்வளவு விதமான கஷ்டங்கள்.
சக்கரம் கட்டி சுழலும் காலத்தில் மொபிலிட்டி என்பது எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போராட்டம் இந்தியாவின் மொபிலிட்டியை முடக்கும் விஷயமாகவே தெரிகிறது. நமது மத்திய அரசும், இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களுடய கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும், என்றும் பொது மக்களுக்கு இடர்பாடு விளைவிக்க வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அரசு இவர்களுடய முக்கிய கோரிக்கையான கமிஷன் பிரச்சனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. மொத்த விற்பனையில் குறைந்த பட்சம் ஐந்து சதவிகிதமாகவது கொடுக்க வேண்டும் எனறு கேட்கிறார்கள் பங்கு உரிமையாளர்கள். ஆனால் அப்படி கொடுத்தால் அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஐம்பதாயிரம் கோடி நஷ்டம் வரும் என்கிறார் முரளி தியோரா.
போன வாரம்தான் அரசு இவர்களுடய கமிஷனை 9 பைசா லிட்டருக்கு பெட்ரோலுகும், 8 பைசா லிட்டர் டீசலுக்கும் ஏற்றியது. இதன் இம்பாக்ட் தான் சென்ற வார பெட்ரோல் விலை உயர்வு. இது இப்படியிருக்க, இவர்களுடய இன்னொரு கோரிக்கைதான் அநியாயமாக இருக்கிறது. புதிதாக எங்கும் பெட்ரோல் பங்க திறக்க அனுமதிக்க கூடாது என்பதுதான். இந்தியாவில் இன்றும் பெட்ரோல் பங்குகளுக்காக சிறு சிறு ஊர்களில் இருப்பவர்கள் கிலோ மீட்டர் கணக்கில் பயணித்து பெட்ரோல் போடுபவர்கள் இருக்கிறார்க்ள் இன்னும் நிறைய இடங்களில் பெட்ரோல் பங்குகள் திறக்க வேண்டியுள்ளது. அப்படியிருக்க ஒவ்வொரு ஏரியாவிலும் மோனோபாலியாக இருப்பதற்கு அரசை மிரட்டி பணியவைப்பது போல கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்ன நியாயம்? மார்க்கெட்டின் தேவையை நிர்ணையிக்க இவர்கள் யார்?
அரசு சார்ப்பு நிறுவனங்கள் வேண்டுமானால் அவர்களது பங்குகளை திறந்து வைக்கலாம். எத்துனை பேருக்கு இவர்களால் சப்ளை செய்ய முடியும்?. கொஞ்ச காலத்துக்கு முன்னால் தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்த சில நாட்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இப்பிரச்சனைக்கு அரசு உடனடியாக தலையிட்டு, பொது மக்களை பாதிக்கும், அரசின் பொருளாதாரத்தை பாதிக்கும் எந்த விதமான போராட்டங்களுக்கு இரும்புக் கை கொண்டு அடக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
Comments
நீங்கள் எழுதிய தலைப்பு அருமை, ஆனால் சினிமாவுக்கு அடிவேர் வரை செல்லும் நீங்கள் இதை மேலோட்டமாக அனுகியது ஏன் என்றுதான் புரியவில்லை. ஏங்க கச்சா என்னை 148 டாலருக்கு இருந்த போது 55 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், அது 73 டாலருக்கு விற்கும் போது பெட்ரோல் ஏன் 57ரூபாய்க்கு விற்குது?? அப்போ அரசும் என்னை நிறுவனங்களும் எவ்ளோஒ வேணா சாப்பிடலாம்? பங்க் வச்சிருக்கவன் கேணையனா?? 5% கேட்டாங்களா இவங்க 8பைசா 9 பைசா கொடுத்தாங்களாம் அதும் எங்க இருந்து எடுத்து மக்கள் பாக்கெட்ல இருந்து எடுத்து.. என்ன மாதிரியான அயோக்கியதனத்தை அரசு செய்கிறது என்று புரியாமலா எழுதினீர்கள்??
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தலைவரே.. நான் இவர்களது ஸ்டைரக்கை பற்றி மட்டுமே எழுத நினைத்து எழுதியது. பெட்ரோல் விலையை பற்றி எழுதும் போது.. நீங்கள் சொன்ன எல்லாவிஷயங்களையும் நிச்சயம் எழுதுவேன். நன்றி.
குழப்பிக் கொள்ள வேண்டாம். மைசூர் பார்ட்டி சொல்லுவார்.