விளையும் பயிரை…
”நீ பாத்தியா?” என்றதும்.. பின்வாங்கினவன் சடுதியில் காணாமல் போனான். பெரிய சண்டை, ரத்தம் ஏதுமில்லாததால் கும்பல் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து கொண்டிருந்த போது ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் உள்ளே நுழைந்தார். எடுத்த உடனேயே அடிப்பட்ட அழுது கொண்டிருந்த சிறுவனையும், என்னையும் பார்த்து.. “ஏன் சார் பார்த்து வர மாட்டீங்களா?” என்றார்.
“என்ன பேசுறீங்க? அடிப்பட்டவன் அழுதுட்டு இருந்தா? எதிர்ல இருக்கிறவன் தான் இடிச்சான்னு அர்த்தமா? நல்லாருக்கே கதை.. என்ன ஏதுன்னு விசாரிங்க.. நான் மெயின் ரோடுல போயிட்டிருக்கேன். இவன் இந்த ஒன்வேயிலேர்ந்து திடீர்னு என் வண்டி மேல இடிச்சு ஆக்சிடெண்ட் ஆயிருச்சு.. பாருங்க என் வண்டியில கூடத்தான் டேமேஜ்.. “ என்று என் டெண்ட் விழுந்த முன் பக்கத்தை காட்டினேன்.
“ஏன் சார்.. டென்ஷனாவூறீங்க.. விசாரிச்சிரலாம். தம்பி.. ஊடூ எங்க..? என்றதும் பையன் அழுகையை நிறுத்தி, “இங்கதான் சார்.. பக்கத்தில.. மூசா தெரு.. “
“அப்பாரு போன் நம்பர் இருக்குதா..?”
“ம்.. “ என்று நம்பர் சொன்னான்.
நான் அலுவலகம் போகும் அவசரத்தில் இருந்தாலும் இது எங்கே போய் முடிகிறது என்று பார்க்கும் ஆவலினால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். கான்ஸ்டபிள் செல்லில் நம்பரைப் போட்டார்.
“ஹலோ..”
“………”
“நான் பி3 டிராபிக் கான்ஸ்டபிள் பேசறேன். இங்க.. உங்க பையன் ஒட்டிட்டு வந்த வண்டி ஆக்சிடெண்ட் ஆயிருச்சு..”
“ “
“இல்ல.. அடியெலலாம் பெரிசாயில்லை..”
“இல்ல.. அடியெலலாம் பெரிசாயில்லை..”
“ “
“இங்க தான் உங்க வீட்டு பக்கத்தில திருப்பத்தில இருக்குற மெயின் ரோடுல..”
“ “
“ஆஹாங்.. இருக்காரு. வாங்க..”
”வர்றாங்களாம்” என்று போனை வைத்த படி “அப்புறம் சார் எங்க வேலை பாக்குறீங்க.?” என்று விசாரிக்க ஆரம்பித்த சில நொடிகளில் இன்னொரு பைக்கில் முப்பது வயது ஆணும், பெண்ணும் பரபரப்பாக நடு ரோட்டில் வண்டியை ஸ்டாண்ட் போட்டு அரையும் குறையுமாய் நிறுத்திவிட்டு, “அஸ்வின்” என்று பெரிய அலறலோடு.. அடிப்பட்ட பையனை நோக்கி ஓடி, அவனை தூக்கி நிறுத்தி, அவன் கண்ணீரை துடைத்துவிட்டு, “உனக்கு ஒண்ணும் ஆகலியே..ஒண்ணும் ஆகலியே” என்று திரும்ப், திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் ஆசுவாச படும் வரை காத்திருந்தேன்.அவர்கள் பையனை எழுப்பி, அவன் சகஜமாகி எழுந்து நின்றவுடன், “சார்.. பார்த்து வரமாட்டீங்களா..? ”
”நான் எதுக்கு பார்த்து வரணும்?” என்றேன் நிதானமாய்.. அப்பன்காரன் மூர்கமானான்.
”என்ன சார்.. வண்டிய ரேஷா ஓட்டிவந்து பையன் மேல இடிச்சதுமில்லாம.. திமிரா வேற பேசுறீங்க..? நான் யார்னு தெரியுமா..?” என்று எகிற, டிராபிக் போலீஸ் நடுவில் புகுந்து “ சார்.. என்ன நீங்க ஏன் கோபப் படுறீங்க..? நானிருக்கேன்ல.. சார்.. பாவம் அவங்க பையன் அடிபட்டுட்டானேன்னு பதட்டத்தில இருக்காங்க.. இப்படி மனசாட்சியேயில்லாம பேசுறீங்க.. இவங்க டீஸண்ட் பார்ட்டியா இருக்கிறதால பரவாயில்லை.. வேற ஏதாவது லுச்சா ஏரியாவுல மாட்டியிருந்தீங்கன்னா.. அவ்வளவுதான். உங்க கிட்ட காசு பீராயாம போயிருக்க மாட்டாங்க தெரியுமா..?”
வந்தவர்களின் பகட்டைப் பார்த்து போலீஸ்காரர் சட்டென மாறினார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.., எல்லாம் காசு செய்யும் வேலை. என்ன நடந்தது என்றே கேட்காமல் இவர்களாகவே ஒரு முடிவுக்கு வருவது முட்டாள்தனமாய் இருந்தது.
“ரோட்டுல வண்டியில வந்திட்டா கண் மண்ணு தெரியாது.. கான்ஸ்டபிள் சார்.. இவரு மேல கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க .. “ என்று போலீஸிடம் சொல்ல.. எனக்கு அழுவதா சிரிப்பதா? என்று தெரியவில்லை..
“சார்.. ஹோல்ட் இட்.. எனக்கும் ரூல்ஸ் தெரியும். யார் கண் மண் தெரியாம வநததுன்னு உங்க பையன் கிட்ட கேளுங்க.. நான் மட்டும் பாக்கலைன்னா. அவன் இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டான். அது என்னங்க.. ஒரு சின்ன பையன், அவனை விட பெரியவங்கன்னா.. தப்பு பெரியவங்கதான் பண்ணியிருப்பாங்கன்னு நீங்களே முடிவெடுக்கிறது?. முதல்ல கேஸ் போட்டா உங்க மேலத்தான் போடணும் தெரியுமா..? 18 வயசுக்கு குறைவானவங்க.. 100சிசி பைக் ஓட்டக்கூடாது. அது மட்டுமில்லாம அவன் வந்தது ஒன்வேல.. ரூல்ஸை விடுங்க.. நீங்கல்லாம் படிச்சவஙக் தானே.. உங்களுக்கு தெரியுமில்ல ரூல்ஸ்.. எப்படி அவனை வண்டி ஓட்ட அனுமதிச்சீங்க..? நாடு கெட்டு போச்சு, அது இதுன்னு புலம்புறீங்க இல்லை.. உங்க பையனுக்கு என்னத்தை கத்து கொடுக்கிறீங்க.. தப்பு நாம செஞ்சிட்டு எதிராளி பேர்ல பழி போடறதை கத்து கொடுக்கிறீங்க. இதோ இந்த போலீஸுக்கு லஞ்சம் கொடுக்கப் போறீங்க. இதையெல்லாம் பார்த்த இவன் எப்படி வளருவான்?. எப்படி நேர்மையா இருப்பான்..? கேஸு போடுறானாம் கேஸு.. போடுறா.. நான் பாத்துக்கறேன். “என்று விருட்டென வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினேன். ரியர்வியூ மிரரில் போலீஸ் அவர்களுடன் பெரிதாய் கைஆட்டி பேச, அப்பாவின் கை பேண்டின் பின் பக்கம் போனது.
கேபிள் சங்கர்
Comments
:)
கிளைமாக்ஸ் கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கிறா மாதிரி நினைக்க வைக்குது. அப்படி எல்லாம் அவ்வளவு எளிதா சில்லரைய பாக்காம போலிஸ்காரர் போகவிடமாட்டார்.
முற்றுப்புள்ளிக்கு அப்புறம் இப்பதான் நிதர்சனக் கதை வருதுல்ல?!
அதாவது மலயாளி குழந்தைக்கு அடி வாங்கித்தந்த இன்வாத இனப்பெருக்கத்துக்கு வித்திடம் வக்கிரங்களை உயர்த்திச்சொல்லும் பதிவுகளும்
பேஷன் ஷோவில் நடனமாடுவதை பற்றி குதூகலிக்கும் மேட்டுக்குடி வாசமடிக்கும் பதிவுகளும் இலக்கியமாகுமென்றால்...
ஜெயமோகனும் சு.ரா வும் அமெரிக்காவில் காபி குடித்ததும் இலக்கியமே என்கிறான் வன்புணர்ச்சி வாடிக்கையாளன்.
நிதர்சனமான உண்மை:)
நன்றி கேபிள்ஜி
சும்மா இருந்த போலீஸ்காரருக்கு எடுத்துக் குடுத்தீங்களாக்கும்.. விடுவாரா அவரு :-)
சூப்பர்
நிதர்சனக் கதைகள் அடிக்கடி எழுதுங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி
@எல்.கே
நன்றி
@சிவா
நன்றி
@நந்தா
நன்றி
@சுரிவாசு
சினிமா சில சமயம் வாழ்கையிலிருந்து கூட வருகிறது நண்பா.. :)
நன்றி
2விசா
நன்றியோ..நன்றி
@அருண்பிரசாத்,டி
நன்றி
@தஞ்சாவூரான்
அது சரி.. அப்புறம் இன்னொரு கதையில்ல எழுத வேண்டியிருக்கும்
நன்றி
2கே.ஆர்.பி.செந்தில்
அதுசரி
@விந்தைமனிதன்
இதுல யாருக்கோ உள்குத்து இருக்கிறாப்போல இருக்கே..:)
@காலப்பற்வை
நன்றி
@கனவு
நன்றி
நன்றி
@கார்த்தி கிருஷ்ணா
நன்றி
@சே.குமார்
நன்றி
@உழவன்
அட நானிதை யோசிக்கவில்லையே..:)
விசாரிச்சு பாருங்க..
@கோபி
நிச்சயம் இம்மாதிரியான நிகழ்வுகள் எல்லோருக்கு நடந்திருக்கும்
@ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி
@ஸ்ரீராம்
நன்றி.. உங்களுக்காக ஒரு எண்டர் கவிதைகள் ரெடியாவுது..
'என் கையும்' தன்னிச்சையாக, உயர்ந்தது, 'தலையில்' அடித்துக்கொள்ள.
i am seeing this daily keezh thattu makkal idathil ithai patriya kavalai illamal irukkalam but middle and upper middle class people athuvum educated people how can they allow their kids to ride bikes .... ithu oru periya issue
comments perusa poguthu athanala
cabelji kitta naan phonela pesuren !
எனக்கு பிடித்த வரிகள் இவை
#எல்லாம் காசு செய்யும் வேலை.#
#தப்பு நாம செஞ்சிட்டு எதிராளி பேர்ல பழி போடறதை கத்து கொடுக்கிறீங்க.#
repeat
இது மீள்பதிவுதானே... எங்கேயோ படித்தது போல் இருக்கிறது..// Yes, this is a repeat. Cable may kindly confirm and say why is this repeated now? - R. j.
--ரோமிங் ராமன்
சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது
why this re-post?////
i too ripeetuuuuuuuuuuuuuuu
enna meelpativa?
நான் ஒருதடவை ஒரு 16 வயசுப்பையனோட ராஷ் ட்ரைவிங்கைப் பாத்துட்டு, விரட்டிப்போய் ஒதுக்கி பளார்ன்னு ஒண்ணு விட்டு...அண்ணன் அடிச்சதா நினைச்சுக்கோன்னு சொல்லிட்டு வந்தேன்.!!
உங்களுக்கு ஏதாவது ஆகி
கைகால் வீங்கி இருந்தா !!
தானாக்காரர் கை நல்லா வீங்கியிருக்கும் !!
Intha article neenga munnadi publish panni iruntheenga.
Irunthaalum nalla pathivu
Krishna