Thottal Thodarum

Sep 15, 2010

கல்வியா? செல்வமா? தெய்வமா?

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு உடனே ஏற்படுவதில்லை. முக்கியமாய் மக்களுக்கு பயன்படும் விஷயஙக்ளுக்கான முடிவுகள் எப்போதும் உடனே நடந்துவிடுவதில்லை. ரேஷன் கடையில் ரேஷன் சாமான்கள் கிடைப்பதிலிருந்து, தினசரி மின்சார வெட்டு, டாஸ்மாக் எம்.ஆர்.பிக்கு மேல் வாங்கு கொள்ளை, விலைவாசி, அடிப்படை வசதிகள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே போனால் அது நீண்டு கொண்டேயிருக்கும்.

ஆனால் ரொம்ப நாளாய் மக்கள் தங்கள் மனதில் மட்டுமே பொங்கியெழுந்துக் கொண்டிருந்த விஷயம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின், கல்விக் கட்டணம். அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த தொகையை எல்லா மெட்டிரிகுலேஷன் பள்ளிகளும் எதிர்த்தது.  மீண்டும் அவர்கள் பரிந்துரை செய்த தொகையை ஏற்க முடியாது. அதை மீண்டும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று எல்லா பள்ளிகளும் கோரிக்கை வைத்தனர்.

இதனால் பள்ளி முதலாளிகள். ஆம்.. முதலாளிகள் தான்.. கல்வியை வியாபாரமாய் நடத்தும் இவர்களை பின் எப்படி அழைப்பது?.. பெரும்பாலான பள்ளிகள் அரசின் பிரஷரின் காரணமாய்  தங்கள் அமெளண்ட்டை குறைத்தும் கொண்டது. சில பள்ளிகளோ.. இப்போது கட்டணத்தை கட்டுங்கள் நாங்கள் கேஸ் போட்டிருக்கிறோம் அதில் மாற்று தீர்ப்பு வந்தால் நிச்சயம் அடுத்த வருடம் சரி செய்து கொள்கிறோம் என்றும்  சொன்னார்கள். இன்னும் சில பேர் இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட தங்கள் பள்ளிகளை சிபிஎஸ்.சியாக மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள்.

இதெல்லாம் இப்படியிருக்க, அரசு எந்த பள்ளியாவது அதிக கட்டணம் வாங்கினால் உடனே தெரியபடுத்தவும் என்று அறிவிக்க, இதன் விளைவாக ஆங்காங்கே அரசுக்கு புகார் வந்தாலும், பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் அந்த ஸ்கூலில் படிப்பதால் பின்பு தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று பயந்து கொண்டிருந்தார்கள். சிலர் தைரியமாய் எதிர்த்து போராட.. முன்வரும் வேளையில் பள்ளித்தலைமை அவர்களை தனியாக கூப்பிட்டு ரிவிட்டும் அடித்திருக்கும் சம்பவமும் சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது.

தெய்வம் பாவப்பட்ட மக்களுக்கு எதையாவது செய்கிறதோ இல்லையோ? பணக்காரங்களூக்கு எதாவது ஒரு வழியில் வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கிறது. இப்போது ஐகோர்ட் கோவிந்தராஜ் கமிட்டி பரிந்துரைத்த அமெளண்டை பின்பற்ற தேவையில்லை என்றும், அதற்கான இடைக்கால தடையை கொடுத்துவிட்டது. மீண்டும் எல்லா பள்ளிகளும் கோலகலா கொண்டாட்டம் ஆட ஆரம்பித்துவிடும் அபாயம் இருக்கவே இருக்கிறது. சில விஷயங்களுக்கு பதிலே இருப்பதிலை.

இனி மீண்டும் இவர்கள் கமிட்டி அமைத்து, ரிவிய்யூ செய்து, அதை இம்ப்ளிமெண்ட் செய்வதற்குள்.. விடிந்தது போ.. 

Post a Comment

20 comments:

க ரா said...

செல்வமிருப்ப்வனுக்கு கல்வி.. அம்முட்டுதான் (:

அன்பரசன் said...

செல்வம் இருந்தால் மட்டுமே கல்வி கிடைக்கும் இன்றைய சூழலில்.

karthic said...

இருக்கு தல. கிருஷ்ணகிரிலே நடந்த மாதிரி நடக்கும்... கொள்ளையடிப்பவனுக்கு மக்கள் ஆப்பு அடிப்பாங்க.

King Viswa said...

ஒன்லி மணி, நத்திங் எல்ஸ் வர்க்ஸ் இன் இந்தியா.

மதுரை சரவணன் said...

கல்வி காசாகி போனதற்கு நாம் தான் காரணம் . அண்மைக்கல்வி கொண்டு வந்தால், எல்லாக் குழந்தைகளும் தம் அருகிலுள்ளப் பள்ளிகளில் தான் சேர்க்க முடியும் .. அப்போது இந்த கட்டணக் கல்வி முறை அடியோடு ஒழிந்துவிடும். ஆனால் வெகஜனங்கள் இதற்கு ஒத்து வர வேண்டும்.. கல்வியின் முக்கியத்துவமே கல்வியை காசாக்கிப் போனதால், நன் அடிப்படை கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் . இல்லையெனில் அனைத்தும் பேப்பர் செய்திகளாக, நீதிமன்றங்களில் தற்காலிக தடையாக நின்று, ஆட்சி மாறும் போது காட்சியும் மாறி , பொதுஜனங்களே பாதிக்கப்படுவர்.அனைவரும் ஒருங்கிணைந்து நல்ல கல்வியை கொடுக்க அருகிலுள்ள பள்ளிகளை வலியுறுத்த வேண்டும் .ந்ல்லமுறையில் செயல் படாத ஆசிரியர்களை வெளியேற்ற குரல் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களூம், பெற்றோர்களாகிய வெகுஜனங்களும் முயன்றால், கட்டணக் கல்வி முறை அடியோடு ஒழிக்கப்ப்டும். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

சிவராம்குமார் said...

"கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்; வீணையை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்" - இந்த பாட்டு சுடும் நிஜம்!

விஜய் said...

இந்த விவாதத்திற்கு முடிவு உண்டா என்ன? நீங்கள் ஏதோ சில வரிகளில் உங்கள் ஆதங்கத்தை எழுதிவிட்டு போகிறீர்கள். அவ்வளவுதான் முடியும். இந்நிலை சமுதாயத்தின் பிரதி பிம்பமே. பல நிலைகளில் பணம் வழியாகவே தனி மனித வாழ்வும் மதிப்பும் அளக்கப்படுகிறது. அது சரி எனில் எல்லாம் சரிதான் என்றே முடிவு செய்யமுடியும். சிலரை மட்டும் பொது சமுதாயத்திற்காக தியாகம் செய்ய சொன்னால் எப்படி?
இது ஒருவகை கொள்ளை என்றால் கல்வித்துறையில் வேறு ஒரு கொள்ளையும் நடக்கிறது. அதேவே IIT மற்றும் IIM -களில் நடப்பது. இந்திய வரி பணத்தித்தை சலுகையாக அனுபவிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் இந்திய மக்களுக்கு உழைக்கிறார்கள்?

குரங்குபெடல் said...

நல்ல பதிவு . . பாராட்டுக்கள்

'பரிவை' சே.குமார் said...

unmaithaan anna.
pala pallikalil Bill illaamal muzhuththogaiyum vangiyachchu.
ezhaikalaip patri avarkalukku enna kavalai. palli nadaththupavar ellamey arasiyal vathigal enpathu veru avarkalukku sathagamaga irukkilla.

அலைகள் பாலா said...

இதைப் பற்றிய எனது பதிவு

http://alaigal-bala.blogspot.com/2010/09/blog-post_15.html

http://rkguru.blogspot.com/ said...

கண்டிப்பாக விடிந்துதான் போகும்

Unknown said...

கிருஷ்ணகிரிலே நடந்த மாதிரி நடக்கும்

அமுதா கிருஷ்ணா said...

because of this that school teachers are suffering lot and lot...no increment..no new appoinments..

பிரபல பதிவர் said...

நாம் நமது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தாலே இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்....

இது நம் கையில்தான் இருக்கிறது....

NLRC Spoken English said...

தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை ஆங்கில வழியில் படித்தால் தான் அவனுக்கு வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பள்ளிகள் இதை தவறாக பயன்படுத்தி அதிக பணத்தை பிடுங்குகிறார்கள். அப்படி அதிக பணம் கொடுத்தாலும் மாணவர்களுக்கு நடப்பது என்னவென்றால், மாணவர்கள் புரிந்து கொண்டு படிக்காமல் மதிப்பெண்ணை மட்டும் இலக்ககாக வைத்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் கல்லூரியில் நன்றாக படிப்பதில்லை. தற்போது இயங்கி வரும் எல்லா பொறியியல் கல்லூரிகளும் மதிப்பெண்ணை மட்டும் இலக்ககாக வைத்து பயிற்சி கொடுக்கிறது. ஒரு அதிசயம் என்னெவென்றால் தமிழ் வழி மாணவர்கள் கல்லூரிகளில்
தமிழ் வழி மாணவர்கள் நன்றாக புரிந்துக்கொண்டுக் படிக்கிறார்கள்.

கே. எஸ். ஜெயக்குமார்

மார்கண்டேயன் said...

பிரச்சனையே, இப்பொழுது இருக்கும் தனியார் பள்ளிகளெல்லாம், தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணங்களை ஒப்பீடு செய்து அதற்கேற்ற மாதிரி பள்ளிக் கட்டணங்களை நிறுவ நினைப்பது தான் . . .
இது தவிர, மக்களின் மாறிவிட்ட மனோநிலை . . .

Thamira said...

மனசாட்சியற்ற மனிதர்கள். :-(

அலைகள் பாலா said...
This comment has been removed by the author.
அலைகள் பாலா said...

//நாம் நமது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தாலே இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்....

இது நம் கையில்தான் இருக்கிறது.... //
அது தான் எனது கருத்தும். நன்றி.

இரண்டு வருடம் ஒரு பள்ளியை அனைவரும் புறக்கணித்தால் மீண்டும் அப்பள்ளி தலை தூக்க முடியாது

moe said...

No one asked/forced anyone to enroll in a private school.
There are public schools, we don’t enroll kids there.
I studied in public school like many others and doing ok.

If public schools are not good, then govt should fix it.
Govt. don’t want to fix that, because we don’t complain abt public schools.
We just decide that we only have to study in private schools and don’t consider the public school option.
Govt. don’t fix that, because they spend it on free things.

We don’t want to live in dictatorship, so we choose democracy. We can’t complain abt school fees and still expect the quality. Let the market determine the price. If there’s money in the schools more people will start schools.
More schools bring competition and eventually set on correct price.

What Govt can/should do?
To regulate the syllabus, and can do some reservations/priority for nearby kids.
Govt can force them to pay the tax.
Govt can force them to pay some percentage of their tax/cessation to the nearby govt school.
Or collect the tax and pay certain % to local govt school.
Govt can force the schools to pay receipts for all fees. And punish them if they force kids to pay weird fees like the school bus fee, even you stay close to school or other forced supidity..

Anyway, forcing the private school to set the lower fees is not the way to go.
Why are we not asking the same to Hotels,hospitals,food? I m not suggesting to ask, buy govt should
Effectively regulate,enforce rather than setting the price.