பாஸ் (எ) பாஸ்கரன்
சிவா மனசில் சக்தியின் லைனிலேயே பெரியதாய் கதைக்காக எந்தவிதமான மெனக்கேடும் இல்லாமல், சந்தானத்தை மட்டுமே நம்பி எடுத்திருக்கும் ராஜேஷுன் அடுத்த படம். படத்திற்கு கதாநாயகன் சந்தானம் என்றால் தப்பேயில்லை. டிபிகல் சீரியல் அம்மா, கல்யாணமாகாத வெட்டினரி டாக்டரான 35 வயது அண்ணன், காம்பியரர் மாடுலேஷனில் பேசி அலையும் தங்கை என்ற குடும்பத்தில், ஐந்து வருஷமாய் அரியர் வைத்து முடிக்காமல் வெட்டியாய் அலையும் வெட்டி ஆபீஸ்ர் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இத்தனை களேபரத்தில் இவருக்கு பார்த்த மாத்திரத்தில் காலேஜ் லெக்சரரான நயன் மேல் காதல் வேறு வந்து தொலைத்துவிடுகிறது. இருந்திருந்து அண்ணனுக்கு ஒரு பெண் அமைய, நயன் அவரது தங்கையாகவே இருக்க, காதலை இன்னும் வலுப்படுத்த முயற்சி செய்யும் போது, அண்ணியிடம் பெண் கேட்க சொல்லும் போது, அண்ணி ஒண்ணுமில்லாத வெட்டிபயலுக்கு யார் பெண் தருவார்கள்? என்று கேட்க, அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது, தன் தங்கை கல்யாணத்தையும், தன் காதலையும் ஜெயித்து காட்டிவிட்டுதான் வீட்டிற்கு வருவேன் என்று சவால் விட்டுவிட்டு வெளியேறுகிறார். அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்து பாதி ஜெயித்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்ததிலிருந்து சந்தானத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. அதிலும் முதல் பாதி முழுவதும், அவரது ராஜ்ஜியம்தான். மனுஷன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார். காதலிக்க ஐடியா கொடுக்குமிடம், அதற்கு பழைய சினிமா பாணியை எல்லாம் போட்டு கிண்டலடிக்கும் காட்சிகள் எல்லாம் ரணகளம். நண்பனுக்காக கடன் பத்திரத்தில் கையெழுத்து போட போகும் நேரத்தில் வேறு ஒருவன் போடாதீங்க.. என்று அலறியடிக்க, அந்த நேரத்தில் அவரின் ரியாக்ஷனும், கடையை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பது போல நினைத்து கலங்கும் காட்சி.. அட்டகாசமோ.. அட்டகாசம்.
ஆர்யா முதல் முறையாக காமெடி முயற்சி செய்திருக்கிறார். அவர் மிக சாதாரணமாக பேசினாலே அவருடய மாடுலேஷனுக்கு செட்டாகிவிடுகிறது. நயன் தாரா வாடி வதங்கி போயிருக்கிறார். ஒரு காலத்தில் அவரை ஸ்கிரினில் பார்ப்வர்களையெல்லாம் வாடி வதங்கச் செய்தவர். ம்ஹும்.. ஆர்யாவின் அண்ணனாக் வரும் பஞ்சு அருணாசலத்தின் மகனின் நடிப்பும், அவரது மனைவியாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும் அருமை.
பிட்டு அடிக்க எழுதி வைத்த பேப்பரை பஸ்சில் தொலைத்துவிட்டு கண்டுபிடித்து தரும் நயனே, தனக்கு லெக்சராய் வருவதும், பக்கத்தில் ஐந்து வருஷமாய் தொடர்ந்து தன்னுடன் பரிட்சை எழுதி வரும் அரியர் ப்ரெண்ட் சுவாமிநாதன், “தயவு செஞ்சு பாஸ் ஆயிடாதீங்க பாஸ்” என்று வேண்டிக் கொள்வது செம கலாட்டா. இப்படி முதல்
பாதி முழுவதும் கண்ணில் நீர் வர சிரிப்பதற்கான காட்சிகள் பல.
பிட்டு அடிக்க எழுதி வைத்த பேப்பரை பஸ்சில் தொலைத்துவிட்டு கண்டுபிடித்து தரும் நயனே, தனக்கு லெக்சராய் வருவதும், பக்கத்தில் ஐந்து வருஷமாய் தொடர்ந்து தன்னுடன் பரிட்சை எழுதி வரும் அரியர் ப்ரெண்ட் சுவாமிநாதன், “தயவு செஞ்சு பாஸ் ஆயிடாதீங்க பாஸ்” என்று வேண்டிக் கொள்வது செம கலாட்டா. இப்படி முதல்
பாதி முழுவதும் கண்ணில் நீர் வர சிரிப்பதற்கான காட்சிகள் பல.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. யுவனின் இசையில் இரண்டு, முன்று பாடலக்ள் அருமை. முக்கியமாய் யார் அந்த பெண் தான் என்று கேட்டேன், மாமா மாமா போன்ற பாடல்கள் நிச்சய ஹிட்.. ரெண்டுமே பழைய இளையராஜாவின் ரீமேக்.. அதனால் ஸ்யூர் ஹிட். நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் பல பாடல்களில் பளிச்.
பாஸ்(எ)பாஸ்கரன் – நகைச்சுவை விரும்பிகளுக்கு,,,
Comments
// அவரது மனைவியாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும் அருமை//
அவிங்க விஜயலட்சுமி. பிரண்ட்ஸ் படத்தில் ஒரு ஹீரோயின்.
விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள், கேபிள்ஜி!
அதான் ஆண்டிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். ம்ஹும். சில பேர் வயசானா பின்றாங்க...
<>
பட்டியல் படத்துலயே செம காமெடி பண்ணுனதா ஞாபகம்.
நல்ல விமர்சனம்... படம் பார்த்தது போலவே ஒரு உணர்வு...
இதேதான் நானும் நெனைக்குறேன்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
நானும் நேத்துதான் படம் பாத்தேன். சந்தானம் தண்ணியடித்துவிட்டு, நயன் அப்பாவை பாராட்டுவிழாவில் கலாய்க்கும் காட்சி... செம..!
//அதான் ஆண்டிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். ம்ஹும். சில பேர் வயசானா பின்றாங்க...//
வழிமொழிகிறேன்...
-
DREAMER
அண்ணே அது விஜயலட்சுமி. Friends படத்துல சூர்யா ஜோடி...
கிராமத்து கதை என்ற பாணியில் சலித்து போன ரசிகர்களுக்கு பாஸ் நிச்சயம் பாஸ்தான்.
உங்க படம் எப்போ..??
with lov and respect.
Nags, Ohio.
after 4 glasses of white rum :)
Waiting to see Vikatan's Vimarasanam in which they would praise the Film as they did for SMS. "Mannar Vali Makkal"
your review.. word to word copied..
Atleast dont have the sense to thank you..