திருப்பூர்
முதல் பாதி முழுவதும், ஆதி, கேசவன் மற்றவர்களுக்குள்ளான நட்பு எப்படி? என்பதற்கான காட்சிகளே மேலோங்கியிருப்பதால் கொஞ்சம் மெதுவாகத்தான் போகிறது. அதிலும் பல காட்சிகள் பத்து வருஷ பழசு. விக்ரமன படம் பார்க்கிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு. பின்னாடி லா..லா.லா.. என்று பாடாததுதான் குறைவு. அதிலும் அபரஞ்சி, கேசவன் காதல் காட்சிகளில் கற்பனை பஞ்சம் அதிகம். இப்படியாக போகும் முதல் பாதியை பார்த்துவிட்டு தொய்வடைந்திருந்த வேளையில் தீயாய் பறக்கும் ரெண்டாவது பாதி நம்மை பரபரக்க வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் வந்த நாடோடிகள் படத்தை ஞாபகப் படுத்தினாலும். குறை சொல்ல முடியாத மேக்கிங்.
படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் ஒரு சிலரை தவிர அத்துனை நடிகர்களும் புதியவர்கள் தான். கேசவனாக நடித்திருப்பவரும், ஆதியாக நடித்திருப்பவரும் ஏதோ ஒரு படத்தில் பார்த்ததாய் ஞாபகம். அபரஞ்சியாய் நடிக்கும் அம்மணிக்கு படம் முழுவதும் ஓடுவதே வேலையாய் இருப்பதால் நடிப்பதற்கு பெரிதாய் இடமில்லை. வில்லனாக வரும் நடிகருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல கண்ட்ரோல்டு ஆக நடித்திருக்கிறார். இயக்கியிருப்பவர் எம்.சி. துரைசாமி. புதுமுகமான இவரின் முதல் பாதி கொஞ்சம் ஓவர் செண்டிமெண்டாக இருந்தாலும். அந்த குறைகள் எல்லாவற்றையும் இரண்டாம் பாதியில் சரி செய்துவிட்டார். பரபரவென துரத்தல்களும், அதன் விளைவாக வரும் நிகழ்வுகளும், என்று நம்மை திரையில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.பாலா, எடிட்டர் சதீஷ், இசையமைப்பாளர் சாஹு என்று எல்லோரும் கை கோர்த்து வடம்பிடித்திருக்கிறார்கள்.
டிஜிட்டல் கேமரா என்பதால் பல விதமான கோணங்களில் நம்மை பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனால் ட்ராலிக்கு பதிலாய் நிறைய இடங்களில் லெப்ட் டூ ரைட்.. ரைட் டு லெப்ட் என அடுத்தடுத்து ஒரே விதமான ஷாட்டுகள் முதல் பாதியில் வருவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அக்குறையை எல்லாம் இரண்டாம்பாதியில் சரி கட்டியிருக்கிறார்கள். அந்தமானில் வரும் ஒரு பாடலும், சேஸிங் டைமில் வரும் பாடல் நாடோடிகள் படத்தை ஞாபகப்படுத்தினாலும் படத்துக்கு நிறையவே உதவியிருக்கிறது. பின்னணி இசையும், பாடல்களும். மிக குறைந்த பட்ஜெட்டில் பல நண்பர்களிடமிருந்து உதவி பெற்று ஒரு இண்ட்ரஸ்டான கதையை கொடுத்திருக்கும் இக்குழுவினர்களிடமிருந்து மேலும் நல்ல படைப்புகள் வரும் என்று நம்புவோம்
திருப்பூர் – நட்பின் அடையாளம்.
கேபிள் சங்கர்
Comments
நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் படம் பார்க்கலாம் போல் தெரிகிறது.
சூப்ப்ர் தல...:))
புரியவேயில்லை கேபிள்ஜி
குறைந்த பட்ஜெட்டில்,நன்றாக எடுத்து இருக்கும் படங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
படப்பிடிப்பு காரணமாய் இரவு தான் வந்து பார்கக்வே முடிகிறது என்கிற படியால் பினூட்டமுடியவில்லை.. தொடர் ஆதரவுக்கு நன்றி..
100% உண்மை. அதுலயும் அந்த பதிவர்கள், சான்ஸே இல்ல.