ஒரு பக்கத்தில் சிங்களில் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் பெரிய படங்களின் ஓப்பனிங் வரை தாக்கு பிடித்துவிட்டு காற்றாடிக் கொண்டிருக்க, மால்களில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்தர சொகுசு மல்ட்டிப்ளெக்ஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் நிறைய காம்ப்ளெக்ஸ் தியேட்ட்ர்கள் மல்ட்டி ப்ளெக்ஸாக மாற்றப்பட்டு வருகிறது. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் இரண்டு தியேட்டர் மாறி வருகிறது. இப்படி மாற்றம் ஏற்படுத்தாத தியேட்டர்கள் சீக்கிரமே பிட்டு பட தியேட்டராகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிற நிலையில். சென்னையின் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரான ஐடிரீம்ஸ் கிட்டத்தட்ட சத்யமின் பாதி அளவு வசதியுள்ள அரங்காக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை. நிலைமை இப்படியிருக்க ,சென்னையில் விரைவில் வரப்போகும் திறக்கப்பட்டிருக்கும், படப்போகும் மல்ட்டிப்ளெக்ஸுகளும், மால்களும்
1.எக்ஸ்ப்ரஸ் அவுன்யூ
சவுத் இந்தியாவிலேயே மிகப்பெரிய மால் இது. எக்ஸ்பிரஸ் அவின்யூ. சமீபத்தில் தான் திறந்திருக்கிறார்கள். பெரிய புகழ்பெற்ற பிராண்டட் கடைகள் இங்கே நிரம்பியிருக்கிறது. உத.. ஹார்ட் ராக் கேப், TGIF, சத்யமின் 8 ஸ்கீரின் கொண்ட ஏஸ்கேப், மிகப்பெரிய பஃன் சிட்டி, புட்கோர்ட் என்று அட்டகாச பேக்கேஜ் இருக்கிறது. இது ராயப்பேட்டை மணிக்கூட்டின் இடதுபக்கம் அமைந்திருக்கிறது.
2. சந்திரா மால்.
இது பழைய விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரை இடித்துவிட்டு கட்டப்பட்டு வரும் மால். சுமார்1.35 ஏக்கர் இடத்தில் பேஸ்மண்டில்லாமல் நான்கு தளங்களை கொண்டது. பத்தாயிரம் ஸ்கொயர் பீட்டில் இரண்டாவது தளத்தில் ஒரு புட்கோர்ட்டும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தளங்களில் 5 மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களும், ஐந்தில் இரண்டு தியேட்டர்கள் 328 சீட்டுகளும், மீதி இரண்டு 244 சீட்டுகளும், ஒரு தியேட்டர் 63 சீட்டுகளூம் அடங்கியதாய் இருக்குமாம். இதில் 63 சீட் தியேட்டர் ஒரு எக்ஸிக்யூடிவ் கோல்டன் க்ளப் தியேட்டராக முழுதாக படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதி, வைப்பரேட்டர் மசாஜ் வசதி, மற்றும் ஆன் கால் வெயிட்டர் சர்வீஸ் போன்றவை இருக்கும் என்கிறார்கள் மொத்தமாக1415 இருக்கைகள் கொண்ட மல்ட்டிப்ளெக்ஸாக இருக்கும் என்கிறார்கள். இந்த தியேட்டர் வந்தால் நிச்சயம் கக்கூஸ் போல ஏஸியும் இல்லாமல், உட்காரும் வசதி கூட சரியில்லாமல் தியேட்டர் நடத்தும் தேவி கருமாரி காம்ப்ளெக்ஸுக்கு இருக்கிறது சரியான போட்டி.. இது நடிகர் விஜய் வாங்கி கட்டுவதாகக்கூட வதந்தி...

3. பெர்காமோ லக்ஸரி மால்.
பெர்காமோ என்பது இத்தாலியின் புகழ் பெற்ற ஒரு இடம். உலகில் உள்ள பணக்காரரகள் எலலாரும் ஷாப்பிங் செய்யும் இடம். அப்படி பட்ட பெயருடன் சென்னை காதர் நவாஸ்கான் ரோடில் சுமார் 40,000 ஸ்கொயர் பீட்டில் 24 உலக புகழ் பெற்ற ப்ராண்டுகல் கடை விரிக்க போகிறது அநேகமாய் இது சென்னை பணககாரர்களின் மிகப்பெரிய டெஸ்டினேஷனாக மாறாக் கூடிய இடமாக ஆகலாம்.

பெர்காமோ மால் டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ளது போல ஒரு சிறந்த பீரிமியம் வகை லக்ஸரி ப்ராடெக்டுகளுக்கான ஒரு மாலாக நிச்சயம் திகழம் என்று நம்புகிறார்கள்.
4. மெரினா க்ராண்ட்
பழைய மகாபலிபுரம் ரோடில் கட்டப்பட்டுவரும் பல மால்களில் ஒன்று..
4. மெரினா க்ராண்ட்
பழைய மகாபலிபுரம் ரோடில் கட்டப்பட்டுவரும் பல மால்களில் ஒன்று..
5. ஜங்ஷன் மால்
இதற்கு முன்னால் இதற்கு ரிவர்ஸைட் மால் என்று பெயரிட்டிருந்தாரக்ள். சென்னையில் ஆற்றோரமாய் கட்டப்பட்டுள்ள ஒரே மல்டி ப்ளெக்ஸ் மால் இதுவாகத்தான் இருக்கும். இது காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஐ.டி பார்க்கின் அருகில் வருகிறது.

இந்த மால் சுமார் 7.26லட்சம் ஸ்கொயர் பீட்டுகளில் கட்டப்படுகிறது. அநேகமாய் வருகிற 2011ல் மத்ய ஆண்டில் திறக்கப்படும். இதில் லைப்ஸ்டைல் போன்ற முக்கிய் கடைகளும், பிவிஆரின் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களும் வருகிறது.
இதை தவிர சென்னையில் கமலா திரையரங்குக்கு முன்னால் கீரீன் பார்க்குக்கு பக்கத்தில் கட்டப்படும் ஒரு மாலில் சுமார் எட்டு தியேட்டர்கள் பிக் சினிமாஸ் வரப்போகிறது என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வடபழனி பிக்பஸாரின் மேல் கூட தியேட்டர்கள் வரப்போவதாய் பேச்சு.. இப்படி வடபழனி ஏரியாவை சுற்றியே சுமார் பதினைந்து தியேட்டர் மல்ட்டி ப்ளெக்ஸ் வர இருக்கிறது..
Post a Comment
35 comments:
தகவல்களுக்கு நன்றி.
வந்தால் நம்மள மாதிரி ஆட்களுக்கு நல்லதுதானே?
இதைத்தவிர, தமிழகத்தின் நம்பர் ஒன் குடும்பத்தினர் வேறு இதுபோன்ற மல்டிபிளேக்ஸ் தேடி அலைவதாக கேள்வி. அவர்களும் வந்தால் இன்னமும் எண்ணிக்கை அதிகரிக்குமோ?
ஒரு பக்கம் நல்லது என்றாலும். நெடு நாள் நாம் இதே 120 ரூபாய்க்கு படம் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அநேகமாய் அடுத்த தேர்தலுக்கு பிறகு இவர்கள் இஷ்டப்பட்ட ரேட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு பாராட்டு விழாவுக்கு அப்புறம் சொன்னாலும் சொல்லலாம்.:)
அடுத்த வருசம் சென்னையில டீக்கடைகளில் ஒரு டீ 30 ரூபாய் சொன்னாலும் சொல்லுவானுங்க.. நாட்டோட பொருளாதாரம் ரொம்ப முன்னேறிடும் :) சில பேர் இந்த தப்புக்கெல்லாம் காரணம் ஐடி பிப்பூள்ஸ் தான்னு எங்கள திட்ட ஆரம்பிச்சுருவாங்க.. ஜெய் கோ :)
தல, ஸ்கைவாக்?
Sky walk திறந்து ரொம்ப நாளாச்சு. இல்லையா? அதனால்தான் எழுதலை.. அதோட எக்ஸ்பிரஸ் அவின்யூ பத்தி நான் ரொம்ப நாளுக்கு முன்னமே எழுதினேன். அப்புறம் இந்த பதிவை எழுதி வச்சு ஒரு மாசத்துக்கு மேல இருக்கும் இப்பத்தான் டைம் கிடைச்சுது..
சினிமா தியேட்டருக்கு நம்மூரை அடிச்சிக்க உலகத்துல யாருமில்லை.
இந்த ஊர்லயும் வச்சிருக்கானுங்களே...?!
கஷ்டமடா சாமி..!
அம்மாடி..
//நெடு நாள் நாம் இதே 120 ரூபாய்க்கு படம் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.//
இதுதான் பிரச்சனை.. மேலும் பார்க்கிங் காசு.. :((
மெட்ரோ சிட்டி இப்போதான் கலைகட்டுது
saravanakumar msk..
இந்த பார்க்கிங் கொள்ளையை பற்றி ஏற்கனவெ எழுதியாகிவிட்டது.. :((
ஏற்கெனவே சென்னை எனக்கு அந்நியப்பட்டு போயிக்கிட்டு இருக்கு, அடுத்த முறை வரும் போது ரொம்பவே Out-of-Place ஆக உணர்வேன் என நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
/*இந்த ஊர்லயும் வச்சிருக்கானுங்களே...?! */
அப்படி என்ன அண்ணா பிரச்சனை அங்க???
முதலாளித்துவ குப்பைகள்....
இவற்றை பார்த்து பிரமித்தாலும் நீங்கள் பின்னோட்டதில் சொன்னமாதிரி டிக்கெட் விலைதான்
பயமுறுத்துது....
இன்னும் இவ்ளோ மால் வருதா.. ஏற்கனவே மால் இருக்கும் பக்கங்களில் டிராபிக் பின்னுகிறது.. அதுக்கு ஏதும் ஏற்பாடு பண்ண் மாட்டறாங்க...
// ஏற்கெனவே சென்னை எனக்கு அந்நியப்பட்டு போயிக்கிட்டு இருக்கு, அடுத்த முறை வரும் போது ரொம்பவே Out-of-Place ஆக உணர்வேன் என நினைக்கிறேன் //
தல.. இது சென்னையோட ஒரு பக்கம்தான்.. மத்தபடி நீங்க எப்ப போனீங்களோ அப்ப பார்த்த மாதிரியே ரோடு, குப்பை, கூவம் எல்லாம் மெயிட்டெயின் பண்ணாம வச்சிருக்கோம்.. ஒண்ணும் கவலைப்படாதீங்க...
தகவல்களுக்கு நன்றி.
இன்னும் டெக்னாலஜிய வெச்சி விரிவாக்கலாம் தல!
அதாவது ஆன்லைன்லயே காசு கட்டி லைவ் ஸ்ட்ரீம்ல பார்க்கறா மாதிரி கட் அவுட்டுக்கு பால் ஊத்தலாம். ஆரத்தி எடுக்கலாம். சாணி அடிக்கலாம்.
ஹைட்ராலிக், ப்ரஷர் சிஸ்டத்துல பக்காவா பண்ணிடலாம்.
(காப்பி ரைட் என்னுது :-)
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இன்னும் டெக்னாலஜிய வெச்சி விரிவாக்கலாம் தல!
அதாவது ஆன்லைன்லயே காசு கட்டி லைவ் ஸ்ட்ரீம்ல பார்க்கறா மாதிரி கட் அவுட்டுக்கு பால் ஊத்தலாம். ஆரத்தி எடுக்கலாம். சாணி அடிக்கலாம்.
ஹைட்ராலிக், ப்ரஷர் சிஸ்டத்துல பக்காவா பண்ணிடலாம்.
//
வேணாம்பா . அப்பறம் சாணி நாத்தம்
கம்ப்யூடர்ல வந்தா தாங்க முடியாது..
ஹீ ஹீ ஹீ ...
//வேணாம்பா . அப்பறம் சாணி நாத்தம்
கம்ப்யூடர்ல வந்தா தாங்க முடியாது..
//
தல நான் சொல்லல இது மாபெரும் வெற்றி பெரும். பாருங்க ருத்ர வீணை இப்பவே ஃப்ளேவருக்கு ஐடியா தர்றார்.:))
// கட் அவுட்டுக்கு பால் ஊத்தலாம். ஆரத்தி எடுக்கலாம். சாணி அடிக்கலாம். //
பால் ஊத்துறது ஆரத்தி எடுக்கிறது ஓக்கே..
சாணி அடிச்சா கம்ப்யூட்டர் நாறிடாது?
காப்பி ரைட் எல்லாம் செல்லுபடியாகாது தல. ஏற்கனவே இண்டியாக்ளிட்ஸ் செய்யறாங்க..
என்னதான் மால்கள் வரட்டும்.. ஸ்பென்ஸர்ஸ் தவிர மத்த எல்லா மால்லயும் லைஃப்ஸ்டையில் மட்டும்தான் இருக்கு..
ஷாப்பிங் செய்யவே போர் அடிக்குது..
அப்பாடா... இனிமே வேறே இடம் தேடி அலைய வேணாம்.... நம்ம ஏரியாலே படம் பாக்கலாம்....
தகவல்களுக்கு நன்றி.
sure the ticket and parking price will go to the owner hands on an exception that based on the facilities the price might go up or down.
Because if MK families enter into this they get this advantage.
உயர்தர சொகுசு மல்ட்டிப்ளெக்ஸ்களில், கேபிள் -இயகத்தில் ,கேபிள் உடன் படம் பார்க்கும் நாளை எதிர்பார்கீறேன்
tsekar
@முகிலன்
ஸ்பென்ஸர்ஸ் கடந்த ஒரு வருடமா.. போதிய மின் சப்ளை இல்லாத காரணத்தால்.. AC இல்லாமல் இயங்கி கொண்டு இருக்கிறது..மாலை 6 மணிக்கு மேல் மருந்துக்கு கூட AC கிடையாது.வியர்வையும் மூச்சு திணறலுமே மிச்சம். மொத்ததில் out date ஆகி கொண்டு வருகிறது. ஆனால் மற்ற மால்களை விட ஒரளவு மலிவு விலை கடைகள் இருப்பது ஸ்பென்ஸரில் தான்.
The mall opposite to Kamala Theatre is Vijaya - Falcon mall.
There are 10 theatres proposed - and it is from Satyam Cinemas.
படுத்துகிட்டே பாத்த பாதிபேரு தூங்கிடமட்டன்களா அண்ணா... என்ன கொடுமை சில பாங்களுக்கு கூப்பிடும் நண்பர்களிடமிருந்து தப்பிக்க கடைசி வாய்ப்பு படம் பாக்குறதுக்கு பொய் தொங்கிடலாம் ...அப்டி இருக்குமோ .. அப்ப மொக்க படம் கூட ஓடும் ..
68பேர் மட்டுன்னா ticket rs 700 இருக்குமா ?
present anne
ithini theaterlayum poi neenga "maskovin kathali" type film parkapporeengala
chumma ullailaalikku oru doubt keattean
he he kovichukkaatheenga
இந்தியா ஒளிர்கிறது !?!
இம்புட்டு தியேட்டர் ஓக்கே அண்ணே நல்ல படம்லாம் எப்பண்ணே வரும்??
ஷூட்டிங் ஆணிகள் அதிகமிருப்பதால் பதிவு போடவே டைம் சரியாக இருக்கிறது. பின்னூட்டிய அத்துணை நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி..நன்றி
Post a Comment